ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நான், மெதுவாகச் செல்லும் ஓர் ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருந்தேன்; அந்த ஒட்டகம் அனைவருக்கும் கடைசியாக வந்தது. நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது, ‘‘யார் அவர்?” என்று கேட்டார்கள். ‘ஜாபிர் பின் அப்தில்லாஹ்’ என்றேன். ‘‘உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். ‘‘நான் மெதுவாகச் செல்லும் ஒட்டகத்தில் பயணம் செய்கிறேன்” என்று கூறினேன். ‘‘உம்மிடம் கம்பு ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ‘‘அதை என்னிடம் கொடுப்பீராக” என்று கேட்டார்கள். அதை அவர்களிடம் கொடுத்தேன். (அந்தக் கம்பால்) ஒட்டகத்தை (அடித்து) விரட்டினார்கள் அந்த இடத்திலிருந்து எனது ஒட்டகம் அனைவரையும் முந்திச்செல்ல ஆரம்பித்தது. ‘‘இதை எனக்கு விலைக்குத் தருவீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை எனக்கு விலைக்குத் தருவீராக! நான்கு பொற்காசுகளுக்கு இதை நான் விலைக்கு வாங்கிவிட்டேன்; மதீனாவரை நீர் இதில் பயணம் செய்யலாம்” என்று கூறினார்கள். மதீனாவை நாங்கள் நெருங்கியதும் (நான் வீட்டை நோக்கிப் புறப்படலானேன்). ‘‘எங்கே போகிறீர்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘‘சற்று வயதான ஒரு பெண்ணை மணந்திருக்கிறேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் ஒரு கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? நீர் அவளுடன் விளையாடி(க் களித்தி)ட அவள் உம்முடன் விளையாடி(க் களித்தி)டலாமே!” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘என் தந்தை; பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்; எனவே, குடும்ப அனுபவமுள்ள, சற்று வயதான பெண்ணை மணக்க நாடினேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அது சரிதான்” என்றார்கள். நாங்கள் மதீனாவுக்குச் சென்றதும் பிலால் (ரலி) அவர்களிடம், ‘‘இவருக்குக் கொடுப்பீராக! கொஞ்சம் அதிகமாகவும் கொடுப்பீராக!” என்று நபியவர்கள் கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் எனக்கு நான்கு பொற்காசுகளையும் அதிகமாக ஒரு ‘கீராத்’தையும் கொடுத்தார்கள். ‘‘நபி (ஸல்) அவர்கள் அதிகமாக வழங்கிய(கீராத்தான)து என்னைவிட்டு (ஒரு போதும்) பிரியாது” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த ஒரு ‘கீராத்’, ஜாபிர் (ரலி) அவர்களின் பணப்பையைவிட்டுப் பிரிந்ததேயில்லை” என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்.6 இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) உள்ளிட்டோர் அறிவித்தனர். ஆனால், சிலர் வேறு சிலரைவிடக் கூடுதலாக அறிவித்தனர். அவர்களில் யாரும் முழு ஹதீஸை மொத்தமாக அறிவிக்கவில்லை. அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன் (மணக்கொடை இல்லாமல் என்னை மணந்துகொள்ளுங்கள்)” என்றார். அங்கிருந்த ஒரு மனிதர் ‘‘இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்!” என்று கேட்டார். ‘‘உம்மிடமிருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு இவரை நாம் மணமுடித்துவைத்தோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2311 — Sahih al Bukhari 40:11
وَقَالَ عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ أَبُو عَمْرٍو حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ، فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ، فَأَخَذْتُهُ، وَقُلْتُ وَاللَّهِ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ إِنِّي مُحْتَاجٌ، وَعَلَىَّ عِيَالٌ، وَلِي حَاجَةٌ شَدِيدَةٌ. قَالَ فَخَلَّيْتُ عَنْهُ فَأَصْبَحْتُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ ". قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالاً فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ. قَالَ " أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ ". فَعَرَفْتُ أَنَّهُ سَيَعُودُ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّهُ سَيَعُودُ. فَرَصَدْتُهُ فَجَاءَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ دَعْنِي فَإِنِّي مُحْتَاجٌ، وَعَلَىَّ عِيَالٌ لاَ أَعُودُ، فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَبَا هُرَيْرَةَ، مَا فَعَلَ أَسِيرُكَ ". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالاً، فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ. قَالَ " أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ ". فَرَصَدْتُهُ الثَّالِثَةَ فَجَاءَ يَحْثُو مِنَ الطَّعَامِ، فَأَخَذْتُهُ فَقُلْتُ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَهَذَا آخِرُ ثَلاَثِ مَرَّاتٍ أَنَّكَ تَزْعُمُ لاَ تَعُودُ ثُمَّ تَعُودُ. قَالَ دَعْنِي أُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا. قُلْتُ مَا هُوَ قَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ {اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ} حَتَّى تَخْتِمَ الآيَةَ، فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ وَلاَ يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ. فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ ". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ، يَنْفَعُنِي اللَّهُ بِهَا، فَخَلَّيْتُ سَبِيلَهُ. قَالَ " مَا هِيَ ". قُلْتُ قَالَ لِي إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ {اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ} وَقَالَ لِي لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ وَلاَ يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ، وَكَانُوا أَحْرَصَ شَىْءٍ عَلَى الْخَيْرِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ، تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلاَثِ لَيَالٍ يَا أَبَا هُرَيْرَةَ ". قَالَ لاَ. قَالَ " ذَاكَ شَيْطَانٌ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் தர்மப் பொருட்களை (ஸதகத்துல் ஃபித்ர்) பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் அளித்தார்கள். அப்போது ஒருவன் (இரவில்) வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவன், ‘‘நான் ஓர் ஏழை; எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது!” என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘‘அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, அவன்மீது இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; மீண்டும் அவன் வருவான்” என்றார்கள். ‘மீண்டும் வருவான்’ என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காகக் காத்திருந்தேன். அவ்வாறே அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். ‘‘உன்னை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவன், ‘‘என்னை விட்டுவிடு! நான் ஓர் ஏழை; எனக்குக் குடும்பம் இருக்கிறது; இனி நான் வர மாட்டேன்” என்றான். அவன்மேல் இரக்கப் பட்டு அவனை விட்டுவிட்டேன். விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்ட வன் என்ன செய்தான்?” என்று கேட்டார் கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்” என்றேன். ‘‘நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்” என்றார்கள். மூன்றாம் தடவை அவனுக்காக நான் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, ‘‘உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்; (ஒவ்வொரு முறையும்) இனிமேல் வரமாட்டேன் என்று நீ சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக இப்போது மீண்டும் வந்திருக்கிறாய்” என்று கூறினேன். அதற்கு அவன், ‘‘என்னை விட்டுவிடும்! உமக்கு அல்லாஹ் பயனளிக்கும் சில வார்த்தைகளைக் கற்றுத்தருகிறேன்” என்றான். அதற்கு நான், ‘‘அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன். ‘‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ‘அல்லாஹு லா இலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்’ என்று தொடங்கும் ‘ஆயத்துல் குர்சி’யை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதுவீராக! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; உம்மை ஷைத்தான் நெருங்கமாட்டான்” என்றான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘‘நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கும் சில வார்த்தைகளைக் கற்றுத்தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்” என்றேன். ‘‘அந்த வார்த்தைகள் என்ன?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ‘ஆயத்துல் குர்சி’யை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதுவீராக! அவ்வாறு ஓதினால், விடியும்வரை அல்லாஹ்விவிடருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; ஷைத்தான் உம்மை நெருங்கமாட்டான்” என்று என்னிடம் அவன் கூறினான் எனத் தெரிவித்தேன். லிநபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக்கொண்டு செயல்படுத்துவ)தில் பேராவல் கொண்டவர்களாக இருந்தனர்லி அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும், உம்மிடம் அவன் உண்மையே சொல்லியிருக்கிறான். மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசிவருகிறீர் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். ‘‘தெரியாது” என்றேன். ‘‘அவன்தான் ஷைத்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2312 — Sahih al Bukhari 40:12
حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ ـ هُوَ ابْنُ سَلاَّمٍ ـ عَنْ يَحْيَى، قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَبْدِ الْغَافِرِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ بِلاَلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِتَمْرٍ بَرْنِيٍّ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " مِنْ أَيْنَ هَذَا ". قَالَ بِلاَلٌ كَانَ عِنْدَنَا تَمْرٌ رَدِيٌّ، فَبِعْتُ مِنْهُ صَاعَيْنِ بِصَاعٍ، لِنُطْعِمَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَ ذَلِكَ " أَوَّهْ أَوَّهْ عَيْنُ الرِّبَا عَيْنُ الرِّبَا، لاَ تَفْعَلْ، وَلَكِنْ إِذَا أَرَدْتَ أَنْ تَشْتَرِيَ فَبِعِ التَّمْرَ بِبَيْعٍ آخَرَ ثُمَّ اشْتَرِهِ ".
