حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ لَقَدْ رَأَيْتُ النَّاسَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَبْتَاعُونَ جِزَافًا ـ يَعْنِي الطَّعَامَ ـ يُضْرَبُونَ أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِمْ حَتَّى يُؤْوُوهُ إِلَى رِحَالِهِمْ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள், குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை விலைக்கு வாங்கிக்கொண்டி ருந்தபோது, அவற்றைத் தம் இருப்பிடங் களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப் பட்டதை நான் பார்த்திருக்கிறேன். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவில் இருந்த காலத்தில்) காலையிலோ மாலையிலோ என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வராமல் இருந்த நாட்கள் மிகவும் அரிதாகும். மதீனாவிற்கு (புலம்பெயர்ந்து) செல்ல நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி கிடைத்தபோது, (ஒரு நாள்) மதியம் (திடீரென) எங்களிடம் வந்து எங்களுக்கு அதிர்ச்சியளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்திருக்கும் விஷயம் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘புதிதாக ஏற்பட்ட ஏதோ ஒன்றுக்காகத்தான் இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்ததும், ‘‘உங்களுடன் இருப்பவர்களை வெளியேற்றுங்கள்” என்று கூறினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அஸ்மா, ஆயிஷா ஆகிய என் இரு புதல்வியர் மட்டுமே உள்ளனர்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மதீனாவிற்குப்) புறப்பட (ஹிஜ்ரத் செய்ய) எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுடன் நானும் வர விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகிறேன்” என்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் பயணத்திற்காகத் தயார்படுத்தி வைத்திருக் கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன; அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறி னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை நான் எடுத்துக்கொண்டுவிட்டேன்” என்றார்கள்.46 அத்தியாயம் :
ஹதீஸ் 2139 — Sahih al Bukhari 34:91
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ أَخِيهِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வணிகம் செய்துகொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டு வணிகம் செய்யக் கூடாது! இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2140 — Sahih al Bukhari 34:92
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلاَ يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، وَلاَ تَسْأَلُ الْمَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَكْفَأَ مَا فِي إِنَائِهَا.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமத்திலிருந்து (விற்பனை சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! ஒருவர் வணிகம் செய்துகொண்டிருக்கும் போது, மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம்! தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! தன் சகோதரி (சக்களத்தி)யின் (வாழ்க்கைப்) பாத்திரத்தில் உள்ளதைக் கொட்டி (அதைத் தனதாக்கி)விடுவதற்காக ஒரு பெண் (தன் மணாளரிடம்) தன் சகோதரியை மணவிலக்குச் செய்யுமாறு கேட்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2141 — Sahih al Bukhari 34:93
