Qurani·قرآني
தமிழ்

தொழுகை நேரங்கள்

81 ஹதீஸ்கள் · #522–602

ஹதீஸ் 592 — Sahih al Bukhari 9:67
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ رَكْعَتَانِ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَعُهُمَا سِرًّا وَلاَ عَلاَنِيَةً رَكْعَتَانِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ، وَرَكْعَتَانِ بَعْدَ الْعَصْرِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், இரண்டு தொழுகைகளை இரகசியமாகவும் விட்டதில்லை; பகிரங்கமாகவும் விட்டதில்லை. (அவை:) சுப்ஹு தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள், அஸ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 593 — Sahih al Bukhari 9:68
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ رَأَيْتُ الأَسْوَدَ وَمَسْرُوقًا شَهِدَا عَلَى عَائِشَةَ قَالَتْ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْتِينِي فِي يَوْمٍ بَعْدَ الْعَصْرِ إِلاَّ صَلَّى رَكْعَتَيْنِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழு கைக்குப்பின் எந்த நாளில் என்னிடம் (என் வீட்டிற்கு) வந்தாலும் அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்த தில்லை.28 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 594 — Sahih al Bukhari 9:69
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى ـ هُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ـ عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّ أَبَا الْمَلِيحِ، حَدَّثَهُ قَالَ كُنَّا مَعَ بُرَيْدَةَ فِي يَوْمٍ ذِي غَيْمٍ فَقَالَ بَكِّرُوا بِالصَّلاَةِ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ تَرَكَ صَلاَةَ الْعَصْرِ حَبِطَ عَمَلُهُ ‏"‏‏.‏
அபுல்மலீஹ் (ஆமிர் பின் உசாமா- ரஹ்) அவர்கள் கூறியதாவது: மேகமூட்டம் இருந்த ஒரு நாளில் புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்களுடன் (ஒரு போரில்) நாங்கள் இருந்தோம். அப்போது அவர்கள், “அஸ்ர் தொழுகையை விரைவாக (அதன் ஆரம்ப நேரத்திலேயே) நிறைவேற்றுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் ‘யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் அழிந்துவிட்டன’ என்று கூறியுள்ளார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 595 — Sahih al Bukhari 9:70
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ سِرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةً فَقَالَ بَعْضُ الْقَوْمِ لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ أَخَافُ أَنْ تَنَامُوا عَنِ الصَّلاَةِ ‏"‏‏.‏ قَالَ بِلاَلٌ أَنَا أُوقِظُكُمْ‏.‏ فَاضْطَجَعُوا وَأَسْنَدَ بِلاَلٌ ظَهْرَهُ إِلَى رَاحِلَتِهِ، فَغَلَبَتْهُ عَيْنَاهُ فَنَامَ، فَاسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَدْ طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَقَالَ ‏"‏ يَا بِلاَلُ أَيْنَ مَا قُلْتَ ‏"‏‏.‏ قَالَ مَا أُلْقِيَتْ عَلَىَّ نَوْمَةٌ مِثْلُهَا قَطُّ‏.‏ قَالَ ‏"‏ إِنَّ اللَّهَ قَبَضَ أَرْوَاحَكُمْ حِينَ شَاءَ، وَرَدَّهَا عَلَيْكُمْ حِينَ شَاءَ، يَا بِلاَلُ قُمْ فَأَذِّنْ بِالنَّاسِ بِالصَّلاَةِ ‏"‏‏.‏ فَتَوَضَّأَ فَلَمَّا ارْتَفَعَتِ الشَّمْسُ وَابْيَاضَّتْ قَامَ فَصَلَّى‏.‏
அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (பயணம்) சென்றுகொண்டிருந் தோம். அப்போது மக்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! (பயணத்தை சற்று நிறுத்தி) எங்களை இளைப்பாறச் செய்ய லாமே!” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (ஃபஜ்ர்) தொழாமல் உறங்கிவிடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள், “உங்களை நான் விழிக்கச்செய்கிறேன்” என்று கூறினார்கள். எனவே, அனைவரும் (பயனத்தை நிறுத்தி) படுத்துக்கொண்டனர். பிலால் (ரலி) அவர்கள் தமது முதுகைத் தமது வாகனத்தின் மீது சாய்த்துக்கொண்டி ருந்தபோது தம்மையும் மீறி கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதித்துவிட்ட நிலையில், நபி (ஸல்) அவர்கள் (முதன் முத-ல்) உறக்கத்தி-ருந்து விழித்தார்கள். உடனே, “பிலால்! நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். “இதுபோன்று உறக்கம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை” என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ், தான் நாடும்போது உங்கள் உயிர்களைக் கைப்பற்றிக்கொள்கிறான்; தான் நாடும்போது உங்களிடம் திருப்பித் தருகின்றான்” என்று கூறிவிட்டு, “பிலால்! எழுந்து, பாங்கு சொல்- தொழுகைக்கு மக்களை அழைப்பீராக!” என்று கூறினார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, சூரியன் உயர்ந்து தெளிவாகத் தென்பட்ட போது (ஃபஜ்ர்) தொழு(கையை முன்னின்று நடத்)திடலானார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 596 — Sahih al Bukhari 9:71
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، جَاءَ يَوْمَ الْخَنْدَقِ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ وَاللَّهِ مَا صَلَّيْتُهَا ‏"‏‏.‏ فَقُمْنَا إِلَى بُطْحَانَ، فَتَوَضَّأَ لِلصَّلاَةِ، وَتَوَضَّأْنَا لَهَا فَصَلَّى الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது சூரியன் மறைந்தபின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷி குல இறைமறுப் பாளர்களை ஏசிக்கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகையைத் தொழ முடியாமல் போய் விட்டது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் (இதுவரை) அஸ்ர் தொழவில்லை” என்று கூறினார்கள். பின்னர் ‘புத்ஹான்’ எனும் பள்ளத் தாக்கை நோக்கி நாங்கள் சென்றோம். அங்கு தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்தோம். சூரியன் மறைந்தபிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பின்னர் மஃக்ரிப் தொழுதார்கள். (அவர்களுக்குப்பின் நின்று நாங்களும் தொழுதோம்). அத்தியாயம் :
ஹதீஸ் 597 — Sahih al Bukhari 9:72
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا، لاَ كَفَّارَةَ لَهَا إِلاَّ ذَلِكَ ‏"‏‏.‏ ‏{‏وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي‏}‏ قَالَ مُوسَى قَالَ هَمَّامٌ سَمِعْتُهُ يَقُولُ بَعْدُ ‏{‏وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي‏}‏‏.‏وَقَالَ حَبَّانُ حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் ஒரு தொழுகையை(த் தொழ) மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை. (அல்லாஹ் கூறுகின்றான்:) என்னை நினைவுகூரும் பொருட்டு தொழு கையை நிலைநிறுத்துவீராக. (20:14)30 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘வஅகிமிஸ் ஸலாத்த -திக்ரீ’ எனும் வாக்கியத்தை) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘வ அகிமிஸ் ஸலாத்த -த்திக்ரா’ என்று ஓதக் கேட்டேன். (பொருள் ஒன்றே.) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 598 — Sahih al Bukhari 9:73
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى ـ هُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ـ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، قَالَ جَعَلَ عُمَرُ يَوْمَ الْخَنْدَقِ يَسُبُّ كُفَّارَهُمْ وَقَالَ مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ حَتَّى غَرَبَتْ‏.‏ قَالَ فَنَزَلْنَا بُطْحَانَ، فَصَلَّى بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ‏.‏
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது உமர் (ரலி) அவர்கள் (தங்களுடன் போரிட்ட குறைஷி) இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே (வந்து), “சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகையைத் தொழ முடியாமல் போய் விட்டது” என்று கூறினார்கள். எனவே, நாங்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். சூரியன் மறைந்த பின்னர் (எங்களுக்கு இமாமாக நின்று) நபி (ஸல்) அவர்கள் (முத-ல் அஸ்ர் தொழுகை யைத்) தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 599 — Sahih al Bukhari 9:74
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا عَوْفٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الْمِنْهَالِ، قَالَ انْطَلَقْتُ مَعَ أَبِي إِلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ فَقَالَ لَهُ أَبِي حَدِّثْنَا كَيْفَ، كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْمَكْتُوبَةَ قَالَ كَانَ يُصَلِّي الْهَجِيرَ وَهْىَ الَّتِي تَدْعُونَهَا الأُولَى حِينَ تَدْحَضُ الشَّمْسُ، وَيُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَى أَهْلِهِ فِي أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ، وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ‏.‏ قَالَ وَكَانَ يَسْتَحِبُّ أَنْ يُؤَخِّرَ الْعِشَاءَ‏.‏ قَالَ وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا، وَكَانَ يَنْفَتِلُ مِنْ صَلاَةِ الْغَدَاةِ حِينَ يَعْرِفُ أَحَدُنَا جَلِيسَهُ، وَيَقْرَأُ مِنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ‏.‏
அபுல் மின்ஹால் (சய்யார் பின் சலாமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (நள்லா பின் உபைத்-ர-) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களிடம் என் தந்தை, “கடமையான தொழுகைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு (எந்நேரத்தில்) தொழுவார்கள் என்று எங்களுக்கு அறிவியுங்கள்” எனக் கேட்டார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ‘முதல் தொழுகை’ என்று அழைக்கும் நண்பகல் (லுஹ்ர்) தொழுகையைச் சூரியன் (நடுவானி-ருந்து மேற்கு நோக்கி) சாயும்போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனா வின் கடைக் கோடியிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குறையாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும். -மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.- இஷா தொழுகையைப் பிற்படுத்து வதையே நபி (ஸல்) அவர்கள் விரும்பு வார்கள். இஷா தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வெறுப்பார்கள். எங்களில் ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் வைகறைத் தொழுகை (சுப்ஹு தொழுகை)யை முடித்துத் திரும்புவார்கள். (வைகறைத் தொழுகையில்) அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்)வரை ஓதுவார்கள்.31 அத்தியாயம் :
