Qurani·قرآني
தமிழ்

அல்லாஹ்வின் ஏகத்துவம் (தவ்ஹீத்)

193 ஹதீஸ்கள் · #7371–7563

ஹதீஸ் 7541 — Sahih al Bukhari 97:166
وَقَالَ ابْنُ عَبَّاسٍ أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ، أَنَّ هِرَقْلَ، دَعَا تَرْجُمَانَهُ، ثُمَّ دَعَا بِكِتَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَرَأَهُ ‏"‏ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ، وَ‏{‏يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ ‏}‏‏"‏ الآيَةَ‏.‏
அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கிழக்கு ரோமானியப் பேரரசர்) ஹிரக்ளீயஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்துவரச் சொன்னார். பின்னர் நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவரச்சொல்லி அதைப் படி(க்குமாறு ஆணைபிறப்பி)த்தார். (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால்... இது அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதருமான முஹம் மதிடமிருந்து (மன்னர்) ஹிரக்ளீயஸுக்கு எழுதப்பட்ட கடிதம்: வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள்.181 அத்தியாயம் :
ஹதீஸ் 7542 — Sahih al Bukhari 97:167
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ أَهْلُ الْكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالْعِبْرَانِيَّةِ، وَيُفَسِّرُونَهَا بِالْعَرَبِيَّةِ لأَهْلِ الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لاَ تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ، وَلاَ تُكَذِّبُوهُمْ وَ‏{‏قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ‏}‏ الآيَةَ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரூ (எபிரேயு) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர் களுக்கு விளக்கியும்வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) கூறுங்கள்: அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப் பட்டதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் யஅகூபின் சந்ததியினருக்கும் அருளப் பட்டதையும் மற்றும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவருக்கும், அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகின்றோம். (2:136)182 அத்தியாயம் :
ஹதீஸ் 7543 — Sahih al Bukhari 97:168
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ وَامْرَأَةٍ مِنَ الْيَهُودِ قَدْ زَنَيَا فَقَالَ لِلْيَهُودِ ‏"‏ مَا تَصْنَعُونَ بِهِمَا ‏"‏‏.‏ قَالُوا نُسَخِّمُ وُجُوهَهُمَا وَنُخْزِيهِمَا‏.‏ قَالَ ‏"‏ ‏{‏فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ‏}‏ ‏"‏‏.‏ فَجَاءُوا فَقَالُوا لِرَجُلٍ مِمَّنْ يَرْضَوْنَ يَا أَعْوَرُ اقْرَأْ‏.‏ فَقَرَأَ حَتَّى انْتَهَى عَلَى مَوْضِعٍ مِنْهَا فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ‏.‏ قَالَ ‏"‏ ارْفَعْ يَدَكَ ‏"‏‏.‏ فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهِ آيَةُ الرَّجْمِ تَلُوحُ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ عَلَيْهِمَا الرَّجْمَ‏.‏ وَلَكِنَّا نُكَاتِمُهُ بَيْنَنَا‏.‏ فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا، فَرَأَيْتُهُ يُجَانِئُ عَلَيْهَا الْحِجَارَةَ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: விபசாரம் செய்துவிட்ட ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். நபி ஸல்) அவர்கள் யூதர்களிடம், “நீங்கள் விபசாரிகளை என்ன செய்வீர்கள்?” என்று கேட்க, அவர்கள் “இருவரின் முகங்களிலும் கரும்புள்ளியிட்டு இருவரையும் கேவலப்படுத்திவிடுவோம்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து ஓதிக்காட்டுங்கள்” என்றார்கள். அவ்வாறே அவர்கள் அதைக் கொண்டுவந்து தாங்கள் விரும்பிய ஓர் (ஒற்றைக் கண்) மனிதரிடம், “ஒற்றைக் கண்ணரே! ஓதுவீராக!” என்று கூறினார்கள். அவர் ஓதிக்கொண்டே சென்றார். அதில் ஓரிடத்தை அடைந்ததும் அந்த இடத்தில் தனது கையை வைத்து (மறைத்து)க் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், “கையை எடுங்கள்” என்று கூற, அவர் தமது கையை எடுத்தார். அப்போது அங்கே கல்லெறி தண்டனை (ரஜ்ம்) தொடர்பான வசனம் ‘பளிச்’சென்று தெரிந்தது. அந்த மனிதர் “முஹம்மதே! இந்த இருவரையும் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். ஆயினும், நாங்கள் அதை எங்களுக்கிடையே பரஸ்பரம் மறைத்துக்கொண்டிருந்தோம்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் கல்லால் அடித்துக் கொல்லும்படி கட்டளையிட, அவ்வாறே அவ்விருவரும் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். (தண்டனை நிறைவேற்றப்பட்டபோது) அந்த ஆண் அப்பெண்ணின் மீது (கவிழ்ந்து அவள் மீது) கல் விழாமல் பாதுகாக்க முயல்வதை நான் கண்டேன்.183 அத்தியாயம் :
ஹதீஸ் 7544 — Sahih al Bukhari 97:169
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَا أَذِنَ اللَّهُ لِشَىْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ حَسَنِ الصَّوْتِ بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், தன் தூதர் ஒருவர் இனிய குரலில் குர்ஆனை உரக்க ஓதும்போது அதைச் செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று, வேறு எதையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை. இதை அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்.184 அத்தியாயம் :
ஹதீஸ் 7545 — Sahih al Bukhari 97:170
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةُ بْنُ وَقَّاصٍ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا ـ وَكُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الْحَدِيثِ ـ قَالَتْ فَاضْطَجَعْتُ عَلَى فِرَاشِي، وَأَنَا حِينَئِذٍ أَعْلَمُ أَنِّي بَرِيئَةٌ وَأَنَّ اللَّهَ يُبَرِّئُنِي، وَلَكِنْ وَاللَّهِ مَا كُنْتُ أَظُنُّ أَنَّ اللَّهَ يُنْزِلُ فِي شَأْنِي وَحْيًا يُتْلَى، وَلَشَأْنِي فِي نَفْسِي كَانَ أَحْقَرَ مِنْ أَنْ يَتَكَلَّمَ اللَّهُ فِيَّ بِأَمْرٍ يُتْلَى، وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ‏}‏ الْعَشْرَ الآيَاتِ كُلَّهَا‏.‏
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கிளப்பியவர்கள் அவர்கள்மீது அவதூறு பேசிய நிகழ்ச்சி தொடர்பாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (உடல்நலம் குன்றி) படுக்கை யில் கிடந்தேன். நான் குற்றமற்றவள் என்பதையும் அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என்று அறிவிப்பான் என்பதையும் அப்போதே நான் அறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என் விஷயத்தில் (என்னைக் களங்கமற்றவள் என்று எடுத்துரைக்க காலங்காலமாக) ஓதப்படுகின்ற வேதஅறிவிப்பு ஒன்றை அருள்வான் என்று நான் எண்ணிப்பார்க்கவில்லை. ஓதப்படுகின்ற வசனம் ஒன்றில் என் தொடர்பாக அல்லாஹ் பேசுகின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. ஆனால், வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், “அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் (24ஆவது அத்தியாயத்தின்) பத்து வசனங்களை அருளினான்.185 அத்தியாயம் :
ஹதீஸ் 7546 — Sahih al Bukhari 97:171
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، أُرَاهُ عَنِ الْبَرَاءِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْعِشَاءِ ‏{‏وَالتِّينِ وَالزَّيْتُونِ‏}‏ فَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا أَوْ قِرَاءَةً مِنْهُ‏.‏
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஷா தொழு கையில் ‘வத்தீனீ வஸ்ஸைத்தூனி...’ எனும் (95ஆவது) அத்தியாயத்தை ஓதுவதை நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்களை விடவும் ‘அழகிய குரலுடையவரை’ அல்லது ‘அழகாக ஓதுபவரை’ நான் கண்டதில்லை.186 அத்தியாயம் :
ஹதீஸ் 7547 — Sahih al Bukhari 97:172
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُتَوَارِيًا بِمَكَّةَ، وَكَانَ يَرْفَعُ صَوْتَهُ، فَإِذَا سَمِعَ الْمُشْرِكُونَ سَبُّوا الْقُرْآنَ وَمَنْ جَاءَ بِهِ، فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم ‏{‏وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا‏}‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். (தொழுகையில்) தமது குரலை உயர்த்தி (குர்ஆனை ஓதி)வந்தார்கள். இணைவைப்பாளர்கள் கேட்கும்போது குர்ஆனையும், அதை (மக்கள்முன்) கொண்டுவந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். இதனால், அல்லாஹ் தன் தூதருக்கு “நீர் உமது தொழுகையில் குரலை உயர்த்தவும் வேண்டாம்; (ஒரேயடியாய்) தாழ்த்தவும் வேண்டாம்” (17:110) எனக் கட்டளையிட்டான்.187 அத்தியாயம் :
ஹதீஸ் 7548 — Sahih al Bukhari 97:173
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ لَهُ ‏ "‏ إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ وَالْبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ أَوْ بَادِيَتِكَ فَأَذَّنْتَ لِلصَّلاَةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَىْءٌ، إِلاَّ شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏‏.‏ قَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், “நீங்கள் ஆடுகளையும் (அவற்றை மேய்த்திட) பாலைவனத்தையும் நேசிப்பதை நான் பார்க்கின்றேன். நீங்கள் உங்கள் ஆடுகளுடன்’ அல்லது ‘உங்கள் பாலைவனத்தில்’ இருக்கும்போது தொழு கைக்காக பாங்கு சொன்னால் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், பாங்கு சொல்பவரின் குரலை வழிநெடுகிலும் கேட்கின்ற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவர்கள் அவருக்காக மறுமை நாளில் நிச்சயம் சாட்சியம் அளிப்பார்கள்” என்று சொல்லிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.188 அத்தியாயம் :
ஹதீஸ் 7549 — Sahih al Bukhari 97:174
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ الْقُرْآنَ وَرَأْسُهُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், நான் மாதவிடாயு டன் இருந்தபோது என் மடியில் தமது தலையை வைத்தபடி குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார்கள்.189 அத்தியாயம் :
ஹதீஸ் 7550 — Sahih al Bukhari 97:175
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدٍ الْقَارِيَّ، حَدَّثَاهُ أَنَّهُمَا، سَمِعَا عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمٍ، يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَمَعْتُ لِقِرَاءَتِهِ، فَإِذَا هُوَ يَقْرَأُ عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاَةِ، فَتَصَبَّرْتُ حَتَّى سَلَّمَ، فَلَبَبْتُهُ بِرِدَائِهِ فَقُلْتُ مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَأُ قَالَ أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ كَذَبْتَ، أَقْرَأَنِيهَا عَلَى غَيْرِ مَا قَرَأْتَ‏.‏ فَانْطَلَقْتُ بِهِ أَقُودُهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا‏.‏ فَقَالَ ‏"‏ أَرْسِلْهُ، اقْرَأْ يَا هِشَامُ ‏"‏‏.‏ فَقَرَأَ الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ كَذَلِكَ أُنْزِلَتْ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اقْرَأْ يَا عُمَرُ ‏"‏‏.‏ فَقَرَأْتُ الَّتِي أَقْرَأَنِي فَقَالَ ‏"‏ كَذَلِكَ أُنْزِلَتْ، إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ ‏"‏‏.‏
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளில் ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள் அல்ஃபுர்கான் எனும் (25ஆவது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை நான் செவியுற்றேன். நான் அவரது ஓதுதலை செவிதாழ்த்திக் கேட்ட போது, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காண்பிக்காத பல (வட்டார) மொழிவழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். ஆகவே, தொழுகையில் வைத்தே அவரைத் தண்டிக்க நான் முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுது முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுமையாயிருந் தேன். (அவர் சலாம் கொடுத்தவுடன்) அவரது மேல்துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, “நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக்காட்டியது யார்?” என்று கேட்டேன். அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான் எனக்கு இதை ஓதிக் காட்டினார்கள்” என்று சொன்னார். நான் “நீர் சொல்வது பொய். நீர் ஓதியதற்கு மாறாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக்காட்டினார்கள்” என்று சொல்லி, அவரை இழுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். “இவர் அல்ஃபுர்கான் அத்தியாயத்தை தாங்கள் எனக்கு ஓதிக்காட்டாத வேறு முறைகளின்படி ஓதுவதை நான் செவியுற்றேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவரை விடுங்கள்” என்று சொல்லிவிட்டு, “ஹிஷாமே! ஓதுங்கள்!” என்றார்கள். நான் செவியுற்ற அதே முறைப்படி அவர் ஓதினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வாறுதான் இந்த அத்தியாயம் அருளப்பெற்றது” என்று கூறிவிட்டு, “உமரே! நீங்கள் ஓதுங்கள்!” என்றார்கள். நானும் நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் காட்டியபடி ஓதினேன். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இவ்வாறுதான் இது அருளப்பெற்றது. இந்த குர்ஆன் ஏழு முறைப்படி அருளப்பெற்றுள்ளது. ஆகவே, இதிலிருந்து உங்களுக்கு எளிதானது எதுவோ அதை ஓதிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.190 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.