حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ، وَعَلَيْهِ دَيْنٌ فَاسْتَعَنْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى غُرَمَائِهِ أَنْ يَضَعُوا مِنْ دَيْنِهِ، فَطَلَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهِمْ، فَلَمْ يَفْعَلُوا، فَقَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم " اذْهَبْ فَصَنِّفْ تَمْرَكَ أَصْنَافًا، الْعَجْوَةَ عَلَى حِدَةٍ، وَعَذْقَ زَيْدٍ عَلَى حِدَةٍ، ثُمَّ أَرْسِلْ إِلَىَّ ". فَفَعَلْتُ، ثُمَّ أَرْسَلْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَلَسَ عَلَى أَعْلاَهُ، أَوْ فِي وَسَطِهِ ثُمَّ قَالَ " كِلْ لِلْقَوْمِ ". فَكِلْتُهُمْ حَتَّى أَوْفَيْتُهُمُ الَّذِي لَهُمْ، وَبَقِيَ تَمْرِي، كَأَنَّهُ لَمْ يَنْقُصْ مِنْهُ شَىْءٌ. وَقَالَ فِرَاسٌ عَنِ الشَّعْبِيِّ حَدَّثَنِي جَابِرٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّاهُ، وَقَالَ هِشَامٌ عَنْ وَهْبٍ عَنْ جَابِرٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " جُذَّ لَهُ فَأَوْفِ لَهُ ".
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்கள் தம்மீது கடன் உள்ள நிலையில் இறந்துவிட்டார்கள்; அவருக்குக் கடன் கொடுத்தவர்கள், அவரது கடனில் சிறிது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்களின் உதவியை நான் நாடினேன். அவ்வாறே, நபி (ஸல்) அவர்களும் (கடனைத் தள்ளுபடி செய்யும்படி) அவர்களிடம் கோரினார்கள். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீர் சென்று உமது பேரீச்சம் பழத்தில் ‘அஜ்வா’ எனும் (உயர்) ரகத்தைத் தனியாகவும் யிஇப்னு ஸைத்’ எனும் ரகத்தைத் தனியாகவும் ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாகவும் வகைப்படுத்துவீராக! பிறகு என்னிடம் ஆளனுப்புவீராக!” என்றார்கள். அவ்வாறே நான் செய்து அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப் பினேன். அவர்கள் வந்து அதன் மேற் புறத்திலோ நடுப்புறத்திலோ அமர்ந்தார்கள். பிறகு என்னிடம் ‘‘(கடன் கொடுத்த) இக்கூட்டத்தாருக்கு அளந்து கொடுப்பீராக!” என்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை முழுமையாக நான் அளந்து கொடுத்தேன். எனது பேரீச்சம் பழத்தில் எதுவும் குறையாததைப் போன்று அப்படியே எஞ்சியிருந்தது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஃபிராஸ் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அவர்களுக்கு (முழுமை யாக) கடனை அடைக்கும்வரை அளந்து கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘கடன் கொடுத்தவருக்காக (பேரீச்சம் பாளையைத்) தனியாகப் பிரித்து, முழுமையாகக் கொடுத்துவிடு” என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2128 — Sahih al Bukhari 34:80
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كِيلُوا طَعَامَكُمْ يُبَارَكْ لَكُمْ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் உணவு(ப் பொருட்)களை அளந்துகொள்ளுங்கள்; உங்களுக்கு வளம் (பரக்கத்) வழங்கப்படும்.39 இதை மிக்தாம் பின் மஅதீகரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2129 — Sahih al Bukhari 34:81
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ الأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " أَنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَدَعَا لَهَا، وَحَرَّمْتُ الْمَدِينَةَ كَمَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ، وَدَعَوْتُ لَهَا فِي مُدِّهَا وَصَاعِهَا، مِثْلَ مَا دَعَا إِبْرَاهِيمُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ لِمَكَّةَ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா வைப் புனித நகரமாக அறிவித்து, அதற் காகப் பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக அறிவிக்கிறேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காகப் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவிற்காக அதன் (அளவை களான) ஸாஉ, யிமுத்’ ஆகியவற்றில் (வளம் ஏற்பட) பிரார்த்தித்தேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2130 — Sahih al Bukhari 34:82
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ، وَبَارِكْ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ ". يَعْنِي أَهْلَ الْمَدِينَةِ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவா! அவர்களின் லிஅதாவது மதீனாவாசிகளின்லி முகத்தலளவையில் நீ வளம் (பரக்கத்) வழங்குவாயாக! (குறிப்பாக) அவர்களது ஸாஉ, யிமுத்’ ஆகியவற்றில் நீ வளத்தை வழங்குவாயாக! இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2131 — Sahih al Bukhari 34:83
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ الَّذِينَ يَشْتَرُونَ الطَّعَامَ مُجَازَفَةً يُضْرَبُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعُوهُ حَتَّى يُئْوُوهُ إِلَى رِحَالِهِمْ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் மக்கள் குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தபோது, அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டதை நான் பார்த்துள்ளேன். அத்தியாயம் :
ஹதீஸ் 2132 — Sahih al Bukhari 34:84
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَبِيعَ الرَّجُلُ طَعَامًا حَتَّى يَسْتَوْفِيَهُ. قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ كَيْفَ ذَاكَ قَالَ ذَاكَ دَرَاهِمُ بِدَرَاهِمَ وَالطَّعَامُ مُرْجَأٌ. قَالَ أَبُو عَبْد اللَّهِ مُرْجَئُونَ مُؤَخَّرُونَ
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘அது எவ்வாறு?” என்று நான் கேட் டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘உணவுப் பொருள் (அதை வாங்கியவரின் கைக்குப்) போய்ச்சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.42 அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இங்கு மூலத்தில் யிவந்து சேராதது’ என்பதைக் குறிக்க யிமுர்ஜஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குர்ஆனில் இதன் பன்மையான) யிமுர்ஜஊ” (முர்ஜவ்ன) எனும் சொல் (9:106) ஆளப்பட்டுள்ளது. இதற்கு, யிதாமதத்தில் (காத்திருப்பில்) வைக்கப்பட்டவர்கள்’ என்பது பொருளாகும். அத்தியாயம் :
ஹதீஸ் 2133 — Sahih al Bukhari 34:85
حَدَّثَنِي أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்குமுன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள், ‘‘(என்னிடமுள்ள தங்கத்திற்குப் பதிலாக) யாரிடமாவது வெள்ளிக் காசுகள் உள்ளனவா?” என்று கேட்டார்கள். அப்போது தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘என்னிடம் இருக்கிறது; ஆனால், (நாணய மதிப்பைக் கணிக்க) யிஃகாபா’ எனும் இடத்திலிருந்து எம் காசாளர் வந்தபிறகே தருவேன்” என்றார்கள். அப்போது (அங்கிருந்த) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தெரிவித்தார்கள்: உடனுக்குடன் அல்லாமல் (தவணையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல், தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல், பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல், வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்.43 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை நாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் கேட்டு ம”மிட்டுள் ளோம்; அதில் கூடுதல் தகவல் இல்லை (எனவே, ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அம்ர் பின் தீனார் அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் சரியானதுதான்). அத்தியாயம் :
ஹதீஸ் 2135 — Sahih al Bukhari 34:87
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الَّذِي حَفِظْنَاهُ مِنْ عَمْرِو بْنِ دِينَارٍ سَمِعَ طَاوُسًا، يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ أَمَّا الَّذِي نَهَى عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَهْوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ حَتَّى يُقْبَضَ. قَالَ ابْنُ عَبَّاسٍ وَلاَ أَحْسِبُ كُلَّ شَىْءٍ إِلاَّ مِثْلَهُ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தடுத்தது, உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்குமுன் அதை (மற்றவருக்கு) விற்பதைத்தான். ஆனால், அதைப் போன்றதுதான் மற்ற எல்லாப் பொருட்களும் என்றே நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :
ஹதீஸ் 2136 — Sahih al Bukhari 34:88
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ ". زَادَ إِسْمَاعِيلُ " مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது முழுமையாக அவரது கைக்கு வந்து சேர்வதற்குமுன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்! இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அதை அவர் கைப்பற்றாத வரை’ என்று இடம்பெற்றுள்ளது.44 அத்தியாயம் :