حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه أَنَّ أُنَاسًا، مِنْ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ كَانَ بَيْنَهُمْ شَىْءٌ، فَخَرَجَ إِلَيْهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ يُصْلِحُ بَيْنَهُمْ، فَحَضَرَتِ الصَّلاَةُ، وَلَمْ يَأْتِ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَجَاءَ بِلاَلٌ، فَأَذَّنَ بِلاَلٌ بِالصَّلاَةِ، وَلَمْ يَأْتِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَجَاءَ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حُبِسَ، وَقَدْ حَضَرَتِ الصَّلاَةُ فَهَلْ لَكَ أَنْ تَؤُمَّ النَّاسَ فَقَالَ نَعَمْ إِنْ شِئْتَ. فَأَقَامَ الصَّلاَةَ فَتَقَدَّمَ أَبُو بَكْرٍ، ثُمَّ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَمْشِي فِي الصُّفُوفِ، حَتَّى قَامَ فِي الصَّفِّ الأَوَّلِ، فَأَخَذَ النَّاسُ بِالتَّصْفِيحِ حَتَّى أَكْثَرُوا، وَكَانَ أَبُو بَكْرٍ لاَ يَكَادُ يَلْتَفِتُ فِي الصَّلاَةِ، فَالْتَفَتَ فَإِذَا هُوَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم وَرَاءَهُ فَأَشَارَ إِلَيْهِ بِيَدِهِ، فَأَمَرَهُ يُصَلِّي كَمَا هُوَ، فَرَفَعَ أَبُو بَكْرٍ يَدَهُ، فَحَمِدَ اللَّهَ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى وَرَاءَهُ حَتَّى دَخَلَ فِي الصَّفِّ، وَتَقَدَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ " يَا أَيُّهَا النَّاسُ مَا لَكُمْ إِذَا نَابَكُمْ شَىْءٌ فِي صَلاَتِكُمْ أَخَذْتُمْ بِالتَّصْفِيحِ، إِنَّمَا التَّصْفِيحُ لِلنِّسَاءِ، مَنْ نَابَهُ شَىْءٌ فِي صَلاَتِهِ فَلْيَقُلْ سُبْحَانَ اللَّهِ، فَإِنَّهُ لا يَسْمَعُهُ أَحَدٌ إِلاَّ الْتَفَتَ، يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ حِينَ أَشَرْتُ إِلَيْكَ لَمْ تُصَلِّ بِالنَّاسِ ". فَقَالَ مَا كَانَ يَنْبَغِي لاِبْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَىِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அம்ர் பின் அவ்ஃப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ தகராறு இருந்து வந்தது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன், அவர்களிடையே சமாதானம் செய்துவைப்பதற்காக அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். (நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்றிருந்த போது) தொழுகை நேரம் வந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் இன்னும் (திரும்பி) வரவில்லை. அப்போது பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். (அதன் பிறகும்) நபி (ஸல்) அவர்கள் வரவில்லை. ஆகவே, பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘நபி (ஸல்) அவர்கள் (வேலையின் காரணத்தால் உடனே வர முடியாமல்) தடுக்கப்பட்டுள்ளார்கள். தொழுகை நேரம் வந்துவிட்டது. ஆகவே, தாங்கள் மக்களுக்கு(த் தலைமை தாங்கி)த் தொழுவிக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘சரி, நீங்கள் விரும்பினால் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். உடனே பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்கு யிஇகாமத்’ சொல்ல, அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிப் பதற்காக) முன்னே சென்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வரிசைகளுக்கிடையே நடந்து வந்து, இறுதியில் முதல் வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் கைதட்டத் தொடங்கி, இறுதியில் கைத்தட்டலை அதிகரித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை யின்போது திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். இருந்தாலும் (மக்கள் கைதட்டும் ஓசையைக் கேட்டு) திரும்பிப் பார்த்தார்கள். அங்கே தமக்குப் பின்னே நபி (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிச் சைகை செய்து, அப்படியே தொழுவிக்கும் படி கட்டளையிட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, திரும்பாமல் அப்படியே பின் வாக்கில் நகர்ந்து, இறுதியில் வரிசைக்குள் புகுந்துகொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முன்னால் சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்தபின் மக்களை நோக்கி, ‘‘மக்களே! நீங்கள் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபகரமான விஷயத்தைக் காண) நேர்ந்தால் கைதட்டத் தொடங்கிவிடுகிறீர்கள். பெண்கள்தான் கைதட்ட வேண்டும். (ஆண்களில்) ஒருவர் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபணைக் குரிய விஷயத்தைக்) காண நேர்ந்தால், அவர் யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ்வே தூய்மையானவன்) என்று கூறட்டும். ஏனெனில், அதைக் கேட்பவர் எவரும் திரும்பிப் பார்க்காமல் இருக்கமாட்டார்” என்று கூறிவிட்டு, ‘‘அபூபக்ரே! நான் உங்களுக்குச் சைகை செய்தபோது நீங்கள் ஏன் மக்களுக்குத் தொழுவிக்கவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை” என்று பதிலளித்தார்கள்.2 அத்தியாயம் :
ஹதீஸ் 2691 — Sahih al Bukhari 53:2
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم لَوْ أَتَيْتَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ. فَانْطَلَقَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَكِبَ حِمَارًا، فَانْطَلَقَ الْمُسْلِمُونَ يَمْشُونَ مَعَهُ، وَهْىَ أَرْضٌ سَبِخَةٌ، فَلَمَّا أَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ إِلَيْكَ عَنِّي، وَاللَّهِ لَقَدْ آذَانِي نَتْنُ حِمَارِكَ. فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ مِنْهُمْ وَاللَّهِ لَحِمَارُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَطْيَبُ رِيحًا مِنْكَ. فَغَضِبَ لِعَبْدِ اللَّهِ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَشَتَمَا، فَغَضِبَ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا أَصْحَابُهُ، فَكَانَ بَيْنَهُمَا ضَرْبٌ بِالْجَرِيدِ وَالأَيْدِي وَالنِّعَالِ، فَبَلَغَنَا أَنَّهَا أُنْزِلَتْ {وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا}.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், ‘‘தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் வந்தால் (நன்றாயிருக்கும்)” என்று கூறப்பட்டது.3 நபி (ஸல்) அவர்கள் அவரிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம் களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவரை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவர், ‘‘தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கழுதையின் துர் நாற்றம் எனக்குத் தொல்லை தந்துவிட்டது” என்று கூறினார். அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதுதான்” என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏச, அன்சாரியும் ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோப மடைந்தார்கள். அவர்கள் தங்களுக்கிடையே ஈச்சங் (கிளையின்) குச்சியாலும் கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக்கொண்டார்கள். அப்போது, ‘‘இறை நம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால், அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள்” (49:9) எனும் வசனம் அருளப்பட்டது என்ற செய்தி எங்களுக்கு எட்டியது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களிடையே சமாதானம் செய்து வைப்பவர் பொய்யர் அல்லர். அவர் (இங்கும் அங்கும்) நல்லதை லிபுனைந்துலி கூறுகிறார். இதை உம்மு குல்ஸூம் பின்த் உக்பா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2693 — Sahih al Bukhari 53:4
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، وَإِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه أَنَّ أَهْلَ، قُبَاءٍ اقْتَتَلُوا حَتَّى تَرَامَوْا بِالْحِجَارَةِ، فَأُخْبِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِذَلِكَ فَقَالَ " اذْهَبُوا بِنَا نُصْلِحُ بَيْنَهُمْ ".
