Qurani·قرآني
தமிழ்

விற்பனை மற்றும் வணிகம் (பைஉ)

192 ஹதீஸ்கள் · #2047–2238

ஹதீஸ் 2117 — Sahih al Bukhari 34:70
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، ذَكَرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ يُخْدَعُ فِي الْبُيُوعِ، فَقَالَ ‏ "‏ إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், தாம் வணிகத்தின்போது ஏமாற்றப்படு வதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் வணிகம் செய்யும்போது ஏமாற்றுதல் கூடாது என்று (முன்பே) கூறிவிடுவீராக!” என்றார்கள்.32 அத்தியாயம் :
ஹதீஸ் 2118 — Sahih al Bukhari 34:71
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ حَدَّثَتْنِي عَائِشَةُ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ، فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ‏"‏‏.‏ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ، وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ‏.‏ قَالَ ‏"‏ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ، ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; யிபைதாஉ’ எனும் இடத்தில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை (உயிருடன்) பூமிக்குள் புதையுண்டுபோவார்கள்” என்று கூறினார்கள். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை எவ்வாறு புதை யுண்டுபோவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள்; கடைவீதி களும் இருக்குமே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை (எல்லாரும்) புதையுண்டுபோகத்தான் செய்வார்கள்; எனினும், (அதற்குப்) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2119 — Sahih al Bukhari 34:72
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ صَلاَةُ أَحَدِكُمْ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي سُوقِهِ وَبَيْتِهِ بِضْعًا وَعِشْرِينَ دَرَجَةً، وَذَلِكَ بِأَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ، لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ، لاَ يَنْهَزُهُ إِلاَّ الصَّلاَةُ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَ بِهَا دَرَجَةً، أَوْ حُطَّتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، وَالْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ، مَا لَمْ يُؤْذِ فِيهِ ‏"‏‏.‏ وَقَالَ ‏"‏ أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا كَانَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது, அவர் தமது கடைத்தெருவிலோ வீட்டிலோ (தனியாகத்) தொழுவதைவிட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும். ஏனெனில், அவர் அங்கத் தூய்மை செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகிறார். தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் நாடவில்லை. தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளி வாசலுக்கு) எழுந்து செல்லவைக்கவில்லை. இவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பதவி அவருக்கு உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு தவறு அவரைவிட்டு நீக்கப்படுகிறது. மேலும், உங்களில் ஒருவர், தாம் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும்வரை வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கின்றனர். அங்கே, அவருக்கு அங்கத் தூய்மை கலையாமல் இருக்கும்வரை, (பிறருக்குத்) தொல்லை தரும் எதையும் அவர் செய்யா மலிருக்கும்வரை, ‘‘இறைவா! இவருக்குக் கருணை செய்வாயாக! இவருக்கு அருள் புரிவாயாக!” என்று வானவர்கள் பிரார்த்திக் கிறார்கள். உங்களில் ஒருவர் தொழுகைக் காகக் காத்திருக்கும்வரை அவர் தொழுகை யிலேயே இருக்கிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2120 — Sahih al Bukhari 34:73
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي السُّوقِ، فَقَالَ رَجُلٌ يَا أَبَا الْقَاسِمِ‏.‏ فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّمَا دَعَوْتُ هَذَا‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي ‏"‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ‘‘அபுல்காசிமே! (காஸிமின் தந்தையே!)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக்காட்டி) ‘‘நான் இவரைத்தான் அழைத்தேன். (தங்களை அழைக்கவில்லை)” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனது (முஹம்மத் எனும்) பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்!” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2121 — Sahih al Bukhari 34:74
