நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று அவரிடம், ‘‘நீர் (உமது வாழ் நாளில்) ஏதேனும் நன்மை செய்திருக் கிறீரா?” எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், ‘‘(நான் மக்களுக்கு கடன் கொடுத்துவந்தேன்.) வசதியான கடனாளிக் கும் அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டுகொள்ளாமல் விட்டு விடும்படியும் நான் என் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்” என்று கூறினார். உடனே ‘‘அவருடைய தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்” என்று (அல்லாஹ் வானவர்களிடம்) கூறினான். இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூமாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மென்மையாக நடப்பவனாகவும் இருந் தேன்” என்று அவர் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அப்துல் மலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும்வந்தேன்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. நுஐம் பின் அபீஹின்த் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘‘வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்துவந்தேன்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2078 — Sahih al Bukhari 34:31
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كَانَ تَاجِرٌ يُدَايِنُ النَّاسَ، فَإِذَا رَأَى مُعْسِرًا قَالَ لِفِتْيَانِهِ تَجَاوَزُوا عَنْهُ، لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا، فَتَجَاوَزَ اللَّهُ عَنْهُ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக்கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம், ‘‘இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம் தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும்” என்று கூறுவார். அல்லாஹ்வும் அவருடைய தவறுகளைத் தள்ளுபடி செய்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2079 — Sahih al Bukhari 34:32
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ـ أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا ـ فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத் திலிருந்து) பிரியாமலிருக்கும்வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விரு வரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் வளம் (பரக்கத்) வழங்கப் படும். இருவரும் குறைகளை மறைத்துப் பொய் பேசியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள வளம் அகற்றப்படும். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2080 — Sahih al Bukhari 34:33
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُرْزَقُ تَمْرَ الْجَمْعِ، وَهْوَ الْخِلْطُ مِنَ التَّمْرِ، وَكُنَّا نَبِيعُ صَاعَيْنِ بِصَاعٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ صَاعَيْنِ بِصَاعٍ، وَلاَ دِرْهَمَيْنِ بِدِرْهَمٍ ".
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பலதரப்பட்ட பேரீச்சம் பழங்கள் கலந்து எங்களுக்கு வழங்கப்படும்; அவை கலப்புப் பேரீச்சம் பழங்களாகும். (அவற்றில்) இரண்டு ‘ஸாஉ’களுக்கு ஒரு ‘ஸாஉ’ (உயர் ரகப் பேரீச்சம் பழம்) என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்துவந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு ‘ஸாஉ’க்கு இரண்டு ‘ஸாஉ’கள் கூடாது; இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது” என்று கூறினார்கள்.15 அத்தியாயம் :
அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஷுஐப் என்ற அன்சாரி, (பிராணியை) அறுத்துத் துண்டுபோடும் தம் ஊழியரிடம், ‘‘ஐவருக்குப் போதுமான உணவை எனக்குத் தயார் செய்! ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களையும் நான் அழைக்கப்போகிறேன்; ஏனெனில், அவர்களின் முகத்தில் பசியை நான் உணர்ந்தேன்” என்று கூறிவிட்டு, ஐவரையும் அழைத்தார். அவர்களுடன் மற்றொரு மனிதரும் சேர்ந்து வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மனிதர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு அனுமதியளிக்க நீர் விரும்பினால் அனுமதி அளிப்பீராக! இவர் திரும்பிவிட வேண்டும் என நீர் விரும்பினால் திரும்பிவிடுவார்” என்று கூறினார்கள். அதற்கு அபூஷுஐப் (ரலி) அவர்கள் ‘‘இல்லை; அவருக்கு நான் அனுமதியளித்துவிட்டேன்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2082 — Sahih al Bukhari 34:35
حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَبَا الْخَلِيلِ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ـ أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا ـ فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத் திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விரு வரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால், அவர்களது வணிகத்தில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். குறைகளை மறைத்துப் பொய் பேசியிருந் தால் அவர்களின் வணிகத்தில் உள்ள வளம் அகற்றப்படும். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2083 — Sahih al Bukhari 34:36
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يُبَالِي الْمَرْءُ بِمَا أَخَذَ الْمَالَ، أَمِنْ حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒரு மனிதர், தாம் பொருளீட் டியது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா; அல்லது அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பது குறித்துப் பொருட்படுத்தமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2084 — Sahih al Bukhari 34:37
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا نَزَلَتْ آخِرُ الْبَقَرَةِ قَرَأَهُنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِمْ فِي الْمَسْجِدِ، ثُمَّ حَرَّمَ التِّجَارَةَ فِي الْخَمْرِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அல்பகரா’ அத்தியாயத்தின் (வட்டி தொடர்பான) இறுதி வசனங்கள் (2:275லி281) அருளப்பெற்றபோது, அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பின்னர் மதுபான வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) மனிதர்க(ளின் தோற்றத்தில் வந்த வானவர்க)ள் இரு வரைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டி ருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்போது, அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து, முன்பு நின்ற இடத்திற்கே அவரைத் திருப்பிவிடுகிறார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். ‘‘இவர் யார்?” என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன்: அதற்கு அவர்கள் ‘‘ஆற்றில் நீங்கள் பார்த்தவர் வட்டி உண்பவராவார்” எனக் கூறினார்கள். இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2086 — Sahih al Bukhari 34:39
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ أَبِي اشْتَرَى عَبْدًا حَجَّامًا، فَسَأَلْتُهُ فَقَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ثَمَنِ الْكَلْبِ، وَثَمَنِ الدَّمِ، وَنَهَى عَنِ الْوَاشِمَةِ وَالْمَوْشُومَةِ، وَآكِلِ الرِّبَا، وَمُوكِلِهِ، وَلَعَنَ الْمُصَوِّرَ.
அவ்ன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள்), குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார்கள். (பிறகு அவருடைய தொழிற் கருவிகளை உடைத்துவிடும்படி உத்தரவிட்டார்கள்.) (இது தொடர்பாக) அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் குருதி (உறிஞ்சி எடுப்பது)க்கான கூலியையும் தடை செய்தார்கள்; வட்டி வாங்குவதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள். மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.17 அத்தியாயம் :