Qurani·قرآني
தமிழ்

உயில் மற்றும் இறுதி விருப்பங்கள் (வஸிய்யா)

44 ஹதீஸ்கள் · #2738–2781

ஹதீஸ் 2738 — Sahih al Bukhari 55:1
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَىْءٌ، يُوصِي فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ، إِلاَّ وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ ‏"‏‏.‏ تَابَعَهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ عَنْ عَمْرٍو عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறுதி விருப்பம் தெரிவிக்க) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தமது இறுதி விருப்பத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள்கூட கழிப்பதற்கு அனுமதியில்லை.2 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2739 — Sahih al Bukhari 55:2
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ الْجُعْفِيُّ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، خَتَنِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَخِي جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ قَالَ مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ مَوْتِهِ دِرْهَمًا وَلاَ دِينَارًا وَلاَ عَبْدًا وَلاَ أَمَةً وَلاَ شَيْئًا، إِلاَّ بَغْلَتَهُ الْبَيْضَاءَ وَسِلاَحَهُ وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச்செல்லவில்லை; தமது வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கிவிட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. அத்தியாயம் :
ஹதீஸ் 2740 — Sahih al Bukhari 55:3
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مَالِكٌ، حَدَّثَنَا طَلْحَةُ بْنُ مُصَرِّفٍ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ هَلْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْصَى فَقَالَ لاَ‏.‏ فَقُلْتُ كَيْفَ كُتِبَ عَلَى النَّاسِ الْوَصِيَّةُ أَوْ أُمِرُوا بِالْوَصِيَّةِ قَالَ أَوْصَى بِكِتَابِ اللَّهِ‏.‏
தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் இறுதி விருப்பம் தெரிவித்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘அப்படி யென்றால் மக்கள்மீது இறுதி விருப்பம் தெரிவிப்பது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வுடைய வேதத்தின்படி செயல்படுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள் ‘‘ என்று பதிலளித்தார்கள்.3 அத்தியாயம் :
ஹதீஸ் 2741 — Sahih al Bukhari 55:4
حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ ذَكَرُوا عِنْدَ عَائِشَةَ أَنَّ عَلِيًّا ـ رضى الله عنهما ـ كَانَ وَصِيًّا‏.‏ فَقَالَتْ مَتَى أَوْصَى إِلَيْهِ وَقَدْ كُنْتُ مُسْنِدَتَهُ إِلَى صَدْرِي ـ أَوْ قَالَتْ حَجْرِي ـ فَدَعَا بِالطَّسْتِ، فَلَقَدِ انْخَنَثَ فِي حَجْرِي، فَمَا شَعَرْتُ أَنَّهُ قَدْ مَاتَ، فَمَتَى أَوْصَى إِلَيْهِ
அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் மக்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (தமக்குப்பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ (ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள் (என்று கேள்விப்படுகிறோமே)” என்று சொன் னார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு யிவஸிய்யத்’ செய்தார்கள்? (நபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது) நான்தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் கையலம்பும் கிண்ணம் கொண்டுவரும்படி கேட்டார்கள். பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதைக்கூட உணரவில்லை. அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும்?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2742 — Sahih al Bukhari 55:5
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي وَأَنَا بِمَكَّةَ، وَهْوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا قَالَ ‏"‏ يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ ‏"‏‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ قُلْتُ فَالشَّطْرُ قَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ قُلْتُ الثُّلُثُ‏.‏ قَالَ ‏"‏ فَالثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ، وَإِنَّكَ مَهْمَا أَنْفَقْتَ مِنْ نَفَقَةٍ فَإِنَّهَا صَدَقَةٌ، حَتَّى اللُّقْمَةُ الَّتِي تَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِكَ، وَعَسَى اللَّهُ أَنْ يَرْفَعَكَ فَيَنْتَفِعَ بِكَ نَاسٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ ‏"‏‏.‏ وَلَمْ يَكُنْ لَهُ يَوْمَئِذٍ إِلاَّ ابْنَةٌ‏.‏