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ دَعَا رَجُلٌ بِالْبَقِيعِ يَا أَبَا الْقَاسِمِ‏.‏ فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ لَمْ أَعْنِكَ‏.‏ قَالَ ‏ "‏ سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي ‏"‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘அல்பகீஉ’ பொது மையவாடியில் ‘அபுல்காசிமே!› என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது அவர், ‘‘உங்களை எண்ணி நான் அழைக்கவில்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள்; எனது (‘அபுல்காசிம்’ எனும்) குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2122 — Sahih al Bukhari 34:75
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ الدَّوْسِيِّ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي طَائِفَةِ النَّهَارِ لاَ يُكَلِّمُنِي وَلاَ أُكَلِّمُهُ حَتَّى أَتَى سُوقَ بَنِي قَيْنُقَاعَ، فَجَلَسَ بِفِنَاءِ بَيْتِ فَاطِمَةَ فَقَالَ ‏"‏ أَثَمَّ لُكَعُ أَثَمَّ لُكَعُ ‏"‏‏.‏ فَحَبَسَتْهُ شَيْئًا فَظَنَنْتُ أَنَّهَا تُلْبِسُهُ سِخَابًا أَوْ تُغَسِّلُهُ، فَجَاءَ يَشْتَدُّ حَتَّى عَانَقَهُ وَقَبَّلَهُ، وَقَالَ ‏"‏ اللَّهُمَّ أَحْبِبْهُ وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ ‏"‏‏.‏ قَالَ سُفْيَانُ قَالَ عُبَيْدُ اللَّهِ أَخْبَرَنِي أَنَّهُ رَأَى نَافِعَ بْنَ جُبَيْرٍ أَوْتَرَ بِرَكْعَةٍ‏.‏
அபூஹுரைரா அத்தவ்சி (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் வேளையில் புறப்பட்டார்கள். (நானும் சென்றேன்.) அவர்கள் என்னுடன் பேசவில்லை; நானும் அவர்களுடன் பேச வில்லை. யிபனூ கைனுகா’ கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அமர்ந் தார்கள். ‘‘இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா? இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கிறானா?” என்று (பேரர் ஹசன் (ரலி) அவர்கள் குறித்துக்) கேட்டார் கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக்கொண்டிருக்கிறார்; அல்லது மகனை நீராட்டிக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹசன் (ரலி) அவர்கள்) ஓடிவந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். ‘‘இறைவா! இவரை நீ நேசிப்பாயாக! இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக!” என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: (இதை எனக்கு அறிவித்த) நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், ஒரு ரக்அத் யிவித்ர்’ தொழுததை நான் பார்த்தேன். (இதிலிருந்து அவரை இவர் சந்தித்துள்ளார் என அறியலாம்.) அத்தியாயம் :
ஹதீஸ் 2123 — Sahih al Bukhari #2123
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى، عَنْ نَافِعٍ، حَدَّثَنَا ابْنُ عُمَرَ، أَنَّهُمْ كَانُوا يَشْتَرُونَ الطَّعَامَ مِنَ الرُّكْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَبْعَثُ عَلَيْهِمْ مَنْ يَمْنَعُهُمْ أَنْ يَبِيعُوهُ حَيْثُ اشْتَرَوْهُ، حَتَّى يَنْقُلُوهُ حَيْثُ يُبَاعُ الطَّعَامُ‏.‏ قَالَ وَحَدَّثَنَا ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُبَاعَ الطَّعَامُ إِذَا اشْتَرَاهُ حَتَّى يَسْتَوْفِيَهُ‏.‏
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى، عَنْ نَافِعٍ، حَدَّثَنَا ابْنُ عُمَرَ، أَنَّهُمْ كَانُوا يَشْتَرُونَ الطَّعَامَ مِنَ الرُّكْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَبْعَثُ عَلَيْهِمْ مَنْ يَمْنَعُهُمْ أَنْ يَبِيعُوهُ حَيْثُ اشْتَرَوْهُ، حَتَّى يَنْقُلُوهُ حَيْثُ يُبَاعُ الطَّعَامُ‏.‏ قَالَ وَحَدَّثَنَا ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُبَاعَ الطَّعَامُ إِذَا اشْتَرَاهُ حَتَّى يَسْتَوْفِيَهُ‏.‏
ஹதீஸ் 2124 — Sahih al Bukhari 34:76
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى، عَنْ نَافِعٍ، حَدَّثَنَا ابْنُ عُمَرَ، أَنَّهُمْ كَانُوا يَشْتَرُونَ الطَّعَامَ مِنَ الرُّكْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَبْعَثُ عَلَيْهِمْ مَنْ يَمْنَعُهُمْ أَنْ يَبِيعُوهُ حَيْثُ اشْتَرَوْهُ، حَتَّى يَنْقُلُوهُ حَيْثُ يُبَاعُ الطَّعَامُ‏.‏ قَالَ وَحَدَّثَنَا ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُبَاعَ الطَّعَامُ إِذَا اشْتَرَاهُ حَتَّى يَسْتَوْفِيَهُ‏.‏
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى، عَنْ نَافِعٍ، حَدَّثَنَا ابْنُ عُمَرَ، أَنَّهُمْ كَانُوا يَشْتَرُونَ الطَّعَامَ مِنَ الرُّكْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَبْعَثُ عَلَيْهِمْ مَنْ يَمْنَعُهُمْ أَنْ يَبِيعُوهُ حَيْثُ اشْتَرَوْهُ، حَتَّى يَنْقُلُوهُ حَيْثُ يُبَاعُ الطَّعَامُ‏.‏ قَالَ وَحَدَّثَنَا ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُبَاعَ الطَّعَامُ إِذَا اشْتَرَاهُ حَتَّى يَسْتَوْفِيَهُ‏.‏
ஹதீஸ் 2125 — Sahih al Bukhari 34:77
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلٌ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، قَالَ لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ قُلْتُ أَخْبِرْنِي عَنْ صِفَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي التَّوْرَاةِ‏.‏ قَالَ أَجَلْ، وَاللَّهِ إِنَّهُ لَمَوْصُوفٌ فِي التَّوْرَاةِ بِبَعْضِ صِفَتِهِ فِي الْقُرْآنِ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا، وَحِرْزًا لِلأُمِّيِّينَ، أَنْتَ عَبْدِي وَرَسُولِي سَمَّيْتُكَ الْمُتَوَكِّلَ، لَيْسَ بِفَظٍّ وَلاَ غَلِيظٍ وَلاَ سَخَّابٍ فِي الأَسْوَاقِ، وَلاَ يَدْفَعُ بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَغْفِرُ، وَلَنْ يَقْبِضَهُ اللَّهُ حَتَّى يُقِيمَ بِهِ الْمِلَّةَ الْعَوْجَاءَ بِأَنْ يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ وَيَفْتَحُ بِهَا أَعْيُنًا عُمْيًا، وَآذَانًا صُمًّا، وَقُلُوبًا غُلْفًا‏.‏ تَابَعَهُ عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ عَنْ هِلاَلٍ‏.‏ وَقَالَ سَعِيدٌ عَنْ هِلاَلٍ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ سَلاَمٍ‏.‏ غُلْفٌ كُلُّ شَىْءٍ فِي غِلاَفٍ، سَيْفٌ أَغْلَفُ، وَقَوْسٌ غَلْفَاءُ، وَرَجُلٌ أَغْلَفُ إِذَا لَمْ يَكُنْ مَخْتُونًا‏.‏
அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, ‘‘தவ்ராத் வேதத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டி ருக்கும் வர்ணனை பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்றேன். அவர்கள், சரி என்று சொல்லிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் கூறப்பட்டுள்ள அவர்களின் சில பண்புகளாலேயே யிதவ்ராத்’திலும் அவர்கள் வர்ணிக்கப்பட்டுள்ளார்கள்: நபியே! உம்மை ஒரு சாட்சியாகவும் நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் எழுதப் படிக்கத் தெரியா பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீர் என் அடிமையும் என் தூதரும் ஆவீர். ‘அல்லாஹ் வையே சார்ந்திருப்பவர்’ (அல்முத்தவக்கில்) என உமக்கு நான் பெயரிட் டுள்ளேன். (என் தூதரான) அவர் கடுகடுப்பான வரோ கல்நெஞ்சம் படைத்தவரோ சந்தைகளில் கூச்சலிடுபவரோ அல்லர். தீமையை தீமையைக் கொண்டு அகற்ற (முனைய)மாட்டார். மாறாக, மன்னித்து, விட்டுவிடுவார். வளைந்த மார்க்கத்தை அவர் மூலம் நிமிர்த்தாத வரை அல்லாஹ் அவ(ரது உயி)ரைக் கைப்பற்றமாட்டான். மக்கள் ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும் செவிட்டுக் காதுகளும் மூடப்பட்ட உள்ளங் களும் திறக்கப்படும்.37 இந்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களிடமிருந்தும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (யிமூடப்பட்ட’ உள்ளங்கள் என்பதைக் குறிக்க மூலத்தில்) யிஃகுல்ஃப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு, யிஉறையிலுள்ள பொருட்கள்’ என்பது பொருள். உறை’ லுள்ள வாள், உறையிலுள்ள வில், விருத்த சேதனம் செய்யப்படாத மனிதன் ஆகிய பொருள்களைக் குறிக்க இச்சொல் (அஃக்லஃப்) ஆளப்படுகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 2126 — Sahih al Bukhari 34:78
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِيعُهُ حَتَّى يَسْتَوْفِيَهُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு (முழுமையாக) வந்து சேர்வதற்குமுன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்! இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.