Qurani·قرآني
தமிழ்

தொழுகை நேரங்கள்

81 ஹதீஸ்கள் · #522–602

ஹதீஸ் 552 — Sahih al Bukhari 9:29
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الَّذِي تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உரிய நேரத்தில் தொழாமல்) யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுமோ அவர் தம் குடும்பத்தையும் செல்வத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டவரைப் போன்றவர் ஆவார். அத்தியாயம் :
ஹதீஸ் 553 — Sahih al Bukhari 9:30
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، قَالَ كُنَّا مَعَ بُرَيْدَةَ فِي غَزْوَةٍ فِي يَوْمٍ ذِي غَيْمٍ فَقَالَ بَكِّرُوا بِصَلاَةِ الْعَصْرِ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ تَرَكَ صَلاَةَ الْعَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ ‏"‏‏.‏
அபுல்மலீஹ் (ஆமிர் பின் உசாமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது: மேகமூட்டம் இருந்த ஒரு நாளில் புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்களு டன் ஒரு போரில் நாங்கள் இருந்தோம். அப்போது அவர்கள், “அஸ்ர் தொழு கையை விரைவாக (அதன் ஆரம்ப நேரத்தில்) நிறைவேற்றுங்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், ‘யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் அழிந்து விட்டன’ என்று கூறியுள்ளார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 554 — Sahih al Bukhari 9:31
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةً ـ يَعْنِي الْبَدْرَ ـ فَقَالَ ‏"‏ إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُّونَ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا ‏"‏‏.‏ ثُمَّ قَرَأَ ‏{‏وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ‏}‏‏.‏ قَالَ إِسْمَاعِيلُ افْعَلُوا لاَ تَفُوتَنَّكُمْ‏.‏
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு பௌர்ணமி இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்துகொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவைக் கூர்ந்து பார்த்தபடி, “இந்த நிலாவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பதைப் போன்று உங்கள் இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழு கையிலும், சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் (ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் இயலுமானால், அவ்வாறே செய்யுங்கள் (இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று கூறிவிட்டு, “சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்” (50:39) எனும் இறைவசனத்தை ஓதினார்கள். (இதற்கு விளக்கமளிக்கையில்) இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இஸ்மா யீல் பின் அபீகா-த் (ரஹ்) அவர்கள், “(இந்தத் தொழுகைகளை) நீங்கள் தவறா மல் தொழுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 555 — Sahih al Bukhari 9:32
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الْفَجْرِ وَصَلاَةِ الْعَصْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهْوَ أَعْلَمُ بِهِمْ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் அடுத்தடுத்து (சுழற்சி முறையில்) உங்களிடையே வருகின்றனர்; ஃபஜ்ர் தொழுகை யிலும் அஸ்ர் தொழுகையிலும் ஒன்றுகூடுகின்றனர். பிறகு, உங்களிடையே இரவில் தங்கியவர்கள் (வானத்துக்கு) ஏறிச் செல்கின்றனர். அப்போது மக்களைப் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அ(வ் வான)வர் களிடம், “(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?” என்று கேட்பான். அதற்கு அ(வ்வான)வர்கள், “அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுதுகொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்” என்று பதிலளிப்பார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 556 — Sahih al Bukhari 9:33
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا أَدْرَكَ أَحَدُكُمْ سَجْدَةً مِنْ صَلاَةِ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَلْيُتِمَّ صَلاَتَهُ، وَإِذَا أَدْرَكَ سَجْدَةً مِنْ صَلاَةِ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَلْيُتِمَّ صَلاَتَهُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சூரியன் மறைவ தற்குமுன் அஸ்ர் தொழுகையில் ஒரு சிரவணக்கத்தை (ஒரு ரக்அத்தை) அடைந்துகொண்டால், அவர் தமது தொழுகையை முழுமைப்படுத்தட்டும்! சூரியன் உதிப்பதற்குமுன் சுப்ஹு தொழுகையில் ஒரு சிரவணக்கத்தை (ஒரு ரக்அத்தை) அடைந்துகொண்டால் அவரும் தமது தொழுகையை முழுமைப் படுத்தட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 557 — Sahih al Bukhari 9:34
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَا سَلَفَ قَبْلَكُمْ مِنَ الأُمَمِ كَمَا بَيْنَ صَلاَةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ، أُوتِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ فَعَمِلُوا حَتَّى إِذَا انْتَصَفَ النَّهَارُ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ فَعَمِلُوا إِلَى صَلاَةِ الْعَصْرِ، ثُمَّ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِينَا الْقُرْآنَ فَعَمِلْنَا إِلَى غُرُوبِ الشَّمْسِ، فَأُعْطِينَا قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَقَالَ أَهْلُ الْكِتَابَيْنِ أَىْ رَبَّنَا أَعْطَيْتَ هَؤُلاَءِ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، وَأَعْطَيْتَنَا قِيرَاطًا قِيرَاطًا، وَنَحْنُ كُنَّا أَكْثَرَ عَمَلاً، قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ أَجْرِكُمْ مِنْ شَىْءٍ قَالُوا لاَ، قَالَ فَهْوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குமுன் வாழ்ந்த சமுதாயத்தாரோடு நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடுகையில் நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது, அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவே ஆகும். ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. (அதன்படி) அவர்கள் நண்பகல்வரை செயல்பட்டார் கள். பின்னர் ஓய்ந்துபோனார்கள். (கூலி யாக) ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப்பட்டது. பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அஸ்ர் தொழுகைவரை செயல்பட்டு விட்டுப் பின்னர் ஓய்ந்துபோனார்கள். (கூலியாக) அவர்களுக்கும் ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப்பட்டது. பிறகு நமக்கு குர்ஆன் வழங்கப் பெற்றது. நாம் (அஸ்ரிலிருந்து) சூரியன் மறையும்வரை (அதன்படி) செயல்பட் டோம். நமக்கு(க் கூலியாக) இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கப்பட்டன. எனவே, வேதம் அருளப்பெற்ற அவ்விரு சமுதாயத்தாரும், “எங்கள் இறைவா! இவர்களுக்கு இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு கீராத் வழங்கியுள்ளாயே? நாங்கள் (இவர்களைவிட) அதிக நேரம் வேலை செய்திருந்தோமே?” என்று வினவினர். அதற்கு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “உங்களுக் குரிய கூ-யில் ஏதேனும் நான் (குறைத்து) உங்களுக்கு அநீதி இழைத்திருக்கிறேனா?” என்று கேட்டான். அவர்கள் “இல்லை” என்று கூறினர். அதற்கு அல்லாஹ், “அ(வ்வாறு முஸ்லிம்களுக்கு அதிகமாகக் கொடுத்த)து, எனது அருட்கொடை; நான் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறேன்” என்று கூறினான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 558 — Sahih al Bukhari 9:35
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏ "‏ مَثَلُ الْمُسْلِمِينَ وَالْيَهُودِ وَالنَّصَارَى كَمَثَلِ رَجُلٍ اسْتَأْجَرَ قَوْمًا يَعْمَلُونَ لَهُ عَمَلاً إِلَى اللَّيْلِ، فَعَمِلُوا إِلَى نِصْفِ النَّهَارِ، فَقَالُوا لاَ حَاجَةَ لَنَا إِلَى أَجْرِكَ، فَاسْتَأْجَرَ آخَرِينَ فَقَالَ أَكْمِلُوا بَقِيَّةَ يَوْمِكُمْ، وَلَكُمُ الَّذِي شَرَطْتُ، فَعَمِلُوا حَتَّى إِذَا كَانَ حِينَ صَلاَةِ الْعَصْرِ قَالُوا لَكَ مَا عَمِلْنَا‏.‏ فَاسْتَأْجَرَ قَوْمًا فَعَمِلُوا بَقِيَّةَ يَوْمِهِمْ حَتَّى غَابَتِ الشَّمْسُ، وَاسْتَكْمَلُوا أَجْرَ الْفَرِيقَيْنِ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்-ம்கள், யூதர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் நிலை, (குறிப்பிட்ட கூ-க் குக் காலையி-ருந்து) இரவுவரை தமக்கு வேலை செய்வதற்காக ஒரு மனிதரால் அமர்த்தப்பட்ட கூட்டத்தாரின் நிலையை ஒத்திருக்கிறது. (அவர் முத-ல் ஒரு குழுவினரை கூ-க்கு அமர்த்தினார்;) அவர்கள் நண்பகல்வரை வேலை செய்துவிட்டு, “எங்களுக்கு உமது கூ- தேவையில்லை” என்று கூறிவிட்டனர். பிறகு அந்த மனிதர் இன்னொரு குழுவினரைக் கூ-க்கு அமர்த்தி, “இன்று எஞ்சியுள்ள நேரத்தைப் பூர்த்தி செய்யுங்கள். (முதலாவது குழுவின ருக்கு) நான் தருவதாகப் பேசிய கூ-யை உங்களுக்குத் தருகிறேன்” என்றார். அதன்படி அவர்கள் வேலை செய்ய(த் தொடங்கி) அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தபோது, “உமக்காக நாங்கள் செய்த வேலை (வீணாகட்டும்)” என்றனர். எனவே, அந்த மனிதர் மற்றொரு குழுவினரை வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் அன்று (அஸ்ரி-ருந்து) சூரியன் மறையும்வரை உள்ள எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால் அவர்கள் முத-ரண்டு குழுவினரின் கூ-யையும் (சேர்த்து) முழுமையாகப் பெற்றுக்கொண்டனர்.11 இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 559 — Sahih al Bukhari 9:36
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو النَّجَاشِيِّ، صُهَيْبٌ مَوْلَى رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَقُولُ كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيُبْصِرُ مَوَاقِعَ نَبْلِهِ‏.‏
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவோம். பிறகு எங்களில் ஒருவர் திரும்பிச் செல்லும் போது, அவர் தமது அம்பு விழும் இடத்தைப் பார்க்க முடியும். (அந்த அளவுக்கு வெளிச்சமிருக்க, ஆரம்ப நேரத்திலேயே மஃக்ரிப் தொழுவோம்.) அத்தியாயம் :
ஹதீஸ் 560 — Sahih al Bukhari 9:37
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ، قَالَ قَدِمَ الْحَجَّاجُ فَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَالْعَصْرَ وَالشَّمْسُ نَقِيَّةٌ، وَالْمَغْرِبَ إِذَا وَجَبَتْ، وَالْعِشَاءَ أَحْيَانًا وَأَحْيَانًا، إِذَا رَآهُمُ اجْتَمَعُوا عَجَّلَ، وَإِذَا رَآهُمْ أَبْطَوْا أَخَّرَ، وَالصُّبْحَ كَانُوا ـ أَوْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّيهَا بِغَلَسٍ‏.‏
முஹம்மத் பின் அம்ர் பின் ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மதீனாவின் ஆட்சியராக) வந்தார் (அவர் தொழுகை களைத் தாமதப்படுத்தி தொழுவித்தார்).13 அப்போது நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரம் பற்றிக்) கேட்டோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் நண்பக-ல் லுஹ்ர் தொழுவார்கள். சூரியன் (வெளிச் சமோ வெப்பமோ குறையாமல்) தெளிவாக இருக்கும்போது அஸ்ர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃக்ரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் (பின்னேரத்திலும்) சில நேரம் (முன்னேரத்திலுமாகச் சூழ்நிலைக்குத் தக்கவாறு) தொழுவார்கள். மக்கள் (முன்னேரத்திலேயே) குழுமியிருக்கக் கண்டால், ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். மக்கள் தாமதமாக வரக் கண்டால் தாமதப்படுத்துவார்கள். சுப்ஹு தொழுகையை ‘மக்கள்’ அல்லது ‘நபி (ஸல்) அவர்கள்’ இருள் இருக்கவே (காலை வெளிச்சம் வருவதற்கு முன்பே) தொழு பவர்களாய் இருந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 561 — Sahih al Bukhari 9:38
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْمَغْرِبَ إِذَا تَوَارَتْ بِالْحِجَابِ‏.‏
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: சூரியன் அடிவானில் மறைந்ததும் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுபவர்களாக இருந்தோம். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.