அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (புனித கஅபா) ஆலயத்தின் அருகே ‘ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்’ அல்லது ‘குறைஷியர் இருவரும் ஸகஃபீ ஒருவரும்’ ஒன்றுகூடினார்கள். அவர்களுக்கு வயிற்றில் சதை (தொந்தி) அதிகமாகப்போட்டிருந்தது. (ஆனால்,) அவர்களது உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், “அல்லாஹ் நாம் சொல்வதைக் கேட்கின்றான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்க, மற்றொருவர், “நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; நாம் மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்” என்று சொன்னார். இன்னொருவர், “நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கின்றான் என்றால், நாம் மெதுவாகப் பேசும்போதும் அவன் நிச்சயம் கேட்பான்” என்று சொன்னார். அப்போதுதான் உயர்ந்தோன் அல்லாஹ், “(உலகில் நீங்கள் குற்றங் களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களைத்) தவிர்ப்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” எனும் (41:22ஆவது) வசனத்தை அருளி னான்.163 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வால் அருளப்பெற்ற வேதங் களிலேயே அண்மைக் காலத்தில் (புதிதாக) அருளப்பெற்ற இறைவேதம் (குர்ஆன்) உங்களிடம் இருக்க, (முந்தைய) வேதக்காரர்களிடம் அவர்களுடைய வேதங்கள் தொடர்பாக நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அ(ந்தப் புதிய வேதத்)தைநீங்கள் கலப்படமின்றி தூய்மையான வடிவில் ஓதிக்கொண்டிருக்கிறீர்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம் மக்களே! வேதக்காரர்களிடம் நீங்கள் எதைப் பற்றியும் ஏன் கேட்கிறீர் கள்? உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளியுள்ள வேதம்தான் இறைச்செய்திகளிலேயே புதியதும் கலப்படமில்லாத தூய்மையானதும் ஆகும். வேதக்காரர்களோ இறைவேதங்களை மாற்றி, திரித்து, தம் கரங்களால் எழுதிக் கொண்ட ஏடுகளை அல்லாஹ்விடமிருந்து வந்தவை என, அதன்மூலம் அற்ப விலையைப் பெறுவதற்காகக் கூறுகிறார்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவித் துள்ளான். உங்களுக்குக் கிடைத்துள்ள ஞானம், வேதக்காரர்களிடம் கேட்டுத் தெரிவதிலிருந்து உங்களைத் தடுக்க வில்லையா? (அதே நேரத்தில்) அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த வேதக்காரர்களில் ஒருவர்கூட உங்களுக்கு அருளப்பெற்றுள்ள (வேதத்)தைப் பற்றிக் கேட்பதை நாம் கண்டதில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 7524 — Sahih al Bukhari 97:149
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ تَعَالَى {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ} قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعَالِجُ مِنَ التَّنْزِيلِ شِدَّةً، وَكَانَ يُحَرِّكُ شَفَتَيْهِ ـ فَقَالَ لِي ابْنُ عَبَّاسٍ أُحَرِّكُهُمَا لَكَ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحَرِّكُهُمَا فَقَالَ سَعِيدٌ أَنَا أُحَرِّكُهُمَا كَمَا كَانَ ابْنُ عَبَّاسٍ يُحَرِّكُهُمَا فَحَرَّكَ شَفَتَيْهِ ـ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ * إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} قَالَ جَمْعُهُ فِي صَدْرِكَ ثُمَّ تَقْرَؤُهُ. {فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} قَالَ فَاسْتَمِعْ لَهُ وَأَنْصِتْ ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ. قَالَ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ اسْتَمَعَ فَإِذَا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم كَمَا أَقْرَأَهُ.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(நபியே!) இந்த வஹீயை அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) இறைவசனம் குறித்து விளக்கும்போது, “நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ அருளப்பெறும்போது கடும் சிரத்தை எடுத்துக்கொள்வார்கள். (எங்கே வசனங்கள் மறந்துவிடுமோ என்ற அச்சத்தால்) தம் உதடுகளை அசைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள். -இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைப் பற்றி என்னிடம் அறிவிக்கையில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உதடுகளை அசைத்ததைப் போன்று உங்களுக்கு நான் அசைத்துக் காட்டுகிறேன்” என்று கூறி (தம் உதடுகளை அசைத்துக் காட்டி)னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அசைத்துக் காட்டியதைப் போன்று நானும் அசைத்துக் காட்டுகிறேன் (பாருங்கள்).- அப்போதுதான் அல்லாஹ், “(நபியே!) இந்த வஹீயை (வேதஅறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர். அதை (உமது மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீர்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16,17) வசனங்களை அருளினான். மேலும், “நாம் இதை ஓதிவிட்டோமாயின், நீர் ஓதுவதைத் தொடர்வீராக!” எனும் (75:18) வசனத்தையும் அருளினான். அதாவது அதை நீர் காதுதாழ்த்தி மௌனமாக இருந்து கேட்பீராக! “பின்னர் உம்மை ஓதச்செய்வது நமது பொறுப்பாகும்”. (இதன்பின்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காது தாழ்த்திக் கேட்பார்கள். ஜிப்ரீல் சென்ற பின்னால், அவர் ஓதிக்காட்டியதைப் போன்றே ஓதுவார்கள்.164 அத்தியாயம் :
ஹதீஸ் 7525 — Sahih al Bukhari 97:150
حَدَّثَنِي عَمْرُو بْنُ زُرَارَةَ، عَنْ هُشَيْمٍ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فِي قَوْلِهِ تَعَالَى {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} قَالَ نَزَلَتْ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُخْتَفٍ بِمَكَّةَ، فَكَانَ إِذَا صَلَّى بِأَصْحَابِهِ رَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ، فَإِذَا سَمِعَهُ الْمُشْرِكُونَ سَبُّوا الْقُرْآنَ وَمَنْ أَنْزَلَهُ وَمَنْ جَاءَ بِهِ، فَقَالَ اللَّهُ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ} أَىْ بِقِرَاءَتِكَ، فَيَسْمَعَ الْمُشْرِكُونَ، فَيَسُبُّوا الْقُرْآنَ {وَلاَ تُخَافِتْ بِهَا} عَنْ أَصْحَابِكَ فَلاَ تُسْمِعُهُمْ {وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلاً}
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(நபியே!) உமது தொழுகையில் நீர் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்” எனும் (17:110ஆவது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். தம் தோழர்களுடன் தொழும்போது உரத்த குரலில் குர்ஆனை ஓதுவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய (இறை) வனையும் அதை (மக்கள்முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். ஆகவே, அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “நீர் உமது தொழுகையில் குரலை உயர்த்தி ஓதாதீர்! -ஏனெனில், அதைக் கேட்கும் இணை வைப்பாளர்கள் குர்ஆனை ஏசுவார்கள். அதற்காக (உடன் தொழுகின்ற) உம்முடைய நண்பர்களுக்கே கேட்காத அளவுக்கு- (ஒரேயடியாய்) குரலைத் தாழ்த்தவும் வேண்டாம். இரண்டுக்குமிடையே மிதமான போக்கைக் கையாள்வீராக!” எனக் கட்டளையிட்டான்.165 அத்தியாயம் :
ஹதீஸ் 7526 — Sahih al Bukhari 97:151
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} فِي الدُّعَاءِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) உமது தொழுகையில் நீர் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்” எனும் இந்த (17:110ஆவது) வசனம் பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அருளப்பெற்றது. இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.166 அத்தியாயம் :
ஹதீஸ் 7527 — Sahih al Bukhari 97:152
حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ ". وَزَادَ غَيْرُهُ " يَجْهَرُ بِهِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை (முறைப்படி) இராகத்துடன் (இனிய குரலில்) ஓதாதவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மற்றோர் அறிவிப்பில், ‘இராகமிட்டு உரத்த குரலில் ஓதாதவர்’ எனக் கூடுதலாக வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களில் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும்பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு)வருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், “இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கும் வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!” என்று (ஆதங்கத்துடன்) கூறினார். 2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர் உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர், “இவருக்கு வழங்கப்பட்ட (செல்வத்)தைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்” என்கிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.167 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும்பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு)வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும்பகலும் தானம் செய்கிறார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.168 (இதன் அறிவிப்பாளர்) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் பலமுறை (ஹதீஸ்களைக்) கேட்டுள்ளேன். ஆனால், ‘எனக்கு இன்னார் அறிவித்தார்’ (அக்பரனா அல்லது ஹத்தஸனா) என்று அவர் சொன்னதில்லை. (இன்னார் கூறினார் (கால) என்றே சொல்வார்.) அப்படியிருந்தாலும், அது அவரது ஆதாரபூர்வமான அறிவிப்புதான். அத்தியாயம் :
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “நம்மில் எவர் (இறைவழியில்) கொல்லப் படுகின்றாரோ அவர் சொர்க்கத்திற்குச் செல்கின்றார்” எனும் தம் இறைவனின் செய்தியை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.169 இதை ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :