Qurani·قرآني
தமிழ்

விற்பனை மற்றும் வணிகம் (பைஉ)

192 ஹதீஸ்கள் · #2047–2238

ஹதீஸ் 2197 — Sahih al Bukhari 34:144
حَدَّثَنِي عَلِيُّ بْنُ الْهَيْثَمِ، حَدَّثَنَا مُعَلًّى، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، وَعَنِ النَّخْلِ حَتَّى يَزْهُوَ‏.‏ قِيلَ وَمَا يَزْهُو قَالَ يَحْمَارُّ أَوْ يَصْفَارُّ‏.‏
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள், பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்குமுன் மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை பேரீச்ச மரத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘பக்குவம் அடைவது என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், யிசிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது’ என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2198 — Sahih al Bukhari 34:145
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى تُزْهِيَ‏.‏ فَقِيلَ لَهُ وَمَا تُزْهِي قَالَ حَتَّى تَحْمَرَّ‏.‏ فَقَالَ ‏ "‏ أَرَأَيْتَ إِذَا مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ، بِمَ يَأْخُذُ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ ‏"‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை அவற்றை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘பக்குவமடைவது என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ‘அது சிவக்கும்வரை’ என்று விடையளித்தார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை தடுத்துவிட்டால், எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் பொருளை எடுத்துக்கொள்ள முடியும்?” எனக் கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2199 — Sahih al Bukhari 34:146
قَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ لَوْ أَنَّ رَجُلاً، ابْتَاعَ ثَمَرًا قَبْلَ أَنْ يَبْدُوَ صَلاَحُهُ، ثُمَّ أَصَابَتْهُ عَاهَةٌ، كَانَ مَا أَصَابَهُ عَلَى رَبِّهِ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تَتَبَايَعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، وَلاَ تَبِيعُوا الثَّمَرَ بِالتَّمْرِ ‏"‏‏.‏
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் மரத்திலுள்ள கனிகளைப் பலன் உறுதிப்படும் நிலையை அடைவ தற்குமுன் வாங்கி, அவற்றுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மரத்தின் உரிமை யாளரே அதற்குப் பொறுப்பாளி ஆவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை மரத்திலுள்ள கனிகளை விற்காதீர்கள்; (மரத்திலுள்ள) உலராத கனிகளை உலர்ந்த கனிகளுக்கு விற்காதீர்கள்” என்று கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2200 — Sahih al Bukhari 34:147
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ فِي السَّلَفِ، فَقَالَ لاَ بَأْسَ بِهِ‏.‏ ثُمَّ حَدَّثَنَا عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، فَرَهَنَهُ دِرْعَهُ‏.‏
சுலைமான் பின் மஹ்ரான் அல் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம், கடனுக்காக அடைமானம் வைப்பது குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது அவர்கள், ‘‘அது தவறாகாது” என்று சொன்னார்கள். மேலும் ‘‘நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தமது கவசத்தை அடைமானம் வைத்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் எங்களுக்கு அறிவித் தார்கள் என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2201 — Sahih al Bukhari #2201
حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَعَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَعْمَلَ رَجُلاً عَلَى خَيْبَرَ، فَجَاءَهُ بِتَمْرٍ جَنِيبٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا ‏"‏‏.‏ قَالَ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِالصَّاعَيْنِ، وَالصَّاعَيْنِ بِالثَّلاَثَةِ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لاَ تَفْعَلْ، بِعِ الْجَمْعَ بِالدَّرَاهِمِ، ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا ‏"‏‏.‏
அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை யிகைபர்’ பகுதிக்கு அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (சென்றுவிட்டு கைபரிலிருந்து) உயர்ரகப் பேரீச்சம் பழங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இப்படித்தான் (உயர் ரகமானவையாக) இருக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; அல்லாஹ்வின் தூதரே! மட்டமான பேரீச்சம்பழத்தில் இரண்டு ‘ஸாஉ’களுக்குப் பதிலாக இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ‘ஸாஉ’வையும், மட்டமான பேரீச்சம்பழத்தில் மூன்று ‘ஸாஉ’களுக்குப் பதிலாக இந்தப் பேரீச்சம்பழத்தில் இரண்டு ‘ஸாஉ’களையும் நாங்கள் வாங்குவோம்” எனக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவ்வாறு செய்யாதீர்! மட்ட மான பேரீச்சம்பழத்தை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு அந்தக் காசுகளுக்குப் பதிலாகத் தரமான பேரீச்சம்பழத்தை வாங்குவீராக!” எனக் கூறினார்கள்.72 அத்தியாயம் :
ஹதீஸ் 2202 — Sahih al Bukhari 34:148

ஹதீஸ் 2203 — Sahih al Bukhari 34:149
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ لِي إِبْرَاهِيمُ أَخْبَرَنَا هِشَامٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، يُخْبِرُ عَنْ نَافِعٍ، مَوْلَى ابْنِ عُمَرَ أَنَّ أَيُّمَا، نَخْلٍ بِيعَتْ قَدْ أُبِّرَتْ لَمْ يُذْكَرِ الثَّمَرُ، فَالثَّمَرُ لِلَّذِي أَبَّرَهَا، وَكَذَلِكَ الْعَبْدُ وَالْحَرْثُ‏.‏ سَمَّى لَهُ نَافِعٌ هَؤُلاَءِ الثَّلاَثَ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மரகந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த பேரீச்ச மரமாவது அதன் கனிகள் (யாருக்குச் சேரும் என்பது) பற்றிப் பேசப் படாமல் விற்கப்படுமானால், அவை மகரந்தச் சேர்க்கை (செய்து விற்பனை) செய்தவருக்கே உரியவையாகும். (செல்வம் வைத்துள்ள) அடிமையும் பயிர் செய்யப் பட்ட நிலமும் அவ்வாறுதான். இந்த மூன்றையும் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் தம்மிடம் குறிப்பிட்டுச் சொன்ன தாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2204 — Sahih al Bukhari 34:150
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ بَاعَ نَخْلاً قَدْ أُبِّرَتْ فَثَمَرُهَا لِلْبَائِعِ، إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை யாரேனும் விற்றால், அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; வாங்கிய வர் (தமக்குச் சேர வேண்டுமென்று) முன் நிபந்தனையிட்டிருந்தால் தவிர! இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2205 — Sahih al Bukhari 34:151
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمُزَابَنَةِ أَنْ يَبِيعَ ثَمَرَ حَائِطِهِ إِنْ كَانَ نَخْلاً بِتَمْرٍ كَيْلاً، وَإِنْ كَانَ كَرْمًا أَنْ يَبِيعَهُ بِزَبِيبٍ كَيْلاً أَوْ كَانَ زَرْعًا أَنْ يَبِيعَهُ بِكَيْلِ طَعَامٍ، وَنَهَى عَنْ ذَلِكَ كُلِّهِ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிமுஸாபனா’வைத் தடை செய்தார்கள். (அதாவது:) ஒருவரது தோட்டத்திலுள்ள பேரீச்ச மரத்திலிருக்கும் (உலராத) கனி களை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பது, கொடியிலுள்ள உலராத திராட்சைப் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு விற்பது, பயிரிலுள்ள தானியங்களை அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்கு (பண்டமாற்று முறையில்) விற்பது ஆகிய அனைத்தையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2206 — Sahih al Bukhari 34:152
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَيُّمَا امْرِئٍ أَبَّرَ نَخْلاً ثُمَّ بَاعَ أَصْلَهَا، فَلِلَّذِي أَبَّرَ ثَمَرُ النَّخْلِ، إِلاَّ أَنْ يَشْتَرِطَهُ الْمُبْتَاعُ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் பேரீச்ச மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, அதை வேரோடு விற்றால் மகரந்தச் சேர்க்கை செய்த அவருக்கே மரத்தின் (தற்போதைய) கனிகள் சேரும்; விலைக்கு வாங்கியவர் (அதன் கனிகள் தமக்கே சேர வேண்டும் என்று) முன்நிபந்தனை விதித்திருந்தால் தவிர! இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.