Qurani·قرآني
தமிழ்

உயில் மற்றும் இறுதி விருப்பங்கள் (வஸிய்யா)

44 ஹதீஸ்கள் · #2738–2781

ஹதீஸ் 2778 — Sahih al Bukhari 55:41
وَقَالَ عَبْدَانُ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عُثْمَانَ ـ رضى الله عنه ـ حَيْثُ حُوصِرَ أَشْرَفَ عَلَيْهِمْ وَقَالَ أَنْشُدُكُمْ وَلاَ أَنْشُدُ إِلاَّ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الْجَنَّةُ ‏"‏‏.‏ فَحَفَرْتُهَا، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ قَالَ ‏"‏ مَنْ جَهَّزَ جَيْشَ الْعُسْرَةِ فَلَهُ الْجَنَّةُ ‏"‏‏.‏ فَجَهَّزْتُهُمْ‏.‏ قَالَ فَصَدَّقُوهُ بِمَا قَالَ‏.‏ وَقَالَ عُمَرُ فِي وَقْفِهِ لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ‏.‏ وَقَدْ يَلِيهِ الْوَاقِفُ وَغَيْرُهُ فَهْوَ وَاسِعٌ لِكُلٍّ‏.‏
அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்ட போது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து) பின்வருமாறு பேசினார்கள்: அல்லாஹ்வை முன்வைத்து உங்களைக் கேட்கிறேன். நான் நபி (ஸல்) அவர்களின் தோழர்களைத் தவிர வேறுயாரிடமும் கேட்கவில்லை. ‘‘யார் யிரூமா’ எனும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து)விடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கி) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘எவர் பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளு தவி செய்து) தயார்படுத்துகிறாரோ அவருக் குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக் குத் தெரியாதா? என்று கேட்டார்கள். அவர்கள் கூறியதை நபித்தோழர்கள் உண்மையென ஏற்றுக்கொண்டனர். உமர் (ரலி) அவர்கள் வக்ஃப் செய்த போது, ‘‘இதை நிர்வாகம் செய்பவர் இதிலி ருந்து (எடுத்து) உண்பதில் தவறில்லை” என்று குறிப்பிட்டார்கள். வக்ஃப் செய்த வரேகூட அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகிகளாக இருக்கலாம். ஆக, (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு. அத்தியாயம் :
ஹதீஸ் 2779 — Sahih al Bukhari 55:42
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ ‏"‏‏.‏ قَالُوا لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்கள் தோட்டத்திற்கு என்னி டம் விலை சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குலத்தார், ‘‘அதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2780 — Sahih al Bukhari 55:43
وَقَالَ لِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي الْقَاسِمِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ رَجُلٌ مِنْ بَنِي سَهْمٍ مَعَ تَمِيمٍ الدَّارِيِّ وَعَدِيِّ بْنِ بَدَّاءٍ فَمَاتَ السَّهْمِيُّ بِأَرْضٍ لَيْسَ بِهَا مُسْلِمٌ، فَلَمَّا قَدِمَا بِتَرِكَتِهِ فَقَدُوا جَامًا مِنْ فِضَّةٍ مُخَوَّصًا مِنْ ذَهَبٍ، فَأَحْلَفَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ وُجِدَ الْجَامُ بِمَكَّةَ فَقَالُوا ابْتَعْنَاهُ مِنْ تَمِيمٍ وَعَدِيٍّ‏.‏ فَقَامَ رَجُلاَنِ مِنْ أَوْلِيَائِهِ، فَحَلَفَا لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا، وَإِنَّ الْجَامَ لِصَاحِبِهِمْ‏.‏ قَالَ وَفِيهِمْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏{‏يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ ‏إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ}‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிபனூ சஹ்ம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் தமீமுத் தாரீ, அதீ பின் பத்தா ஆகியோருடன் பயணம் புறப்பட்டார்.30 பனூ சஹ்ம் குலத்தைச் சேர்ந்த அவர், ஒரு முஸ்லிம்கூட இல்லாத ஒரு பூமியில் இறந்துவிட்டார். தமீமுத் தாரீயும் அதீயும் அவர் விட்டுச்சென்ற (அவருடைய) சொத்துக்களை எடுத்துக்கொண்டு வந்த போது (அவற்றில்) தங்க வேலைப்பாடு செய்யப்பட்ட வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் காணவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் (தாம் நிரபராதிகள் என்று) சத்தியம் செய்யும்படி கூறினார்கள். பிறகு அந்தப் பாத்திரம் மக்காவில் (சிலரிடம்) காணப் பட்டது. அவர்கள், ‘‘நாங்கள் இதை தமீமிடமிருந்தும் அதீயிடமிருந்தும் வாங்கினோம்” என்று கூறினர். அப்போது (இறந்துபோன) சஹ்ம் குலத்தாரின் (நெருங்கிய) உறவினர்களில் இருவர் எழுந்து சத்தியம் செய்து, ‘‘எங்கள் சாட்சியம் அவர்கள் இருவரின் சாட்சியத்தைவிட அதிகத் தகுதி வாய்ந்ததாகும்; அந்தப் பாத்திரம் எங்கள் தோழருடையதே” என்று கூறினர். அவர்கள் தொடர்பாகவே இந்த வசனங்கள் (5:106லி108) அருளப்பெற்றன. அத்தியாயம் :