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الْحُسَيْنُ الْمُكْتِبُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً أَعْتَقَ غُلاَمًا لَهُ عَنْ دُبُرٍ، فَاحْتَاجَ فَأَخَذَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " مَنْ يَشْتَرِيهِ مِنِّي " فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ بِكَذَا وَكَذَا، فَدَفَعَهُ إِلَيْهِ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர், தாம் இறந்தபிறகு தமக்குச் சொந்தமான அடிமை ஒருவர் விடுதலையாகிக்கொள்ளட்டும் என்று (பின் தேதியிட்டு விடுதலை) அறிவித்திருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, ‘‘இவரை என்னிட மிருந்து (அதிக விலைக்கு) வாங்கிக் கொள்பவர் யார்?” என்று கேட்டார்கள். அவரை நுஐம் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் இன்ன விலைக்கு (எண்ணூறு வெள்ளிக் காசுகளுக்கு) வாங்கிக்கொண் டார்கள்; நபி (ஸல்) அவர்கள், அம்மனிதரி டம் அவ்விலையைக் கொடுத்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2142 — Sahih al Bukhari 34:94
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ النَّجْشِ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், வாங்கும் நோக்க மின்றி (ஒரு பொருளை அதிக விலைக்குக் கேட்டு) விலையை ஏற்றிவிடுவதைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2143 — Sahih al Bukhari 34:95
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ حَبَلِ الْحَبَلَةِ، وَكَانَ بَيْعًا يَتَبَايَعُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ، كَانَ الرَّجُلُ يَبْتَاعُ الْجَزُورَ إِلَى أَنْ تُنْتَجَ النَّاقَةُ، ثُمَّ تُنْتَجُ الَّتِي فِي بَطْنِهَا.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஹபலுல் ஹபலா’வை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இந்த வியாபாரம் செய்துவந்தார்கள். (அதாவது) ஒருவர் ஒட்டகத்தை விலைக்கு வாங்குவார்; அந்த ஒட்டகம் குட்டி ஈன்று, அந்தக் குட்டி தனது குட்டியை ஈனும்வரை (தவணை சொல்லி, அப்போதுதான் தாம் வாங்கிய ஒட்டகத்திற்கான விலையைத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொள்வார்). அத்தியாயம் :
ஹதீஸ் 2144 — Sahih al Bukhari 34:96
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، أَنَّ أَبَا سَعِيدٍ ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُنَابَذَةِ، وَهْىَ طَرْحُ الرَّجُلِ ثَوْبَهُ بِالْبَيْعِ إِلَى الرَّجُلِ، قَبْلَ أَنْ يُقَلِّبَهُ، أَوْ يَنْظُرَ إِلَيْهِ، وَنَهَى عَنِ الْمُلاَمَسَةِ، وَالْمُلاَمَسَةُ لَمْسُ الثَّوْبِ لاَ يَنْظُرُ إِلَيْهِ.
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எறிமுறை (முனாபதா) வியாபாரத்தைத் தடை செய்தார்கள். யிமுனாபதா’ என்பது, ஒருவர் தமது (விற்பனைத்) துணியை, வாங்குபவர் விரித்துப் பார்ப்பதற்குமுன் வாங்குபவரை நோக்கி எறிந்து(விட்டாலே அதை அவர் வாங்கியே ஆகவேண்டும் என்ற நிபந்தனையுடன்) அவரிடம் விற்பதாகும். மேலும், தொடுமுறை (முலாமசா) வியாபாரத்தையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். யிமுலாமசா’ என்பது, துணியை (விரித்துப்) பார்க்காமலேயே அதைத் தொட்டவுடன் (வணிகம் உறுதியாகிவிடும் என்ற நிபந்தனையுடன்) விற்பனை செய்வ தாகும். அத்தியாயம் :
ஹதீஸ் 2145 — Sahih al Bukhari 34:97
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نُهِيَ عَنْ لِبْسَتَيْنِ، أَنْ يَحْتَبِيَ الرَّجُلُ، فِي الثَّوْبِ الْوَاحِدِ، ثُمَّ يَرْفَعَهُ عَلَى مَنْكِبِهِ، وَعَنْ بَيْعَتَيْنِ اللِّمَاسِ وَالنِّبَاذِ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களால்) ஆடை அணியும் இரு முறை களுக்குத் தடை விதிக்கப்பட்டது: ஒரே துணியை ஒருவர் உடலில் சுற்றிக்கொண்டு, அத(ன் ஒரு மூலைத)னை (ஒரு) தோளில் போட்டு(க்கொண்டு மற்றொரு தோளை திறந்த நிலையில் விட்டு)விடுவது. (மற்றொன்று: ஒரே துணியைப் போர்த்திக் கொண்டு மர்ம உறுப்பு தெரியுமாறு குத்துக்காலிட்டு அமர்வது). மேலும், தொடுமுறை வணிகம் (முலாமசா), எறிமுறை வணிகம் (முனாபதா) ஆகிய இரு வணிகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 2146 — Sahih al Bukhari 34:98
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، وَعَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடுமுறை வணிகம் (முலாமசா), எறிமுறை வணிகம் (முனாபதா) ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :