حَدَّثَنَا مُحَمَّدٌ ـ يَعْنِي ابْنَ مُقَاتِلٍ ـ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي غَالِبٌ الْقَطَّانُ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالظَّهَائِرِ فَسَجَدْنَا عَلَى ثِيَابِنَا اتِّقَاءَ الْحَرِّ.
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நண்பகல் நேரங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக் குப்பின் (லுஹ்ர்) தொழும்போது, வெப்பத் தைத் தவிர்ப்பதற்காக எங்கள் ஆடையின் (ஒரு பகுதியின்) மீது சிரவணக்கம் (சஜ்தா) செய்பவர்களாக இருந்தோம். அத்தியாயம் :
ஹதீஸ் 543 — Sahih al Bukhari 9:20
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثَمَانِيًا الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ. فَقَالَ أَيُّوبُ لَعَلَّهُ فِي لَيْلَةٍ مَطِيرَةٍ. قَالَ عَسَى.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) எட்டு ரக்அத்களாகவும் மஃக்ரிபையும் இஷா வையும் (சேர்த்து) ஏழு ரக்அத்களாகவும் தொழு(வித்)தார்கள். இதன் அறிவிப்பாளரான ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம் அய்யூப் அஸ் ஸக்தியானீ (ரஹ்) அவர்கள், “இ(வ்வாறு சேர்த்துத் தொழுத)து மழைக் காலத்தில் நடந்திருக்கலாமோ?” என்று கேட்டார்கள். அதற்கு ஜாபிர் (ரஹ்) அவர்கள் ‘இருக் கலாம்’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 544 — Sahih al Bukhari 9:21
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ لَمْ تَخْرُجْ مِنْ حُجْرَتِهَا. وَقَالَ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ مِنْ قَعْرِ حُجْرَتِهَا.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனது அறையி-ருந்து சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர் களது அறிவிப்பில், ‘எனது அறையின் மத்தியிலிருந்து விலகாத நிலையில்’ என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 545 — Sahih al Bukhari 9:22
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا، لَمْ يَظْهَرِ الْفَىْءُ مِنْ حُجْرَتِهَا.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: சூரிய ஒளி எனது அறைக்குள் இருந்துகொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்; அப்போது எனது அறையில் நிழல் படிந்திருக்காது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: சூரிய ஒளி எனது அறைக்குள் விழுந்துகொண்டும் நிழல் இன்னும் (கிழக்குப் பக்கச் சுவரில்) விழாமலும் உள்ள நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுவார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மா-க் (ரஹ்), யஹ்யா பின் சயீத் (ரஹ்), ஷுஐப் பின் அபீஹம்ஸா (ரஹ்), இப்னு அபீஹஃப்ஸா (முஹம்மத் பின் மைஸரா அல்பஸரீ- ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், ‘சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில்’ என்று இடம்பெற்றுள்ளது.8 அத்தியாயம் :
சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் அபூபர்ஸா (நள்லா பின் உபைத்-ர-) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களிடம் என் தந்தை, “கடமையான தொழுகையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள், “-நீங்கள் முதல் தொழுகை என்று அழைக்கும்- நண்பகல் (லுஹ்ர்) தொழுகையைச் சூரியன் (நடுவானி-ருந்து மேற்கு நோக்கி) சாயும்போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸ்ர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக்கோடி யிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பி சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சம் குறையாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும்” என்று கூறினார்கள். -அறிவிப்பாளர் சய்யார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மஃக்ரிப் (தொழுகையின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன். தொடர்ந்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘அல்அ(த்)தமா’ என்று நீங்கள் அழைக்கும் இஷா தொழுகையைத் தாமதப்படுத்துவதையே நபி (ஸல்) அவர்கள் விரும்புவார்கள். இஷா தொழு கைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப்பின் பேசிக்கொண்டிருப் பதையும் நபி (ஸல்) அவர்கள் வெறுப் பார்கள். (எங்களில்) ஒருவர் தமக்குப் பக்கத்தி-ருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் வைகறை (சுப்ஹு) தொழுகையை முடித்துத் திரும்புவார்கள். (வைகறைத் தொழுகையில்) அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்)வரை ஓதுவார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு (மதீனாவுக்கு அருகிலுள்ள ‘குபா’ பகுதியில் வசிக்கும்) பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடம் எங்களில் சிலர் சென்றால், அக்குலத்தார் அஸ்ர் தொழுதுகொண்டிருப்பதைக் காண்போம். அத்தியாயம் :
அபூஉமாமா (அஸ்அத் பின் சஹ்ல் பின் ஹுனைஃப்-ர-) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுடன் லுஹ்ர் தொழுகையை (அதன் இறுதி நேரத்தில்) தொழுதோம். பின்னர் (அங்கிருந்து) புறப்பட்டு (மதீனாவின் துணை ஆட்சியராக இருந்த) அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம் சென்றபோது, அவர்கள் அஸ்ர் தொழுகையை (அதன் ஆரம்ப நேரத்தில்) தொழுதுகொண்டிருப்பதைக் கண்டோம். அப்போது நான் (மரியாதை நிமித்தம்) ‘என் தந்தையின் சகோதரரே!’ (என்று அழைத்து) “இப்போது நீங்கள் தொழுதது எந்தத் தொழுகை (லுஹ்ரா? அல்லது அஸ்ரா?)” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “(இது) அஸ்ர் தொழுகை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இவ்வாறே (ஆரம்ப நேரத்தில்) நாங்கள் தொழுபவர்களாக இருந்தோம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். அப்போது சூரியன் உயர்ந்தே இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் நிகழாமல்) தெளிவாகவே இருக்கும். (நஜ்த் திசையி-ருந்த) மேட்டுப்பாங்கான (கிராமப்) பகுதிகளுக்குச் செல்பவர் அங்கே இருப்பவர்களிடம் சென்றடையும்போது, சூரியன் உயர்ந்தே இருக்கும். அந்த மேட்டுப்பாங்கான (கிராமப்) பகுதிகளில் சில மதீனாவி-ருந்து சுமார் நான்கு மைல் தொலைவில் அமைந்திருந்தன. அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவோம். பிறகு எங்களில் (மேட்டுப் பாங்கான பகுதிகளில் ஒன்றான) ‘குபா’விற்குச் செல்பவர் அங்கே சென்றடைவார். அப்போதும் சூரியன் உயரத்திலேயே இருக்கும்.9 அத்தியாயம் :