حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى رَكْعَتَىِ الْفَجْرِ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத் தொழுததும் வலப் புறம் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1161 — Sahih al Bukhari 19:40
حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى {سُنَّةَ الْفَجْرِ} فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ حَتَّى يُؤْذَنَ بِالصَّلاَةِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுததும் நான் விழித்திருந் தால் என்னுடன் பேசிக்கொண்டிருப் பார்கள். இல்லாவிடில் (ஃபஜ்ர்) தொழு கைக்கு அழைக்கப்படும்வரை படுத்து ஓய்வெடுப்பார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1162 — Sahih al Bukhari 19:41
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ أَبُو النَّضْرِ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ. قُلْتُ لِسُفْيَانَ فَإِنَّ بَعْضَهُمْ يَرْوِيهِ رَكْعَتَىِ الْفَجْرِ. قَالَ سُفْيَانُ هُوَ ذَاكَ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லையேல், (தொழுகைக்கு அழைக்கப்படும்வரை) சாய்ந்து படுத்திருப்பார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “சிலர் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத் (தொழுத பிறகுதான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வார்கள்) என இந்த ஹதீஸில் அறிவிக்கின்றனரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; அப்படித்தான்’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1163 — Sahih al Bukhari 19:42
حَدَّثَنَا بَيَانُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى شَىْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَىِ الْفَجْرِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் அளவுக்கு வேறு எந்தக் கூடுதலான தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்ததில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1164 — Sahih al Bukhari 19:43
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِاللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ يُصَلِّي إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصُّبْحِ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார் கள். பிறகு (ஃபஜ்ரின்) பாங்கைக் கேட்டதும் சுருக்கமாக (ஓதி) இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1165 — Sahih al Bukhari 19:44
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمَّتِهِ، عَمْرَةَ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا يَحْيَى ـ هُوَ ابْنُ سَعِيدٍ ـ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُخَفِّفُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ حَتَّى إِنِّي لأَقُولُ هَلْ قَرَأَ بِأُمِّ الْكِتَابِ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழு கைக்குமுன் சுருக்கமாக (ஓதி) இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள். எந்த அளவுக்கென்றால், அதில் அவர்கள் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை ஓதி னார்களா என்றுகூட நான் நினைப்பேன்.29 இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு குர்ஆன் அத்தியாயங் களைக் கற்றுக்கொடுப்பதைப் போன்று, எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுப்பதற்கான முறையையும் கற்றுக்கொடுப்பவர்களாய் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு காரியத்தை(ச் செய்ய) நாடினால், கடமையான தொழுகை அல்லாத (கூடுதலான தொழுகையாக) இரண்டு ரக்அத்களைத் தொழட்டும். பின்னர் (பின்வருமாறு) பிரார்த்திக்கட்டும்: அல்லாஹும்ம! இன்னீ அஸ்தகீரு(க்)க பி இல்மி(க்)க. வ அஸ்தக்திரு(க்)க பி குத்ரத்தி(க்)க. வ அஸ்அலு(க்)க மின் ஃபள்லி(க்)கல் அழீம். ஃப இன்ன(க்)க தக்திரு, வலா அக்திரு, வ தஅலமு வலா அஉலமு. வ அன்(த்)த அல்லாமல் ஃகுயூப். அல்லாஹும்ம! இன் குன்(த்)த தஅலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ ‘ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆக்கிப(த்)தி அம்ரீ’ / ‘ஃபீ ஆஜிலி அம்ரீ வ ஆஜிலிஹி / ஃபக்துர்ஹு லீ, வ யஸ்ஸிர்ஹு லீ, ஸும்ம பாரிக் லீ ஃபீஹீ. வ இன் குன்(த்)த தஅலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ ‘ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆக்கிப(த்)தி அம்ரீ’ / ‘ஃபீ ஆஜிலி அம்ரீ வ ஆஜிலிஹி / ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ. வஸ்ரிஃப்னீ அன்ஹு. வக்துர்ஹு லியல்கைர ஹைஸு கான, ஸும்ம அர்ளினீ. (பொருள்: இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் நான் வேண்டுகிறேன். உனது ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உனது மகத்தான தயவை உன்னிடம் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவான வற்றை நன்கறிந்தவன். இறைவா! (நான் செய்யப்போகும்) இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ / அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ / நன்மையானதாக இருக்கும் என நீ அறிந்தால், அதைச் செய்வதற்கு எனக்கு ஆற்றல் வழங்குவாயாக! அதை எனக்கு எளிதாக்குவாயாக! பிறகு அதில் எனக்கு வளத்தை வழங்குவாயாக! (நான் செய்யப்போகும்) இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ -அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’- கேடாக அமையும் என நீ அறிந்தால், இக்காரியத்தை என்னை விட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய செயல் திறனை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதைத் திருப்தி கொண்டவனாக என்னை ஆக்குவாயாக!) பிறகு அவர் தமது தேவை இன்னதெனக் குறிப்பிடட்டும். அத்தியாயம் :
ஹதீஸ் 1167 — Sahih al Bukhari 19:46
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، سَمِعَ أَبَا قَتَادَةَ بْنَ رِبْعِيٍّ الأَنْصَارِيّ َ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلاَ يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் (பள்ளிவாசல் காணிக்கையாக) இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம். இதை அபூகத்தாதா பின் ரிப்ஈ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22 அத்தியாயம் :
ஹதீஸ் 1168 — Sahih al Bukhari 19:47
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டில்) எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழு வித்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.23 அத்தியாயம் :
ஹதீஸ் 1169 — Sahih al Bukhari 19:48
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்களும் லுஹ்ருக்குப்பின் இரண்டு ரக்அத்களும் ஜுமுஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் மஃக்ரிப் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்களும் இஷா தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்களும் தொழுதிருக்கிறேன்.24 அத்தியாயம் :