حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَتَحَوَّلُوا، إِلَى قُرْبِ الْمَسْجِدِ، فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُعْرَى الْمَدِينَةُ، وَقَالَ " يَا بَنِي سَلِمَةَ. أَلاَ تَحْتَسِبُونَ آثَارَكُمْ ". فَأَقَامُوا.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ சலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் அருகே இடம்பெயர விரும்பினர். மதீனா(வின் மற்ற பகுதிகள்) காலி செய்யப்படுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, “பனூ சலிமா குலத்தாரே! நீங்கள் (பள்ளிவாசலுக்கு நடந்து வருவதற்கான) காலடித் தடங்களின் நன்மைகளை எதிர்பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். ஆகவே, பனூ சலிமா குலத்தார் (தாம் முன்பு வசித்துக்கொண்டிருந்த இடத்திலேயே) தங்கிவிட்டனர். அத்தியாயம் :
ஹதீஸ் 1888 — Sahih al Bukhari 29:22
حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இல்லத்திற்கும் எனது சொற் பொழிவுமேடை (மிம்பரு)க்கும் இடைப் பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும். எனது சொற்பொழிவு மேடையானது, எனது (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது.10 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது ஆபூபக்ர் (ரலி), பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் கண்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது, இவ்வாறு (கவிதை) கூறுவார்கள்: காலை வாழ்த்துக் கூறப்பெற்ற நிலையில் ஒவ்வொரு மனிதனும் தம் குடும்பத்தாரோடு காலைப் பொழுதை அடைகிறான் (ஆனால்,) அவன் செருப்புவாரைவிட மிக அருகில் மரணம் இருக்கிறது (என்பதை அவன் அறிவதில்லை) பிலால் (ரலி) அவர்கள் காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரல் எழுப்பி பின்வரும் கவிதை கூறுவார்கள்: ‘இத்கிர்’ (நறுமணப்) புல்லும் ‘ஜலீல்’ கூரைப் புல்லும் என்னைச் சுற்றியிருக்க, ஒரு இராப் பெழுதையேனும் (மக்காவின்) பள்ளத்தாக்கில் நான் கழிப்பேனா? (மக்காவின்) ‘மிஜன்னா’ (சுனை) நீரை ஒரு நாள் ஒரு பொழுது நான் சுவைப்பேனா? அந்த ஷாமா, தஃபீல் மலைகள் எனக்குத் தென்படுமா? மேலும் பிலால் (ரலி) அவர்கள், “இறைவா! ஷைபா பின் ரபிஆ, உத்பா பின் ரபீஆ, உமய்யா பின் கலஃப் ஆகியோர் எங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றி, இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியதைப் போன்று, அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி (சபித்து)விடுவாயாக!” என்று கூறுவார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! நாங்கள் மக்காவை நேசித்ததைப் போன்று, அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ‘ஸாஉ’, ‘முத்’து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ வளம் புரிவாயாக! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை ‘ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு இடம்பெயரச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) ‘புத்ஹான்’ எனும் ஓடையில் மாசடைந்த தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. அத்தியாயம் :
ஹதீஸ் 1890 — Sahih al Bukhari 29:24
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صلى الله عليه وسلم. وَقَالَ ابْنُ زُرَيْعٍ عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أُمِّهِ، عَنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَتْ سَمِعْتُ عُمَرَ، نَحْوَهُ. وَقَالَ هِشَامٌ عَنْ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصَةَ، سَمِعْتُ عُمَرَ، رضى الله عنه.
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைவா! உன் பாதையில் வீர மரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு வாயாக! எனது மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்துவாயாக! இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :