حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، سَمِعْتُ جَرِيرًا ـ رضى الله عنه ـ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உறுதி கூறல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் வழங்குதல், (நபியவர்களின் கட்டளைகளைச் செவியேற்றுக் கட்டுப் படுதல், எல்லா முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுதல் ஆகிய விஷயங்களை ஏற்றுச் செயல்படுவதாக அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். அத்தியாயம் :
ஹதீஸ் 2158 — Sahih al Bukhari 34:109
حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَلَقَّوُا الرُّكْبَانَ وَلاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ ". قَالَ فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ مَا قَوْلُهُ لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ قَالَ لاَ يَكُونُ لَهُ سِمْسَارًا.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்தி லிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக் காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!” இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன?” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இடைத்தரகராக இருக்கக் கூடாது (என்பது தான் அதன் பொருள்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2159 — Sahih al Bukhari 34:110
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ. وَبِهِ قَالَ ابْنُ عَبَّاسٍ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இவ்வாறே (இடைத்தரகராக இருப்பது கூடாதென) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2160 — Sahih al Bukhari 34:111
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَبْتَاعُ الْمَرْءُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ "
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் வணிகம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் குறுக்கிட்டு வணிகம் செய்ய வேண்டாம். (வாங்கும் நோக்க மின்றி) விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே விலை கேட்காதீர்கள்! கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்க வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2161 — Sahih al Bukhari 34:112
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذٌ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ نُهِينَا أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்தியாயம் :
ஹதீஸ் 2162 — Sahih al Bukhari 34:113
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ التَّلَقِّي، وَأَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (வெளியிலிருந்து வரும்) வணிகர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சரக்குகளை) வாங்குவதையும் கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அத்தியாயம் :
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுத் தரக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘‘இவர் அவருக்கு இடைத்தரகராக இருக்கக் கூடாது” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2164 — Sahih al Bukhari 34:115
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ حَدَّثَنِي التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ مَنِ اشْتَرَى مُحَفَّلَةً فَلْيَرُدَّ مَعَهَا صَاعًا. قَالَ وَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ تَلَقِّي الْبُيُوعِ.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை விலைக்கு வாங்கியவர் (அதைத் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால்), அத்துடன் ஒரு ஸாஉ (பேரீச்சம்பழம் அல்லது உணவுப் பொருள்) சேர்த்துக் கொடுக்கட்டும். வியாபாரிகளை எதிர்கொண்டு வாங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2165 — Sahih al Bukhari 34:116
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَلاَ تَلَقَّوُا السِّلَعَ حَتَّى يُهْبَطَ بِهَا إِلَى السُّوقِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வணிகம் செய்து கொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டு வணிகம் செய்யலாகாது; மேலும், விற்பனைப் பொருட்கள் சந்தைக்கு கொண்டுவந்து இறக்கப்படுவதற்குமுன் (இடையிலேயே) வாங்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2166 — Sahih al Bukhari 34:117
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نَتَلَقَّى الرُّكْبَانَ فَنَشْتَرِي مِنْهُمُ الطَّعَامَ، فَنَهَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نَبِيعَهُ حَتَّى يُبْلَغَ بِهِ سُوقُ الطَّعَامِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا فِي أَعْلَى السُّوقِ، يُبَيِّنُهُ حَدِيثُ عُبَيْدِ اللَّهِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (வெளியூரிலிருந்து சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை (ஊருக்குள்) எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்கிவந்தோம். (அவ்வாறு நாங்கள் வாங்கும்) உணவுப் பொருள் உணவுச் சந்தைக்குக் கொண்டுசெல்லப் படுவதற்குமுன் அதை நாங்கள் விற்கக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடுத் தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: வணிகர்களை எதிர்கொண்டது சந்தை (கடைவீதி) துவங்கும் இடத்தில்தான். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. அத்தியாயம் :