حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، أَنَّ صَفِيَّةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزُورُهُ، وَهْوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ مَعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا بَلَغَ قَرِيبًا مِنْ باب الْمَسْجِدِ عِنْدَ باب أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَرَّ بِهِمَا رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ، فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ نَفَذَا فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " عَلَى رِسْلِكُمَا ". قَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ. وَكَبُرَ عَلَيْهِمَا ذَلِكَ. فَقَالَ " إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنَ الإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا ".
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துகொண்டிருந்தபோது நான் அவர் களைச் சந்திக்கச் சென்றேன்; (சந்தித்து முடித்த) பின்பு திரும்பிச் செல்ல எழுந்தேன். என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எழுந்தார்கள். தமது (மற்றொரு) மனைவி உம்மு சலமா (ரலி) அவர்களின் வீட்டு வாசலை ஒட்டியுள்ள பள்ளிவாசல் கதவுக்கு அருகே வந்து சேர்ந்தபோது எங்கள் இருவரையும் இரண்டு அன்சாரிகள் கடந்துசென்றனர். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி சலாம் கூறி விட்டுச் சென்றுவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘‘அவசரப்படாதீர்கள். (இவர் என் மனைவிதான்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்படித் தங்களிடம் சொன்னது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதற்கு அவ்விருவரும், ‘‘அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களை நாங்கள் சந்தேகிப்போமா?)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மனிதனின் இரத்தம் சென்றடை யும் இடங்களில் எல்லாம் ஷைத்தானும் சென்றடைகின்றான். உங்கள் உள்ளங்களில் அவன் சந்தேகம் எதையேனும் போட்டு விடுவானோ என்று நான் அஞ்சினேன்” என்று பதிலளித்தார்கள்.16 அத்தியாயம் :
ஹதீஸ் 3102 — Sahih al Bukhari 57:11
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ ارْتَقَيْتُ فَوْقَ بَيْتِ حَفْصَةَ، فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْضِي حَاجَتَهُ، مُسْتَدْبِرَ الْقِبْلَةِ، مُسْتَقْبِلَ الشَّأْمِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குமேலே (ஒரு வேலையாக) நான் ஏறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் கிப்லாவுக்கு முதுகைக் காட்டியபடியும் ‘ஷாம்’ (சிரியா) திசையை நோக்கியபடியும் (கழிப்பிடத்தில்) இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.17 அத்தியாயம் :
ஹதீஸ் 3103 — Sahih al Bukhari 57:12
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ لَمْ تَخْرُجْ مِنْ حُجْرَتِهَا.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் அறை’லிருந்து சூரிய வெளிச்சம் விலகாத நிலையில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.18 அத்தியாயம் :
ஹதீஸ் 3104 — Sahih al Bukhari 57:13
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَطِيبًا فَأَشَارَ نَحْوَ مَسْكَنِ عَائِشَةَ فَقَالَ " هُنَا الْفِتْنَةُ ـ ثَلاَثًا ـ مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ ".
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, ஆயிஷா (ரலி) அவர்களின் உறைவிடத்தை (இராக் நாடு அமைந்துள்ள கிழக்குத் திசையை) நோக்கிச் சைகை செய்து, ‘‘இங்கிருந்துதான் குழப்பம் ஏற்படும்” என்று மூன்று முறை கூறிவிட்டு, ‘‘ஷைத்தானின் கொம்பு எங்கிருந்து உதயமாகின்றதோ அங்கி ருந்து....” என்று கூறினார்கள்.19 அத்தியாயம் :
ஹதீஸ் 3105 — Sahih al Bukhari 57:14
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ ابْنَةِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا، وَأَنَّهَا سَمِعَتْ صَوْتَ إِنْسَانٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أُرَاهُ فُلاَنًا، لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ، الرَّضَاعَةُ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الْوِلاَدَةُ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டுக்கொண்டிருக்கும் குரலை நான் செவியுற்றேன். உடனே நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! இதோ, ஒரு மனிதர் தங்கள் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்கின்றார்” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரை இன்னார்லி ஹஃப்ஸாவின் தந்தைக்குப் பால்குடிச் சகோதரர்லி என்று நான் கருதுகின்றேன்; (ஒருவருடைய வயிற்றில்) பிறப்பது எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் (ஒருவரிடம்) பால்குடிப்பதும் நெருங்கிய உறவுகளாக்கிவிடும்” என்று கூறினார்கள்.20 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக (கலீஃபா) ஆக்கப்பட்ட பொழுது, என்னை பஹ்ரைனுக்கு (ஆளுந ராக) அனுப்பிவைத்தார்கள். எனக்கு ஓர் ஆணையை எழுதி, அதில் நபி (ஸல்) அவர்களுடைய மோதிரத்தால் முத்திரை யிட்டார்கள்.21 அந்த மோதிரத்தில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டிருந்தன. யிமுஹம்மத்’ (எனும் சொல்) ஒரு வரியிலும் யிரசூல்’ (யிதூதர்’ எனும் சொல்) ஒரு வரியிலும் ‘அல்லாஹ்’ (‘அல்லாஹ்வின்’ எனும் சொல்) ஒரு வரியிலும் (யிமுஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ லி ‘அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்’ என்று) பொறிக்கப்பட்டிருந்தது. அத்தியாயம் :
