நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) யிசாரா’வுடன் புலம்பெயர்ந்து (இராக்கிலிருந்து) வெளியேறினார்கள். மன்னன் ஒருவன், அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சிபுரிந்த ஓர் ஊருக்குள் (எகிப்துக்குள்) யிசாரா’ உடன் இப்ராஹீம் (அலை) அவர்கள் நுழைந்தார்கள். ‘‘பெண்களிலேயே மிக அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்” என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்துவரச் செய்து, ‘‘இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?” என மன்னன் கேட்டான். இப்ராஹீம் (அலை) அவர்கள், யிஎன் சகோதரி’ என்று சொன்னார்கள். பிறகு சாராவிடம் திரும்பிய இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நீ என் கூற்றைப் பொய்யாக்கிவிடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் இறைநம்பிக்கையாளர் யாரும் இல்லை” என்று சொன்னார்கள். பிறகு யிசாரா’வை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்து தொழுதுவிட்டு, ‘‘இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது கற்பைக் கணவனைத் தவிர மற்றவர் களிடமிருந்து காப்பாற்றியிருந்தால், இந்த இறைமறுப்பாளரை என்மீது சாட்டிவிடாதே!” என்று பிரார்த்தித்தார். உடனே அவன் வலிப்பு வந்து, கீழே விழுந்து கால்களால் உதைத்துக்கொண்டான். மன்னனின் நிலை யைக் கண்ட சாரா, ‘‘இறைவா! இவன் செத்துவிட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று சொல்லப்படுமே!” என்றவுடன், மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங் கினான். உடனே சாரா (அலை) அவர்கள் எழுந்து அங்கத் தூய்மை செய்து தொழுது விட்டு, ‘‘இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது கற்பைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்த இறை மறுப்பாளனை என்மீது சாட்டிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவன் வலிப்பு வந்து கீழே விழுந்து கால்களால் உதைத்துக்கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாரா, ‘‘இறைவா! இவன் செத்துவிட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று சொல்லப்படுமே!” என்று பிரார்த்தித் தார்கள். இவ்வாறு மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத்தான் அனுப்பியிருக் கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஆஜரைக் கொடுங்கள்” என்று (அவையோரிடம்) சொன்னான். சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிடம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்த இறை மறுப்பாளனை வீழ்த்தி, (நமக்குப்) பணிபுரிய ஓர் அடிமைப் பெண்ணையும் தந்துவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.80 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி அவர்கள் கூறியதாவது: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி, அப்த் பின் ஸம்ஆ (ரலி) ஆகிய இருவரும் ஓர் அடிமை விஷயத்தில் வழக்கு கொண்டு வந்தனர். ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அடிமை என் சகோதரர் உத்பா பின் அபீவக்காஸ் உடைய மகனாவார். என் சகோதரர் (அவரது மரணத்தின்போது) இவன் தம் மகன் என்று என்னிடம் வலி யுறுத்திக் கூறினார். இந்த அடிமை அவரது சாயலில் இருப்பதை நீங்கள் கவனியுங்கள்” என்று சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அடிமை என் சகோதரனே; என் தந்தைக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணுக்கு இவன் பிறந்தான்” எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வடிமையிடம் உத்பாவின் தெளிவான சாயலைக் கண்டபிறகும், அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்களிடம், ‘‘அப்தே! அவன் உமக்குரியவனே. ஒரு பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை உரியது! விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது” எனக் கூறினார்கள். பிறகு (தம் துணைவி) சவ்தா (ரலி) அவர்களிடம், ‘‘சவ்தாவே! இந்த அடிமையிடம் நீ பர்தாவைப் பேணிக்கொள்” என்று கூறினார்கள். அதற்குப் பிறகு சவ்தா (ரலி) அவர்கள் ஒருபோதும் அந்த அடிமையைக் கண்டதில்லை.81 அத்தியாயம் :
இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஸுஹைப் (ரலி) அவர்களிடம், ‘‘நீர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக! உம் தந்தையல்லாத ஒருவரைத் தந்தை எனச் சொல்லாதீர்” எனக் கூறினார்கள். அதற்கு ஸுஹைப் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையல்லாத ஒருவரைத் தந்தை என்று நான் சொல்வதற் காக எவ்வளவு பொருட்களைக் கொடுத் தாலும் அதை நான் ஒப்பமாட்டேன்; என்றாலும், நான் சிறுவனாக இருந்தபோது திருடப்பட்டுவிட்டேன்” என்றார்கள்.82 அத்தியாயம் :
ஹதீஸ் 2220 — Sahih al Bukhari 34:167
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ، أَخْبَرَهُ أَنَّهُ، قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ أَتَحَنَّثُ ـ أَوْ أَتَحَنَّتُ بِهَا ـ فِي الْجَاهِلِيَّةِ مِنْ صِلَةٍ وَعَتَاقَةٍ وَصَدَقَةٍ، هَلْ لِي فِيهَا أَجْرٌ قَالَ حَكِيمٌ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ لَكَ مِنْ خَيْرٍ ".
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நல்லறங்களைச் செய்துவந்தேன்; இவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் உண்டா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பலன்)களுடன்தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்” என்றார்கள்.83 அத்தியாயம் :
ஹதீஸ் 2221 — Sahih al Bukhari 34:168
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِشَاةٍ مَيِّتَةٍ فَقَالَ " هَلاَّ اسْتَمْتَعْتُمْ بِإِهَابِهَا ". قَالُوا إِنَّهَا مَيِّتَةٌ. قَالَ " إِنَّمَا حَرُمَ أَكْلُهَا ".
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்ற போது, ‘‘இதன் தோலை நீங்கள் பயன்படுத் தக் கூடாதா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘‘இது செத்த ஆடாயிற்றே!” என்ற னர். அதற்கு ‘‘அதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.84 அத்தியாயம் :
ஹதீஸ் 2222 — Sahih al Bukhari 34:169
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! (உலக அழிவுக்குமுன்) மர்யமின் மைந்தர் (ஈசாலிஅலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கி றார். அவர் சிலுவையை உடைப்பார். பன்றியைக் கொல்வார். காப்பு (ஜிஸ்யா) வரியை வாங்க மறுப்பார். (இஸ்லாம் ஒன்றையே ஏற்பார். அந்நாளில்) வாங்கு வதற்கு ஆளில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2223 — Sahih al Bukhari 34:170
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ أَخْبَرَنِي طَاوُسٌ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَلَغَ عُمَرَ أَنَّ فُلاَنًا بَاعَ خَمْرًا فَقَالَ قَاتَلَ اللَّهُ فُلاَنًا، أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ فَجَمَلُوهَا فَبَاعُوهَا ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் மதுவை விற்றதாக உமர் (ரலி) அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. அப்போது, ‘‘அவரை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக (சபிப்பானாக)! யூதர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப்பட்டிருந்தது. (ஆனால்,) அவர்கள் அதை உருக்கி விற்றனர். எனவே, அவர்களை அல்லாஹ் சபிப்பானாக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறியவில்லையா?” எனக் கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2224 — Sahih al Bukhari 34:171
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَاتَلَ اللَّهُ يَهُودًا حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ فَبَاعُوهَا، وَأَكَلُوا أَثْمَانَهَا ". قَالَ أَبُو عَبْد اللَّهِ قَاتَلَهُمْ اللَّهُ لَعَنَهُمْ قُتِلَ لُعِنَ الْخَرَّاصُونَ الْكَذَّابُونَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களை அல்லாஹ் தனது கருணை ‘லிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப் பட்டிருந்தது. (ஆனால்,) அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை உண்டனர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (கருணையிலிருந்து அப்புறப்படுத்து வானாக! அல்லது சபிப்பானாக என்பதைக் குறிக்க மூலத்தில்) யிகா(த்)தல’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. (இதற்கு யிகொல்வானாக!› என்பதே சொற்பொருளாகும்.) இங்கு அதற்கு யிசபிப்பானாக!› என்பதே பொரு ளாகும். குர்ஆனில், ‘‘பொய்யர்கள் சபிக்கப் படுவார்கள்” (51:10) என்பதைக் குறிக்க யிகு(த்)தில’ எனும் சொல்லே மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. அத்தியாயம் :
சயீத் பின் அபில்ஹசன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஒரு மனிதர் வந்து, ‘‘இப்னு அப்பாஸ் அவர்களே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் இந்த உருவங்களை (வரைந்து) தயாரிக்கிறேன்” எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். ‘‘யார் ஓர் உருவத்தை வரைகிறாரோ அவர் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்வரை, அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவரால் ஒருகாலும் அதில் உயிரை ஊத முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்” என் றார்கள். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சு விட்டார். அவரது முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘உமக் குக் கேடுதான்! நீர் வரைந்துதான் தீர வேண்டும் என்றால், மரம் போன்ற உயிரற் றவைகளை வரைவீராக!” என்றார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஒரு ஹதீஸை, நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து சயீத் பின் அபீஅரூபா (ரஹ்) அவர்கள் செவியுற்றுள்ளார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2226 — Sahih al Bukhari 34:173
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ لَمَّا نَزَلَتْ آيَاتُ سُورَةِ الْبَقَرَةِ عَنْ آخِرِهَا خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " حُرِّمَتِ التِّجَارَةُ فِي الْخَمْرِ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அல்பகரா’ அத்தியாயத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து) இறுதி வசனம்வரையிலான வசனங்கள் (2:275லி281) இறங்கியபோது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, ‘‘மதுபான வணிகம் தடை செய்யப்பட்டுவிட்டது” என்றார்கள்.86 அத்தியாயம் :