அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! என்னுடன் (அறப்போரில்) கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிடுவதைப் பலரும் விரும்ப மாட்டார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வ தற்கு என்னிடம் வாகன வசதி கிடையாது. இந்நிலை மட்டும் இல்லாதிருப்பின், நான் (எந்தப் போரிலும்) கலந்துகொள்ளாமல் பின்தங்கியிருக்கமாட்டேன். (ஒன்றுவிடாமல் அனைத்திலும் கலந்து கொண்டிருப்பேன்.) நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப் பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப் படுவதையே நான் விரும்புகிறேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப் பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டு, பிறகு கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்தச் சொற்களை மும்முறை கூறினார்கள் என்பதற்கு நான் அல்லாஹ்வை முன்வைத்து சாட்சியம் கூறுகிறேன். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் உஹுத் மலை அளவுக்குத் தங்கம் இருந்தாலும், அதிலிருந்து ஒரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்து அதைப் பெற்றுக்கொள்பவரை நான் அடையும் நிலையில் மூன்று நாட்கள் கழிவதைக்கூட நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் (அதிóருந்து) எடுத்துவைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 7229 — Sahih al Bukhari 94:4
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا سُقْتُ الْهَدْىَ، وَلَحَلَلْتُ مَعَ النَّاسِ حِينَ حَلُّوا ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால் (என்னுடன்) குர்பானி பிராணியைக் கொண்டு வந்திருக்கமாட்டேன்; மேலும், மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதே நானும் (இஹ்ராமிலிருந்து) விடுபட்டிருப்பேன். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 7230 — Sahih al Bukhari 94:5
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَبَّيْنَا بِالْحَجِّ وَقَدِمْنَا مَكَّةَ لأَرْبَعٍ خَلَوْنَ مِنْ ذِي الْحِجَّةِ، فَأَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نَطُوفَ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، وَأَنْ نَجْعَلَهَا عُمْرَةً وَلْنَحِلَّ، إِلاَّ مَنْ كَانَ مَعَهُ هَدْىٌ قَالَ وَلَمْ يَكُنْ مَعَ أَحَدٍ مِنَّا هَدْىٌ غَيْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَطَلْحَةَ، وَجَاءَ عَلِيٌّ مِنَ الْيَمَنِ مَعَهُ الْهَدْىُ فَقَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا نَنْطَلِقُ إِلَى مِنًى وَذَكَرُ أَحَدِنَا يَقْطُرُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ مَعِي الْهَدْىَ لَحَلَلْتُ ". قَالَ وَلَقِيَهُ سُرَاقَةُ وَهْوَ يَرْمِي جَمْرَةَ الْعَقَبَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَلَنَا هَذِهِ خَاصَّةً قَالَ " لاَ بَلْ لأَبَدٍ ". قَالَ وَكَانَتْ عَائِشَةُ قَدِمَتْ مَكَّةَ وَهْىَ حَائِضٌ، فَأَمَرَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تَنْسُكَ الْمَنَاسِكَ كُلَّهَا، غَيْرَ أَنَّهَا لاَ تَطُوفُ وَلاَ تُصَلِّي حَتَّى تَطْهُرَ، فَلَمَّا نَزَلُوا الْبَطْحَاءَ قَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ أَتَنْطَلِقُونَ بِحَجَّةٍ وَعُمْرَةٍ وَأَنْطَلِقُ بِحَجَّةٍ. قَالَ ثُمَّ أَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنْ يَنْطَلِقَ مَعَهَا إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرَتْ عُمْرَةً فِي ذِي الْحَجَّةِ بَعْدَ أَيَّامِ الْحَجِّ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜுக்காக (இஹ்ராம் கட்டி) ‘தல்பியா’ சொன்னோம். துல்ஹிஜ்ஜா மாதம் நான்காம் நாள் நாங்கள் மக்கா வந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறையில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றி (தவாஃபும் சஃயும் செய்து)விட்டு, தம்முடன் குர்பானி பிராணி கொண்டுவந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அந்த ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி, இஹ்ராமிóருந்து விடுபட்டுக்கொள்ளுமாறு உத்தர விட்டார்கள். நபி (ஸல்) அவர்களையும் தல்ஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு யாரிடமும் குர்பானி பிராணி இருக்கவில்லை. அலீ (ரலி) அவர்கள் குர்பானி பிராணியுடன் யமன் நாட்டி óருந்து வந்தார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்-உம்ரா ஆகிய இரண்டில்) எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காக நானும் இஹ்ராம் கட்டினேன்” என அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் (சிலர்), “தாம்பத்திய உறவு கொண்ட கையோடு நாங்கள் ‘மினா’விற்குச் செல்ல வேண்டுமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஹஜ் பருவத்தில் உம்ரா செய்யலாம் என) நான் இப்போது அறிந்ததை முன்கூட்டியே அறிந்திருந்தால் (பலியிட) குர்பானி பிராணி கொண்டுவந்திருக்கமாட்டேன்; நான் என்னுடன் குர்பானி பிராணியை கொண்டுவந்திருக்காவிடில் இஹ்ராமிலிருந்து நான் விடுபட்டிருப்பேன்” என்று கூறினார்கள். (இதையடுத்து) ஜம்ரத்துல் அகபாவில் நபி (ஸல்) அவர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கையில் அவர்களை சுராக்கா பின் மாலிக் (ரலி) அவர்கள் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதரே! இ(வ்வாறு ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்வ)து, எங்களுக்கு மட்டும் உரியதா? (எல்லாத் தலைமுறையினருக்கும் பொதுவானதா)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இல்லை! எல்லாக் காலத்து (மக்களு)க் கும் உரியது” என்று பதிலளித்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் மாத