ஹஜ்ஜின்போது வேட்டையாடுவதற்கான தண்டனை (ஜஸா உஸ்ஸைத்)
46 ஹதீஸ்கள் · #1821–1866
ஹதீஸ் 1841 — Sahih al Bukhari 28:21
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعْتُ جَابِرَ بْنَ زَيْدٍ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ بِعَرَفَاتٍ " مَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ، وَمَنْ لَمْ يَجِدْ إِزَارًا فَلْيَلْبَسْ سَرَاوِيلَ ". لِلْمُحْرِمِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்தியபோது, “யாருக்குக் காலணிகள் கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்; யாருக்குக் கீழங்கி கிடைக்கவில்லையோ அவர் முழுக்கால் சட்டைகளை அணியட்டும்!” என்று இஹ்ராம் கட்டியவர்களுக்குக் கூறியதை நான் செவியுற்றேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1842 — Sahih al Bukhari 28:22
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ فَقَالَ " لاَ يَلْبَسِ الْقَمِيصَ، وَلاَ الْعَمَائِمَ، وَلاَ السَّرَاوِيلاَتِ، وَلاَ الْبُرْنُسَ، وَلاَ ثَوْبًا مَسَّهُ زَعْفَرَانٌ وَلاَ وَرْسٌ، وَإِنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ ".
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவர் எத்தகைய ஆடைகளை அணியலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(முழு நீளச்) சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை கள், (முக்காடுள்ள) மேலங்கிகள், குங்குமச் சாயம் தோய்ந்த ஆடை, வர்ஸ் எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்ந்த ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது. காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை அணிந்துகொள்ளட்டும்! ஆயினும், கணுக் காலுக்குக் கீழே இருக்கும்படி அவற்றைக் கத்தரித்துக்கொள்ளட்டும்!” என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1843 — Sahih al Bukhari 28:23
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَطَبَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَرَفَاتٍ فَقَالَ " مَنْ لَمْ يَجِدِ الإِزَارَ فَلْيَلْبَسِ السَّرَاوِيلَ، وَمَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள், “யாருக்குக் கீழங்கி கிடைக்க வில்லையோ அவர் முழுக்கால் சட்டை களை அணியட்டும்! யாருக்குக் காலணி கள் கிடைக்கவில்லையோ அவர் காலுறை களை அணியட்டும்!” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1844 — Sahih al Bukhari 28:24
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ذِي الْقَعْدَةِ، فَأَبَى أَهْلُ مَكَّةَ أَنْ يَدَعُوهُ يَدْخُلُ مَكَّةَ، حَتَّى قَاضَاهُمْ لاَ يُدْخِلُ مَكَّةَ سِلاَحًا إِلاَّ فِي الْقِرَابِ.
பராஉ (ரலி) அவர்கள் கூறிதாவது: நபி (ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்யப் புறப்பட்டார்கள். ஆனால், அவர்களை மக்காவிற்குள் நுழையவிட மக்காவாசிகள் மறுத்தார்கள். (அடுத்த ஆண்டில்) ஆயுதங்களை உறையில் போட்டுக்கொண்டு மக்காவினுள் நுழைவதாக அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1845 — Sahih al Bukhari 28:25
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ، وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، هُنَّ لَهُنَّ وَلِكُلِّ آتٍ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِمْ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ، فَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ أَنْشَأَ، حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்தை யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனாஸில்’ எனும் இடத்தையும் யமன்வாசிகளுக்கு ‘யலம்லம்’ எனும் இடத்தையும் இஹ்ராம் கட்டுவதற்குரிய எல்லைகளாக நிர்ணயித் தார்கள்; இந்த எல்லைகள் அந்தப் பகுதி யினருக்கும் அதன் வழியாக வேறு பகுதியிலிருந்து ஹஜ், உம்ராவை நாடி வருபவருக்கும் உரியவையாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் எந்த இடத்தி லிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்தே இஹ்ராம் கட்ட வேண்டும்; மக்காவாசிகள் மக்காவிலிருந்தே இஹ்ராம் கட்ட வேண்டும்.9 அத்தியாயம் :
ஹதீஸ் 1846 — Sahih al Bukhari 28:26
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَامَ الْفَتْحِ، وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ، فَقَالَ إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ. فَقَالَ " اقْتُلُوهُ ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் தலையில் இரும்புத் தொப்பியுடன் (இஹ்ராம் கட்டாத நிலையில் மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒரு மனிதர் வந்து, “இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறான்” எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவனைக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.10 அத்தியாயம் :
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். மஞ்சள் அல்லது அதைப் போன்ற அடையாளம் உள்ள மேலங்கியை அவர் அணிந்திருந்தார். “நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது அவர்களைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று உமர் (ரலி) அவர்கள் என்னிடம் வினவினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்பெற்று பின்னர் அது அவர்களைவிட்டு விலகியது; (அதை நான் பார்த்தேன்). அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உமது ஹஜ்ஜில் செய்யக்கூடியதையே உம்ராவிலும் செய்வீராக!” என்று கூறினார்கள். ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்துவிட்டார். உடனே கடிபட்டவர் (கையை இழுத்தபோது) கடித்தவரது முன்பற்களை உடைத்துவிட்டார். பல்லுடைக்கப்பட்டதற்கு எந்த நஷ்ட ஈடும் தரவேண்டியதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1848 — Sahih al Bukhari 28:28
وَعَضَّ رَجُلٌ يَدَ رَجُلٍ ـ يَعْنِي فَانْتَزَعَ ثَنِيَّتَهُ ـ فَأَبْطَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم.
وَعَضَّ رَجُلٌ يَدَ رَجُلٍ ـ يَعْنِي فَانْتَزَعَ ثَنِيَّتَهُ ـ فَأَبْطَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم.
ஹதீஸ் 1849 — Sahih al Bukhari 28:29
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَا رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَرَفَةَ إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ، فَوَقَصَتْهُ ـ أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ ـ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ ـ أَوْ قَالَ ثَوْبَيْهِ ـ وَلاَ تُحَنِّطُوهُ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ يُلَبِّي ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் அரஃபா பெருவெளியில் தங்கியிருந்தார். அப்போது அவர் தமது ஊர்தி ஒட்டகத் திலிருந்து கீழே விழுந்துவிட்டார். ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். இவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள்; இவரது தலையை மூடாதீர்கள்! ஏனெனில், இவர் ‘தல்பியா’ சொல்லும் நிலையில் மறுமை நாளில் இவரை அல்லாஹ் எழுப்புவான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1850 — Sahih al Bukhari 28:30
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَا رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَرَفَةَ إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ فَوَقَصَتْهُ ـ أَوْ قَالَ فَأَوْقَصَتْهُ ـ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تَمَسُّوهُ طِيبًا، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، وَلاَ تُحَنِّطُوهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் அரஃபா பெருவெளியில் தங்கியிருந்தார். அப்போது அவர் தமது ஊர்தி ஒட்டகத்தி லிருந்து கீழே விழுந்துவிட்டார். ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள், “இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். இவருக்கு நறுமணம் பூசாதீர்கள். இவரது தலையை மூடாதீர்கள். இவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் அல்லாஹ், இவரை ‘தல்பியா’ கூறிக்கொண்டிருப்பவராக எழுப்புவான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :