حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிமுஹாகலா, முஸாபனா’ ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2188 — Sahih al Bukhari 34:135
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنهم ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَرْخَصَ لِصَاحِبِ الْعَرِيَّةِ أَنْ يَبِيعَهَا بِخَرْصِهَا.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதை, இரவல் மரத்தை (அரிய்யா) பெற்றவருக்கு மட்டும் அனுமதித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2189 — Sahih al Bukhari 34:136
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، وَأَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَطِيبَ، وَلاَ يُبَاعُ شَىْءٌ مِنْهُ إِلاَّ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ إِلاَّ الْعَرَايَا.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மரத்திலுள்ள) உலராத கனிகள் நல்ல நிலையை அடையாத வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ‘‘அவற்றில் எதையும் பொற்காசு, வெள்ளிக் காசு ஆகியவற்றுக்காகத் தவிர விற்கக் கூடாது; இரவல் மரங்களை (அராயா) தவிர” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2190 — Sahih al Bukhari 34:137
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ مَالِكًا، وَسَأَلَهُ، عُبَيْدُ اللَّهِ بْنُ الرَّبِيعِ أَحَدَّثَكَ دَاوُدُ عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ فِي بَيْعِ الْعَرَايَا فِي خَمْسَةِ أَوْسُقٍ أَوْ دُونَ خَمْسَةِ أَوْسُقٍ قَالَ نَعَمْ.
அப்துல்லாஹ் பின் அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(இப்னு அபீஅஹ்மத் அவர் களின் முன்னால் அடிமையான) அபூசுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து தாவூத் பின் அல்ஹுஸைன் (ரஹ்) அவர்கள், பின்வரும் நபிமொழியை அறிவித்தார்களா?” என்று உபைதுல்லாஹ் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்கள் கேட்டார் கள். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள் யிஆம்’ என்று பதிலளித்தார்கள். (அந்த ஹதீஸாவது:) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், ‘அராயா’ வணிகத்தில் (மரத்திலுள்ள உலராத பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம்பழங்களுக்குப் பதிலாக) யிஐந்து யிவஸ்க்’கள்’, அல்லது யிஐந்து யிவஸ்க்’களுக்குக் குறைவாக’ (விற்பனை செய்துகொள்ள) அனுமதி அளித்தார்கள்.69 அத்தியாயம் :
சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த (கொய்யப்பட்ட) பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக, (மரத்திலுள்ள) உலராத கனிகளை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; இரவல் மரங்களில் (‘அராயா’வில் மட்டும்) அதற்கு அனுமதி வழங்கினார்கள். (ஏழைகளுக்கு இரவலாக வழங்கப்பட்ட மரங்களில் உள்ள) அக் கனிகள் குத்துமதிப்பாகக் கணக்கிடப்பட்டு (தோட்டக்காரர்களுக்கு) விற்கப்படும். (அவற்றை வாங்கும்) தோட்டக்காரர்கள் செங்காய்களாக உண்பார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை கூறினார்கள்: ஆனால், இரவல் மரங்களில் (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார் கள். (ஏழைகளின் இரவல் மரங்களில் உள்ள) அக்கனிகளைத் தோட்டக்காரர்கள் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு (உலர்ந்த பழங்களுக்குப் பதிலாக) விற்றுவிட்டு, அந்தச் செங்காய்களை உண்பார்கள். ‘‘இந்த அறிவிப்பும் முந்தைய அறிவிப்பும் (பொருளில்) ஒன்றுதான்” என்று அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சிறுவனாக இருந்தபோது, யஹ்யா பின் சயீத் அல்அன்சாரீ (ரஹ்) அவர்களிடம், ‘‘இரவல் (அராயா) மரங்களுக்கு (குத்துமதிப்பு மற்றும் செங்காய்களாக உண்பது தொடர்பான எந்த நிபந்தனையுமின்றி) நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியதாக மக்காவாசிகள் கூறுகிறார்களே!” என்று கேட்டேன். அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள், ‘‘மக்காவாசிகளுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார்கள். நான், ‘‘மக்காவாசிகள் ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள்” என்று கூறினேன். இதைக் கேட்டு யஹ்யா மௌனமானார். நான் ஜாபிர் (ரலி) அவர்களைக் குறிப்பிட்டதற்குக் காரணம், அவர் மதீனாவாசி ஆவார் என்பதேயாகும்.70 ‘‘பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை மரத்திலுள்ள கனிகளை விற்பதற்கான தடை இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லையா?” என்று சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘‘(அது உண்மைதான்; என்றாலும் இந்த அறிவிப்பில்) இடம்பெறவில்லை” என்று அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2192 — Sahih al Bukhari 34:139
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنهم ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ فِي الْعَرَايَا أَنْ تُبَاعَ بِخَرْصِهَا كَيْلاً. قَالَ مُوسَى بْنُ عُقْبَةَ وَالْعَرَايَا نَخَلاَتٌ مَعْلُومَاتٌ تَأْتِيهَا فَتَشْتَرِيهَا.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரவல் மரங்களில் (அராயா) உள்ள பழங்களைக் குத்துமதிப்பாகக் கணித்து (உலர்ந்த கனிகளுக்குப் பதில்) முகத்தலள வையில் விற்பதற்கு அனுமதி அளித்தார் கள். இதன் அறிவிப்பாளர்களில ஒருவரான மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: அராயா என்பது குறிப்பிட்ட சில பேரீச்ச மரங்களாகும். அங்கு வந்து (உலர்ந்த பழங்களைக் கொடுத்துவிட்டு அதன்) கனிகளை யாரும் வாங்கிக் கொள்ளலாம். அத்தியாயம் :
ஹதீஸ் 2193 — Sahih al Bukhari 34:140
وَقَالَ اللَّيْثُ عَنْ أَبِي الزِّنَادِ، كَانَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ يُحَدِّثُ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ الأَنْصَارِيِّ، مِنْ بَنِي حَارِثَةَ أَنَّهُ حَدَّثَهُ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّاسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَتَبَايَعُونَ الثِّمَارَ، فَإِذَا جَدَّ النَّاسُ وَحَضَرَ تَقَاضِيهِمْ قَالَ الْمُبْتَاعُ إِنَّهُ أَصَابَ الثَّمَرَ الدُّمَانُ أَصَابَهُ مُرَاضٌ أَصَابَهُ قُشَامٌ ـ عَاهَاتٌ يَحْتَجُّونَ بِهَا ـ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا كَثُرَتْ عِنْدَهُ الْخُصُومَةُ فِي ذَلِكَ " فَإِمَّا لاَ فَلاَ يَتَبَايَعُوا حَتَّى يَبْدُوَ صَلاَحُ الثَّمَرِ ". كَالْمَشُورَةِ يُشِيرُ بِهَا لِكَثْرَةِ خُصُومَتِهِمْ. وَأَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ لَمْ يَكُنْ يَبِيعُ ثِمَارَ أَرْضِهِ حَتَّى تَطْلُعَ الثُّرَيَّا فَيَتَبَيَّنَ الأَصْفَرُ مِنَ الأَحْمَرِ. قَالَ أَبُو عَبْد اللَّهِ رَوَاهُ عَلِيُّ بْنُ بَحْرٍ حَدَّثَنَا حَكَّامٌ حَدَّثَنَا عَنْبَسَةُ عَنْ زَكَرِيَّاءَ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ عُرْوَةَ عَنْ سَهْلٍ عَنْ زَيْدٍ
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் மக்கள் (மரத்திலுள்ள) கனிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மக்கள் பழங்களைப் பறித்து வாங்குபவரிடம் ஒப்படைக்கும் நேரம்வந்ததும் வாங்கியவர், இது அழுகி விட்டது; இதற்கு நோய் ஏற்பட்டிருக்கிறது; இது பிஞ்சில் பழுத்திருக்கிறது; இப்படி பல குறைகளைக் கூறிச் சச்சரவு செய்வர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இத்தகைய புகார்கள் அதிமாக வந்தபோது, ‘‘(இந்த வணிக முறையை) நீங்கள் கைவிடமாட்டீர்கள் என்றால், மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (அறவே) விற்காதீர்கள்” என்று ஆலோசனைபோல் கூறினார்கள். அவர்களின் சர்ச்சை அதிகமாகிவிட்டது என்பதை இதன் மூலம் நபியவர்கள் உணர்த்தினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், கிருத்திகா விண்மீன் (ஸுரய்யா) (தோன்றக்கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வராத வரை தமது தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்கமாட்டார்கள். அப்பருவத்தில் செங்காய் எது. பழுத் தது எது என்று அடையாளம் தெரியும் என அவர்களின் புதல்வர் காரிஜா பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இதை அலீ பின் பஹ்ர் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் மற்றொரு தொடரில் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2194 — Sahih al Bukhari 34:141
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، نَهَى الْبَائِعَ وَالْمُبْتَاعَ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள். விற்ப வர், வாங்குபவர் ஆகிய இருவருக்கும் (இவ்வாறு) தடை விதித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2195 — Sahih al Bukhari 34:142
حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ تُبَاعَ ثَمَرَةُ النَّخْلِ حَتَّى تَزْهُوَ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ يَعْنِي حَتَّى تَحْمَرَّ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாதவரை லிஅதாவது (உண்பதற்கு ஏற்றவாறு) சிவக்காத வரைலி அவற்றை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2196 — Sahih al Bukhari 34:143
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَلِيمِ بْنِ حَيَّانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَا، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُبَاعَ الثَّمَرَةُ حَتَّى تُشَقِّحَ. فَقِيلَ مَا تُشَقِّحُ قَالَ تَحْمَارُّ وَتَصْفَارُّ وَيُؤْكَلُ مِنْهَا.
சயீத் பின் மீனாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘மரத்திலுள்ள கனிகள் (நன்கு) கனியாதவரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது யிகனிதல்’ (இஷ்காஹ்) என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘சிவப்பாகவோ மஞ்சளாகவோ உண்பதற்கு ஏற்றதாகவோ மாறுவதாகும்” என விடையளித்தார்கள். அத்தியாயம் :