Qurani·قرآني
தமிழ்

விற்பனை மற்றும் வணிகம் (பைஉ)

192 ஹதீஸ்கள் · #2047–2238

ஹதீஸ் 2147 — Sahih al Bukhari 34:99
حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ لِبْسَتَيْنِ وَعَنْ بَيْعَتَيْنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ‏.‏
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் தொடுமுறை (முலாமசா), எறிமுறை (முனாபதா) ஆகிய இரு வணிக முறைகளையும் தடை செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2148 — Sahih al Bukhari 34:100
حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ لاَ تُصَرُّوا الإِبِلَ وَالْغَنَمَ، فَمَنِ ابْتَاعَهَا بَعْدُ فَإِنَّهُ بِخَيْرِ النَّظَرَيْنِ بَعْدَ أَنْ يَحْتَلِبَهَا إِنْ شَاءَ أَمْسَكَ، وَإِنْ شَاءَ رَدَّهَا وَصَاعَ تَمْرٍ ‏"‏‏.‏ وَيُذْكَرُ عَنْ أَبِي صَالِحٍ وَمُجَاهِدٍ وَالْوَلِيدِ بْنِ رَبَاحٍ وَمُوسَى بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ صَاعَ تَمْرٍ ‏"‏‏.‏ وَقَالَ بَعْضُهُمْ عَنِ ابْنِ سِيرِينَ صَاعًا مِنْ طَعَامٍ وَهْوَ بِالْخِيَارِ ثَلاَثًا‏.‏ وَقَالَ بَعْضُهُمْ عَنِ ابْنِ سِيرِينَ صَاعًا مِنْ تَمْرٍ‏.‏ وَلَمْ يَذْكُرْ ثَلاَثًا، وَالتَّمْرُ أَكْثَرُ‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒட்டகம், ஆடு ஆகியவற்றை (அவற் றின் பாலைக் கறக்காமல் விட்டு வைத்திருந்து) மடி கனக்கச் செய்யாதீர்கள்! மடி கனக்கச் செய்த இத்தகைய பிராணி களை வாங்கியவர், விரும்பினால் பால் கறந்து பார்த்து அதை வைத்துக்கொள்ள லாம்; விரும்பாவிட்டால் (கறந்த பாலுக்கு ஈடாக) ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்துடன் அதை விற்றவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம். இந்த இரண்டில் சிறந்த ஒன்றைச் செய்வதற்கு அவருக்கு உரிமை உண்டு! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், ‘‘(விரும்பாவிட்டால்) ஒரு ஸாஉ உணவுப் பொருளுடன் திருப்பிக் கொடுக்கும் இந்த உரிமை (பிராணியை வாங்கிய நாளி லிருந்து) மூன்று நாட்கள் வரையில்தான்!” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. வேறுசில அறிவிப்புகளில், யிஒரு ஸாஉ பேரீச்சம்பழம்’ என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாகவே காணப்படுகிறது. மூன்று நாட்கள் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. ஆக, யிபேரீச்சம் பழத்தின் ஒரு ஸாஉ’ என்பதே அதிகமான அறிவிப்புக்களில் காணப்படுகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 2149 — Sahih al Bukhari 34:101
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ مَنِ اشْتَرَى شَاةً مُحَفَّلَةً، فَرَدَّهَا فَلْيَرُدَّ مَعَهَا صَاعًا‏.‏ وَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُلَقَّى الْبُيُوعُ‏.‏
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘மடி கனக்கச் செய்யப்பட்ட ஓர் ஆட்டை யாரேனும் வாங்கி, அதைத் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால், அத்துடன் ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் சேர்த்துக் கொடுக் கட்டும்! மேலும், (சந்தைக்கு வரும்) வியாபாரிகளை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2150 — Sahih al Bukhari 34:102
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تَلَقَّوُا الرُّكْبَانَ، وَلاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ وَلاَ تَنَاجَشُوا وَلاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ، وَلاَ تُصَرُّوا الْغَنَمَ، وَمَنِ ابْتَاعَهَا فَهْوَ بِخَيْرِ النَّظَرَيْنِ بَعْدَ أَنْ يَحْتَلِبَهَا إِنْ رَضِيَهَا أَمْسَكَهَا، وَإِنْ سَخِطَهَا رَدَّهَا وَصَاعًا مِنْ تَمْرٍ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘(சரக்குகளை ஏற்றிக்கொண்டு) வாகனத் தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து சரக்குகளை) வாங் காதீர்கள்!53 ஒருவர் வணிகம் செய்து கொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். வாங்கும் நோக்கமின்றி (விலையை ஏற்றிவிட வேண்டும் என்பதற்காகவே) விலை கேட்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம். ஆடுகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியைக் கனக்கச் செய்யாதீர்கள்! இத்தகைய ஆட்டை ஒருவர் வாங்கிப் பால் கறந்து, திருப்தியடைந்தால் தம்மிடமே வைத்துக் கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால், அந்த ஆட்டை (கறந்த பாலுக்கு ஈடாக) ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்துவிடலாம். இவ்விரண்டில் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்யும் உரிமை வாங்கியவருக்கு உண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2151 — Sahih al Bukhari 34:103
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا الْمَكِّيُّ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي زِيَادٌ، أَنَّ ثَابِتًا، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنِ اشْتَرَى غَنَمًا مُصَرَّاةً فَاحْتَلَبَهَا، فَإِنْ رَضِيَهَا أَمْسَكَهَا، وَإِنْ سَخِطَهَا فَفِي حَلْبَتِهَا صَاعٌ مِنْ تَمْرٍ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை யாரேனும் விலைக்கு வாங்கினால், அதில் பால் கறந்து பார்த்துத் திருப்தியடைந்தால் தம்மிடமே அதை வைத்துக்கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால் கறந்த பாலுக்காக ஒரு ஸாஉ பேரீச்சம்பழம் கொடுக்க வேண்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2152 — Sahih al Bukhari 34:104
