قَالَ قَالَ اللَّيْثُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " الأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَةٌ، فَمَا تَعَارَفَ مِنْهَا ائْتَلَفَ، وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ ". وَقَالَ يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ بِهَذَا.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்த பிறகு தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள்.11 அப்போது, ‘‘நான் உங்களை அவனைக் குறித்து எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத் தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் அவர்கள் தம் சமூகத்தாருக்கு (அவனைக் குறித்து) எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், நான் அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தன் சமூகத்தாருக்குக் கூறாத ஒரு அடை யாளத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3338 — Sahih al Bukhari 60:13
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ أُحَدِّثُكُمْ حَدِيثًا عَنِ الدَّجَّالِ مَا حَدَّثَ بِهِ نَبِيٌّ قَوْمَهُ، إِنَّهُ أَعْوَرُ، وَإِنَّهُ يَجِيءُ مَعَهُ بِمِثَالِ الْجَنَّةِ وَالنَّارِ، فَالَّتِي يَقُولُ إِنَّهَا الْجَنَّةُ. هِيَ النَّارُ، وَإِنِّي أُنْذِرُكُمْ كَمَا أَنْذَرَ بِهِ نُوحٌ قَوْمَهُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப்போகிறேன்; வேறெந்த இறைத்தூதரும் அதைத் தம் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம், நரகம் போன்ற வற்றைக் கொண்டுவருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகின்றானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3339 — Sahih al Bukhari 60:14
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَجِيءُ نُوحٌ وَأُمَّتُهُ فَيَقُولُ اللَّهُ تَعَالَى هَلْ بَلَّغْتَ فَيَقُولُ نَعَمْ، أَىْ رَبِّ. فَيَقُولُ لأُمَّتِهِ هَلْ بَلَّغَكُمْ فَيَقُولُونَ لاَ، مَا جَاءَنَا مِنْ نَبِيٍّ. فَيَقُولُ لِنُوحٍ مَنْ يَشْهَدُ لَكَ فَيَقُولُ مُحَمَّدٌ صلى الله عليه وسلم وَأُمَّتُهُ، فَنَشْهَدُ أَنَّهُ قَدْ بَلَّغَ، وَهْوَ قَوْلُهُ جَلَّ ذِكْرُهُ {وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ} وَالْوَسَطُ الْعَدْلُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தாரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ் (அலை) அவர்களை நோக்கி), ‘‘(எனது செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்துவிட்டீர்களா?” என்று கேட்பான். அதற்கு நூஹ் அவர்கள், ‘‘ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)” என்று பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ் நூஹ் அவர்களுடைய சமுதாயத்தாரிடம், ‘‘இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்துவிட்டாரா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை” என்று பதில் கூறுவார்கள். அப்போது அல்லாஹ் நூஹ் அவர்களிடம், ‘‘உங்களுக்காகச் சாட்சியம் சொல்பவர் யார்?” என்று கேட்பான். நூஹ் அவர்கள், ‘‘முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களுடைய சமுதாயத்தாரும் (எனக்காகச் சாட்சியம் சொல்வார்கள்)” என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே நாம் நூஹ் அவர்கள் (இறைச் செய்தியைத் தம் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம். ‘‘அவ்வாறே உங்களை மக்களுக்குச் சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்” (2:143) எனும் புகழோங்கிய இறைவனின் வசனம் இதைத் தான் குறிக்கின்றது. யிநடுநிலையா” (வசத்) எனும் சொல் லின் கருத்து ‘நீதியா” என்பதாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன், ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்ப மானதாக இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதைத் தம்) பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு கூறினார்கள்: ‘‘நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியுறுவார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), ‘‘நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்)பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள். மக்கள் சிலர், ‘‘உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)” என்று கூறுவார்கள். ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம்பணிந் தார்கள். உங்களைச் சொர்க்கத்தில் குடி யமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனி டம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்க ளுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையை யும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘‘(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என்மீது (கடும்) கோபம் கொண்டான். அதற்குமுன் அதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. அதற்குப் பிறகும் அதைப்போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங் கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங் கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள். உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பட்ட) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ், யிநன்றி செலுத்தும் அடியார்’ என்று குறிப்பிட்டுள்ளான்.12 நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள (இந்தத் துன்ப) நிலையை நீங்கள் காணவில்லையா? எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘என் இறைவன் இன்று என்மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப்போல் கோபம் கொள்ளமாட்டான். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார். மக்கள் என்னிடம் வருவார்கள். நான் இறை அரியணைக்குக் கீழே சஜ்தா செய்வேன். அப்போது ‘‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந் துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்” என்று (இறை வனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் (ரஹ்) அவர்கள், ‘‘இந்த ஹதீஸ் முழுமையாக எனக்கு நினைவில்லை” என்று கூறுகிறார்கள்.13 அத்தியாயம் :
ஹதீஸ் 3341 — Sahih al Bukhari 60:16
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ، أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} مِثْلَ قِرَاءَةِ الْعَامَّةِ.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிஃபஹல் மின்(ம்) முத்தகிர் (அறிவுரை பெறுபவர் எவராவது இருக்கின்றாரா?) எனும் (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள) இறைவசனத்தைப் பொதுவாக மக்கள் ஓதும் பிரபலமான முறைப்படி யிஃப ஹல்மின்(ம்) முத்தகிர்’ என்றே ஓதினார்கள். (வெகுசிலர் ஓதுவதைப்போல் யிமுஸ்தகிர்’ என்று பிரித்தோ, வேறொரு முறைப்படி யிமுஸ்ஸக்கிர்’ என்றோ ஓதவில்லை)14 அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் அறி வித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிரிக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந் தார்கள். பிறகு அதை, ‘ஸம்ஸம்’ தண்ணீ ரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறி வாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சில் அதை ஊற்றி (நிரப்பி) னார்கள். பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வானத் திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத் திற்கு வந்தபோது வானத்தின் காவலரி டம், ‘‘திறங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘யார் அது?” என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், ‘‘இதோ ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘‘உங்களுடன் வேறெவரேனும் இருக்கிறரா?” என்று கேட்டார். அவர்கள், ‘‘என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘‘(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (ஆள்) அனுப்பப் பட்டதா?” என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், ‘‘ஆம், திறங்கள்” என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவு திறக்கப் பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர்; இடப் பக்கத் திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) ‘‘நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார். நான் ‘‘ஜிப்ரீலே! இவர் யார்?” என்று கேட்டேன். அவர், ‘‘இவர் ஆதம் (அலை) அவர்கள்; அவர்களுடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களுடைய சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர்கள் வலப் பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களைப் பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கி றார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப் பட்டு) அழுகிறார்கள்” என்று பதிலளித் தார்கள். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். பிறகு இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், ‘‘திறங்கள்” என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போலவே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின் வாயிலைத்) திறந்தார். அனஸ் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள், வானங்களில் இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாகக் கூறினார்களே தவிர அவர் களுடைய இருப்பிடங்கள் எங்கிருந்தன என்று அவர்கள் எனக்குக் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்” என்று அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்: ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்ற போது, ‘‘நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இவர் இத்ரீஸ்” என்று கூறினார்கள். பிறகு மூசா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், ‘‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், ‘‘இவர் மூசா” என்று கூறினார்கள். பிறகு நான், ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், ‘‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘‘(இவர்) ஈசா” என்று பதிலளித் தார்கள். பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர் களைக் கடந்து சென்றேன். அவர்கள், ‘‘நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, ‘‘இவர் இப்ராஹீம்” என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அபூஹய்யா அல்அன்சாரி (ரலி) அவர்கள் ஆகிய இருவரும் அறிவித்ததாக இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்தபோது அங்கு நான் (வானவர்கள் விதிகளை எழுதிக்கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன். இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது அல்லாஹ் என்மீது (என் சமுதாயத்தாருக்காக) ஐம்பது தொழுகை களைக் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது மூசா அவர்கள், ‘‘உங்கள் சமுதாயத்தார் மீது என்ன கடமையாக்கப்பட்டது?” என்று கேட்டார்கள். நான், ‘‘அவர்கள்மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ள”’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘‘அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று (சற்று குறைத்துக் கடமையாக்கும்படி) கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறை வேற்ற முடியாது” என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி) கேட்டேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா அவர்களிடம் திரும்பிச் சென்றபோது, ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறி முன்புபோல் (‘‘உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது”) என்று கூறினார்கள். (நான் அவ்வாறே திரும்ப இறைவனிடம் சென்று இன்னும் குறைக்கும்படி கோர) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூசா அவர்களிடம் மீண்டும் சென்று கூறிய போது, ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பச் சென்று இன்னும் குறைத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் அதற்குச் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூற, நான் திரும்பிச் சென்று, என் இறைவனிடம் (இன்னும் சற்று குறைக்கும்படி) கேட்டேன். அதற்கு அவன், ‘‘அவை ஐந்து (வேளைத் தொழுகைகள்) ஆகும். அவையே (பிரதிபலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். (ஒருமுறை சொல்லப் பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை” என்று கூறினான். உடனே, நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகின்றேன்” என்று பதிலளித்தேன். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலகின் எல்லையான) யிசித்ரத்துல் முன்தஹா’வுக்குச் சென்றார்கள். அப்போது நான் அறிய முடியாதபடி பல வண்ணங்கள் அதைச் சூழ்ந்து மூடியிருந்தன. பிறகு நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கே முத்தாலான கூடாரங்களைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் வீசும்) கஸ்தூரியாக இருந்தது.17 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3343 — Sahih al Bukhari 60:18
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نُصِرْتُ بِالصَّبَا، وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (அகழ்ப் போரின்போது) கீழைக் காற்றால் (‘ஸபா’) வெற்றியளிக்கப்பட்டேன். யிஆத்’ சமுதாயத்தார் மேலைக் காற்றால் (யிதபூர்’) அழிக்கப்பட்டனர் இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.19 அத்தியாயம் :
ஹதீஸ் 3344 — Sahih al Bukhari 60:19
قَالَ وَقَالَ ابْنُ كَثِيرٍ عَنْ سُفْيَانَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِذُهَيْبَةٍ فَقَسَمَهَا بَيْنَ الأَرْبَعَةِ الأَقْرَعِ بْنِ حَابِسٍ الْحَنْظَلِيِّ ثُمَّ الْمُجَاشِعِيِّ، وَعُيَيْنَةَ بْنِ بَدْرٍ الْفَزَارِيِّ، وَزَيْدٍ الطَّائِيِّ ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ، وَعَلْقَمَةَ بْنِ عُلاَثَةَ الْعَامِرِيِّ ثُمَّ أَحَدِ بَنِي كِلاَبٍ، فَغَضِبَتْ قُرَيْشٌ وَالأَنْصَارُ، قَالُوا يُعْطِي صَنَادِيدَ أَهْلِ نَجْدٍ وَيَدَعُنَا. قَالَ " إِنَّمَا أَتَأَلَّفُهُمْ ". فَأَقْبَلَ رَجُلٌ غَائِرُ الْعَيْنَيْنِ مُشْرِفُ الْوَجْنَتَيْنِ، نَاتِئُ الْجَبِينِ، كَثُّ اللِّحْيَةِ، مَحْلُوقٌ فَقَالَ اتَّقِ اللَّهَ يَا مُحَمَّدُ. فَقَالَ " مَنْ يُطِعِ اللَّهَ إِذَا عَصَيْتُ، أَيَأْمَنُنِي اللَّهُ عَلَى أَهْلِ الأَرْضِ فَلاَ تَأْمَنُونِي ". فَسَأَلَهُ رَجُلٌ قَتْلَهُ ـ أَحْسِبُهُ خَالِدَ بْنَ الْوَلِيدِ ـ فَمَنَعَهُ، فَلَمَّا وَلَّى قَالَ " إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا ـ أَوْ فِي عَقِبِ هَذَا ـ قَوْمٌ يَقْرَءُونَ الْقُرْآنَ، لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ، وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ، لَئِنْ أَنَا أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ ".
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அலீ (ரலி) அவர்கள் (யமனிலிருந்து) நபி (ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ (ரலி), உயைனா பின் பத்ர் அல் ஃபஸாரீ (ரலி), பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவ ரான ஸைத் அத்தாயீ (ரலி), பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல்ஆமிரி (ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷியரும் அன்சாரிகளும் கோபமடைந்து, ‘‘நஜ்த்வாசிகளின் தலைவர் களுக்குக் கொடுக்கிறார்; நம்மை விட்டு விடுகிறாரே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் கள் (இப்போதுதான் இஸ்லாத்தைத் தழுவி யிருப்பதால்) அவர்களுடைய உள்ளங் களை (முழுமையாக) இணக்கமாக்கு வதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்)தான் கொடுத்தேன்” என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பியிருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன்வந்து, ‘யிமுஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘‘நானே (அல்லாஹ்வுக்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அல்லாஹ் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது வேறொரு மனிதர் இப்படி (குறை) சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்ட அவர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் தான் என்று நினைக்கின்றேன்லி அவரை நபி (ஸல்) அவர்கள், (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்துவிட்டார்கள். (குறை சொன்ன) அந்த ஆள் திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து லிஅல்லது இவரின் பின்னேலி ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களு டைய தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடு வதைப்போல் மார்க்கத்திலிருந்து வெளி யேறிவிடுவார்கள்; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவழிபாடு புரிபவர் களை விட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் யிஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்.” என்று கூறினார்கள்.20 அத்தியாயம் :
ஹதீஸ் 3345 — Sahih al Bukhari 60:20
حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ {فَهَلْ مِنْ مُدَّكِرٍ }.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிஃப ஹல் மின்(ம்) முத்த(க்)கிர்’ (அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?) எனும் (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள) இறைவசனத்தை ஓதுவதை நான் செவியுற்றேன்.21 அத்தியாயம் :