Qurani·قرآني
தமிழ்

அல்லாஹ்வின் ஏகத்துவம் (தவ்ஹீத்)

193 ஹதீஸ்கள் · #7371–7563

ஹதீஸ் 7531 — Sahih al Bukhari 97:156
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم كَتَمَ شَيْئًا وَقَالَ مُحَمَّدٌ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَتَمَ شَيْئًا مِنَ الْوَحْىِ، فَلاَ تُصَدِّقْهُ، إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ ‏{‏يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ‏}‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) வேத அறிவிப்பிலிருந்து எதையும் மறைத்தார்கள் என உங்களிடம் யாரேனும் சொன்னால் அவரை நீங்கள் நம்பாதீர்கள். ஏனெனில், அல்லாஹ், “(எம்) தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக! அவ்வாறு நீர் செய்யாவிட்டால், அவனது தூதை நீர் எடுத்துரைக்கவில்லை என்றாகிவிடும்” எனக் கூறுகின்றான் (5:67).170 இதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 7532 — Sahih al Bukhari 97:157
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ ‏"‏ أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا، وَهْوَ خَلَقَكَ ‏"‏‏.‏ قَالَ ثُمَّ أَىّ قَالَ ‏"‏ ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ، أَنْ يَطْعَمَ مَعَكَ ‏"‏‏.‏ قَالَ ثُمَّ أَىّ قَالَ ‏"‏ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ ‏"‏‏.‏ فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَهَا ‏{‏وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلاَ يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ‏}‏ الآيَةَ‏.‏
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! உயர்ந்தோன் அல்லாஹ் விடம் மிகப் பெரிய பாவம் எது?” என்று ஒருவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பித்து வழிபடுவ தாகும்” என்று பதிலளித்தார்கள். அவர், “பிறகு எது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “பிறகு உன் குழந்தை உன்னுடன் உணவு உண்பதை அஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்” என்று பதிலளித்தார்கள். அவர், “பிறகு எது?” என்று கேட்க, நபியவர்கள் “உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹ், “அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரம் செய்யமாட்டார்கள். யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவார். மறுமை நாளில் அவருக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும்” எனும் வசனத்தை (25:68) அருளினான்.171 அத்தியாயம் :
ஹதீஸ் 7533 — Sahih al Bukhari 97:158
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَنْ سَلَفَ مِنَ الأُمَمِ كَمَا بَيْنَ صَلاَةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ، أُوتِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ فَعَمِلُوا بِهَا حَتَّى انْتَصَفَ النَّهَارُ، ثُمَّ عَجَزُوا فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ فَعَمِلُوا بِهِ حَتَّى صُلِّيَتِ الْعَصْرُ، ثُمَّ عَجَزُوا فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيتُمُ الْقُرْآنَ فَعَمِلْتُمْ بِهِ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ، فَأُعْطِيتُمْ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَقَالَ أَهْلُ الْكِتَابِ هَؤُلاَءِ أَقَلُّ مِنَّا عَمَلاً وَأَكْثَرُ أَجْرًا‏.‏ قَالَ اللَّهُ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا قَالُوا لاَ‏.‏ قَالَ فَهْوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும். ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (காலை முதல்) நண்பகல்வரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப்பெற்றது. பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (நண்பகல் முதல்) அஸ்ர் தொழுகைவரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப் பெற்றது. பிறகு உங்களுக்கு குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் (அஸ்ர் முதல்) சூரியன் மறையும்வரை அதன்படி செயல்பட்டீர்கள். உங்களுக்கு(க் கூலியாக) இரண்டிரண்டு “கீராத்’கள் வழங்கப்பட்டன. அப்போது வேதக்காரர்கள், “இவர்கள் வேலை செய்ததோ நம்மைவிடக் குறைந்த நேரம்; கூலியோ அதிகம்” என்று கூறினர். அதற்கு அல்லாஹ், “நான் உங்களுக்குரிய உரிமை (கூலி)யில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?” என்று கேட்க, அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ், “அது (முஸ்லிம்களுக்கு அதிகக் கூலி கொடுத்தது) என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்” என்று சொன்னான்.174 அத்தியாயம் :
