அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டு வியாபார முறைகளையும், ஆடை அணியும் இரண்டு முறைகளை யும், இரண்டு நேரங்களில் தொழுவதையும் தடை செய்தார்கள்; ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) உதயமாகும்வரையிலும், அஸ்ர் தொழு கைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) மறையும்வரையிலும் தொழ வேண்டாமெனத் தடை செய்தார்கள். ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடு வதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டு வைத்துக்கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். முனாபதா, முலாமஸா எனும் இரண்டு வியாபார முறைகளையும் தடை செய்தார்கள்.26 அத்தியாயம் :
ஹதீஸ் 585 — Sahih al Bukhari 9:60
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَتَحَرَّى أَحَدُكُمْ فَيُصَلِّي عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَلاَ عِنْدَ غُرُوبِهَا ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையும் சூரியன் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்து தொழ வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுப்ஹு தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் இல்லை. அஸ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) மறையும்வரை எந்தத் தொழுகையும் இல்லை. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நீங்கள் ஒரு தொழுகையைத் தொழுது கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்த நாங்கள், நபி (ஸல்) அவர்கள் அத்தொழுகையைத் தொழக் கண்டதில்லை. (ஏன், நீங்கள் தொழுது வரும்) அந்த இரு ரக்அத்களைத் தொழ வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்” என முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதாவது அஸ்ருக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 588 — Sahih al Bukhari 9:63
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ خُبَيْبٍ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَتَيْنِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரண்டு நேரங்களில் தொழ வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்: 1) ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) உதயமாகும் வரையிலும். 2) அஸ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து (முழுமையாகச்) சூரியன் மறையும் வரையிலும். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தோழர்கள் எவ்வாறு (எந்நேரத் தில்) தொழக் கண்டேனோ அவ்வாறே நான் தொழு(து வரு)கின்றேன். இரவிலும் பக-லும் தாம் விரும்பியதைத் தொழும் எவரையும் நான் தடுக்கமாட்டேன். ஆயினும், (சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ (தொழுவதற்காக) நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களை இறக்கச் செய்த (இறை)வன் மீதாணையாக! (அஸ்ர் தொழு கைக்குப் பின்னுள்ள அந்த) இரண்டு ரக்அத் தொழுகையை அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் விட்டுவிடவில்லை. தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்தித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் -தாம் அஸ்ருக்குப் பின்னர் தொழும் அந்த இரண்டு ரக்அத்களை- அமர்ந்து கொண்டே தொழுவார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்களையும் தொழுவார்கள்; ஆனால், பள்ளிவாச-ல் அதைத் தொழமாட்டார்கள். தம் சமுதாயத் தாருக்குச் சிரமம் ஏற்படுத்துவதை அஞ்சி யதே இதற்குக் காரணம். தம் சமுதாயத் தாருக்கு எளிதானதையே அவர்கள் விரும்புவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 591 — Sahih al Bukhari 9:66
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَتْ، عَائِشَةُ ابْنَ أُخْتِي مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم السَّجْدَتَيْنِ بَعْدَ الْعَصْرِ عِنْدِي قَطُّ.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் (என்னிடம்), “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அஸ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு சஜ்தாக்கள் (ரக்அத்கள்) தொழுவதை என்னிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை” என்று சொன்னார்கள். அத்தியாயம் :