حَدَّثَنَا حُسَيْنُ بْنُ حُرَيْثٍ، أَخْبَرَنَا الْفَضْلُ، عَنْ جُعَيْدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَمِعْتُ سَعْدًا ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَكِيدُ أَهْلَ الْمَدِينَةِ أَحَدٌ إِلاَّ انْمَاعَ كَمَا يَنْمَاعُ الْمِلْحُ فِي الْمَاءِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவாசிகளுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று கரைந்து போவார்கள். இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1878 — Sahih al Bukhari 29:12
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، سَمِعْتُ أُسَامَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَشْرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى أُطُمٍ مِنْ آطَامِ الْمَدِينَةِ فَقَالَ " هَلْ تَرَوْنَ مَا أَرَى إِنِّي لأَرَى مَوَاقِعَ الْفِتَنِ خِلاَلَ بُيُوتِكُمْ كَمَوَاقِعِ الْقَطْرِ ". تَابَعَهُ مَعْمَرٌ وَسُلَيْمَانُ بْنُ كَثِيرٍ عَنِ الزُّهْرِيِّ.
உசாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீது ஏறி நோட்டமிட்டார்கள். பிறகு “நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? மழைத் துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் நிகழப் போவதை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்கள்.8 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1879 — Sahih al Bukhari 29:13
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي بَكْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْمَدِينَةَ رُعْبُ الْمَسِيحِ الدَّجَّالِ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ، عَلَى كُلِّ باب مَلَكَانِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மசீஹுத் தஜ்ஜாவைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்; ஒவ்வொரு வாசலிலும் இரு வானவர்கள் இருப்பார்கள். இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1880 — Sahih al Bukhari 29:14
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. " عَلَى أَنْقَابِ الْمَدِينَةِ مَلاَئِكَةٌ، لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ وَلاَ الدَّجَّالُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவின் நுழைவாயில்களில் வானவர்கள் இருப்பர். மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழையமாட்டார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1881 — Sahih al Bukhari 29:15
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا أَبُو عَمْرٍو، حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ مِنْ بَلَدٍ إِلاَّ سَيَطَؤُهُ الدَّجَّالُ، إِلاَّ مَكَّةَ وَالْمَدِينَةَ، لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ إِلاَّ عَلَيْهِ الْمَلاَئِكَةُ صَافِّينَ، يَحْرُسُونَهَا، ثُمَّ تَرْجُفُ الْمَدِينَةُ بِأَهْلِهَا ثَلاَثَ رَجَفَاتٍ، فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்காவையும் மதீனாவையும் தவிர தஜ்ஜால் கால்வைக்காத எந்த ஊரும் இராது. மதீனாவின் எந்தவொரு நுழை வாயிலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து நின்று அதைக் காவல் புரிந்துகொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை குலுங்கும்; அப்போது ஒவ்வோர் இறைமறுப்பாளனையும் நய வஞ்சகனையும் அல்லாஹ் (மதீனா விலிருந்து) வெளியேற்றிவிடுவான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1882 — Sahih al Bukhari 29:16
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثًا طَوِيلاً عَنِ الدَّجَّالِ، فَكَانَ فِيمَا حَدَّثَنَا بِهِ أَنْ قَالَ " يَأْتِي الدَّجَّالُ ـ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ نِقَابَ الْمَدِينَةِ ـ بَعْضَ السِّبَاخِ الَّتِي بِالْمَدِينَةِ، فَيَخْرُجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ، هُوَ خَيْرُ النَّاسِ ـ أَوْ مِنْ خَيْرِ النَّاسِ ـ فَيَقُولُ أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ، الَّذِي حَدَّثَنَا عَنْكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثَهُ، فَيَقُولُ الدَّجَّالُ أَرَأَيْتَ إِنْ قَتَلْتُ هَذَا ثُمَّ أَحْيَيْتُهُ، هَلْ تَشُكُّونَ فِي الأَمْرِ فَيَقُولُونَ لاَ. فَيَقْتُلُهُ، ثُمَّ يُحْيِيهِ فَيَقُولُ حِينَ يُحْيِيهِ وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَشَدَّ بَصِيرَةً مِنِّي الْيَوْمَ، فَيَقُولُ الدَّجَّالُ أَقْتُلُهُ فَلاَ أُسَلَّطُ عَلَيْهِ ".
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தஜ்ஜாலைப் பற்றி நீண்டதொரு ஹதீஸை எங்களுக்கு அறிவித்தார்கள். எங்களுக்கு அவர்கள் அறிவித்தவற்றில் பின்வரும் தகவலும் அடங்கும்: மதீனாவின் நுழைவாயில்களில் நுழை வது தஜ்ஜாலுக்குத் தடை செய்யப்பட்டி ருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனா(வை அடுத்துள்ள) உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களிலேயே சிறந்த ஒரு மனிதர் புறப்படுவார்; அவர் அவனிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவனது செய்தியை எங்களுக்கு முன்னறி விப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதிகூறுகிறேன்” என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), “நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (நான்தான் இறைவன் எனும்) இந்த விஷயத்தில் நீங்கள் சந்தேகம்கொள்வீர்களா?” என்று கேட்பான். மக்கள் “இல்லை” என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது அந்த (நல்ல) மனிதர் உயிர்பெற்றதும், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தைவிடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்குமுன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்று கூறுவார். தஜ்ஜால், “நான் இவரைக் கொல்வேன்” என்பான். ஆனால், அவர்மீது அவனுக்கு அதிகாரம் வழங்கப்படாது. அத்தியாயம் :
ஹதீஸ் 1883 — Sahih al Bukhari 29:17
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ جَاءَ أَعْرَابِيٌّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَايَعَهُ عَلَى الإِسْلاَمِ، فَجَاءَ مِنَ الْغَدِ مَحْمُومًا، فَقَالَ أَقِلْنِي، فَأَبَى ثَلاَثَ مِرَارٍ، فَقَالَ " الْمَدِينَةُ كَالْكِيرِ، تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طَيِّبُهَا ".
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். மறுநாள் அவர் காய்ச்சலுடன் வந்து, “(இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்திலிருந்து) என்னை நீக்கிவிடுங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். (எனவே, அவர் மதீனாவை விட்டு வெளியேறினார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “மதீனா, (கொல்லனின்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர் களை வெளியேற்றிவிடும்; அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார் கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1884 — Sahih al Bukhari 29:18
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ ـ رضى الله عنه ـ يَقُولُ لَمَّا خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى أُحُدٍ رَجَعَ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَقَالَتْ فِرْقَةٌ نَقْتُلُهُمْ. وَقَالَتْ فِرْقَةٌ لاَ نَقْتُلُهُمْ. فَنَزَلَتْ {فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينِ فِئَتَيْنِ} وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّهَا تَنْفِي الرِّجَالَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الْحَدِيدِ ".
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உஹுத் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக் காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர், “இவர்களைக் கொல்வோம்” என்றனர். மற்றொரு பிரிவினர், “இவர் களைக் கொல்லக் கூடாது!” என்றனர். அப்போது “உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு பிரிவினர்களாக உள்ளீர்கள்!” (4:88) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. “நெருப்பு, இரும்பின் துருவை அகற்றுவதைப் போன்று இந்நகரம் (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1885 — Sahih al Bukhari 29:19
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، سَمِعْتُ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " اللَّهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَىْ مَا جَعَلْتَ بِمَكَّةَ مِنَ الْبَرَكَةِ ". تَابَعَهُ عُثْمَانُ بْنُ عُمَرَ عَنْ يُونُسَ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய வளத்தை (பரக்கத்) போன்று இரு மடங்கை மதீனா வில் ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித் தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1886 — Sahih al Bukhari 29:20
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ، فَنَظَرَ إِلَى جُدُرَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ رَاحِلَتَهُ، وَإِنْ كَانَ عَلَى دَابَّةٍ، حَرَّكَهَا مِنْ حُبِّهَا.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து ஊர் திரும்பும்போது மதீனாவி(ல் உள்ள வீடுகளி)ன் சுவர்களைக் கண்டதும் தமது ஊர்தி ஒட்டகத்தை விரைவாகச் செலுத்து வார்கள். அவர்கள் பிராணியின்மீது அமர்ந்திருந்தால், மதீனாமீது கொண்ட அன்பால் அதை முடுக்கிவிடுவார்கள். அத்தியாயம் :