ஈசா பின் தஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் இரண்டு தோல்வார்கள் கொண்ட, (அணிந்து) நைந்துபோன இரு காலணிகளைக் காட்டினார்கள். பின்னர், ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், ‘‘அவ்விரண் டும் நபி (ஸல்) அவர்களின் காலணிகள்” என்று அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3108 — Sahih al Bukhari 57:17
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ ـ رضى الله عنها ـ كِسَاءً مُلَبَّدًا وَقَالَتْ فِي هَذَا نُزِعَ رُوحُ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَزَادَ سُلَيْمَانُ عَنْ حُمَيْدٍ عَنْ أَبِي بُرْدَةَ قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ إِزَارًا غَلِيظًا مِمَّا يُصْنَعُ بِالْيَمَنِ، وَكِسَاءً مِنْ هَذِهِ الَّتِي يَدْعُونَهَا الْمُلَبَّدَةَ.
அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் ஒட்டுப்போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக்காட்டி, ‘‘இதை உடுத்திக்கொண்டி ருந்தபோதுதான் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சுலைமான் பின் அல்முஃகீரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது: ஆயிஷா (ரலி) அவர்கள் யமன் நாட்டில் தயாரிக்கப்படுகின்ற கெட்டியான கீழங்கி ஒன்றையும் நீங்கள் ‘அல்முலப்பதா’ (ஒட்டுப்போட்டது) என்றழைக்கின்ற வகையிலிருந்து ஒரு போர்வையையும் (நபி (ஸல்) அவர்களுடையவை என்று) எடுத்துக்காட்டினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3109 — Sahih al Bukhari 57:18
حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ عَاصِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ قَدَحَ، النَّبِيِّ صلى الله عليه وسلم انْكَسَرَ، فَاتَّخَذَ مَكَانَ الشَّعْبِ سِلْسِلَةً مِنْ فِضَّةٍ. قَالَ عَاصِمٌ رَأَيْتُ الْقَدَحَ وَشَرِبْتُ فِيهِ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் (மரத்தாலான) குவளை உடைந்துவிட்டது. (உடைந்து போய்) ஓட்டை (ஏற்பட்ட) பகுதியை நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிச் சங்கிலியால் அடைத்துவிட்டார்கள். அறிவிப்பாளர் ஆஸிம் (ரஹ்) அவர்கள், ‘‘நான் அந்தக் குவளையைக் கண்டேன். அதில் தண்ணீர் குடித்தேன்” என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :
அலீ பின் ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன்) (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் லிஅவர்கள்மீது அல்லாஹ் கருணை புரிவானாக!லி கொல்லப்பட்ட காலகட்டத்தில் யஸீத் பின் முஆவியா வைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தேன்.22 என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகி றீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கின்றேன்)” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு ‘‘அப்படி எதுவுமில்லை” என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாளை எனக்குக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தார் உங்களிடமிருந்து தமது அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக்கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணை யாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்றுசேராது” என்று கூறினார்.23 (பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கள் (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூஜஹ்லுடைய மகளை (மணந்துகொள்ள)ப் பெண்பேசினார்கள். (அந்த நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தமது இந்தச் சொற்பொழிவு மேடையில் (நின்ற படி) உரையாற்றியதை நான் செவியுற் றேன். லிஅப்போது நான் பருவவயதை அடைந்துவிட்டிருந்தேன்லி நபி (ஸல்) அவர்கள், ‘‘ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தமது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படு வார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை லி(அபுல்ஆஸ் பின் ரபீஉவை)லி அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைக் குறித்து (நினைவுகூர்ந்து) புகழ்ந்தார்கள். ‘‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்கு றுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்.24 மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்றுசேர முடியாது” என்று கூறினார்கள்.25 அத்தியாயம் :