Qurani·قرآني
தமிழ்

தொழுகை நேரங்கள்

81 ஹதீஸ்கள் · #522–602

ஹதீஸ் 572 — Sahih al Bukhari 9:48
حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسٍ، قَالَ أَخَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةَ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ، ثُمَّ صَلَّى ثُمَّ قَالَ ‏ "‏ قَدْ صَلَّى النَّاسُ وَنَامُوا، أَمَا إِنَّكُمْ فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُوهَا ‏"‏‏.‏ وَزَادَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي حُمَيْدٌ سَمِعَ أَنَسًا كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ لَيْلَتَئِذٍ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள் இரவு) இஷா தொழுகையைப் பாதி இரவுவரை தாமதப்படுத்தினார்கள். பிறகே தொழு(வித்)தார்கள். பின்னர், “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். அறிந்துகொள்ளுங்கள்: ஒரு தொழுகைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கும்வரை நீங்கள் அத்தொழு கையிலேயே உள்ளீர்கள் (என்றே கருதப்படும்)” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.21 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “அன்றிரவு நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த மோதிரம் மின்னியதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள் ளது” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள் எனக் கூடுதலாக இடம்பெற் றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 573 — Sahih al Bukhari 9:49
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، قَالَ لِي جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ نَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ فَقَالَ ‏"‏ أَمَا إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا، لاَ تُضَامُّونَ ـ أَوْ لاَ تُضَاهُونَ ـ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ، وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا ‏"‏‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏"‏‏.‏
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பௌர்ணமி இரவில் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் நிலாவைக் கூர்ந்து பார்த்தபடி, “அறிந்து கொள்ளுங்கள்! இந்த நிலாவை நீங்கள் ‘நெரிசல் இல்லாமல்’ அல்லது ‘குழப்பமடையாமல்’ காண்பதைப் போன்று உங்கள் இறைவனையும் நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழுகையிலும், சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் (ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் இயலுமானால், அவ்வாறே செய்யுங்கள் (இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று கூறினார்கள். “சூரியன் உதயமாகும் முன்னரும் மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்” (50:39) எனும் இறைவசனத்தை ஓதி(க்காட்டி)னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 574 — Sahih al Bukhari 9:50
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنِي أَبُو جَمْرَةَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ ‏"‏‏.‏ وَقَالَ ابْنُ رَجَاءٍ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ أَبِي جَمْرَةَ أَنَّ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ أَخْبَرَهُ بِهَذَا‏.‏ حَدَّثَنَا إِسْحَاقُ، عَنْ حَبَّانَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பக-ன் இரு முனைகளிலுள்ள (ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) குளிர்ந்த இரு நேரத் தொழுகைகளை யார் தொழுகின் றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார். இதை அபூமூசா (அப்துல்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ-ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 575 — Sahih al Bukhari 9:51
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، حَدَّثَهُ أَنَّهُمْ، تَسَحَّرُوا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ قَامُوا إِلَى الصَّلاَةِ‏.‏ قُلْتُ كَمْ بَيْنَهُمَا قَالَ قَدْرُ خَمْسِينَ أَوْ سِتِّينَ ـ يَعْنِي آيَةً ـ ح‏.‏
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் மக்கள் நோன்பு நோற்க உணவருந்தி (சஹர் செய்து)விட்டுப் பின்னர் ஃபஜ்ர் தொழு கைக்காகத் தயாராவார்கள். இதை ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (ஸைத் (ரலி) அவர்களிடம்), “உணவு உட்கொண்டு (சஹர் செய்து) முடிப்பதற்கும் தொழுகைக்(காக இப்னு உம்மி மக்(த்)தூம் (ரலி) அவர்கள் பாங்கு செல்வதற்)கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) அளவு நேரம் (இடைவெளி இருந்தது)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 576 — Sahih al Bukhari 9:52
حَدَّثَنَا حَسَنُ بْنُ صَبَّاحٍ، سَمِعَ رَوْحًا، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَزَيْدَ بْنَ ثَابِتٍ تَسَحَّرَا، فَلَمَّا فَرَغَا مِنْ سَحُورِهِمَا قَامَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الصَّلاَةِ فَصَلَّى‏.‏ قُلْنَا لأَنَسٍ كَمْ كَانَ بَيْنَ فَرَاغِهِمَا مِنْ سَحُورِهِمَا وَدُخُولِهِمَا فِي الصَّلاَةِ قَالَ قَدْرُ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً‏.‏
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் (ஒன்றாக நோன்பு நோற்க) சஹர் உணவு உட் கொண்டனர். அவர்கள் இருவரும் சஹர் செய்து முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து (சென்று) தொழுதார்கள். (இதன் அறிவிப்பாளரான) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அவர்கள் இருவரும் சஹர் உணவு உட்கொண்டு முடிப்பதற்கும் தொழுகை யில் ஈடுபடுவதற்கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “ஒரு மனிதர் ஐம்பது இறைவசனங்கள் ஓதும் அளவு நேரம் (இடைவெளி இருந்தது)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 577 — Sahih al Bukhari 9:53
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ أَخِيهِ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ، يَقُولُ كُنْتُ أَتَسَحَّرُ فِي أَهْلِي ثُمَّ يَكُونُ سُرْعَةٌ بِي أَنْ أُدْرِكَ صَلاَةَ الْفَجْرِ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் குடும்பத்தாருடன் நோன்பு நோற்க (சஹர்) உணவு அருந்திவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் ஃபஜ்ர் (வைகறைத்) தொழுகையில் கலந்துகொள்வதற்காக அவசர(மாகப் புற)ப்படுவேன். அத்தியாயம் :
ஹதீஸ் 578 — Sahih al Bukhari 9:54
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ قَالَتْ، كُنَّ نِسَاءُ الْمُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الْفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الْغَلَسِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகை யில் பங்கு பெறுபவர்களாக இருந்தனர்; தொழுகையை முடித்துக்கொண்டு தம் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் (ஆணா. பெண்ணா என்று) அறிந்து கொள்ள முடியாது.22 அத்தியாயம் :
ஹதீஸ் 579 — Sahih al Bukhari 9:55
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، وَعَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، وَعَنِ الأَعْرَجِ، يُحَدِّثُونَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் உதிப்பதற்குமுன் சுப்ஹு தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்து கொண்டவர், சுப்ஹு தொழுகையை அடைந்துகொண்டுவிட்டார். சூரியன் மறைவதற்குமுன் அஸ்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்துகொண்டவர், அஸ்ர் தொழுகையை அடைந்துகொண்டுவிட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.23 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 580 — Sahih al Bukhari 9:56
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلاَةِ فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற் குரிய நேரத்தில்) அடைந்துகொண்டவர், அந்தத் தொழுகையை அடைந்து கொண்டுவிட்டார்.24 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 581 — Sahih al Bukhari 9:57
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ‏.‏ حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَبَا الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ حَدَّثَنِي نَاسٌ، بِهَذَا‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் இருந்து சூரியன் (உயர்ந்து) சுடர்விடும்வரை தொழுவதை யும், அஸ்ர் தொழுகைக்குப் பின்னால் சூரியன் மறையும்வரை தொழுவதையும் தடை செய்தார்கள் என (மார்க்கப் பற்று, வாய்மை ஆகியவற்றில்) திருப்திக்குரிய சிலர் என்னிடம் உறுதிபடக் கூறினர். அவர்களில் என்னிடம் மிகவும் திருப்திக் குரியவர் உமர் (ரலி) அவர்கள் ஆவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “மக்கள் சிலர் இவ்வாறு எனக்கு அறிவித்தனர்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.