حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ حُمَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ ". وَرَآهُ يَمْشِي بَيْنَ ابْنَيْهِ. وَقَالَ الْفَزَارِيُّ عَنْ حُمَيْدٍ حَدَّثَنِي ثَابِتٌ عَنْ أَنَسٍ
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “இ(ந்த முதிய)வர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்துகொள்வது அல்லாஹ் வுக்குத் தேவையற்றது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அ(ந்த முதிய)வர் தம்முடைய இரு புதல்வர்களுக்கிடையே (தொங்கியவாறு கால்கள் பூமியில் இழுபட) நடந்துவந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்(த்துவிட்டு, விவரம் கேட்க, ‘நேர்த்திக்கடன்’ என்று மக்கள் கூறியபோதுதான் மேற்கண்டவாறு தெரி வி)த்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.101 அத்தியாயம் :
ஹதீஸ் 6702 — Sahih al Bukhari 83:79
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَطُوفُ بِالْكَعْبَةِ بِزِمَامٍ أَوْ غَيْرِهِ، فَقَطَعَهُ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (ஒட்டகத்தின்) ‘மூக்கணாங் கயிறை’ அல்லது ‘வேறொரு பொருளைத்’ தமது கையில் கட்டிக்கொண்டு (புனித) கஅபாவைச் சுற்றிக்கொண்டிருந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதைத் துண்டித்துவிட்டார்கள்.102 அத்தியாயம் :
ஹதீஸ் 6703 — Sahih al Bukhari 83:80
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ الأَحْوَلُ، أَنَّ طَاوُسًا، أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ وَهْوَ يَطُوفُ بِالْكَعْبَةِ بِإِنْسَانٍ يَقُودُ إِنْسَانًا بِخِزَامَةٍ فِي أَنْفِهِ، فَقَطَعَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ، ثُمَّ أَمَرَهُ أَنْ يَقُودَهُ بِيَدِهِ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (புனித) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தபோது ஒரு மனிதரைக் கடந்துசென்றார்கள். அவர் இன்னொரு மனிதரை மூக்கணாங்கயிறிட்டு இழுத்துச் சென்றுகொண்டிருந்தார். உடனே தமது கரத்தால் அக்கயிற்றைத் துண்டித்துவிட்ட நபி (ஸல்) அவர்கள், “இவரைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்க” என உத்தரவிட்டார்கள்.103 அத்தியாயம் :
ஹதீஸ் 6704 — Sahih al Bukhari 83:81
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ فَسَأَلَ عَنْهُ فَقَالُوا أَبُو إِسْرَائِيلَ نَذَرَ أَنْ يَقُومَ وَلاَ يَقْعُدَ وَلاَ يَسْتَظِلَّ وَلاَ يَتَكَلَّمَ وَيَصُومَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ وَلْيُتِمَّ صَوْمَهُ ". قَالَ عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஒரு மனிதர் (வெயிலில்) நின்றுகொண்டி ருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், “(இவர் பெயர்) அபூஇஸ்ராயீல். இவர், நின்றுகொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் எனவும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிóல்தான் இருப்பேன்) எனவும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் எனவும் நேர்ந்துகொண்டுள்ளார்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும். நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹகீம் பின் அபீஹுர்ரா அல் அஸ்லமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் “வருகின்ற எல்லா நாட்களி லும் நோன்பு நோற்பேன்” என நேர்ந் திருக்க, எதேச்சையாக அது ஹஜ்ஜுப் பெருநாளாகவோ அல்லது நோன்புப் பெருநாளாகவோ அமைந்துவிட்டால் (என்ன செய்வது?) என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி உள்ளது’ என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்புப் பெருநாளன்றும் நோன்பு நோற்பவர்களாக இருக்கவு மில்லை; இரு பெருநாட்களில் நோன்பு நோற்பதை (அனுமதிக்கப்பட்டதாக) அவர்கள் கருதவுமில்லை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களு டன் இருந்தேன். அப்போது அவர்களி டம் ஒருவர், “நான் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு ‘செவ்வாய்கிழமையும்’ அல்லது ‘புதன்கிழமையும்’ நோன்பு நோற்க நேர்ந்துகொண்டுள்ளேன். ஆனால், எதேச்சையாக இந்த நாள் ஹஜ்ஜுப் பெருநாளாக அமைந்துவிட்டது (நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வோ நேர்த்திக்கடனை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளான். (அதே நேரத்தில்) ஹஜ்ஜுப் பெருநாளன்று நோன்பு நோற்கக் கூடாதென (அல்லாஹ்வின் தூதர் மூலம்) நமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் திரும்பவும் (அதே கேள்வியைக்) கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் முன்புபோலவே பதிலளித்தார்கள்; கூடுதலாக எதுவும் கூறவில்லை.105 அத்தியாயம் :
ஹதீஸ் 6707 — Sahih al Bukhari 83:84
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ، عَنْ أَبِي الْغَيْثِ، مَوْلَى ابْنِ مُطِيعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ خَيْبَرَ فَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلاَ فِضَّةً إِلاَّ الأَمْوَالَ وَالثِّيَابَ وَالْمَتَاعَ، فَأَهْدَى رَجُلٌ مِنْ بَنِي الضُّبَيْبِ يُقَالُ لَهُ رِفَاعَةُ بْنُ زَيْدٍ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غُلاَمًا يُقَالُ لَهُ مِدْعَمٌ، فَوَجَّهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى وَادِي الْقُرَى حَتَّى إِذَا كَانَ بِوَادِي الْقُرَى بَيْنَمَا مِدْعَمٌ يَحُطُّ رَحْلاً لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَهْمٌ عَائِرٌ فَقَتَلَهُ، فَقَالَ النَّاسُ هَنِيئًا لَهُ الْجَنَّةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَلاَّ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ الشَّمْلَةَ الَّتِي أَخَذَهَا يَوْمَ خَيْبَرَ مِنَ الْمَغَانِمِ، لَمْ تُصِبْهَا الْمَقَاسِمُ، لَتَشْتَعِلُ عَلَيْهِ نَارًا ". فَلَمَّا سَمِعَ ذَلِكَ النَّاسُ جَاءَ رَجُلٌ بِشِرَاكٍ أَوْ شِرَاكَيْنِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " شِرَاكٌ مِنْ نَارٍ ـ أَوْ ـ شِرَاكَانِ مِنْ نَارٍ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘கைபர்’ தினத்தன்று (வெற்றி கண்டு) புறப்பட்டோம். நாங்கள் (அந்தப் போரில்) பொன்னையோ வெள்ளியையோ போர்ச்செல்வமாகப் பெறவில்லை. (அவையல்லா கால்நடைச்) செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருட்கள் ஆகியவற்றையே பெற்றோம். ‘பனுள்ளுபைப்’ எனும் குலத்தாரில் ரிஃபாஆ பின் ஸைத் என்ற ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘மித்அம்’ எனப்படும் ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘வாதில் குரா’ எனும் இடத்தை நோக்கிச் சென்று, அந்த இடத்திற்கு வந்துசேர்ந்த போது ‘மித்அம்’ என்ற அந்த அடிமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக் கிக்கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று மித்அமை(த் தாக்கி)க் கொன்றுவிட்டது. இதைக் கண்ட மக்கள் “அவருக்குச் சொர்க்கம் கிடைத்துவிட்டது; வாழ்த்துகள்” என்றனர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படிச் சொல்லாதீர்கள். என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவற்றிலிருந்து கைபர் அன்று அவர் எடுத்துக்கொண்டுவிட்ட போர்வை அவர்மீது நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது” என்று கூறினார்கள். இதை மக்கள் செவியுற்றபோது, ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘ஒரு செருப்பு வாரை’ அல்லது ‘இரு வார்களைக்’ கொண்டுவந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “(இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இது சாதாரண செருப்புவாராக இருந்திராது. மாறாக,) ‘நெருப்புவாராக’ அல்லது ‘இரு நெருப்புவார்களாக’ மாறியிருக்கும்” என்று கூறினார்கள்.109 அத்தியாயம் :