விடாயோடு மக்காவிற்கு நபி (ஸல்) அவர்களுடன் வந்திருந்தார்கள். “ஹஜ்ஜுக் கிரியைகள் அனைத்தையும் செய்யலாம்; ஆனால், மாதவிடாயிலிருந்து தூய்மையடையும்வரை இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது; தொழக் கூடாது” என்று ஆயிஷாவுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நபியவர்களும் மக்களும் ‘அல்பத்ஹா’ எனும் இடத்தில் தங்கியபோது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எல்லாரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிச் செல்ல, நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிச் செல்வதா?” என்று (மனக்குறையுடன்) கேட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களை(த் தம் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களுடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (அங்கு சென்று உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக்கொண்டு) துல்ஹிஜ்ஜா மாதத்தில் ஹஜ் நாட்கள் கழிந்தபின் ஓர் உம்ராவை நிறைவேற்றினார்கள்.5 அத்தியாயம் :
ஹதீஸ் 7231 — Sahih al Bukhari 94:6
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ، قَالَ قَالَتْ عَائِشَةُ أَرِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَقَالَ " لَيْتَ رَجُلاً صَالِحًا مِنْ أَصْحَابِي يَحْرُسُنِي اللَّيْلَةَ ". إِذْ سَمِعْنَا صَوْتَ السِّلاَحِ قَالَ " مَنْ هَذَا ". قِيلَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ جِئْتُ أَحْرُسُكَ. فَنَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى سَمِعْنَا غَطِيطَهُ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَتْ عَائِشَةُ قَالَ بِلاَلٌ أَلاَ لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُ فَأَخْبَرْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு வந்த புதிதில்) ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒருநாள்), “என்னை இரவில் காவல் காப்பதற்கு என் தோழர்களில் ஏற்ற ஒருவர் வேண்டுமே?” என்று கூறினார்கள், அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “யார் அங்கே?” என்று கேட்டார்கள். வந்தவர், “நான்தான் சஅத், அல்லாஹ்வின் தூதரே! தங்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்” என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள், நாங்கள் அவர்களின் குறட்டைச் சப்தத்தை கேட்குமளவுக்கு (நிம்மதியாக) உறங்கி னார்கள்.7 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகின் றேன்: பிலால் (ரலி) அவர்கள் (மதீனாவில் காய்ச்சல்கண்டு நிவாரணமடைந்த போது), ‘இத்கிர்’ (நறுமணப்) புல்லும்’ஜலீல்’ (கூரைப்) புல்லும்என்னைச் சூழ்ந்திருக்க ...(மக்காவின்) பள்ளத்தாக்கில்ஓர் இராப் பொழுதையேனும்நான் கழிப்பேனா?” என்ற கவிதையைக் கூறினார்கள். அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.8 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படலாகாது: 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் அறிவை வழங்கினான். அவர் அதைக் காலையும் மாலையும் ஓதிவருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், “இவருக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன்” என்று (ஆதங்கத்துடன்) சொல்கிறார். 2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதை உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர், “இவருக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் இவர் செய்வ தைப் போன்று நானும் செய்திருப்பேன்” என்று (ஆதங்கத்துடன்) சொல்கிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9 -ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை குதைபா (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 7233 — Sahih al Bukhari 94:8
حَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَاصِمٍ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، قَالَ قَالَ أَنَسٌ ـ رضى الله عنه ـ لَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تَتَمَنَّوُا الْمَوْتَ " لَتَمَنَّيْتُ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “இறப்பை (எதிர்பார்த்து) ஆசைப் படாதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிருக்காவிட்டால், (இறப்பின் மீது) ஆசைகொண்டிருப் பேன். இதை நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 7234 — Sahih al Bukhari 94:9
حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسٍ، قَالَ أَتَيْنَا خَبَّابَ بْنَ الأَرَتِّ نَعُودُهُ وَقَدِ اكْتَوَى سَبْعًا فَقَالَ لَوْلاَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ.
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகத் தமது வயிற்றில்) அவர்கள் ஏழு முறை சூடுபோட்டி ருந்தார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால், அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன்” என்று சொன்னார்கள்.10 அத்தியாயம் :
ஹதீஸ் 7235 — Sahih al Bukhari 94:10
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي عُبَيْدٍ ـ اسْمُهُ سَعْدُ بْنُ عُبَيْدٍ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَزْهَرَ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَتَمَنَّى أَحَدُكُمُ الْمَوْتَ إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ يَزْدَادُ، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ يَسْتَعْتِبُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; (அவர் உயிர்வாழ்வதன் மூலம் நன்மையை) அவர் அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர்வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11 அத்தியாயம் :