ஹதீஸ் 7534 — Sahih al Bukhari 97:159
حَدَّثَنِي سُلَيْمَانُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْوَلِيدِ،‏.‏ وَحَدَّثَنِي عَبَّادُ بْنُ يَعْقُوبَ الأَسَدِيُّ، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ ‏ "‏ الصَّلاَةُ لِوَقْتِهَا، وَبِرُّ الْوَالِدَيْنِ، ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ‏"‏‏.‏
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நற்செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதும், பெற்றோருக்கு நன்மை புரிவதும், பின்னர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.175 இதை அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 7535 — Sahih al Bukhari 97:160
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم مَالٌ فَأَعْطَى قَوْمًا وَمَنَعَ آخَرِينَ فَبَلَغَهُ أَنَّهُمْ عَتَبُوا فَقَالَ ‏ "‏ إِنِّي أُعْطِي الرَّجُلَ وَأَدَعُ الرَّجُلَ، وَالَّذِي أَدَعُ أَحَبُّ إِلَىَّ مِنَ الَّذِي أُعْطِي، أُعْطِي أَقْوَامًا لِمَا فِي قُلُوبِهِمْ مِنَ الْجَزَعِ وَالْهَلَعِ، وَأَكِلُ أَقْوَامًا إِلَى مَا جَعَلَ اللَّهُ فِي قُلُوبِهِمْ مِنَ الْغِنَى وَالْخَيْرِ مِنْهُمْ عَمْرُو بْنُ تَغْلِبَ ‏"‏‏.‏ فَقَالَ عَمْرٌو مَا أُحِبُّ أَنَّ لِي بِكَلِمَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُمْرَ النَّعَمِ‏.‏
அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு செல்வம் வந்தது. அதை அவர்கள் சிலருக்குக் கொடுத்தார்கள். வேறுசிலருக்குக் கொடுக்கவில்லை. (பங்கு கிடைக்காத) அந்த மற்ற வர்கள் தம்மைக் குறைகூறுவதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது அவர்கள், “நான் ஒருவருக் குக் கொடுக்கின்றேன். மற்றொருவரை விட்டுவிடுகின்றேன். நான் எவருக்குக் கொடுக்கின்றேனோ அவரைவிட நான் எவரை விட்டுவிடுகின்றானோ அவர்தான் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார். பதற்றமுள்ள மனம் படைத்தோருக்கு நான் கொடுக்கின்றேன். இன்னும் சிலருக்கு, அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மையையும் தன்னிறைவான (போதுமென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல் விட்டுவிடுகின்றேன். அத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர்தான் அம்ர் பின் தஃக்லிப்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பற்றி இவ்வாறு (புகழ்ந்து) கூறியதற்குப் பதிலாக (விலையுயர்ந்த செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் எனக்குக் கிடைப்பதாக இருந்தாலும் நான் அவற்றை விரும்பியிருக்கமாட்டேன்.176 அத்தியாயம் :
ஹதீஸ் 7536 — Sahih al Bukhari 97:161
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا أَبُو زَيْدٍ، سَعِيدُ بْنُ الرَّبِيعِ الْهَرَوِيُّ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْوِيهِ عَنْ رَبِّهِ، قَالَ ‏ "‏ إِذَا تَقَرَّبَ الْعَبْدُ إِلَىَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا، وَإِذَا أَتَانِي مَشْيًا أَتَيْتُهُ هَرْوَلَةً ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவிக்கிறார்கள்: (என்) அடியான் என்னை ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனை ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்கிறேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 7537 — Sahih al Bukhari 97:162
حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ ـ رُبَّمَا ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا تَقَرَّبَ الْعَبْدُ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا أَوْ بُوعًا ‏"‏‏.‏ وَقَالَ مُعْتَمِرٌ سَمِعْتُ أَبِي، سَمِعْتُ أَنَسًا، ‏{‏عَنْ أَبِي هُرَيْرَةَ،‏}‏ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْوِيهِ عَنْ رَبِّهِ، عَزَّ وَجَلَّ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அடியான் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு நெருங்குகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.177 இதே ஹதீஸ் அனஸ் (ரலி) அவர் களிடமிருந்து “நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்புமிக்க தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 7538 — Sahih al Bukhari 97:163
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْوِيهِ عَنْ رَبِّكُمْ، قَالَ ‏ "‏ لِكُلِّ عَمَلٍ كَفَّارَةٌ، وَالصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخَلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உங்கள் இறைவனி டமிருந்து அறிவித்தார்கள்: இறைவன் கூறுகின்றான்: ஒவ்வொரு (தீய) செயலுக்கும் ஒரு பரிகாரம் உண்டு. நோன்பு எனக்காகவே நிறைவேற்றப்படுவதாகும். நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்.178 அத்தியாயம் :
ஹதீஸ் 7539 — Sahih al Bukhari 97:164
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ،‏.‏ وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ قَالَ ‏ "‏ لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ إِنَّهُ خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ‏"‏‏.‏ وَنَسَبَهُ إِلَى أَبِيهِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனிட மிருந்து அறிவித்துள்ள ஒன்றுதான் இதுவும்: எந்த அடியாரும், தான் (இறைத்தூதர்) யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடவும் சிறந்தவர் என்று சொல்வது அவருக்குத் தகாது. இவ்வாறு (யூனுஸ் பின் மத்தா - மத்தாவின் புதல்வர் யூனுஸ் என) அவர்களை அவர்களுடைய தந்தையுடன் இணைத்துக் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.179 அத்தியாயம் :
ஹதீஸ் 7540 — Sahih al Bukhari 97:165
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ، أَخْبَرَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْفَتْحِ عَلَى نَاقَةٍ لَهُ يَقْرَأُ سُورَةَ الْفَتْحِ، أَوْ مِنْ سُورَةِ الْفَتْحِ ـ قَالَ ـ فَرَجَّعَ فِيهَا ـ قَالَ ـ ثُمَّ قَرَأَ مُعَاوِيَةُ يَحْكِي قِرَاءَةَ ابْنِ مُغَفَّلٍ وَقَالَ ‏ "‏ لَوْلاَ أَنْ يَجْتَمِعَ النَّاسُ عَلَيْكُمْ لَرَجَّعْتُ كَمَا رَجَّعَ ابْنُ مُغَفَّلٍ ‏"‏‏.‏ يَحْكِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ لِمُعَاوِيَةَ كَيْفَ كَانَ تَرْجِيعُهُ قَالَ آ آ آ ثَلاَثَ مَرَّاتٍ‏.‏
ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள், மக்கா வெற்றி தினத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகம் ஒன்றின்மீது இருந்தபடி, ‘அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியாயத்தை’ அல்லது ‘அல்ஃபத்ஹ் அத்தியாயத்தில் ஒரு பகுதியை’ ஓதிக்கொண்டிருக்கக் கண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் (இழுத்து) ஓதிக்கொண்டிருந்தார்கள் என்று எனக்கு அப்துல்லாஹ் பின் முகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” எனக் கூறிவிட்டு, இப்னு முகஃப்பல் (ரலி) அவர்கள் ஓதியதைப் போன்று அப்படியே ஓதிக்காட்டினார்கள். பிறகு, “உங்களைச் சுற்றி மக்கள் கூடிவிடுவார்கள் எனும் அச்சம் எனக்கில்லா விட்டால் நபி (ஸல்) அவர்கள் ஓதிய விதத்தை இப்னு முகஃப்பல் (ரலி) அவர்கள் ஓசை நயத்துடன் (இழுத்து) ஓதிக்காட்டியதைப் போன்றே நானும் ஓதிக்காட்டியிருப்பேன்” என்று சொன்னார்கள். நான், முஆவியா (ரஹ்) அவர்களிடம், “அவர்கள் ஓசை நயத்துடன் ஓதிய முறை எப்படி?” என்று கேட்க, (‘ஆ’ எனும் இடத்தில்) ‘ஆ...ஆ...ஆ...’ என்று மும்முறை (இழுத்து) அவர்கள் ஓதினார்கள்” என்று சொன்னார்கள்.180 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.