حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ مُنْذِرٍ، عَنِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ لَوْ كَانَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ ذَاكِرًا عُثْمَانَ ـ رضى الله عنه ـ ذَكَرَهُ يَوْمَ جَاءَهُ نَاسٌ فَشَكَوْا سُعَاةَ عُثْمَانَ، فَقَالَ لِي عَلِيٌّ اذْهَبْ إِلَى عُثْمَانَ فَأَخْبِرْهُ أَنَّهَا صَدَقَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَمُرْ سُعَاتَكَ يَعْمَلُونَ فِيهَا. فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ أَغْنِهَا عَنَّا. فَأَتَيْتُ بِهَا عَلِيًّا فَأَخْبَرْتُهُ فَقَالَ ضَعْهَا حَيْثُ أَخَذْتَهَا.
இப்னு ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள்26 கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களைக் குறை பேசுபவர்களாக இருந்திருப்பின் மக்கள் சிலர் அவர்களிடம் வந்து, உஸ்மான் (ரலி) அவர்களுடைய (அரசின்) ஸகாத் வசூலிக்கும் ஊழியர்கள் குறித்து முறையிட்டபோதே குறை பேசியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அலீ (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘நீ உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று, யிஇந்த ஏடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்த ஸதகா (ஸகாத்தின் சட்டங்கள்) ஆகும். இந்த ஏட்டிலுள்ளபடி ஸகாத் வசூலிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று தெரிவி” என்று கூறினார்கள். நான் அதை எடுத்துக்கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘‘அது நமக்குத் தேவையில்லை. (அது ஏற்கெனவே நம்மிடம் உள்ளது)” என்று கூறிவிட்டார்கள். ஆகவே, நான் அதை அலீ (ரலி) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்து விவரம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ‘‘அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிடு” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3112 — Sahih al Bukhari 57:21
قَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُوقَةَ، قَالَ سَمِعْتُ مُنْذِرًا الثَّوْرِيَّ، عَنِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ أَرْسَلَنِي أَبِي، خُذْ هَذَا الْكِتَابَ فَاذْهَبْ بِهِ إِلَى عُثْمَانَ، فَإِنَّ فِيهِ أَمْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الصَّدَقَةِ.
முஹம்மத் பின் ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்), ‘‘இந்த ஏட்டை எடுத்துக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் போ! ஏனெனில், இதில்தான் ஸகாத் பற்றிய நபி (ஸல்) அவர்களின் கட்டளைகள் உள்ள”’ என்று சொல்லி என்னை அனுப்பினார்கள்.27 அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் துணைவியாரான) ஃபாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் (அவர் களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள். (விவரமறிந்துகொண்ட) நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி (ஸல்) அவர்கள், ‘‘(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இரு வரும் இருங்கள்” என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின்மீது உணர்ந் தேன். (அந்த அளவுக்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்துகொண்டார்கள்). பின்னர், ‘‘நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிடச் சிறந்த ஒன்றை உங்க ளுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும், யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3114 — Sahih al Bukhari 57:23
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، وَمَنْصُورٍ، وَقَتَادَةَ، سَمِعُوا سَالِمَ بْنَ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ وُلِدَ لِرَجُلٍ مِنَّا مِنَ الأَنْصَارِ غُلاَمٌ، فَأَرَادَ أَنْ يُسَمِّيَهُ مُحَمَّدًا ـ قَالَ شُعْبَةُ فِي حَدِيثِ مَنْصُورٍ إِنَّ الأَنْصَارِيَّ قَالَ حَمَلْتُهُ عَلَى عُنُقِي فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم. وَفِي حَدِيثِ سُلَيْمَانَ وُلِدَ لَهُ غُلاَمٌ، فَأَرَادَ أَنْ يُسَمِّيَهُ مُحَمَّدًا ـ قَالَ " سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي، فَإِنِّي إِنَّمَا جُعِلْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ ". وَقَالَ حُصَيْنٌ " بُعِثْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ ". قَالَ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ قَالَ سَمِعْتُ سَالِمًا عَنْ جَابِرٍ أَرَادَ أَنْ يُسَمِّيَهُ الْقَاسِمَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي ".
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் லிஅன்சாரிகளில்லி ஒரு மனிதருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு யிமுஹம்மத்’ என்று பெயர் வைக்க அவர் விரும்பினார். அந்த அன்சாரித் தோழர் (அனஸ் பின் ஃபுளாலா (ரலி) அவர்கள்) என்னிடம் கூறினார்: நான் அக்குழந்தையை என் கழுத்தில் சுமந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்; நபி (ஸல்) அவர்கள், ‘‘என் பெயரைச் சூட்டி அழையுங்கள். ஆனால், (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டி அழைக்காதீர்கள்.ஏனெனில், நான் உங்களிடையே பங்கீடு செய்பவனாகவே (காசிம்) ஆக்கப்பட்டுள் ளேன்” என்று கூறினார்கள்.29 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘நான் பங்கிடுப வனாக அனுப்பப்பட்டுள்ளேன். உங்களி டையே நான் பங்கிடுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அம்ர் பின் மர்ஸூக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுவதாவது: அந்த அன்சாரித் தோழர் ‘காசிம்’ என்ற பெயரைத் தம் குழந்தைக்குச் சூட்ட விரும்பினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்; என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3115 — Sahih al Bukhari 57:24
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، قَالَ وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقَالَتِ الأَنْصَارُ لاَ نَكْنِيكَ أَبَا الْقَاسِمِ وَلاَ نُنْعِمُكَ عَيْنًا، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وُلِدَ لِي غُلاَمٌ، فَسَمَّيْتُهُ الْقَاسِمَ فَقَالَتِ الأَنْصَارُ لاَ نَكْنِيكَ أَبَا الْقَاسِمِ وَلاَ نُنْعِمُكَ عَيْنًا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَحْسَنَتِ الأَنْصَارُ، سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي، فَإِنَّمَا أَنَا قَاسِمٌ ".
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது அக்குழந்தைக்கு அவர் யிகாசிம்’ என்று பெயர் சூட்டினார். அப்போது மற்ற அன்சாரித் தோழர்கள், ‘‘உம்மை நாங்கள் அபுல்காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைக்கவும்மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும்மாட்டோம்” என்று கூறினார்கள். அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நான் யிகாசிம்’ என்று பெயர் சூட்டினேன். அன்சாரித் தோழர்கள், யிஉம்மை நாங்கள் ‘அபுல்காசிம்’ என்ற குறிப்புப் பெயரால் அழைக்கவும்மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும் மாட்டோம்’ என்று கூறிவிட்டார்கள்” என்று சொன்னார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அன்சாரிகள் நல்ல வேலை செய்தார்கள். ஆகவே, என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், எனது (அபுல் காசிம் என்னும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நான் பங்கிடுபவú”’ என்று கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருக்கு அல்லாஹ் நன்மை புரிய நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைத் தருகின்றான். அல்லாஹ்வே கொடுப்பவனாவான்; நான் பங்கிடுபவன் ஆவேன். இந்த (என்) சமுதாயத்தார், அவர்களை எதிர்ப்பவர்கள்மீது ஆதிக்கம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். இறுதி யில், அவர்கள் ஆதிக்கம் பெற்றவர்களாக இருக்கும் நிலையிலேயே இறைக்கட்டளை (மறுமை நாள்) வந்துவிடும்.30 இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3117 — Sahih al Bukhari 57:26
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا أُعْطِيكُمْ وَلاَ أَمْنَعُكُمْ، أَنَا قَاسِمٌ أَضَعُ حَيْثُ أُمِرْتُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (எதையும்) உங்களுக்குக் கொடுப்பதுமில்லை; (எதையும்) உங்களுக் குக் கொடுக்காமல் தடுத்து நிறுத்திக் கொள்வதுமில்லை. நான் பங்கிடுபவன்தான். எங்கு கொடுக்கும்படி (அல்லாஹ்வால்) எனக்குக் கட்டளையிடப்படுகிறதோ அங்கு கொடுக்கின்றேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3118 — Sahih al Bukhari 57:27
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنِ ابْنِ أَبِي عَيَّاشٍ ـ وَاسْمُهُ نُعْمَانُ ـ عَنْ خَوْلَةَ الأَنْصَارِيَّةِ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ رِجَالاً يَتَخَوَّضُونَ فِي مَالِ اللَّهِ بِغَيْرِ حَقٍّ، فَلَهُمُ النَّارُ يَوْمَ الْقِيَامَةِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாகப் பங்கிடாமல் (அநியாயமாகப் பங்கீடு செய்து) கையாள் கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே கிடைக்கும். இதை கவ்லா அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3119 — Sahih al Bukhari 57:28
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ الأَجْرُ وَالْمَغْنَمُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரைகளின் நெற்றிகளில் நன்மையும் நற்பலனும் போர்ச் செல்வமும் மறுமை நாள்வரை பிணைக்கப்பட்டிருக்கின்றன.34 இதை உர்வா பின் அல்ஜஅத் அல் பாரிக்கீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3120 — Sahih al Bukhari 57:29
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُنْفِقُنَّ كُنُوزَهُمَا فِي سَبِيلِ اللَّهِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பாரசீகப் பேரரசர்) இப்போதைய கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப்பின் கிஸ்ரா எவரும் இருக்கமாட்டார். (கிழக்கு ரோமானியப் பேரரசரான இப்போதைய) சீசர் அழிந்துவிட்டால் அவருக்குப்பின் சீசர் எவரும் இருக்கமாட்டார். என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவ்விருவரின் (கிஸ்ரா மற்றும் சீசரின்) கருவூலங்களை நீங்கள் அல்லாஹ் வின் பாதையில் செலவழிப்பீர்கள்.35 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :