حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ حِينَ خَرَجَ إِلَى مَكَّةَ مُعْتَمِرًا فِي الْفِتْنَةِ قَالَ إِنْ صُدِدْتُ عَنِ الْبَيْتِ صَنَعْتُ كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَأَهَلَّ بِعُمْرَةٍ، مِنْ أَجْلِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ عَامَ الْحُدَيْبِيَةِ.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், (மக்காவில் அரசியல்) குழப்பம் இருந்த காலத்தில் உம்ராவிற்காக மக்கா விற்குப் புறப்பட்டார்கள். “நான் கஅபா விற்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டால், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தடுக்கப்பட்டபோது) செய்ததைப் போன்று செய்வேன்” என்று கூறிவிட்டு, உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா ஆண்டில் உம்ரா விற்காக இஹ்ராம் கட்டியிருந்த(போது தடுக்கப்பட்ட)தே இதற்குக் காரணமாகும். அத்தியாயம் :
ஹதீஸ் 1807 — Sahih al Bukhari 27:2
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَاهُ أَنَّهُمَا، كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ لَيَالِيَ نَزَلَ الْجَيْشُ بِابْنِ الزُّبَيْرِ فَقَالاَ لاَ يَضُرُّكَ أَنْ لاَ تَحُجَّ الْعَامَ، وَإِنَّا نَخَافُ أَنْ يُحَالَ بَيْنَكَ وَبَيْنَ الْبَيْتِ. فَقَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ، فَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم هَدْيَهُ، وَحَلَقَ رَأْسَهُ، وَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ الْعُمْرَةَ، إِنْ شَاءَ اللَّهُ أَنْطَلِقُ، فَإِنْ خُلِّيَ بَيْنِي وَبَيْنَ الْبَيْتِ طُفْتُ، وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا مَعَهُ. فَأَهَلَّ بِالْعُمْرَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، ثُمَّ سَارَ سَاعَةً، ثُمَّ قَالَ " إِنَّمَا شَأْنُهُمَا وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجَّةً مَعَ عُمْرَتِي ". فَلَمْ يَحِلَّ مِنْهُمَا حَتَّى حَلَّ يَوْمَ النَّحْرِ، وَأَهْدَى، وَكَانَ يَقُولُ لاَ يَحِلُّ حَتَّى يَطُوفَ طَوَافًا وَاحِدًا يَوْمَ يَدْخُلُ مَكَّةَ.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மக்காவின் ஆட்சியராக இருந்த) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள்மீது (போர் தொடுப்பதற்காக ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின்) படைகள் வந்திறங்கியிருந்த நாட்களில் (ஹஜ் செய்ய விரும்பிய) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அன்னாரின் புதல்வர்களான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர் பேசினார்கள். “இந்த ஆண்டு ஹஜ்ஜு செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. நீங்கள் கஅபாவிலிருந்து தடுக்கப்படலாம் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்று அவ்விரு வரும் கூறினர். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம்; கஅபாவுக் குச் செல்ல விடாமல் (நபியவர்களை) குறைஷி இறைமறுப்பாளர்கள் தடுத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி பிராணியை அறுத்து (பலியிட்டு விட்டு)த் தமது தலைமுடியை மழித்தார்கள். (அவ்வாறே) நான் உம்ரா செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன். அல்லாஹ் நாடினால் நான் புறப்பட்டுச் செல்வேன்; கஅபாவிற் குச் செல்ல வழி விடப்பட்டால் தவாஃப் செய்வேன். அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டுவிட்டால், நபி (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன்” என்றார்கள். பிறகு துல்ஹுலைஃபா எனும் இடத் தில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார் கள். பிறகு சிறிது தூரம் பயணம் செய்து விட்டு, “ஹஜ், உம்ரா ஆகிய இரண்டின் நிலையும் ஒன்றுதான். நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என்மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்றார்கள். துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் வந்து, பலியிடும்வரை அவ்விரண்டின் இஹ்ராமிலிருந்தும் அவர்கள் விடுபடவில்லை. “மக்காவில் நுழையும் தினத்தில் (ஹஜ், உம்ராவிற்காக) ஒரேயொரு தவாஃப் செய்யும்வரை இஹ்ராமிலிருந்து (முழுமையாக) விடுபட முடியாது” என்றும் அவர்கள் கூறிவந்தார்கள். “ ‘நீங்கள் இங்கேயே தங்கிவிடலாமே!’ என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அவர்களுடைய புதல்வர்களில் ஒருவர் (மேற்கண்ட சம்பவத்தின்போது) கூறினார்” என்று மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது. அத்தியாயம் :
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلاَّمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَدْ أُحْصِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَحَلَقَ رَأْسَهُ وَجَامَعَ نِسَاءَهُ، وَنَحَرَ هَدْيَهُ، حَتَّى اعْتَمَرَ عَامًا قَابِلاً.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குச் செல்ல முடியாமல்) தடுக்கப் பட்டபோது, தமது தலையை மழித்துக் கொண்டு, தம் துணைவியருடன் தாம்பத் திய உறவு கொண்டு, தமது பலிப் பிராணி யையும் அறுத்துப் பலியிட்டார்கள்; அடுத்த ஆண்டு உம்ரா செய்தார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் வழிமுறை உங்களுக்குப் போதாதா? உங்களில் ஒருவர் ஹஜ்ஜிலிருந்து தடுக்கப் பட்டால். (முடிந்தால்) அவர் கஅபாவை தவாஃப் செய்து, ஸஃபா-மர்வாவுக் கிடையே ‘சயீ’ செய்து, இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்! அடுத்த ஆண்டு ஹஜ் செய்து பலியிடட்டும்! பலி பிராணி கிடைக்காவிட்டால் நோன்பு நோற்கட்டும்! இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1811 — Sahih al Bukhari 27:6
حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنِ الْمِسْوَرِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَحَرَ قَبْلَ أَنْ يَحْلِقَ، وَأَمَرَ أَصْحَابَهُ بِذَلِكَ.
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உம்ராவிலிருந்து தடுக்கப்பட்டபோது) தலையை மழித்துக்கொள்வதற்குமுன் (பலிப்பிராணியை) அறுத்துப் பலியிட்டார் கள்; அவ்வாறே செய்யும்படி தம் தோழர் களுக்கும் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1812 — Sahih al Bukhari 27:7
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا أَبُو بَدْرٍ، شُجَاعُ بْنُ الْوَلِيدِ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ الْعُمَرِيِّ، قَالَ وَحَدَّثَ نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ، وَسَالِمًا، كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ فَقَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مُعْتَمِرِينَ، فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ، فَنَحَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بُدْنَهُ، وَحَلَقَ رَأْسَهُ.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வர்கள்) சாலிம், அப்துல்லாஹ் (ரஹ்) ஆகியோர் (குழப்பமான சூழ்நிலையில் ஹஜ்ஜுக்குச் செல்வது குறித்துப்) பேசினார்கள். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களு டன் உம்ரா செய்வதற்காகப் புறப்பட்டோம்; கஅபாவிற்குச் செல்ல விடாமல் குறைஷி இறைமறுப்பாளர்கள் தடுத்துவிட்டார்கள்; ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவாகள் தம் ஒட்டகங்களை அறுத்து (குர்பானி கொடுத்து)விட்டுத் தமது தலையை மழித்துக்கொண்டார்கள். (இஹ்ராமி லிருந்து விடுபட்டுவிட்டார்கள்)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1813 — Sahih al Bukhari 27:8
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ حِينَ خَرَجَ إِلَى مَكَّةَ مُعْتَمِرًا فِي الْفِتْنَةِ إِنْ صُدِدْتُ عَنِ الْبَيْتِ صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَهَلَّ بِعُمْرَةٍ، مِنْ أَجْلِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ عَامَ الْحُدَيْبِيَةِ، ثُمَّ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ نَظَرَ فِي أَمْرِهِ فَقَالَ مَا أَمْرُهُمَا إِلاَّ وَاحِدٌ. فَالْتَفَتَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ مَا أَمْرُهُمَا إِلاَّ وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ الْحَجَّ مَعَ الْعُمْرَةِ، ثُمَّ طَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا، وَرَأَى أَنَّ ذَلِكَ مُجْزِيًا عَنْهُ، وَأَهْدَى.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அரசியல்) குழப்பம் ஏற்பட்டிருந்த போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் உம்ரா செய்வதற்காக மக்கா புறப்பட்டார்கள். அப்போது “கஅபாவுக்குச் செல்ல விடாமல் நான் தடுக்கப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் (சென்றபோது) நாங்கள் செய்ததைப் போன்று செய்வோம்” என்றார்கள். ஹுதைபியா ஆண்டின்போது நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்கு இஹ்ராம் கட்டிய காரணத்தால் இப்னு உமர் (ரலி) அவர்களும் உம்ராவிற்கு இஹ்ராம் கட்டினார்கள். பின்னர் சிந்தித்துப் பார்த்துவிட்டு, “ஹஜ், உம்ரா ஆகிய இரண்டின் நிலையும் ஒன்றுதான்” என்று கூறினார்கள். பின்னர் தம் தோழர்களை நோக்கி, “இவ்விரண்டின் நிலையும் ஒன்றுதான். எனவே, உம்ரா வுடன் ஹஜ்ஜையும் (நிறைவேற்றுவதை என்மீது) நான் கடமையாக்கிக்கொண்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாக்கு கிறேன்” என்றார்கள். பிறகு இவ்விரண்டிற்கும் (ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும்) சேர்த்து ஒரே தவாஃப் செய்தார்கள். அதுவே (இரண்டிற்கும்) போதுமானது எனக் கருதினார்கள்; (பலிப் பிராணியை) பலியிடவும் செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1814 — Sahih al Bukhari 27:9
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ حُمَيْدِ بْنِ قَيْسٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لَعَلَّكَ آذَاكَ هَوَامُّكَ ". قَالَ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " احْلِقْ رَأْسَكَ وَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، أَوِ انْسُكْ بِشَاةٍ ".
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (உம்ராவிற்காக நான் இஹ்ராம் கட்டியிருந்தபோது) என்னிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார் கள். நான் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது தலையை மழித்துக் கொண்டு, மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டைப் பலியிடுவீராக!” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1815 — Sahih al Bukhari 27:10
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سَيْفٌ، قَالَ حَدَّثَنِي مُجَاهِدٌ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، أَنَّ كَعْبَ بْنَ عُجْرَةَ، حَدَّثَهُ قَالَ وَقَفَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحُدَيْبِيَةِ، وَرَأْسِي يَتَهَافَتُ قَمْلاً فَقَالَ " يُؤْذِيكَ هَوَامُّكَ ". قُلْتُ نَعَمْ. قَالَ " فَاحْلِقْ رَأْسَكَ ـ أَوْ قَالَ ـ احْلِقْ ". قَالَ فِيَّ نَزَلَتْ هَذِهِ الآيَةُ {فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ} إِلَى آخِرِهَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ تَصَدَّقْ بِفَرَقٍ بَيْنَ سِتَّةٍ، أَوِ انْسُكْ بِمَا تَيَسَّرَ ".
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் இஹ்ராம் கட்டியிருந்தபோது) ஹுதைபியாவில் என்னருகில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது (தலை யிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு “உமது தலையை மழித்துக் கொள்வீராக” என்றார்கள். என் தொடர் பாகவே, “உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ...” (2:196) எனும் வசனம் அருளப்பெற்றது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ‘ஸாஉ’ தானியத்தை ஆறு ஏழைகளுக்குத் தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததைப் பலியிடு வீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :