حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَصَدَّقَ بِجِلاَلِ الْبُدْنِ الَّتِي نُحِرَتْ وَبِجُلُودِهَا.
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அறுக்கப்பட்ட பலி ஒட்டகங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சேணங்களையும் அதன் தோல்களையும் தர்மம் செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2300 — Sahih al Bukhari 40:2
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى صَحَابَتِهِ، فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "ضَحِّ بِهِ أَنْتَ
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சில ஆடு களைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள்; (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஒரு வெள்ளாட்டுக் குட்டி எஞ்சியது. அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, ‘‘அதை நீரே (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!” எனக் கூறி னார்கள். அத்தியாயம் :
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்காவிலுள்ள என் குடும்பத்தாரை யும் சொத்துகளையும் உமய்யா பின் கலஃப் (என்ற இறைமறுப்பாளர்) பாதுகாக்க வேண்டும் என்றும் மதீனாவிலுள்ள அவருடைய குடும்பத்தாரையும் சொத்து களையும் நான் பாதுகாப்பேன் என்றும் அவருடன் எழுத்துபூர்வமாக ஒப்பந்தம் செய்துகொண்டேன். (ஒப்பந்தப் படிவத்தில்) ‘அப்துர் ரஹ்மான்’ (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதியபோது, ‘‘ரஹ்மானை நான் அறியமாட்டேன்; அறியாமைக் காலத்தில் இருந்த உமது பெயரை எழுதும்” என்று அவர் கூறினார். நான் அப்து அம்ர் என்று (என் பழைய பெயரை) எழுதினேன். பத்ர் போர் நடந்த நாளில் மக்களெல் லாரும் உறங்கியபோது அவரைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கி நான் சென்றேன். அவரை பிலால் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டார். பிலால் உடனே வந்து அன்சாரிகள் குழுமியிருந்த இடத்தில், ‘‘இதோ உமய்யா பின் கலஃப்! இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது” எனக் கூறினார்.2 பிலாலுடன் அன்சாரிகளில் ஒரு குழுவினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்துவிடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்னிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்சாரிகள் கொன்றுவிட்டனர். பிறகும் விடாமல் எங்களைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவராக இருந்தார். (அதனால் ஓட இயலவில்லை.) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், ‘குப்புறப் படுப்பீராக!’ என்று கூறினேன். அவர் குப்புற விழுந்ததும் அவரைக் காப்பாற்றுவதற்காக அவர்மேல் நான் விழுந்தேன். அன்சாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவரைக் கொன்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் என் காலையும் தமது வாளால் வெட்டினார். ‘‘அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், தமது பாதத்தின் மேல்பகுதியில் அந்த வெட்டுக் காயத்(தின் வடு இருப்ப)தை எங்களுக்குக் காட்டினார்” என்று அவருடைய மகன் கூறுகிறார்.3 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் பகுதிக்கு ஒரு மனிதரை அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (அங்கு சென்றுவிட்டு) உயர் ரகப் பேரீச்சம் பழங்களை மக்களிடம் கொண்டுவந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கைபரில் உள்ள எல்லாப் பேரீச்சம் பழங்களும் இப்படித்தான் (உயர்ரக மானவையாக) இருக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘இரண்டு ‘ஸாஉ’கள் சாதாரண வகைப் பேரீச்சம்பழங்களைக் கொடுத்து இதில் ஒரு ‘ஸாஉ’வையும், மூன்று ‘ஸாஉ’கள் சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் இரண்டு ‘ஸாஉ’களையும் நாங்கள் வாங்குவோம்” எனக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு செய்யாதீர்! சாதாரண வகைப் பேரீச்சம்பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு, அந்தக் காசுகளுக்குப் பதிலாக உயர்ந்த பேரீச்சம்பழங்களை வாங்குவீராக!” என்றார்கள். நிறுத்தலளவையிலும் இதைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.4 அத்தியாயம் :

ஹதீஸ் 2304 — Sahih al Bukhari 40:5
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ الْمُعْتَمِرَ، أَنْبَأَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ كَعْبِ بْنِ مَالِكٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَتْ لَهُمْ غَنَمٌ تَرْعَى بِسَلْعٍ، فَأَبْصَرَتْ جَارِيَةٌ لَنَا بِشَاةٍ مِنْ غَنَمِنَا مَوْتًا، فَكَسَرَتْ حَجَرًا فَذَبَحَتْهَا بِهِ، فَقَالَ لَهُمْ لاَ تَأْكُلُوا حَتَّى أَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم، أَوْ أُرْسِلَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مَنْ يَسْأَلُهُ. وَأَنَّهُ سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ ذَاكَ، أَوْ أَرْسَلَ، فَأَمَرَهُ بِأَكْلِهَا. قَالَ عُبَيْدُ اللَّهِ فَيُعْجِبُنِي أَنَّهَا أَمَةٌ، وَأَنَّهَا ذَبَحَتْ. تَابَعَهُ عَبْدَةُ عَنْ عُبَيْدِ اللَّهِ.
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களுக்குச் சில ஆடுகள் இருந்தன. அவை ‘சல்உ’ எனும் மலைப் பகுதியில் மேய்ந்துவந்தன. (ஒருநாள்) அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தறுவாயில் இருப்பதை எங்கள் அடிமைப் பெண் ஒருத்தி பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதைக் கொண்டு அந்த ஆட்டை அறுத்தாள். ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நான் கேட்காத வரை சாப்பிடாதீர்கள்!” என்று என்னுடன் இருந்தவர்களுக்கு நான் கூறினேன். அல்லது ‘நபி (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி இதைப் பற்றிக் கேட்காத வரை சாப்பிடாதீர்கள்’ என்று சொன்னார். நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை உண்ணுமாறு கூறினார்கள். ‘‘அவரோ ஓர் அடிமைப்பெண்; அவரே இவ்வாறு ஆட்டை அறுத்திருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2305 — Sahih al Bukhari 40:6
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سِنٌّ مِنَ الإِبِلِ فَجَاءَهُ يَتَقَاضَاهُ فَقَالَ " أَعْطُوهُ ". فَطَلَبُوا سِنَّهُ فَلَمْ يَجِدُوا لَهُ إِلاَّ سِنًّا فَوْقَهَا. فَقَالَ " أَعْطُوهُ ". فَقَالَ أَوْفَيْتَنِي أَوْفَى اللَّهُ بِكَ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, (தாம் கடனாக வாங்கியிருந்த) குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றைக் கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திருப்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘‘அவருக்கு அதைக் கொடுத்துவிடுங்கள்” என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடியபோது, அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத்தான் தோழர்கள் கண்டார்கள். ‘‘அதை அவருக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்துவிட்டீர்கள்; அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத் தருவான்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள்.5 அத்தியாயம் :
ஹதீஸ் 2306 — Sahih al Bukhari 40:7
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَقَاضَاهُ، فَأَغْلَظَ، فَهَمَّ بِهِ أَصْحَابُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً ". ثُمَّ قَالَ " أَعْطُوهُ سِنًّا مِثْلَ سِنِّهِ ". قَالُوا يَا رَسُولَ اللَّهِ لاَ نَجِدُ إِلاَّ أَمْثَلَ مِنْ سِنِّهِ. فَقَالَ " أَعْطُوهُ فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நபித் தோழர்கள் அவரை(ப் பிடித்து)க் கண்டிக்கத் தயாராயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டு விடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு) பேச உரிமையுள்ளது” என்று கூறிவிட்டு, அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒட்டக மொன்றைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே கொடுங்கள்; அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2307 — Sahih al Bukhari #2307
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ وَزَعَمَ عُرْوَةُ أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ مُسْلِمِينَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحَبُّ الْحَدِيثِ إِلَىَّ أَصْدَقُهُ. فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ إِمَّا السَّبْىَ، وَإِمَّا الْمَالَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ بِهِمْ ". وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم انْتَظَرَهُمْ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً، حِينَ قَفَلَ مِنَ الطَّائِفِ، فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلاَّ إِحْدَى الطَّائِفَتَيْنِ قَالُوا فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا. فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمُسْلِمِينَ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ فَإِنَّ إِخْوَانَكُمْ هَؤُلاَءِ قَدْ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي قَدْ رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ بِذَلِكَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ ". فَقَالَ النَّاسُ قَدْ طَيَّبْنَا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّا لاَ نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ فِي ذَلِكَ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعُوا إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ ". فَرَجَعَ النَّاسُ فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، ثُمَّ رَجَعُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ أَنَّهُمْ قَدْ طَيَّبُوا وَأَذِنُوا.
மர்வான் பின் ஹகம், மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது: (ஹுனைன் போருக்குப்பின் அரபுக் குலத்தாரான) ‘ஹவாஸின்’ குலத்தாரின் தூதுக் குழுவினர் முஸ்லிம்களாகி தம்மிடம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். (போரில் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட) தங்கள் செல்வத்தையும் கைதிகளையும் திரும்பத் தருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உண்மை பேசுவதுதான் எனக்கு மிகவும் விருப்பமானது. கைதிகள், அல்லது செல்வங்கள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்! நான் உங்களை எதிர்பார்த்துக்கொண்டுதான் (கைதிகளைப் பங்கிடாமல்) இருந்தேன்” எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியது முதல் பத்து நாட்களாக ‘ஹவாஸின்’ குலத்தாரை எதிர்பார்த்(துக் காத்)திருந்தார்கள் லிஇரண்டில் ஒன்றைத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குத் திருப்பித் தருவார்கள் என்பது ‘ஹவாஸின்’ குலத்தாருக்குத் தெளிவானபோது, ‘‘நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறோம்” எனக் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்து, ‘‘இறைவாழ்த்துக்குப்பின், உங்களுடைய இந்தச் சகோதரர் கள் மனம் திருந்தி, நம்மிடம் வந்துள்ளனர். அவர்களில் போர்க் கைதிகளாகப் பிடிபட்டவர்களை அவர்களிடமே ஒப்படைத்துவிடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன். உங்களில் யார் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கிறாரோ அவர் இதைச் செய்யட்டும்! தமது பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புவர், (இனிவரும் நாட்களில்) முதலாவதாக அல்லாஹ் நமக்குக் கொடுக்கவிருக்கும் (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும்வரை, அவ்வாறே செய்யட்டும்! (கைதிகளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்!)” என்றார்கள். அப்போது மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதருக்காக, மனப்பூர்வமாக நாங்கள் (கைதிகளையே) அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம்” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் இதற்குச் சம்மதித்தவர் யார், சம்மதிக்காதவர் யார் என்பது நமக்குத் தெரியாது. எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! உங்களின் தலைவர்கள் (இது பற்றி உங்களிடம் தனியாகக் கலந்து பேசிவிட்டு,) நம்மிடம் உங்கள் முடிவைக் கூறட்டும்!” என்றார்கள். அவ்வாறே மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களின் தலைவர்கள் அவர் களுடன் பேசினார்கள். பிறகு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, (கைதிகளைத் திருப்பி கொடுப்பதற்கு) தாங்கள் மனப்பூர்வமாகச் சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2308 — Sahih al Bukhari 40:8