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) நலம் விசாரிக்க வந்தார்கள். நான் எந்தப் பூமியிலிருந்து புலம்பெயர்ந்து சென்றுவிட்டேனோ அந்தப் பூமியில் (மக்காவில்) மரணிப்பதை விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) ‘‘அஃப்ராவின் புதல்(வர் சஅத் பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் செல்வம் முழுவதையும் நான் (அறக் காரியங்களுக்காக) இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘வேண்டாம்” என்று கூறினார்கள். நான், ‘‘அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை அவ்வாறு செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கும், ‘‘வேண்டாம்” என்றே பதிலளித்தார்கள். நான், ‘‘மூன்றிலொரு பங்கை(யாவது அவ்வாறு செய்துவிடட்டுமா?)” என்று கேட்டேன். அவர்கள், ‘‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச்செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச்செல்வதைவிட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தர்மமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் (உணவு)கூட (தர்மம்தான்). மேலும், உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைத் தருவான்.4 உங்கள் வாயிலாக மக்கள் சிலர் பயனடைவார்கள். மற்ற (தீயவர்) சிலர் உங்களால் இழப்புக்குள்ளாவார்கள்” என்று கூறினார்கள்.5 அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 2743 — Sahih al Bukhari 55:6
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَوْ غَضَّ النَّاسُ إِلَى الرُّبْعِ، لأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ ‏"‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் (தமது மரண சாசனங்களை) நான்கிலொரு பாகமாகக் குறைத்துக் கொண்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம்தான்” என்று கூறி னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2744 — Sahih al Bukhari 55:7
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا مَرْوَانُ، عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ مَرِضْتُ فَعَادَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ لاَ يَرُدَّنِي عَلَى عَقِبِي‏.‏ قَالَ ‏"‏ لَعَلَّ اللَّهَ يَرْفَعُكَ وَيَنْفَعُ بِكَ نَاسًا ‏"‏‏.‏ قُلْتُ أُرِيدُ أَنْ أُوصِيَ، وَإِنَّمَا لِي ابْنَةٌ ـ قُلْتُ ـ أُوصِي بِالنِّصْفِ قَالَ ‏"‏ النِّصْفُ كَثِيرٌ ‏"‏‏.‏ قُلْتُ فَالثُّلُثِ‏.‏ قَالَ ‏"‏ الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ ‏"‏‏.‏ قَالَ فَأَوْصَى النَّاسُ بِالثُّلُثِ، وَجَازَ ذَلِكَ لَهُمْ‏.‏
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறுதி ஹஜ்ஜின்போது மக்காவில்) நான் நோயுற்றுவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் கால்சுவடுகளின் வழியே என்னைத் திருப்பியனுப்பிவிடாமல் (புலம்பெயர்ந்த மண்ணிலேயே இறப்பு ஏற்படாமல்) இருக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து, உங்களால் மக்கள் சிலருக்குப் பயன் தருவான்” என்று கூறினார்கள். ‘‘நான் இறுதி விருப்பம் தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கிருப்பதெல்லாம் ஒரு மகள்தான். (என் சொத்தில்) பாதி பாகத்தை (நற்காரியங்களுக்காக) இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பாதி அதிகம்தான்” என்று கூறினார்கள். நான் ‘‘அப்படியென்றால் மூன்றிலொரு பங்கு?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம்தான். அல்லது பெரியது தான்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் மூன்றிலொரு பங்கில் இறுதி விருப்பம் தெரிவிக்கலானார்கள். அது அவர்களுக்குச் செல்லும். அத்தியாயம் :
ஹதீஸ் 2745 — Sahih al Bukhari 55:8
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي، فَاقْبِضْهُ إِلَيْكَ‏.‏ فَلَمَّا كَانَ عَامُ الْفَتْحِ أَخَذَهُ سَعْدٌ فَقَالَ ابْنُ أَخِي، قَدْ كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ‏.‏ فَقَامَ عَبْدُ بْنُ زَمْعَةَ فَقَالَ أَخِي، وَابْنُ أَمَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ‏.‏ فَتَسَاوَقَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ، ابْنُ أَخِي، كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ‏.‏ فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي‏.‏ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ هُوَ لَكَ يَا عَبْدُ ابْنَ زَمْعَةَ، الْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ ‏"‏ احْتَجِبِي مِنْهُ ‏"‏‏.‏ لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ، فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், ‘‘ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனை நீ பிடித்து வைத்துக்கொள்” என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டில் சஅத் (ரலி) அவர்கள் அவனைப் பிடித்துக்கொண் டார்கள். அப்போது அவர்கள், ‘‘(இவன் என்) சகோதரரின் மகன். என் சகோதரர் இவனை அழைத்துக் கொண்டுவரும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று கூறினார். ஸம்ஆவின் மகன் அப்து (ரலி) எழுந்து, ‘‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன். அவரது படுக்கையில் (அவரது அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று கூறினார். இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) சென் றனர். சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன் மகன். அவர் இவனை அழைத்துக் கொண்டுவரும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்” என்று கூற, அப்து பின் ஸம்ஆ (ரலி), ‘‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்” என்று கூறினார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்து பின் ஸம்ஆவே! அவன் உனக்கேயுரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தில் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்புதான்” என்று கூறினார்கள். பிறகு (தம் மனைவியும்) ஸம்ஆவின் மகளுமான சவ்தா (ரலி) அவர்களிடம், ‘‘இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு (மறைத்து)க்கொள்” என்று கூறினார்கள். அவன், தோற்றத்தில் உத்பாவைப் போலவே இருந்ததைக் கண்டதால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள். (அதன் பிறகு) அந்த மனிதர் மரணிக்கும்வரை) அன்னை சவ்தா (ரலி) அவர்களைப் பார்க்கவில்லை.6 அத்தியாயம் :
ஹதீஸ் 2746 — Sahih al Bukhari 55:9
حَدَّثَنَا حَسَّانُ بْنُ أَبِي عَبَّادٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ يَهُوِدِيًّا، رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ، فَقِيلَ لَهَا مَنْ فَعَلَ بِكِ، أَفُلاَنٌ أَوْ فُلاَنٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ، فَأَوْمَأَتْ بِرَأْسِهَا، فَجِيءَ بِهِ، فَلَمْ يَزَلْ حَتَّى اعْتَرَفَ، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرُضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர் ஒருவர் ஒரு சிறுமியின் தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கி விட்டார். அச்சிறுமியிடம், ‘‘உன்னை இப்படிச் செய்தது யார்? இன்னாரா? இன்னாரா?” என்று ஒவ்வொரு பெயராகச் சொல்லிக் கேட்கப்பட்டது. இறுதியில், அந்த யூதருடைய பெயர் சொல்லப்பட்ட வுடன் (‘அவர்தான் இப்படிச் செய்தார்’ என்று) அச்சிறுமி தன் தலையால் சைகை செய்தாள். உடனே அந்த யூதர் கொண்டுவரப் பட்டார். அவர் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளும்வரை தொடர்ந்து விசாரிக்கப் பட்டார். அவர் ஒப்புக்கொண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் அவரது தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது தலை நசுக்கப் பட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 2747 — Sahih al Bukhari 55:10
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ وَرْقَاءَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ الْمَالُ لِلْوَلَدِ، وَكَانَتِ الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ، فَنَسَخَ اللَّهُ مِنْ ذَلِكَ مَا أَحَبَّ، فَجَعَلَ لِلذَّكَرِ مِثْلَ حَظِّ الأُنْثَيَيْنِ، وَجَعَلَ لِلأَبَوَيْنِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسَ، وَجَعَلَ لِلْمَرْأَةِ الثُّمُنَ وَالرُّبْعَ، وَلِلزَّوْجِ الشَّطْرَ وَالرُّبُعَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தொடக்க காலத்தில்) சொத்து பிள்ளைக்குரியதாகவும் இறுதி விருப்பம் தெரிவித்தல் தாய்தந்தைக்குரியதாகவும் இருந்தது. அதில், தான் விரும்பியதை அல்லாஹ், மாற்றிவிட்டான்; இரு பெண்களின் பங்குக்குச் சமமானதை ஆணுக்கு (அவனது பங்காக) நிர்ணயித்தான். தாய் தந்தையரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கை நிர்ணயித்தான். (குழந்தை இருந்தால்) மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும், (குழந்தை இல்லாவிட்டால்) நான்கில் ஒரு பங்கையும் (அவ்வாறே) கணவனுக்குப் பாதியையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்.7 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.