நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முறைப்படி சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். நாயைப் போன்று கைகளைப் படுக்க வைக்கலாகாது. (தொழும்போது எச்சில் வந்துவிட்டால்) தமக்கு முன்புறமோ, வலப் புறமோ துப்பலாகாது. ஏனெனில், தொழுதுகொண்டிருப்பவர், தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெப்பம் கடுமையாகும்போது, வெப்பம் தணியும்வரை (லுஹ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமை யான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச் சால் உண்டாகிறது.5 இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெப்பம் கடுமையாகும்போது, வெப்பம் தணியும்வரை (லுஹ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமை யான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச் சால் உண்டாகிறது.5 இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 535 — Sahih al Bukhari 9:13
حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُهَاجِرِ أَبِي الْحَسَنِ، سَمِعَ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ أَذَّنَ مُؤَذِّنُ النَّبِيِّ صلى الله عليه وسلم الظُّهْرَ فَقَالَ " أَبْرِدْ أَبْرِدْ ـ أَوْ قَالَ ـ انْتَظِرِ انْتَظِرْ ". وَقَالَ " شِدَّةُ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ ". حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ.
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை நாங்கள் பயணத்தில் இருந்தோம். அப்போது) நபி (ஸல்) அவர்களின் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின் பிலால் (ரலி) அவர்கள்) லுஹ்ர் தொழுகைக்கு ‘பாங்கு’ சொல்ல முற்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘வெப்பம் தணியட்டும்; வெப்பம் தணியட் டும்’ அல்லது ‘பொறுப்பீராக; பொறுப்பீராக’ என்று கூறிவிட்டு, “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டா கிறது. வெப்பம் கடுமையாகும்போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள்” என்று கூறினார்கள். (எனவே நாங்கள் லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தினோம்). எந்த அளவுக்கென்றால் மணல் மேடுகளிலிருந்து நிழல் படிவதை நாங்கள் பார்த்தோம். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லுஹ்ர் தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 539 — Sahih al Bukhari 9:16
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا مُهَاجِرٌ أَبُو الْحَسَنِ، مَوْلًى لِبَنِي تَيْمِ اللَّهِ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ لِلظُّهْرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَبْرِدْ ". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ " أَبْرِدْ ". حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ ". وَقَالَ ابْنُ عَبَّاسٍ تَتَفَيَّأُ تَتَمَيَّلُ.
அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள்), லுஹ்ர் தொழுகைக்காக பாங்கு சொல்ல முற்பட்டபோது, (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். பிறகு (சிறிது நேரம் கழித்து) மீண்டும் அவர் ‘பாங்கு’ சொல்ல முற்பட்டபோது அவரிடம், “வெப்பம் தணியட்டும்” என்று மணல் மேடுகளிலி ருந்து நிழல் படிவதை நாங்கள் பார்க்கும் வரை (இவ்வாறு) கூறினார்கள். பிறகு, “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது. எனவே, வெப்பம் கடுமையாகும்போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள்” என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘நிழல் படிதல்’ (‘தத்தஃபய்யஉ’) என்றால், ‘நிழல் சாய்தல்’ (தத்தமய்யலு) என்று பொருள். அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த (நண்பகலின்)போது (தமது இல்லத்தி-ருந்து) புறப்பட்டு வந்து லுஹ்ர் தொழு(வித்) தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீதேறி நின்று மறுமை நாளை நினைவூட்டிப் பேசினார்கள். அந்நாளில் அதிர்ச்சியூட்டும் பல சம்பவங்கள் நிகழும் என்று குறிப்பிட்டார்கள். பிறகு (அவர்கள் விரும்பாத பல்வேறு கேள்விகளை மக்கள் வற்புறுத்திக் கேட்டபோது), “(இன்று) யார் எது குறித்துக் கேட்க விரும்பினாலும் கேட்கட்டும். இந்த இடத்தில் நான் இருக்கும்வரை எது குறித்து நீங்கள் என்னிடம் கேட்டாலும் அது குறித்து உங்களுக்கு நான் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன்” என்று (கோபத்துடன்) கூறினார்கள். எனவே, மக்கள் அதிகமாக அழலாயினர். நபி (ஸல்) அவர்களோ, “கேளுங்கள் என்னிடம்” என்று அடிக்கடி கூறிக்கொண்டி ருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் எழுந்து, “என் தந்தை யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஹுதாஃபாதான் உம்முடைய தந்தை” என்று பதிலளித்துவிட்டு மீண்டும், “கேளுங்கள் என்னிடம்” என்று அடிக்கடி கூறலானார்கள். (நபியவர்களின் கோபத்தை அறிந்துகொண்ட) உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டோம்” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அமைதியானார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள், “சற்றுமுன் (நான் தொழுதுகொண்டிருந்தபோது) இதோ இந்தச் சுவரில் சொர்க்கமும் நரகமும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. (இந்த இடத்தில் நான் கண்ட காட்சியைப் போன்று) நன்மையிலும் தீமையிலும் வேறெந்தக் காட்சியையும் நான் (ஒருபோதும்) கண்டதில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூபர்ஸா நள்லா பின் உபைத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் ஒருவர் தம் பக்கத்தி-ருப்ப வரை அறிந்துகொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் நபி (ஸல்) அவர்களை சுப்ஹு தொழுவிப்ப வராக இருந்தார்கள். அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்)வரை சுப்ஹு தொழுகையில் ஓதுவார்கள். சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல் நேரத்தின்)போது லுஹ்ரை தொழுவிப்பார்கள். அடுத்து எங்களில் ஒருவர் (தொழுது விட்டு) மதீனாவின் கோடியிலுள்ள (தமது இல்லத்துக்குத்) திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெப்பம் தணியாமல் வெளிச்சம் குறையாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும். (அந்த அளவுக்கு நேரம் இருக்கும்போது) அஸ்ர் தொழுவிப்பார்கள். -இதன் அறிவிப்பாளரான அபுல் மின்ஹால் (சய்யார் பின் சலாமா அல்பஸ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள். ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன். “இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி(யில் முதல் பகுதி)வரை தாமதப்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் குறையாகக் கருதமாட்டார்கள்” என்று அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள். பின்னர் (ஒரு முறை) ‘பாதி இரவுவரை’ என்று அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், முஆத் பின் முஆத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார் கள்: “பின்னர் ஒரு முறை அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர் ‘அல்லது இரவில் மூன்றில் ஒரு பகுதிவரை’ என்று (ஐயப்பாட்டுடன்) அறிவித்தார்” என ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :