Qurani·قرآني
தமிழ்

விற்பனை மற்றும் வணிகம் (பைஉ)

192 ஹதீஸ்கள் · #2047–2238

ஹதீஸ் 2087 — Sahih al Bukhari 34:40
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ابْنُ الْمُسَيَّبِ إِنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ الْحَلِفُ مُنَفِّقَةٌ لِلسِّلْعَةِ مُمْحِقَةٌ لِلْبَرَكَةِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பொய்) சத்தியம் செய்வது, பொருளை விலைபோகச் செய்யும்; வளத்தை அழித்துவிடும்.18 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2088 — Sahih al Bukhari 34:41
حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا الْعَوَّامُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَقَامَ سِلْعَةً، وَهُوَ فِي السُّوقِ، فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أَعْطَى بِهَا مَا لَمْ يُعْطَ، لِيُوقِعَ فِيهَا رَجُلاً مِنَ الْمُسْلِمِينَ، فَنَزَلَتْ ‏{‏إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً ‏}‏
அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் கடைவீதியில் விற்பனைப் பொருட்களைப் பரப்பிவைத்துக்கொண்டு, தாம் (கொள்முதல் செய்தபோது) கொடுக்காத விலையைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார்: முஸ்லிம்களில் ஒருவரை அ(ந்தப் பேரத்)தில் சிக்கவைப்பதற்காக (அவர் இவ்வாறு செய்தார்). அப்போதுதான், ‘‘அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங் களையும் அற்ப விலைக்கு விற்றுவிட்டவர் களுக்கு மறுமையில் எந்த நற்பேறும் கிடையாது” (3:77) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.19 அத்தியாயம் :
ஹதீஸ் 2089 — Sahih al Bukhari 34:42
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ عَلِيًّا ـ عَلَيْهِ السَّلاَمُ ـ قَالَ كَانَتْ لِي شَارِفٌ مِنْ نَصِيبِي مِنَ الْمَغْنَمِ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَعْطَانِي شَارِفًا مِنَ الْخُمْسِ، فَلَمَّا أَرَدْتُ أَنْ أَبْتَنِيَ بِفَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاعَدْتُ رَجُلاً صَوَّاغًا مِنْ بَنِي قَيْنُقَاعَ أَنْ يَرْتَحِلَ مَعِي فَنَأْتِيَ بِإِذْخِرٍ أَرَدْتُ أَنْ أَبِيعَهُ مِنَ الصَّوَّاغِينَ، وَأَسْتَعِينَ بِهِ فِي وَلِيمَةِ عُرُسِي‏.‏
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (பத்ர்) போரில் கிடைத்த செல்வங்களில் என் பங்காகக் கிடைத்த வயதான ஓர் ஒட்டகம் என்னிடம் இருந்தது; நபி (ஸல்) அவர்கள் (தமது பொறுப்பில் வந்த) ஐந்தில் ஒரு பாகத்திலிருந்து (குமுஸ்) வயதான மற்றோர் ஒட்டகத்தையும் எனக்குக் கொடுத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமாவுடன் தாம்பத்திய வாழ்க்கையைத் தொடங்க நான் விரும்பினேன். அப்போது யிபனூ கைனுகா’ குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரிடம், அவர் என்னுடன் வந்து யிஇத்கிர்’ புல்லை நாங்கள் கொண்டுவர வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று, அ(ந்தப் பணத்)தை என் மணவிருந்துக்கு (வலீமா) பயன்படுத்திக்கொள்ள விரும்பியிருந்தேன். அத்தியாயம் :
ஹதீஸ் 2090 — Sahih al Bukhari 34:43
حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِنَّ اللَّهَ حَرَّمَ مَكَّةَ، وَلَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي، وَلاَ لأَحَدٍ بَعْدِي، وَإِنَّمَا حَلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، وَلاَ يُخْتَلَى خَلاَهَا، وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا وَلاَ يُلْتَقَطُ لُقَطَتُهَا إِلاَّ لِمُعَرِّفٍ ‏"‏‏.‏ وَقَالَ عَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ إِلاَّ الإِذْخِرَ لِصَاغَتِنَا وَلِسُقُفِ بُيُوتِنَا‏.‏ فَقَالَ ‏"‏ إِلاَّ الإِذْخِرَ ‏"‏‏.‏ فَقَالَ عِكْرِمَةُ هَلْ تَدْرِي مَا يُنَفَّرُ صَيْدُهَا هُوَ أَنْ تُنَحِّيَهُ مِنَ الظِّلِّ، وَتَنْزِلَ مَكَانَهُ‏.‏ قَالَ عَبْدُ الْوَهَّابِ عَنْ خَالِدٍ لِصَاغَتِنَا وَقُبُورِنَا‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) ‘‘நிச்சயமாக, அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தி யிருக்கிறான். (இங்கு போர் செய்வது) எனக்குமுன் எவருக்கும் அனுமதிக்கப்பட வில்லை; எனக்குக்கூட பகலில் சிறிதுநேரம்தான் அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள புற்பூண்டுகள் பறிக்கப்படக் கூடாது! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது! இங்குள்ள வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக்கூடாது! இங்கே கீழே விழுந்துகிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது!” என்று கூறினார்கள். அப்போது அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், ‘‘எங்கள் வீடுகளின் கூரைகளுக்கும் பொற்கொல்லர் களுக்கும் பயன்படும் யிஇத்கிரை’த் தவிரவா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் யிஇத்கிரைத் தவிர!› என்றார் கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘‘வேட்டைப் பிராணி விரட்டப்படுவது என்றால் என்னவென்று உமக்குத் தெரியுமா? நிழலில் படுத்திருக்கும் அதை விரட்டிவிட்டு, அந்த இடத்தில் நீங்கள் தங்குவதுதான்” என்று கூறுகிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், யிஎங்கள் பொற்கொல்லர்களுக்கும் எங்கள் அடக்கத் தலங்களுக்கும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.20 அத்தியாயம் :
ஹதீஸ் 2091 — Sahih al Bukhari 34:44
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ خَبَّابٍ، قَالَ كُنْتُ قَيْنًا فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ لِي عَلَى الْعَاصِ بْنِ وَائِلٍ دَيْنٌ، فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ قَالَ لاَ أُعْطِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم‏.‏ فَقُلْتُ لاَ أَكْفُرُ حَتَّى يُمِيتَكَ اللَّهُ، ثُمَّ تُبْعَثَ‏.‏ قَالَ دَعْنِي حَتَّى أَمُوتَ وَأُبْعَثَ، فَسَأُوتَى مَالاً وَوَلَدًا فَأَقْضِيَكَ فَنَزَلَتْ ‏{‏أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لأُوتَيَنَّ مَالاً وَوَلَدًا * أَطَّلَعَ الْغَيْبَ أَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمَنِ عَهْدًا ‏}‏
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அறியாமைக் காலத்தில் கொல்லராக இருந்தேன். (இணைவைப்பாள ரான) ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அப்போது அவர், ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்கு (திருப்பி)த்தரமாட்டேன்”’என்றார். நான், ‘‘அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படாத வரை நான் (முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்” எனக் கூறினேன். அதற்கு அவர் ‘‘நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் அடைத்துவிடுகிறேன்” என்றார். அப்போதுதான், ‘‘நம் வசனங்களை நிராகரித்துக்கொண்டு ‘(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்’ என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்துகொண்டுவிட்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்பட வேண்டுமென்று) அளவற்ற அருளாள(னான இறைவ)னிடம் உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கின்றானா? (19 :77, 78) எனும் இறைவசனங்கள் அருளப்பெற்றன. அத்தியாயம் :
ஹதீஸ் 2092 — Sahih al Bukhari 34:45
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ إِنَّ خَيَّاطًا دَعَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَهُ، قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى ذَلِكَ الطَّعَامِ، فَقَرَّبَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خُبْزًا وَمَرَقًا فِيهِ دُبَّاءٌ وَقَدِيدٌ، فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَتَبَّعُ الدُّبَّاءَ مِنْ حَوَالَىِ الْقَصْعَةِ ـ قَالَ ـ فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ مِنْ يَوْمِئِذٍ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார். நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் சுரைக்காயும் உப்புக் கண்டமும் உள்ள குழம்பையும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்: நபி (ஸல்) அவர்கள் தட்டைச் சுற்றிலும் சுரைக்காயைத் தேடுவதை நான் பார்த்தேன். அன்றிலிருந்து நானும் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன். அத்தியாயம் :
ஹதீஸ் 2093 — Sahih al Bukhari 34:46
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَتِ امْرَأَةٌ بِبُرْدَةٍ ـ قَالَ أَتَدْرُونَ مَا الْبُرْدَةُ فَقِيلَ لَهُ نَعَمْ، هِيَ الشَّمْلَةُ، مَنْسُوجٌ فِي حَاشِيَتِهَا ـ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَسَجْتُ هَذِهِ بِيَدِي أَكْسُوكَهَا‏.‏ فَأَخَذَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم مُحْتَاجًا إِلَيْهَا‏.‏ فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا إِزَارُهُ‏.‏ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ، اكْسُنِيهَا، فَقَالَ ‏ "‏ نَعَمْ ‏"‏‏.‏ فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْمَجْلِسِ، ثُمَّ رَجَعَ فَطَوَاهَا، ثُمَّ أَرْسَلَ بِهَا إِلَيْهِ‏.‏ فَقَالَ لَهُ الْقَوْمُ مَا أَحْسَنْتَ، سَأَلْتَهَا إِيَّاهُ، لَقَدْ عَلِمْتَ أَنَّهُ لاَ يَرُدُّ سَائِلاً‏.‏ فَقَالَ الرَّجُلُ وَاللَّهِ مَا سَأَلْتُهُ إِلاَّ لِتَكُونَ كَفَنِي يَوْمَ أَمُوتُ‏.‏ قَالَ سَهْلٌ فَكَانَتْ كَفَنَهُ‏.‏
அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்) சால்வை (புர்தா) ஒன்றைக் கொண்டு வந்தார்” எனக் கூறிவிட்டு, ‘‘புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். ‘‘ஆம்! அது ஓரத்தில் குஞ்சம் கட்டப்பட்ட சால்வைதான்” என்று கூறப்பட்டது. (தொடர்ந்து சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) அப்பெண்மணி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நானே என் கையால் நெய்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றுக்கொண்டார்கள். (அவர்கள் உள்ளே சென்றுவிட்டு) எங்களிடம் திரும்பி வந்தபோது அதைக் கீழாடையாக அணிந்திருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதை நான் அணிவதற்காக எனக்குத் தாருங்கள்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி (தருகிறேன்)” என்று சொல்லிவிட்டு, சபையில் (சிறிது நேரம்) அமர்ந்திருந்தார் கள். பிறகு (உள்ளே சென்றுவிட்டுத்) திரும்பி வந்து, அதைச் சுருட்டி (அதைத் தமக்குத் தரும்படி) கேட்ட மனிதருக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். அப்போது அவரிடம் மக்கள், ‘‘நீர் செய்தது நன்றன்று; கேட்பவரை வெறுங் கையாக திருப்பியனுப்பமாட்டார்கள் என்று தெரிந்துகொண்டே நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கேட்டுவிட்டீரே!” எனக் கூறினர். அதற்கு அம்மனிதர், ‘‘நான் இறக்கும் நாளில் அது எனக்குச் சவக்கோடியாக (கஃபன்) ஆக வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்டேன்” என்றார். அது அவ்வாறே, அவரது கஃபனாக ஆனது.21 அத்தியாயம் :
ஹதீஸ் 2094 — Sahih al Bukhari 34:47
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ أَتَى رِجَالٌ إِلَى سَهْلِ بْنِ سَعْدٍ يَسْأَلُونَهُ عَنِ الْمِنْبَرِ، فَقَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى فُلاَنَةَ ـ امْرَأَةٍ قَدْ سَمَّاهَا سَهْلٌ ـ ‏ "‏ أَنْ مُرِي غُلاَمَكِ النَّجَّارَ، يَعْمَلُ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ ‏"‏‏.‏ فَأَمَرَتْهُ يَعْمَلُهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ثُمَّ جَاءَ بِهَا، فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِهَا، فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ، فَجَلَسَ عَلَيْهِ‏.‏
அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து, (நபி (ஸல்) அவர்களின்) சொற்பொழிவு மேடை (மிம்பர்) பற்றிக் கேட்டனர். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்ன பெண்மணியிடம் லிஅப்பெண் மணியின் பெயரை சஹ்ல் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்லி ஆளனுப்பி, ‘‘தச்சு வேலை செய்யும் உன் அடிமையிடம், நான் மக்களுக்கு உரையாற்றும்போது அமர்ந்துகொள்வதற்கேற்ற மேடையைச் செய்து தரச்சொல்” என்று சொல்லி அனுப்பினார்கள். அப்பெண் அவ்வாறே அடிமைக்கு உத்தரவிட்டார். அவர் (மதீனா அருகிலுள்ள) ‘அல்ஃகாபா’ வனத்திலிருந்த ஒரு வகை சவுக்கு மரத்தால் அதைச் செய்து கொண்டுவந்தார். அப்பெண்மணி அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தனுப்பினார். அதை உரிய இடத்தில் வைக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட, அவ்வாறே அது வைக்கப்பட்டது. அதன்மேல் அமர்ந் தார்கள்.22 அத்தியாயம் :
ஹதீஸ் 2095 — Sahih al Bukhari 34:48
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ امْرَأَةً مِنَ الأَنْصَارِ قَالَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ، أَلاَ أَجْعَلُ لَكَ شَيْئًا تَقْعُدُ عَلَيْهِ فَإِنَّ لِي غُلاَمًا نَجَّارًا‏.‏ قَالَ ‏"‏ إِنْ شِئْتِ ‏"‏‏.‏ قَالَ فَعَمِلَتْ لَهُ الْمِنْبَرَ، فَلَمَّا كَانَ يَوْمُ الْجُمُعَةِ قَعَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ الَّذِي صُنِعَ، فَصَاحَتِ النَّخْلَةُ الَّتِي كَانَ يَخْطُبُ عِنْدَهَا حَتَّى كَادَتْ أَنْ تَنْشَقَّ، فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى أَخَذَهَا فَضَمَّهَا إِلَيْهِ، فَجَعَلَتْ تَئِنُّ أَنِينَ الصَّبِيِّ الَّذِي يُسَكَّتُ حَتَّى اسْتَقَرَّتْ‏.‏ قَالَ ‏"‏ بَكَتْ عَلَى مَا كَانَتْ تَسْمَعُ مِنَ الذِّكْرِ ‏"‏‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிப் பெண்மணி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஒரு பணியாளர் இருக்கிறார்; நீங்கள் அமர்ந்து கொள்வதற்காக (மேடை) ஒன்றை நான் உங்களுக்குச் செய்து தரட்டுமா?” என்று கேட்டார். யிஉன் விருப்பம்’ என நபி (ஸல்) அவர்கள் கூற, அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவு மேடை (மிம்பர்) தயார் செய்தார். வெள்ளிக்கிழமை வந்ததும், தயாரிக்கப்பட்ட அந்த மேடையில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் முன்னர் நின்று உரை நிகழ்த்திய பேரீச்ச மரக்கட்டை இரண்டாகப் பிளந்து விடுமளவிற்குச் சப்தமிட்டது. நபி (ஸல்) அவர்கள் மேடையிலிருந்து இறங்கி அதைத் தொட்டுத் தம்முடன் அணைத்துக்கொண்டார்கள். அமைதிப்படுத்தப்படும் குழந்தை சிணுங்குவதைப் போன்று அது சிணுங்கியது; இறுதியில் அமைதியானது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘தான் செவியுற்றுவந்த போதனை’னால்தான் (இனி அது தன்மீது நிகழ்த்தப்படாதே என்றெண்ணித்தான்) அது அழுதது” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2096 — Sahih al Bukhari 34:49
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اشْتَرَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ يَهُودِيٍّ طَعَامًا بِنَسِيئَةٍ، وَرَهَنَهُ دِرْعَهُ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் கடனாக உணவுப் பொருளை வாங்கினார்கள்; தமது கவசத்தை அவரிடம் அடைமானமாக வைத்தார்கள்.23 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.