حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ أَبِي طَلْحَةَ الأَنْصَارِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمُحَاقَلَةِ، وَالْمُخَاضَرَةِ، وَالْمُلاَمَسَةِ، وَالْمُنَابَذَةِ، وَالْمُزَابَنَةِ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘முஹாகலா, முகாளரா, முலாமசா, முனாபதா, முஸாபனா ஆகிய வணிக முறைகளுக்குத் தடை விதித்தார்கள்.74 அத்தியாயம் :
ஹதீஸ் 2208 — Sahih al Bukhari 34:154
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ ثَمَرِ التَّمْرِ حَتَّى تَزْهُوَ. فَقُلْنَا لأَنَسٍ مَا زَهْوُهَا قَالَ تَحْمَرُّ وَتَصْفَرُّ، أَرَأَيْتَ إِنْ مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரத்தி லுள்ள கனிகள் பக்குவமடைவதற்குமுன் அவற்றை விற்பதைத் தடை செய்தார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘பக்குவமடைதல் என்றால் என்ன?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘சிவப்பாக, மஞ்சளாக மாறுவதாகும்” என்று பதிலளித் தார்கள். மேலும், ‘‘அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளைத் தடுத்துவிட்டால் உம் சகோதரரின் பொருளை எந்த அடிப்படையில் நீர் ஹலாலாக (உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட தாக) கருதுவீர்” என்றும் கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2209 — Sahih al Bukhari 34:155
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ يَأْكُلُ جُمَّارًا، فَقَالَ " مِنَ الشَّجَرِ شَجَرَةٌ كَالرَّجُلِ الْمُؤْمِنِ ". فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ. فَإِذَا أَنَا أَحْدَثُهُمْ قَالَ " هِيَ النَّخْلَةُ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேரீச்சங் குருத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அவர்களின் அருகில் நான் இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மரங்களில் ஒரு மரமிருக்கிறது; அது இறை நம்பிக்கை உள்ள மனிதருக்கு உவமையாகும்” என்றார்கள். நான் ‘‘அது பேரீச்ச மரம்தான்” என்று சொல்ல நினைத் தேன். அப்போது அங்கிருந்தவர்களி லேயே நான் வயதில் இளையவனாக இருந்தேன். (ஆதலால் நான் எதுவும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ‘‘அது பேரீச்சமரம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2210 — Sahih al Bukhari 34:156
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ حَجَمَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَبُو طَيْبَةَ، فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِصَاعٍ مِنْ تَمْرٍ، وَأَمَرَ أَهْلَهُ أَنْ يُخَفِّفُوا عَنْهُ مِنْ خَرَاجِهِ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமையாயிருந்த) அபூதைபா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு குருதி உறிஞ்சி எடுத்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம்பழம் கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். மேலும், அவருடைய உரிமையாளர்களிடம் அவர் செலுத்த வேண்டியுள்ள (அன்றாட) வரியைக் குறைக்குமாறும் கட்டளை யிட்டார்கள்.77 அத்தியாயம் :
ஹதீஸ் 2211 — Sahih al Bukhari 34:157
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ هِنْدٌ أُمُّ مُعَاوِيَةَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، فَهَلْ عَلَىَّ جُنَاحٌ أَنْ آخُذَ مِنْ مَالِهِ سِرًّا قَالَ " خُذِي أَنْتِ وَبَنُوكِ مَا يَكْفِيكِ بِالْمَعْرُوفِ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்களின் அன்னை ஹின்த் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘(என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சரான மனிதராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என்மீது அது குற்றமாகுமா?” எனக் கேட்டார்கள். அதற்கு, ‘‘உனக்குப் போது மானதை நியாயமான முறையில் (வழக்கத் திலுள்ள அளவு) நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக்கொள்ளுங்கள்!” என அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித் தார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(அநாதைகளைப் பராமரிப்போரில்) செல்வராக இருப்பவர், (அவர்களின் செல்வத்தைத் தொடாமல்) நாணயமாக நடந்துகொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் நியாயமாக உண்ணட்டும்” (4:6) என்ற இறைவசனம், அநாதைகளை நிர்வகித்து, அவர்களின் செல்வத்தைப் பராமரிக்கும் காப்பாளர்கள் தொடர்பாக அருளப்பட்டது. காப்பாளர் ஏழையாக இருந்தால் (வழக்கப் படி) நியாயமான முறையில் (தம் உழைப் பிற்குக் கூலியாக) அநாதைகளின் பொருளை உண்ணலாம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2213 — Sahih al Bukhari 34:159
حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الشُّفْعَةَ فِي كُلِّ مَالٍ لَمْ يُقْسَمْ، فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ وَصُرِّفَتِ الطُّرُقُ فَلاَ شُفْعَةَ.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் விலைக்கோள் உரிமையை(ப் பங்காளிக்கு) ஏற்படுத்தினார்கள். (ஆனால்,) எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் உருவாக்கப் பட்டிருந்தால், (பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற) விலைக்கோள் உரிமை கிடையாது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள ஒரு குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகைவாசலை அடைத்துக்கொண்டது. அப்போது அவர்கள் தமக்குள், ‘‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றனர். அவர்களில் ஒருவர், ‘‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டுவருவேன். அவர்கள் அருந்து வார்கள். பிறகுதான் குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். (இந்நிலையில்) ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்ப வில்லை. குழந்தைகள் (பால் கேட்டு) என் காலடியில் அழுது கூச்சலிட்டுக்கொண்டி ருந்தனர். வைகறைவரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது அன்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால், எங்களுக்கு (இந்தப் பாறையை) சற்றே நகர்த்துவாயாக! நாங்கள் அதன் வழியாக ஆகாயத்தைப் பார்த்துக் கொள்வோம்” என்று பிரார்த்தித்தார். அவ்வாறே பாறை (சற்று) நகர்ந்தது. மற்றொருவர், ‘‘இறைவா! என் தந்தை யின் சகோதரருடைய புதல்வியரில் ஒருத்தியை, ஓர் ஆண் ஒரு பெண்ணை விரும்புவதைவிட ஆழமாக விரும்பினேன். தனக்கு நான் நூறு பொற்காசுகள் கொடுக்காத வரை அவளை நான் அடைய முடியாது என்று அவள் சொல்லிவிட்டாள். நான் உழைத்து நூறு பொற்காசுகளைத் திரட்டினேன். அவளுடைய இரு கால்களுக்கிடையே (தவறு செய்ய) நான் அமர்ந்தபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! முத்திரையை அதற்குரிய (சட்டப்பூர்வ) உரிமை(யான திருமணம்) இல்லாமல் உடைத்துவிடாதே!› என்று அவள் கூறினாள். உடனே அவளை விட்டுவிட்டு நான் எழுந்துவிட்டேன். இதை உனது அன்பை நாடியே நான் செய்திருப்பதாக நீ கருதியிருந்தால், எங்களைவிட்டு (இந்தப் பாறையை) சற்றே நகர்த்துவாயாக!” என்று பிரார்த்தித்தார். உடனே அவர்களைவிட்டு அல்லாஹ் (பாறையை) மூன்றில் இரு மடங்கு நகர்த்தினான். மற்றொருவர், ‘‘இறைவா! நான் ஒரு யிஃபரக்’ (மூன்று ‘ஸாஉ’கள்) தினையைக் கூலியாகப் பேசி, ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்த போது அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு அந்த ஒரு யிஃபரக்’ தினையை நான் கவனமாகப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அவற்றின் மேய்ப்பரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு (ஒரு நாள்) அவர் வந்து, ‘‘அல்லாஹ்வின் அடிமையே! எனது கூலியைக் கொடு!” என்றார். ‘‘(அதோ!) அந்த மாடுகள் மற்றும் அவற் றின் மேய்ப்பரிடம் செல் (எடுத்துக்கொள்.) அவை எல்லாம் உமக்குரியவைதான்” என்று நான் கூறினேன். அதற்கு அவர், ‘‘என்னைக் கேலி செய்கிறீரா?” என்று கேட்டார். ‘‘நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான்” எனக் கூறினேன். இறைவா! இதை நான் உனது அன்பை நாடியே செய்திருப்பதாக நீ கருதினால், எங்களைவிட்டு (இந்தப் பாறையை முற்றாக) அகற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார். முழுமையாக அது அகற்றப்பட்டது.79 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2216 — Sahih al Bukhari 34:163
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ جَاءَ رَجُلٌ مُشْرِكٌ مُشْعَانٌّ طَوِيلٌ بِغَنَمٍ يَسُوقُهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بَيْعًا أَمْ عَطِيَّةً أَوْ قَالَ أَمْ هِبَةً ". قَالَ لاَ بَلْ بَيْعٌ. فَاشْتَرَى مِنْهُ شَاةً.
அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது உயரமான, பரட்டைத் தலையுடைய, இணைவைப்பவரான ஒரு மனிதர் தம் ஆடுகளை ஓட்டிவந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இவை விற்பனைக்கா? அல்லது (யாருக்கேனும்) அன்பளிப்பாகக் கொடுப்பதற்கா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இல்லை; விற்பனைக்குத்தான்” எனக் கூறினார். அப்போது அவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை விலைக்கு வாங்கினார்கள். அத்தியாயம் :