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا زَنَتِ الأَمَةُ فَتَبَيَّنَ زِنَاهَا فَلْيَجْلِدْهَا، وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتْ فَلْيَجْلِدْهَا، وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتِ الثَّالِثَةَ فَلْيَبِعْهَا، وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعَرٍ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்து அது வெளிப்பட்டுவிட்டால் அவளுக்கு, (உரிமையாளன் ஐம்பது) சாட்டையடி வழங்கட்டும்! (அதற்குமேல் அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் அவளுக்கு (ஐம்பது சாட்டையடி) கொடுக்கட்டும்! (அதற்குமேல் அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம்! மூன்றாம் முறையும் விபசாரம் செய்தால், அவளை (அவளுடைய உரிமையாளன்) ஒரு முடிக்கற்றைக்காவது விற்று விடட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2153 — Sahih al Bukhari #2153
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الأَمَةِ إِذَا زَنَتْ وَلَمْ تُحْصِنْ قَالَ ‏ "‏ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَبِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ ‏"‏‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ لاَ أَدْرِي بَعْدَ الثَّالِثَةِ، أَوِ الرَّابِعَةِ‏.‏
அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது: ‘‘மணமுடிக்காத ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்துவிட்டால் (என்ன செய்ய வேண்டும்?)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவள் விபசாரம் செய்தால் அவளைச் சாட்டையால் அடியுங்கள்; (அதற்குப்) பிறகும் விபசாரம் செய்தால் மீண்டும் சாட்டையால் அடியுங்கள்; மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு கயிற்றுக்காவது விற்று விடுங்கள்” என்றார்கள். ‘‘மூன்றாவது தடவைக்குப் பிறகு அவளை விற்றுவிட வேண்டுமா; அல்லது நான்காவது தடவைக்குப் பிறகு அவளை விற்றுவிட வேண்டுமா என எனக்குத் தெரியவில்லை” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2154 — Sahih al Bukhari 34:105
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الأَمَةِ إِذَا زَنَتْ وَلَمْ تُحْصِنْ قَالَ ‏ "‏ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَبِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ ‏"‏‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ لاَ أَدْرِي بَعْدَ الثَّالِثَةِ، أَوِ الرَّابِعَةِ‏.‏
அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது: ‘‘மணமுடிக்காத ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்துவிட்டால் (என்ன செய்ய வேண்டும்?)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவள் விபசாரம் செய்தால் அவளைச் சாட்டையால் அடியுங்கள்; (அதற்குப்) பிறகும் விபசாரம் செய்தால் மீண்டும் சாட்டையால் அடியுங்கள்; மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு கயிற்றுக்காவது விற்று விடுங்கள்” என்றார்கள். ‘‘மூன்றாவது தடவைக்குப் பிறகு அவளை விற்றுவிட வேண்டுமா; அல்லது நான்காவது தடவைக்குப் பிறகு அவளை விற்றுவிட வேண்டுமா என எனக்குத் தெரியவில்லை” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2155 — Sahih al Bukhari 34:106
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرْتُ لَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اشْتَرِي وَأَعْتِقِي، فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ ‏"‏‏.‏ ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْعَشِيِّ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ ‏"‏ مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهْوَ بَاطِلٌ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ، شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது தொடர்பான) விஷயத்தை அவர்களிடம் நான் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்தபின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத்தான்” என்று கூறினார்கள். பிறகு, மாலை நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்து, ‘‘அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிப்பவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களின் அந்த நிபந்தனை செல்லாதது ஆகும்; அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் ஆகும்” எனக் கூறி னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2156 — Sahih al Bukhari 34:107
حَدَّثَنَا حَسَّانُ بْنُ أَبِي عَبَّادٍ، حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ سَاوَمَتْ بَرِيرَةَ فَخَرَجَ إِلَى الصَّلاَةِ، فَلَمَّا جَاءَ قَالَتْ إِنَّهُمْ أَبَوْا أَنْ يَبِيعُوهَا، إِلاَّ أَنْ يَشْتَرِطُوا الْوَلاَءَ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ ‏"‏‏.‏ قُلْتُ لِنَافِعٍ حُرًّا كَانَ زَوْجُهَا أَوْ عَبْدًا فَقَالَ مَا يُدْرِينِي
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், (அடிமை யாயிருந்த) பரீராவை விலை பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழு கைக்குச் சென்றுவிட்டார்கள். அவர்கள் வந்ததும் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘பரீராவின் உரிமையாளர்கள், யிபரீராவுக்கு வாரிசாகும் உரிமையைத் தங்களுக்கு வழங்கினால் தவிர, அவரை விற்க மாட்டோம்’ எனக் கூறுகின்றனர்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அடிமையின் (மரணத்திற்குப்பின் அவருக்கு) வாரிசாகும் உரிமை (அவரை) விடுதலை செய்தவருக்குத்தான் உரியது” எனக் கூறினார்கள்.55 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான், அப்பெண்ணின் கணவர் அடிமையாக இருந்தாரா? அல்லது சுதந்திரமானவராக இருந்தாரா? என்று நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், யிஎனக்குத் தெரியாது’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.