ஹதீஸ் 2781 — Sahih al Bukhari 55:44
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، أَوِ الْفَضْلُ بْنُ يَعْقُوبَ عَنْهُ حَدَّثَنَا شَيْبَانُ أَبُو مُعَاوِيَةَ، عَنْ فِرَاسٍ، قَالَ قَالَ الشَّعْبِيُّ حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ ـ رضى الله عنهما ـ أَنَّ أَبَاهُ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ، وَتَرَكَ سِتَّ بَنَاتٍ، وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا، فَلَمَّا حَضَرَ جِدَادُ النَّخْلِ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ عَلِمْتَ أَنَّ وَالِدِي اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا كَثِيرًا، وَإِنِّي أُحِبُّ أَنْ يَرَاكَ الْغُرَمَاءُ قَالَ ‏"‏ اذْهَبْ فَبَيْدِرْ كُلَّ تَمْرٍ عَلَى نَاحِيَتِهِ ‏"‏‏.‏ فَفَعَلْتُ ثُمَّ دَعَوْتُهُ، فَلَمَّا نَظَرُوا إِلَيْهِ أُغْرُوا بِي تِلْكَ السَّاعَةَ، فَلَمَّا رَأَى مَا يَصْنَعُونَ أَطَافَ حَوْلَ أَعْظَمِهَا بَيْدَرًا ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ جَلَسَ عَلَيْهِ ثُمَّ قَالَ ‏"‏ ادْعُ أَصْحَابَكَ ‏"‏‏.‏ فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّى اللَّهُ أَمَانَةَ وَالِدِي، وَأَنَا وَاللَّهِ رَاضٍ أَنْ يُؤَدِّيَ اللَّهُ أَمَانَةَ وَالِدِي وَلاَ أَرْجِعَ إِلَى أَخَوَاتِي بِتَمْرَةٍ، فَسَلِمَ وَاللَّهِ الْبَيَادِرُ كُلُّهَا حَتَّى أَنِّي أَنْظُرُ إِلَى الْبَيْدَرِ الَّذِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَأَنَّهُ لَمْ يَنْقُصْ تَمْرَةً وَاحِدَةً‏.‏ قَالَ أَبُو عَبْد اللَّهِ أُغْرُوا بِي يَعْنِي هِيجُوا بِي فَأَغْرَيْنَا بَيْنَهُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை உஹுத் போரின்போது கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்கள் ஆறு பெண் மக்களை விட்டுச்சென்றார்கள். தம்மீது கடனையும் விட்டுச்சென்றார்கள். பேரீச்சம் பழங்களைப் பறிக்கும் காலம் வந்தபோது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ் வின் தூதரே! என் தந்தை உஹுத் போரின்போது கொல்லப்பட்டுவிட்டதையும் தம்மீது நிறையக் கடன்களை விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ போய், ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம் பழத்தையும் களத்தில் அதனதன் இடத்தில் குவித்து வை” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன்; பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் அந்த நேரத்தில் என்னிடம் இன்னும் அதிகமாக வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்றுமுறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, ‘‘உன் கடன்காரர்களைக் கூப்பிடு” என்று சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) என் தந்தையின் கடனை அல்லாஹ் நிறைவேற்றித்தரும்வரை, அவர்களுக்கு அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரேயொரு பேரீச்சம் பழத்தைக்கூட எடுத்துக்கொண்டு என் சகோதரிகளிடம் திரும்பிச் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் (பரவாயில்லை); என் தந்தையின் கடன் சுமையை அல்லாஹ் தீர்த்து வைத்தால் போதும் என்று நான் இருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! குவியல் கள் அனைத்தும் அப்படியே (குறையாமல்) இருந்தன; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த குவியலை நான் பார்த்தேன். அதிலிருந்து ஒரேயொரு பேரீச்சம் பழம்கூட குறையாததைப் போன்று அப்படியே இருந்தது.31 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: (‘அதிகமாக வற்புறுத்தினார்கள்’ என்பதைக் குறிக்க) இங்கு மூலத்தில் ‘அஃகர்ரூ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. அதாவது என்னைத் திணறடித்துவிட்டார்கள். ‘‘நாம் அவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் மூட்டினோம்” (5:14) எனும் வசனத்தொடரில் ‘அஃக்ரைனா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.