حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عَاصِمٌ أَبُو عَبْدِ الرَّحْمَنِ الأَحْوَلُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْمَدِينَةُ حَرَمٌ، مِنْ كَذَا إِلَى كَذَا، لاَ يُقْطَعُ شَجَرُهَا، وَلاَ يُحْدَثُ فِيهَا حَدَثٌ، مَنْ أَحْدَثَ حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனா நகரம் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்!2 இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத் தில் இல்லாத) புதிய செயல் எதுவும் உருவாக்கப்படக் கூடாது. யார் (மார்க்கத் தில் இல்லாத) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை உருவாக்குகிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1868 — Sahih al Bukhari 29:2
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ فَأَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ " يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي ". فَقَالُوا لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ. فَأَمَرَ بِقُبُورِ الْمُشْرِكِينَ، فَنُبِشَتْ، ثُمَّ بِالْخِرَبِ فَسُوِّيَتْ، وَبِالنَّخْلِ فَقُطِعَ، فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளை யிட்டார்கள்; “பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! (உங்கள் தோட்டத்தை) எனக்கு விலைபேசி (விற்று)விடுங்கள்” என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தார் “இதற்கான விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணைவைப் பாளர்களின் சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ் வாறே அவை தோண்டப்பட்டன. அவர் களின் கட்டளைப்படியே இடிபாடுகள் (அகற்றப்பட்டு) சமப்படுத்தப்பட்டன; பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன; பள்ளிவாசலின் கிப்லா திசையில், (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை வரிசையாக (நபித் தோழர்கள்) நட்டனர். அத்தியாயம் :
ஹதீஸ் 1869 — Sahih al Bukhari 29:3
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " حُرِّمَ مَا بَيْنَ لاَبَتَىِ الْمَدِينَةِ عَلَى لِسَانِي ". قَالَ وَأَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَنِي حَارِثَةَ فَقَالَ " أَرَاكُمْ يَا بَنِي حَارِثَةَ قَدْ خَرَجْتُمْ مِنَ الْحَرَمِ ". ثُمَّ الْتَفَتَ، فَقَالَ " بَلْ أَنْتُمْ فِيهِ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “மதீனாவின் இரு கருங்கல் மலை களுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவால் (என் வாயிலாக) புனிதமாக்கப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மதீனாவின் மேட்டுப் பகுதியில் வசித்த) பனூ ஹாரிஸா குலத்தாரிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று, “பனூ ஹாரிஸா குலத்தாரே! நீங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு வெளியே இருப்பதாகவே கருதுகிறேன்” என்றார்கள். பின்னர் திரும்பிப் பார்த்துவிட்டு, “இல்லை! நீங்கள் ஹரம் எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள்” என்றார்கள். அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் வேதத்தையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (நாம் படிக்கின்ற நூல்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை. (இந்த ஏட்டில் உள்ளதாவது): “ஆயிர் (அய்ர்) என்ற மலையிலிருந்து இன்ன இடம் (‘ஸவ்ர்’ அல்லது ‘உஹுத்’)வரை மதீனா புனித மானதாகும்;3 இதில் யாரேனும் (மார்க்கத் தில் இல்லாத) ஒன்றைப் புதிதாக ஏற்படுத் தினால், அல்லது அவ்வாறு ஏற்படுத்துப வருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ் வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் அவன்மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வழிபாடோ, கூடுதலான வழிபாடோ அவனிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது. முஸ்லிம்களில் யார் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானது) ஆகும். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்! அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வழிபாடோ கூடுதலான வழிபாடோ ஏற்றுக்கொள்ளப்படாது. விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன், தன்(னை விடுதலை செய்த) உரிமையாளர்களின் அனுமதியின்றி, வேறொருவரைத் தன் உரிமையாளர் என்று கூறினால், அவன்மீதும் அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்! அவன் செய்த கடமையான வழிபாடோ, கூடுதலான வழிபாடோ ஏற்றுக்கொள்ளப்படாது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (கூடுதலான வழிபாடு என்பதைக் குறிக்கும்) ‘அத்ல்’ எனும் சொல்லுக்கு, இங்கு ‘பரிகாரம்’ என்பது பொருளாகும். அத்தியாயம் :
ஹதீஸ் 1871 — Sahih al Bukhari 29:5
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَبَا الْحُبَابِ، سَعِيدَ بْنَ يَسَارٍ يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. " أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى يَقُولُونَ يَثْرِبُ. وَهْىَ الْمَدِينَةُ، تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எல்லா ஊர்களையும் தூக்கிச் சாப்பிடக் கூடியதும் ‘யஸ்ரிப்’ என்று மக்கள் அழைக் கக்கூடியதுமான ஓர் ஊருக்கு (புலம் பெயர்ந்து செல்லுமாறு) நான் கட்டளை யிடப்பட்டேன். அதுதான் மதீனா. இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று மதீனா (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1872 — Sahih al Bukhari 29:6
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي حُمَيْدٍ ـ رضى الله عنه ـ أَقْبَلْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ تَبُوكَ حَتَّى أَشْرَفْنَا عَلَى الْمَدِينَةِ فَقَالَ " هَذِهِ طَابَةُ ".
அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக்கிலிருந்து (அறப்போர் முடிந்து) திரும்பினோம். மதீனாவை நாங்கள் நெருங்கியதும் “இது ‘தாபா!’ (தூயது!)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1873 — Sahih al Bukhari 29:7
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ كَانَ يَقُولُ لَوْ رَأَيْتُ الظِّبَاءَ بِالْمَدِينَةِ تَرْتَعُ مَا ذَعَرْتُهَا، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا بَيْنَ لاَبَتَيْهَا حَرَامٌ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் மான்கள் மேய்ந்து கொண்டிருப்பதை நான் கண்டால், அவற்றை (விரட்டவோ பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்கமாட்டேன். (ஏனெனில்) “மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி புனித மானதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1874 — Sahih al Bukhari 29:8
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " يَتْرُكُونَ الْمَدِينَةَ عَلَى خَيْرِ مَا كَانَتْ، لاَ يَغْشَاهَا إِلاَّ الْعَوَافِ ـ يُرِيدُ عَوَافِيَ السِّبَاعِ وَالطَّيْرِ ـ وَآخِرُ مَنْ يُحْشَرُ رَاعِيَانِ مِنْ مُزَيْنَةَ، يُرِيدَانِ الْمَدِينَةَ يَنْعِقَانِ بِغَنَمِهِمَا، فَيَجِدَانِهَا وَحْشًا، حَتَّى إِذَا بَلَغَا ثَنِيَّةَ الْوَدَاعِ خَرَّا عَلَى وُجُوهِهِمَا ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனா சிறந்த நிலையில் இருக்கும் போதே, அதைவிட்டு மக்கள் சென்றுவிடுவர். வன விலங்குகளும் பறவைகளும் மட்டுமே அதைச் சூழ்ந்து கொண்டிருக்கும். (மறுமை நாளில்,) இறுதியாக எழுப்பப்படவிருப்பவர்கள் ‘முஸைனா’ குலத்தைச் சேர்ந்த இரண்டு இடையர்களே ஆவர். அவர்கள் இருவரும் தம் ஆடுகளைச் சப்தமிட்டு ஓட்டிக்கொண்டு மதீனாவை நாடிச் செல்வார்கள்; அங்கு வனவிலங்குகளையே காண்பர். (அல்லது அது வெறுமையாக இருப்பதைக் காண்பர்.) இறுதியில் ‘அல்வதா’ (எனும்) மலைக் குன்றை அடைந்தவுடன் மூர்ச்சையுற்று முகங்குப்புற விழுந்து (இறந்து)விடு வார்கள்5 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யமன் நாடு வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத் தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ள வர்களையும் ஏற்றிக்கொண்டு வாகனங் களை விரட்டியவர்களாக (மதீனாவி லிருந்து) வெளியேறிவிடுவார்கள். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது; அவர்கள் அறிந்திருந்தால். பின்னர் ‘ஷாம்’ (சிரியா) வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் வாகனங்களை விரட்டியவர்களாக தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் ஏற்றிக்கொண்டு (மதீனாவிலிருந்து) வெளியேறிவிடுவார்கள். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது; இதை அவர்கள் அறிந்திருந்தால். பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் வாகனங்களை விரட்டியவர்களாக தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் ஏற்றிக்கொண்டு (மதீனாவிலிருந்து) வெளியேறிவிடுவார்கள். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது; அவர்கள் அறிந்திருந்தால்.6 இதை சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1876 — Sahih al Bukhari 29:10
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الإِيمَانَ لَيَأْرِزُ إِلَى الْمَدِينَةِ كَمَا تَأْرِزُ الْحَيَّةُ إِلَى جُحْرِهَا ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இறைநம்பிக்கை (ஈமான்) மதீனாவில் அபயம் பெறும்.7 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :