حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَإِذَا حَبْلٌ مَمْدُودٌ بَيْنَ السَّارِيَتَيْنِ فَقَالَ " مَا هَذَا الْحَبْلُ ". قَالُوا هَذَا حَبْلٌ لِزَيْنَبَ فَإِذَا فَتَرَتْ تَعَلَّقَتْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ، حُلُّوهُ، لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குள்) நுழைந்தபோது, இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. “இந்தக் கயிறு என்ன (ஏன்)?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “இது ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும்போது) சோர்வடைந் தால் இந்தக் கயிற்றைப் பற்றிக்கொள்வார்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம். இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமாக இருக்கும் போது (கூடுதலான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1151 — Sahih al Bukhari 19:32
قَالَ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنِ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَتْ عِنْدِي امْرَأَةٌ مِنْ بَنِي أَسَدٍ فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " مَنْ هَذِهِ ". قُلْتُ فُلاَنَةُ لاَ تَنَامُ بِاللَّيْلِ. فَذُكِرَ مِنْ صَلاَتِهَا فَقَالَ " مَهْ عَلَيْكُمْ مَا تُطِيقُونَ مِنَ الأَعْمَالِ، فَإِنَّ اللَّهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ‘பனூ அசத்’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்து, “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான் “இவர் இன்னார்” என்று கூறிவிட்டு, “இரவெல்லாம் உறங்கமாட்டார் (தொழுதுகொண்டே இருப்பார்) என்று அவரது தொழுகை குறித்து கூறப்படுகிறது என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “போதும் நிறுத்து!” என்று கூறிவிட்டு, “(வழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் இயன்றதையே (நிலையாகச்) செய்துவாருங்கள். நிச்சயமாக நீங்கள் சடைவடையாத வரை அல்லாஹ்வும் சடைவடையமாட்டான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ்! இரவில் (அதிகமாக) நின்று வழிபாடு செய்துவிட்டு, இறுதியில் இரவுத் தொழுகையையே கைவிட வேண்டிய நிலைக்கு ஆளான இன்ன மனிதரைப் போன்று நீரும் ஆகிவிட வேண்டாம்” என்று கூறி னார்கள்.18 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1153 — Sahih al Bukhari 19:34
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْعَبَّاسِ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم " أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ " قُلْتُ إِنِّي أَفْعَلُ ذَلِكَ. قَالَ " فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ هَجَمَتْ عَيْنُكَ وَنَفِهَتْ نَفْسُكَ، وَإِنَّ لِنَفْسِكَ حَقٌّ، وَلأَهْلِكَ حَقٌّ، فَصُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ ".
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீர் இரவெல்லாம் நின்று வழிபடுவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் கேள்விப்பட்டேனே (உண்மையா)?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அப்படித்தான் செய்கிறேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இவ்வாறு செய்தால், உம்முடைய கண்கள் சொருகிவிடும்; உமது உடல் நலிந்துவிடும். நீர் உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன; உம்மு டைய குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன. எனவே, நீர் (ஒரு நாள்) நோன்பு நோற்பீ ராக! (ஒரு நாள்) நோன்பை விட்டுவிடு வீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக!” என்று கூறினார்கள்.19 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இரவில் உறக்கம் கலைந்ததோடு வாய்விட்டு, “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி, வ சுப்ஹானல்லாஹி, வ லா இலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் யாரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகுவதோ நன்மை செய்யும் ஆற்றல் பெறுவதோ கிடையாது) என்று கூறிவிட்டு, ‘அல்லாஹும்மஃக்பிர்லீ’ (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ, அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை ஏற்கப்படும். அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும். இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1155 — Sahih al Bukhari 19:36
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي الْهَيْثَمُ بْنُ أَبِي سِنَانٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ وَهُوَ يَقْصُصُ فِي قَصَصِهِ وَهُوَ يَذْكُرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ أَخًا لَكُمْ لاَ يَقُولُ الرَّفَثَ. يَعْنِي بِذَلِكَ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ وَفِينَا رَسُولُ اللَّهِ يَتْلُو كِتَابَهُ إِذَا انْشَقَّ مَعْرُوفٌ مِنَ الْفَجْرِ سَاطِعُ أَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمَى فَقُلُوبُنَا بِهِ مُوقِنَاتٌ أَنَّ مَا قَالَ وَاقِعُ يَبِيتُ يُجَافِي جَنْبَهُ عَنْ فِرَاشِهِ إِذَا اسْتَثْقَلَتْ بِالْمُشْرِكِينَ الْمَضَاجِعُ تَابَعَهُ عُقَيْلٌ. وَقَالَ الزُّبَيْدِيُّ أَخْبَرَنِي الزُّهْرِيُّ عَنْ سَعِيدٍ وَالأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه.
ஹைஸம் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் உரை யாற்றிக்கொண்டிருந்தபோது, தமது பேச்சி னிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு, “உங்களுடைய சகோதரர் எதையும் தவறாகச் சொல்பவர் அல்லர்” என்று குறிப்பிட்டுவிட்டு, (நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர் இயற்றிய) பின்வரும் பாடல் வரிகளை எடுத்துரைத் தார்கள்: எங்களிடையே இறைவேதத்தை ஓதுகிறார் இறைத்தூதர் வைகறை புலரும்போது! எங்களுக்கு நல்வழி காட்டினார் நாங்கள் இருந்ததோ இருட்டில்! அவர் சொன்னதெல்லாம் நடக்கும் இப்போது எம் இதயங்களுக்கு உறுதி! இரவில் அவர் விலா படுக்கைக்கு அந்நியம் இணைவைப்பாளர்களோ மஞ்சங்களில் தஞ்சம்! இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1156 — Sahih al Bukhari #1156
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما قَالَ رَأَيْتُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَأَنَّ بِيَدِي قِطْعَةَ إِسْتَبْرَقٍ، فَكَأَنِّي لاَ أُرِيدُ مَكَانًا مِنَ الْجَنَّةِ إِلاَّ طَارَتْ إِلَيْهِ، وَرَأَيْتُ كَأَنَّ اثْنَيْنِ أَتَيَانِي أَرَادَا أَنْ يَذْهَبَا بِي إِلَى النَّارِ فَتَلَقَّاهُمَا مَلَكٌ فَقَالَ لَمْ تُرَعْ خَلِّيَا عَنْهُ. فَقَصَّتْ حَفْصَةُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم إِحْدَى رُؤْيَاىَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ". فَكَانَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه ـ يُصَلِّي مِنَ اللَّيْلِ. وَكَانُوا لاَ يَزَالُونَ يَقُصُّونَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الرُّؤْيَا أَنَّهَا فِي اللَّيْلَةِ السَّابِعَةِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَتْ فِي الْعَشْرِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيْهَا فَلْيَتَحَرَّهَا مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு கனவு கண்டேன். அதில். பட்டுக் கம்பளத் துண்டு ஒன்று என் கையில் இருப்பதைப் போன்றும், நான் சொர்க்கத் தில் எந்த இடத்திற்குச் செல்ல விரும் பினாலும் அது என்னை அந்த இடத்திற் குக் கொண்டுசெல்வதைப் போன்றும் கண்டேன். மேலும், நான் (வானவர்கள்) இரு வரைக் கண்டேன். அவர்கள் இருவரும் என்னிடம் வந்து என்னை நரகத்திற்குக் கொண்டுசெல்ல முற்பட்டனர். அப்போது அவர்கள் இருவரையும் மற்றொரு வானவர் சந்தித்து ‘இவரை விட்டுவிடுங்கள்’ என்று கூறிவிட்டு என்னிடம், ‘அஞ்சாதீர்!’ என்று கூறினார். இந்தக் கனவை (நான் என் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன்.) உடனே ஹஃப்ஸா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது, “அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு சிறந்த மனிதர்தான். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்)” என்று கூறினார்கள். (இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:) (நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் ஒரு பகுதியில் தொழுதுவந்தார்கள். மக்கள் சிலர், நபி (ஸல்) அவர்களிடம் கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவானது (ரமளான் மாதத்தின்) கடைசிப் பத்து நாட்களில் இருபத்து ஏழாம் இரவு என்று கனவில் காட்டப்பட்டதாக விவரித்துக்கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களைப் போன்றே நானும் கனவு கண்டேன். அது (கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாள்தான் என்பதில் உங்கள் கனவை எனது கனவும்) ஒத்திருக்கின்றது. ஆகவே, அந்த (கண்ணியமிக்க) இரவைத் தேடுபவர் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் தேடட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1157 — Sahih al Bukhari #1157

ஹதீஸ் 1158 — Sahih al Bukhari 19:37

ஹதீஸ் 1159 — Sahih al Bukhari 19:38
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ ـ هُوَ ابْنُ أَبِي أَيُّوبَ ـ قَالَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الْعِشَاءَ ثُمَّ صَلَّى ثَمَانَ رَكَعَاتٍ وَرَكْعَتَيْنِ جَالِسًا وَرَكْعَتَيْنِ بَيْنَ النِّدَاءَيْنِ، وَلَمْ يَكُنْ يَدَعُهُمَا أَبَدًا.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகை தொழுதுவிட்டுப் பின்னர் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும், உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (ஃபஜ்ருடைய) பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களையும் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை.20 அத்தியாயம் :