ஹதீஸ் 600 — Sahih al Bukhari 9:75
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ، قَالَ حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، قَالَ انْتَظَرْنَا الْحَسَنَ وَرَاثَ عَلَيْنَا حَتَّى قَرُبْنَا مِنْ وَقْتِ قِيَامِهِ، فَجَاءَ فَقَالَ دَعَانَا جِيرَانُنَا هَؤُلاَءِ‏.‏ ثُمَّ قَالَ قَالَ أَنَسٌ نَظَرْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ حَتَّى كَانَ شَطْرُ اللَّيْلِ يَبْلُغُهُ، فَجَاءَ فَصَلَّى لَنَا، ثُمَّ خَطَبَنَا فَقَالَ ‏ "‏ أَلاَ إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا ثُمَّ رَقَدُوا، وَإِنَّكُمْ لَمْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاَةَ ‏"‏‏.‏ قَالَ الْحَسَنُ وَإِنَّ الْقَوْمَ لاَ يَزَالُونَ بِخَيْرٍ مَا انْتَظَرُوا الْخَيْرَ‏.‏ قَالَ قُرَّةُ هُوَ مِنْ حَدِيثِ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
குர்ரா பின் கா-த் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு நாள் இரவு) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) (அவர்களிடம் மார்க்கக் கல்வி பயில) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம். அவர்கள் (வழக்கத்திற்கு மாறாக அன்று) எங்களிடம் தாமதமாக வந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (வழக்கமாக அவர்கள் எங்களுடன் அமர்ந்துவிட்டு) எழுந்து செல்லும் நேரமும் நெருங்கியது. அப்போது அவர்கள் வந்து, “எம்முடைய இந்த அண்டை வீட்டார் எம்மை அழைத்தனர் (அதனால் தாமதம் ஏற்பட்டுவிட்டது)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) சொன்னார்கள்: அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஒரு (நாள்) இரவில் (இஷா தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம். நள்ளிரவு நேரம் ஆகும்போது நபி (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு இஷா தொழுகை நடத்தினார்கள். பின்னர் எங்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள்: (உங்களைத் தவிர மற்ற) மக்கள் அனைவரும் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்வரை அத்தொழுகையில் நீங்கள் உள்ளீர்கள் (என்றே கருதப்படும்)” என்று கூறினார்கள். தொடர்ந்து ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நன்மையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்வரை மக்கள் அந்த நன்மையிலேயே இருக்கிறார்கள். அறிவிப்பாளர் குர்ரா பின் கா-த் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இ(ந்த இறுதி கூற்றான)து, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸில் உள்ளதாகும். அத்தியாயம் :
ஹதீஸ் 601 — Sahih al Bukhari 9:76
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي حَثْمَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةَ الْعِشَاءِ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ فَإِنَّ رَأْسَ مِائَةٍ لاَ يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ ‏"‏‏.‏ فَوَهِلَ النَّاسُ فِي مَقَالَةِ رَسُولِ اللَّهِ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ إِلَى مَا يَتَحَدَّثُونَ مِنْ هَذِهِ الأَحَادِيثِ عَنْ مِائَةِ سَنَةٍ، وَإِنَّمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ لاَ يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ ‏"‏ يُرِيدُ بِذَلِكَ أَنَّهَا تَخْرِمُ ذَلِكَ الْقَرْنَ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் இறுதி நாட்களில் (ஒரு நாள்) இஷா தொழுகை நடத்தினார்கள். சலாம் கொடுத்(து தொழுகையை முடித்)ததும் எழுந்து நின்று, “இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? (இன்றிலிருந்து) நூறாம் ஆண்டின் துவக்கத்தில், இன்று பூமியில் இருக்கும் யாரும் எஞ்சியிருக்கமாட்டார் கள்” என்று கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் களில் நூறாண்டைப் பற்றிய இந்த ஹதீஸைத் தவறாகப் புரிந்து(கொண்டு, நூறு ஆண்டுகளுக்குப்பின் உலகம் அழிந்து விடும்போலும் என்று புரிந்து)கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் கூறியது, இன்று பூமியில் இருப்பவர்களில் யாரும் நூறு ஆண்டுகளுக்குப்பின் இருக்கமாட்டார்கள் என்ற பொருளில்தான்.32 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.