Qurani·قرآني
தமிழ்

தஹஜ்ஜுத் தொழுகை (இரவுத் தொழுகை)

68 ஹதீஸ்கள் · #1120–1187

ஹதீஸ் 1170 — Sahih al Bukhari 19:49
حَدَّثَنَا آدَمُ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَخْطُبُ ‏ "‏ إِذَا جَاءَ أَحَدُكُمْ وَالإِمَامُ يَخْطُبُ ـ أَوْ قَدْ خَرَجَ ـ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ ‏"‏‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் ‘இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது’ அல்லது ‘அவர் புறப்பட்டு வந்திருக்கும்போது’ (பள்ளி வாசலுக்குள்) வந்தால், இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்” என்று (ஜுமுஆ நாள்) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.25 அத்தியாயம் :
ஹதீஸ் 1171 — Sahih al Bukhari 19:50
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سَيْفُ بْنُ سُلَيْمَانَ الْمَكِّيُّ، سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ أُتِيَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ فِي مَنْزِلِهِ فَقِيلَ لَهُ هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ دَخَلَ الْكَعْبَةَ قَالَ فَأَقْبَلْتُ فَأَجِدُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ خَرَجَ، وَأَجِدُ بِلاَلاً عِنْدَ الْبَابِ قَائِمًا فَقُلْتُ يَا بِلاَلُ، صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْكَعْبَةِ قَالَ نَعَمْ‏.‏ قُلْتُ فَأَيْنَ قَالَ بَيْنَ هَاتَيْنِ الأُسْطُوَانَتَيْنِ‏.‏ ثُمَّ خَرَجَ فَصَلَّى رَكْعَتَيْنِ فِي وَجْهِ الْكَعْبَةِ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَوْصَانِي النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَكْعَتَىِ الضُّحَى‏.‏ وَقَالَ عِتْبَانُ غَدَا عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ بَعْدَ مَا امْتَدَّ النَّهَارُ وَصَفَفْنَا وَرَاءَهُ فَرَكَعَ رَكْعَتَيْنِ‏.‏
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றி நாளில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது இல்லத்தில் இருந்த போது அவர்களிடம், “இதோ! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவுக்குள் நுழைந்துவிட்டர்கள்” என்று சொல்லப்பட்டது. (பிறகு நடந்ததை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குள்ளிருந்து) வெளியே வந்து கொண்டிருந்தபோது, நான் அங்கு சென்று அவர்களைக் கண்டேன்; பிலால் (ரலி) அவர்கள் (கஅபாவின்) தலைவாயில் அருகில் நிற்பதையும் கண்டேன். நான் பிலால் அவர்களிடம், “பிலாலே! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற் குள் தொழுதார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். ‘எந்த இடத்தில்?’ என்று கேட்டேன். “இந்த இரு தூண்களுக்கு மத்தியில் (தொழுதார் கள்). பிறகு வெளியே வந்து கஅபாவை முன்னோக்கியபடி தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள்.26 அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: ‘ளுஹா’ நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னை வலியுறுத்தினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.27 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நண் பகலில் என்னிடம் வந்தார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்து நின்றோம். அவர்கள் (எங்களுக்கு) இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்” என இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.28 அத்தியாயம் :
ஹதீஸ் 1172 — Sahih al Bukhari #1172
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَجْدَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ، فَأَمَّا الْمَغْرِبُ وَالْعِشَاءُ فَفِي بَيْتِهِ‏.‏ قَالَ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ بَعْدَ الْعِشَاءِ فِي أَهْلِهِ‏.‏ تَابَعَهُ كَثِيرُ بْنُ فَرْقَدٍ وَأَيُّوبُ عَنْ نَافِعٍ‏.‏ وَحَدَّثَتْنِي أُخْتِي، حَفْصَةُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي سَجْدَتَيْنِ خَفِيفَتَيْنِ بَعْدَ مَا يَطْلُعُ الْفَجْرُ، وَكَانَتْ سَاعَةً لاَ أَدْخُلُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهَا‏.‏ تَابَعَهُ كَثِيرُ بْنُ فَرْقَدٍ وَأَيُّوبُ عَنْ نَافِعٍ‏.‏ وَقَالَ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ بَعْدَ الْعِشَاءِ فِي أَهْلِهِ‏.‏

ஹதீஸ் 1173 — Sahih al Bukhari 19:51

ஹதீஸ் 1174 — Sahih al Bukhari 19:52
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ أَبَا الشَّعْثَاءِ، جَابِرًا قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا‏.‏ قُلْتُ يَا أَبَا الشَّعْثَاءِ أَظُنُّهُ أَخَّرَ الظُّهْرَ وَعَجَّلَ الْعَصْرَ وَعَجَّلَ الْعِشَاءَ وَأَخَّرَ الْمَغْرِبَ‏.‏ قَالَ وَأَنَا أَظُنُّهُ‏.‏
அபுஷ்ஷஅஸா ஜஅஃபர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் எட்டு ரக்அத்கள் (கொண்ட லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளை இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் தொழுதிருக்கிறேன். ஏழு ரக்அத்கள் கொண்ட (மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் தொழுதிருக்கிறேன்” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அபுஷ்ஷஅஸா (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழு கையைத் தாமதப்படுத்தி அஸ்ரின் ஆரம்ப நேரத்திலும், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி இஷாவின் ஆரம்ப நேரத்திலும் தொழுதிருப்பார்கள் என நான் எண்ணுகிறேன்” என்றேன். அதற்கு அபுஷ்ஷஅஸா (ரஹ்) அவர்கள் “நானும் அவ்வாறே எண்ணுகிறேன்” என்றார்கள்.31 அத்தியாயம் :
ஹதீஸ் 1175 — Sahih al Bukhari 19:53
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ تَوْبَةَ، عَنْ مُوَرِّقٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَتُصَلِّي الضُّحَى قَالَ لاَ‏.‏ قُلْتُ فَعُمَرُ‏.‏ قَالَ لاَ‏.‏ قُلْتُ فَأَبُو بَكْرٍ‏.‏ قَالَ لاَ‏.‏ قُلْتُ فَالنَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ لاَ إِخَالُهُ‏.‏
முவர்ரிக் பின் முஷம்ரிஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் ‘ளுஹா’ (முற்பகல்) தொழுகை தொழுவது உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். “சரி, உமர் (ரலி) அவர்கள் தொழுவார் களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். “சரி, அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவார்களா?” என்று கேட்டேன். அதற்கும் ‘இல்லை’ என்றார்கள். “சரி, நபி (ஸல்) அவர்கள் (தொழுவார் களா)?” என்று கேட்டேன். “அவர்கள் தொழுததாக நான் எண்ணவில்லை” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1176 — Sahih al Bukhari 19:54
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، يَقُولُ مَا حَدَّثَنَا أَحَدٌ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي الضُّحَى غَيْرَ أُمِّ هَانِئٍ فَإِنَّهَا قَالَتْ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ بَيْتَهَا يَوْمَ فَتْحِ مَكَّةَ فَاغْتَسَلَ وَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ فَلَمْ أَرَ صَلاَةً قَطُّ أَخَفَّ مِنْهَا، غَيْرَ أَنَّهُ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ‏.‏
அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுத தாக உம்முஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் எமக்கு அறிவிக்க வில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தமது இல்லத்திற்கு வந்து குளித்துவிட்டு, எட்டு ரக்அத்கள் தொழுததாக உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும், “நபி (ஸல்) அவர்கள் அதைவிடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகைகளையும் தொழுததை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஆயினும், அவர்கள் ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்தார்கள்” என்றும் உம்முஹானீ (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.32 அத்தியாயம் :
ஹதீஸ் 1177 — Sahih al Bukhari 19:55
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَبَّحَ سُبْحَةَ الضُّحَى، وَإِنِّي لأُسَبِّحُهَا‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுததை நான் பார்த்ததில்லை. ஆனால், நான் அதைத் தொழுது வருகிறேன்.33 அத்தியாயம் :
ஹதீஸ் 1178 — Sahih al Bukhari 19:56
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبَّاسٌ الْجُرَيْرِيُّ ـ هُوَ ابْنُ فَرُّوخَ ـ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَصَلاَةِ الضُّحَى، وَنَوْمٍ عَلَى وِتْرٍ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, (இரண்டு ரக்அத்கள்) ‘ளுஹா’ தொழுகை தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் (நபி (ஸல்) அவர்கள்) எனக்கு அறிவுறுத்தினார் கள். அவற்றை நான் இறக்கும்வரை கை விடமாட்டேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1179 — Sahih al Bukhari 19:57
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ الأَنْصَارِيَّ، قَالَ قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ ـ وَكَانَ ضَخْمًا ـ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنِّي لاَ أَسْتَطِيعُ الصَّلاَةَ مَعَكَ‏.‏ فَصَنَعَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم طَعَامًا، فَدَعَاهُ إِلَى بَيْتِهِ، وَنَضَحَ لَهُ طَرَفَ حَصِيرٍ بِمَاءٍ فَصَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ‏.‏ وَقَالَ فُلاَنُ بْنُ فُلاَنِ بْنِ جَارُودٍ لأَنَسٍ ـ رضى الله عنه ـ أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الضُّحَى فَقَالَ مَا رَأَيْتُهُ صَلَّى غَيْرَ ذَلِكَ الْيَوْمِ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: உடல் பருமனாக இருந்த ஓர் அன்சாரித் தோழர் (இத்பான் பின் மாலிக்) நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “என்னால் (பள்ளிவாசலுக்கு வந்து) உங்களுடன் நின்று தொழ முடிவதில்லை” என்று கூறினார். எனவே, அவர் நபியவர்களுக் காக உணவு சமைத்துத் தமது இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். (அவரது இல்லத்திற்கு நபி (ஸல்) அவர்கள் சென்றபோது) அவர்கள் தொழுவதற்காக அவர் (பாயொன்றை விரித்து, பதப்படுத்துவதற்காக அந்தப்) பாயின் ஓரத்தில் தண்ணீர் தெளித்தார். நபி (ஸல்) அவர்கள் அதன்மீது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அப்துல் ஹமீத் பின் முன்திர் பின் அல்ஜாரூத் (ரஹ்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுகை தொழுவார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “அன்றைய தினம் தவிர வேறு எப்போதும் அவர்கள் தொழ நான் பார்த்ததில்லை” என விடையளித்தார்கள். இதை அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.