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிகுபா’வாசிகள் தமக்கிடையே சண்டை யிட்டுக்கொண்டனர்; ஒருவர் மீதொருவர் கற்களை வீசிக்கொள்ளுமளவுக்கு அவர் களது சண்டை இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள், ‘‘நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவைப்போம்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு பெண், தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை அல்லது புறக்கணிப் பைப் பற்றி அஞ்சினால், அவ்விருவரும் தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதால் அவர்கள்மீது எந்தக் குற்றமு மில்லை” (4:128) எனும் குர்ஆன் வசனத் திற்கு விளக்கமளித்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறுகூறினார்கள்: ஒரு மனிதன் தன் மனைவியிடம் தனக்கு மகிழ்வைத் தராத முதுமை உள்ளிட்டவற்றைக் கண்டு அவளைப் பிரிந்துவிட விரும்புவான். அப்போது அவள் ‘‘என்னை (உன் மணபந்தத்திலேயே) வைத்துக்கொள். (என் உரிமைகளில்) நீ விரும்பியதை எனக்குப் பங்கிட்டுத் தந்துவிடு” என்று சொல்வதை இது குறிக்கும். இருவரும் பரஸ்பரம் ஒத்துப் போய்விட்டார்கள் என்றால், இதில் தவறேதுமில்லை. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களும் கூறியதாவது: (ஒருமுறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கேட்டார். அவருடைய எதிரி எழுந்து நின்று, ‘‘இவர் சொன்னது உண்மையே. எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அந்தக் கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), ‘‘என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். மக்கள் என்னிடம், யிஉன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்படவேண்டும்’ என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், யிஉம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடி களும், ஓராண்டுக் காலத்திற்கு நாடுகடத்தும் தண்டனையும்தான் கொடுக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்புக் கூறினார்கள்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும் ஆடுகளும் உம்மிடம் திருப்பித்தரப்பட வேண்டும்; உம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடுகடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, ‘‘உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ், அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை அளித்தார். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களும் கூறியதாவது: (ஒருமுறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கேட்டார். அவருடைய எதிரி எழுந்து நின்று, ‘‘இவர் சொன்னது உண்மையே. எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அந்தக் கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), ‘‘என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். மக்கள் என்னிடம், யிஉன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்படவேண்டும்’ என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், யிஉம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடி களும், ஓராண்டுக் காலத்திற்கு நாடுகடத்தும் தண்டனையும்தான் கொடுக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்புக் கூறினார்கள்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும் ஆடுகளும் உம்மிடம் திருப்பித்தரப்பட வேண்டும்; உம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடுகடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, ‘‘உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ், அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை அளித்தார். அத்தியாயம் :
ஹதீஸ் 2697 — Sahih al Bukhari 53:7
حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ ". رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الْمَخْرَمِيُّ وَعَبْدُ الْوَاحِدِ بْنُ أَبِي عَوْنٍ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாக உண்டாக்குகிறாரோ அது நிராகரிக்கப் பட்டதாகும். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2698 — Sahih al Bukhari 53:8
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا صَالَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَهْلَ الْحُدَيْبِيَةِ كَتَبَ عَلِيٌّ بَيْنَهُمْ كِتَابًا فَكَتَبَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ الْمُشْرِكُونَ لاَ تَكْتُبْ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، لَوْ كُنْتَ رَسُولاً لَمْ نُقَاتِلْكَ. فَقَالَ لِعَلِيٍّ " امْحُهُ ". فَقَالَ عَلِيٌّ مَا أَنَا بِالَّذِي أَمْحَاهُ. فَمَحَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ، وَصَالَحَهُمْ عَلَى أَنْ يَدْخُلَ هُوَ وَأَصْحَابُهُ ثَلاَثَةَ أَيَّامٍ، وَلاَ يَدْخُلُوهَا إِلاَّ بِجُلُبَّانِ السِّلاَحِ، فَسَأَلُوهُ مَا جُلُبَّانُ السِّلاَحِ فَقَالَ الْقِرَابُ بِمَا فِيهِ.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா குறைஷியரான)ஹுதைபியாக் காரர்களிடம் (ஹுதைபியா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டபோது அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று அவர்கள் எழுதியவுடன், இணைவைப்பாளர்கள், ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று எழுதாதீர்கள் (என்று சொல்லிவிட்டு, முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி), ‘‘நீர் அல்லாஹ்வின் தூதராக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்கமாட்டோம்” என்று கூறினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், ‘‘அதை அழித்து விடுங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ‘‘நான் அதை (ஒருபோதும்) அழிக்கப்போவதில்லை” என்று கூறி விட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அதை அழித்தார்கள். நானும் என் தோழர்களும் (மக்கா நகரில் அடுத்த ஆண்டு) மூன்று நாட்கள் தங்குவோம். அதில் நாங்கள், யிஜுலுப்பானுஸ் ஸிலாஹ்’ உடன்தான் நுழைவோம் என்று அவர் களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மக்கள், ‘‘ஜுலுப்பானுஸ் ஸிலாஹ் என்றால் என்ன?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அவர்கள், யிஉறைக்கு உள்ளே இருக்கும் ஆயுதங்கள்’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்ய (மக்கா நோக்கி)ச் சென்றார்கள். மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களை மக்காவிற்குள் நுழையவிட மறுத்தார்கள். இறுதியில், நபி (ஸல்) அவர்கள், மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாட்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும் என்று மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, ‘‘இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம்” என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், ‘‘நாங்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டோம்; நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழைய விடாமல்) தடுத்திருக்கமாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுதான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதும் ஆவேன்” என்று பதிலளித்துவிட்டு, அலீ (ரலி) அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதர்’ என்பதை அழித்துவிடுங்கள் என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ‘‘முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (தகுதியைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்து, ‘‘இது அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மத் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் ஆகும். (முஸ்லிம்களின்) ஆயுதம் எதுவும் உறையிலிருந்தபடியே தவிர, மக்காவினுள் நுழையாது. மக்கா வாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும்கூட, அவரை முஹம்மத் தம்முடன் அழைத்துச்செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மத் தடுக்கக் கூடாது” என்று எழுதினார்கள். (அடுத்த ஆண்டு) நபி (ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணை(யான மூன்று நாட்கள்) கழிந்தவுடன் மக்கா வாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் கழிந்துவிட்டது” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுத் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா (ரலி) அவர்களின் (அனாதை) மகள், ‘‘என் தந்தையின் (பால்குடி) சகோதரரே! என் தந்தையின் சகோதரரே!” என்று (கூறிக்கொண்டே) முஸ்லிம்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அவர்கள் அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், ‘‘இவளை எடுத்துக்கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளைத் தூக்கிவை” என்று கூறி னார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் (மதீனா வந்தபின்) அலீ (ரலி) அவர்களும், ஸைத் பின் அல்ஹாரிஸா (ரலி) அவர்களும், ஜஅஃபர் (ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், ‘அவளை நான்தான் வளர்ப்பேன்’ என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக்கொண்)டனர். அலீ (ரலி) அவர்கள், ‘‘நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் தந்தையின் சகோதரர் மகள்” என்று கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்கள், ‘‘இவள் என் தந்தையின் சகோதரர் மகள். இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத் தின்)கீழ் இருக்கிறார்” என்று கூறினார்கள். ஸைத் (ரலி) அவர்கள், ‘‘(இவள்) என் (நட்புறவு) சகோதரரின் மகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்குச் சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர் (ரலி) அவர்கள் அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித் தார்கள். மேலும், ‘‘சிற்றன்னை தாயின் இடத்தில் இருக்கிறார்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்களிடம், ‘‘நீர் என்னைச் சேர்ந்தவர்; நான் உம்மைச் சேர்ந்தவன்” என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள். ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எமது பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)” என்று கூறினார்கள். அத்தியாயம் :