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் ‘பர்னீ’ எனும் உயர்ரக பேரீச்சம்பழத்தைக் கொண்டுவந்தார்கள். அவர்களிடம் ‘‘இது எங்கிருந்து கிடைத் தது?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார் கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், ‘‘எம்மிடம் மட்டமான பேரீச்சம் பழம் இருந்தது; அதில் இரு ‘ஸாஉ’களைக் கொடுத்துவிட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக ஒரு ஸாஉ வாங்கினேன்” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! இனி இவ்வாறு செய்யாதீர்! நீர் (உயர்ரக பேரீச்சம்பழத்தை) வாங்க விரும்பினால், (உம்மிடம் இருக்கும்) பேரீச்சம்பழத்தைத் தனியாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக” என்றார்கள். அத்தியாயம் :
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் செய்த அறக்கொடை தொடர்பாக அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறும்போது, ‘‘இதன் பொறுப்பாளர், செல்வத்தைக் கையாடல் செய்யாமல் தாம் உண்பதும் தம் தோழருக்கு உண்ணக்கொடுப்பதும் தவறில்லை” என்று (குறிப்பிடப்பட்டிருந்ததாகத்) தெரிவித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் செய்த அறக் கொடைக்கு (அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ்) இப்னு உமர் (ரலி) அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். மக்காவில் அவர்கள் வழக்கமாக யாரிடம் தங்குவார்களோ அவர்களுக்கு அதிலிருந்து அன்பளிப்பு வழங்குவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2314 — Sahih al Bukhari #2314
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، وَأَبِي، هُرَيْرَةَ رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " وَاغْدُ يَا أُنَيْسُ إِلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا ".
ஸைத் பின் காலித் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உனைஸ் (ரலி) அவர்களிடம், ‘‘இன்னாரின் மனைவியிடம் நீ சென்று, அவர் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்றுவீராக” என்று கூறினார்கள்.7 அத்தியாயம் :
ஹதீஸ் 2315 — Sahih al Bukhari 40:14
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، وَأَبِي، هُرَيْرَةَ رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " وَاغْدُ يَا أُنَيْسُ إِلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا ".
ஸைத் பின் காலித் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உனைஸ் (ரலி) அவர்களிடம், ‘‘இன்னாரின் மனைவியிடம் நீ சென்று, அவர் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்றுவீராக” என்று கூறினார்கள்.7 அத்தியாயம் :
உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: போதையில் இருந்த ‘நுஐமான்’ அல்லது ‘அவருடைய மகன்’ நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, வீட்டில் இருப்பவர்கள் (வெளியே வந்து) அவரை அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன். நாங்கள் காலணிகளாலும் பேரீச்ச மட்டையாலும் அவரை அடித்தோம். அத்தியாயம் :
ஹதீஸ் 2317 — Sahih al Bukhari 40:16
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ قَالَتْ، عَائِشَةُ ـ رضى الله عنها ـ أَنَا فَتَلْتُ، قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَيْهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي، فَلَمْ يَحْرُمْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَىْءٌ أَحَلَّهُ اللَّهُ لَهُ حَتَّى نُحِرَ الْهَدْىُ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி (பலி) கொடுப்பதற்காக அனுப்பிவைத்த ஒட்டகங்களின் அடையாள மாலைகளை என் கைகளா லேயே நான் திரித்(துத் தயாரித்)தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் கைகளால் அவற்றை (ஒட்டகங்களின் கழுத்தில்) தொங்கவிட்டார்கள். பிறகு அவற்றை என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்) உடன் (பலியிடுவதற்காக) அனுப்பினார்கள். (மக்காவில்) பலிப்பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்த எதுவும் அவர்கள்மீது விலக்கப்படவில்லை. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள் மதீனா அன்சாரிகளிலேயே செல்வராக இருந்தார்கள். அவருடைய செல்வங்களில் ‘பைருஹா’ எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு சென்று, அங்குள்ள சுவைநீரை அருந்துவது வழக்கம். இந்நிலையில், ‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! உயர்ந்தோன் அல்லாஹ் தனது வேதத்தில், ‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒரு போதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” என்று கூறுகின்றான். என் சொத்துக்களில் எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா’ எனும் இந்தத் தோட்டமேயாகும். (இனிமேல்,) இது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பிய விதத்தில் இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!” எனக் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நல்லது! அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே! அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே! அது தொடர்பாக நீர் கூறியதை நான் செவியுற்றேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாக) கருதுகிறேன்” என்றார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறே செய்கிறேன்” எனக் கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (நன்மை கிடைத்துவிட்ட லிறராயிஹ்’ என்பதற்குப் பதிலாக) ‘இலாபம் தரும்’ (ராபிஹ்) என இடம்பெற்றுள்ளது.8 அத்தியாயம் :