حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى، قَالَ سَمِعْتُ نَافِعًا، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْمُتَبَايِعَيْنِ بِالْخِيَارِ فِي بَيْعِهِمَا، مَا لَمْ يَتَفَرَّقَا، أَوْ يَكُونُ الْبَيْعُ خِيَارًا ". قَالَ نَافِعٌ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا اشْتَرَى شَيْئًا يُعْجِبُهُ فَارَقَ صَاحِبَهُ.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை தமது வியாபாரத்தில் (ஒரு முடிவு எடுக்க) உரிமை பெற்றிருக்கிறார்கள்; (முன்நிபந் தனை) உரிமை அளிக்கப்பட்ட வியாபார மாக இருந்தால் தவிர! (அப்போது முன் நிபந்தனையின்படி நடந்துகொள்ளலாம்.) இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘‘இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு விருப்பமான ஒரு பொருளை விலைக்கு வாங்கி(ட எண்ணி)னால், (அதை உறுதி செய்யும் வகையில்) விற்றவரைப் பிரி(ந்து சிறிது தூரம் நடந்துவிட்டு வரு)வார்கள்” என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறி யுள்ளார்கள்.28 அத்தியாயம் :
ஹதீஸ் 2108 — Sahih al Bukhari 34:61
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَفْتَرِقَا ". وَزَادَ أَحْمَدُ حَدَّثَنَا بَهْزٌ، قَالَ قَالَ هَمَّامٌ فَذَكَرْتُ ذَلِكَ لأَبِي التَّيَّاحِ فَقَالَ كُنْتُ مَعَ أَبِي الْخَلِيلِ لَمَّا حَدَّثَهُ عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ بِهَذَا الْحَدِيثِ.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ள) உரிமை பெறுகிறார்கள். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2109 — Sahih al Bukhari 34:62
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، أَوْ يَقُولُ أَحَدُهُمَا لِصَاحِبِهِ اخْتَرْ ". وَرُبَّمَا قَالَ أَوْ يَكُونُ بَيْعَ خِيَارٍ.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை, (வியாபாரத்தை முறிக்க) உரிமை பெறுகிறார்கள்; ஒருவர் மற்றவரிடம் ‘(வணிகத்தைத் தொடரவோ முறிக்கவோ) உமக்கு உரிமை உண்டு என்று கூறியிருந்தால் தவிர’ அல்லது ‘அது (முன் நிபந்தனை) உரிமை அளிக்கப்பட்ட வியாபாரமாக இருந்தால் தவிர!›. அத்தியாயம் :
ஹதீஸ் 2110 — Sahih al Bukhari 34:63
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ قَتَادَةُ أَخْبَرَنِي عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، قَالَ سَمِعْتُ حَكِيمَ بْنَ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை (முறித்துக் கொள்ளும்) உரிமை பெற்றிருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை)த் தெளிவுபடுத்தினால், அவர் களின் வணிகத்தில் அவர்களுக்கு வளம் (பரக்கத்) வழங்கப்படும். அவ்விருவரும் பொய் கூறி(க் குறையை) மறைத்தால் அவர்களுக்கு வணிகத்தின் வளம் அகற்றப்படும். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2111 — Sahih al Bukhari 34:64
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْمُتَبَايِعَانِ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ عَلَى صَاحِبِهِ مَا لَمْ يَتَفَرَّقَا، إِلاَّ بَيْعَ الْخِيَارِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்நிபந்தனை) உரிமை வழங்கப் பட்ட வியாபாரத்தைத் தவிர மற்ற வியா பாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாத வரை ஒவ்வொருவரும் முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2112 — Sahih al Bukhari 34:65
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِذَا تَبَايَعَ الرَّجُلاَنِ فَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ، مَا لَمْ يَتَفَرَّقَا، وَكَانَا جَمِيعًا، أَوْ يُخَيِّرُ أَحَدُهُمَا الآخَرَ فَتَبَايَعَا عَلَى ذَلِكَ، فَقَدْ وَجَبَ الْبَيْعُ، وَإِنْ تَفَرَّقَا بَعْدَ أَنْ يَتَبَايَعَا، وَلَمْ يَتْرُكْ وَاحِدٌ مِنْهُمَا الْبَيْعَ، فَقَدْ وَجَبَ الْبَيْعُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் வணிகம் செய்தால், அவ்விருவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாமல் சேர்ந்து இருக்கும்வரை (பேரத்தை) முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளார்கள். ஒருவர் மற்றவருக்கு முறித்துக்கொள்ளும் உரிமையை வழங்கியும் அதை அவர் பயன்படுத்தாமல் இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டால் வணிகம் ஏற்பட்டுவிடும்; இருவரும் ஒப்பந்தத்தை முடித்தபின் வியாபாரத்தை முறிக்காமல் பிரிந்துவிட்டால் அப்போதும் வணிகம் ஏற்பட்டுவிடும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2113 — Sahih al Bukhari 34:66
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كُلُّ بَيِّعَيْنِ لاَ بَيْعَ بَيْنَهُمَا حَتَّى يَتَفَرَّقَا، إِلاَّ بَيْعَ الْخِيَارِ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்கக்கூடியவரும் வாங்கக்கூடியவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை அவர்களுக்கிடையே வணிகம் ஏற்படுவதில்லை; (முன்நிபந்தனை) உரிமை வழங்கப்பட்ட வியாபாரமாக இருந்தால் தவிர! இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2114 — Sahih al Bukhari 34:67
حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا " ـ قَالَ هَمَّامٌ وَجَدْتُ فِي كِتَابِي يَخْتَارُ ثَلاَثَ مِرَارٍ ـ "فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا فَعَسَى أَنْ يَرْبَحَا رِبْحًا، وَيُمْحَقَا بَرَكَةَ بَيْعِهِمَا ". قَالَ وَحَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ، يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாத வரை முறித்துக்கொள்ளும் உரிமை பெறுகின்றனர். விற்பவரும் வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வணிகத்தில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். அவர்கள் பொய் சொல்லி (குறைகளை) மறைத்தால் அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம். ஆனாலும், வணிகத்தின் வளம் (பரக்கத்) அழிக்கப் பட்டுவிடும். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘‘நான் பதிவு செய்த ஏட்டில், இவ்வாறு மூன்று முறை உரிமையைப் பயன்படுத்தலாம் என்று உள்ளது என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2115 — Sahih al Bukhari 34:68
وَقَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَكُنْتُ عَلَى بَكْرٍ صَعْبٍ لِعُمَرَ، فَكَانَ يَغْلِبُنِي فَيَتَقَدَّمُ أَمَامَ الْقَوْمِ، فَيَزْجُرُهُ عُمَرُ وَيَرُدُّهُ، ثُمَّ يَتَقَدَّمُ فَيَزْجُرُهُ عُمَرُ وَيَرُدُّهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعُمَرَ " بِعْنِيهِ ". قَالَ هُوَ لَكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ " بِعْنِيهِ ". فَبَاعَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ تَصْنَعُ بِهِ مَا شِئْتَ ".
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நான் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகத்தின் மீது (பயணம் செய்துகொண்டு) இருந்தேன். அது என்னை மீறிக் கூட்டத்தாருக்கு முன்னால் சென்றது. உமர் (ரலி) அவர்கள் அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள்; மீண்டும் அது முன்னே சென்றது. அப்போதும் உமர் (ரலி) அவர்கள் அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘இதை எனக்கு விற்றுவிடுவீராக!” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே இது உங்களுக்கு உரியது” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு இதை விலைக்குத் தருவீராக!” என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதை விற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (என்னி டம்), ‘‘அப்துல்லாஹ் பின் உமரே! இது உமக்குரியது; நீர் விரும்பியவாறு இதைப் பயன்படுத்திக்கொள்ளும்!” என்றார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் யிவாதில் குரா’ எனும் இடத்தில் இருந்த எனது சொத்தை கைபரில் அவர்களுக்கு இருந்த ஒரு சொத்திற்குப் பகரமாக விற்றேன். நாங்கள் வணிகம் பேசி முடித்ததும் உடனடியாக அவர்களது வீட்டிலிருந்து வெளியேறி, வந்தவழியே திரும்பி விட்டேன். அவர்கள் அந்த வியாபாரத்தை முறித்துவிடுவார்களோ என்ற அச்சமே அதற்குக் காரணமாகும். ஏனெனில், ‘‘(பேரம் நடந்த இடத்தை விட்டுப்) பிரியாத வரை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் (வியாபாரத்தை) முறித்துக்கொள்ளும் உரிமை உள்ளது” என்பது நபிவழியாக உள்ளது. நான் வாங்குவதும் அவர்கள் விற்பதும் முடிவானதும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டதாகக் கருதினேன்; ஏனெனில், மதீனாவிலிருந்து மூன்று இரவுகள் பயணத் தொலைவுள்ள, ஸமூத் குலத்தார் வசித்த பகுதிக்கு அவர்களை நான் தள்ளிவிட்டேன்; அவர்கள் (அங்கிருந்து) மூன்று இரவுகள் பயணத் தொலைவுள்ள மதீனாவுக்கு என்னைத் தள்ளினார்கள்.31 அத்தியாயம் :