Qurani·قرآني
தமிழ்

ஆசைகள்

20 ஹதீஸ்கள் · #7226–7245

ஹதீஸ் 7236 — Sahih al Bukhari 94:11
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْقُلُ مَعَنَا التُّرَابَ يَوْمَ الأَحْزَابِ، وَلَقَدْ رَأَيْتُهُ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ يَقُولُ ‏ "‏ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا نَحْنُ، وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا، فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا، إِنَّ الأُلَى وَرُبَّمَا قَالَ الْمَلاَ قَدْ بَغَوْا عَلَيْنَا، إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا ‏"‏ أَبَيْنَا يَرْفَعُ بِهَا صَوْتَهُ‏.‏
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது எங்களுடன் நபி (ஸல்) அவர்களும் மண்ணைச் சுமந்து எடுத்துவந்தார்கள். அவர்கள் (சுமந்துவந்த) மண் அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்திருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், “(இறைவா!) நீ இல்லாவிட்டால்நாங்கள் நல்வழி அடைந்திருக்கமாட்டோம்.நாங்கள் தர்மம் செய்யதிருக்கவுமாட்டோம்;தொழுதிருக்கவுமாட்டோம்.ஆகவே, எங்கள்மீது அமைதியை இறக்கியருள்வாயாக! ‘இவர்கள்’ அல்லது ‘(குறைஷித்) தலைவர்கள்’ எங்கள்மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்” என்று (இறுதி வரியைக்) குரலை உயர்த்தி (பாடலில்) கூறினார்கள்.12 அத்தியாயம் :
ஹதீஸ் 7237 — Sahih al Bukhari 94:12
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ ـ وَكَانَ كَاتِبًا لَهُ ـ قَالَ كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى فَقَرَأْتُهُ فَإِذَا فِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ، وَسَلُوا اللَّهَ الْعَافِيَةَ ‏"‏‏.‏
உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் எழுத்தராகப் பணி புரிந்தவரும் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையுமான அபுந் நள்ர் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். நான் அதை (அவர்களுக்கு)ப் படித்துக்காட்டினேன். அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எதிரிகளை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போர் அழிவுகளிலிருந்து) பாதுகாப்புக் கோருங்கள். என்று சொன்னார்கள்” என்றிருந்தது.14 அத்தியாயம் :
ஹதீஸ் 7238 — Sahih al Bukhari 94:13
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ ذَكَرَ ابْنُ عَبَّاسٍ الْمُتَلاَعِنَيْنِ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ أَهِيَ الَّتِي قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْ كُنْتُ رَاجِمًا امْرَأَةً مِنْ غَيْرِ بَيِّنَةٍ ‏"‏‏.‏ قَالَ لاَ، تِلْكَ امْرَأَةٌ أَعْلَنَتْ‏.‏
காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (‘லிஆன்’) செய்த ஒரு தம்பதியரைக் பற்றிக் குறிப்பிட்டார் கள். உடனே அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள், “நான் சாட்சி இல்லாமலேயே ஒரு பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை அளிப்பவனா யிருந்தால் (இவளுக்கு அளித்திருப் பேன்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இல்லை; அவள் வெளிப்படையாகவே தவறு செய்துவந்தவள்” என்று கூறினார்கள்.16 அத்தியாயம் :
ஹதீஸ் 7239 — Sahih al Bukhari 94:14
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو حَدَّثَنَا عَطَاءٌ، قَالَ أَعْتَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْعِشَاءِ فَخَرَجَ عُمَرُ فَقَالَ الصَّلاَةَ يَا رَسُولَ اللَّهِ، رَقَدَ النِّسَاءُ وَالصِّبْيَانُ، فَخَرَجَ وَرَأْسُهُ يَقْطُرُ يَقُولُ ‏"‏ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي ـ أَوْ عَلَى النَّاسِ، وَقَالَ سُفْيَانُ أَيْضًا، عَلَى أُمَّتِي ـ لأَمَرْتُهُمْ بِالصَّلاَةِ هَذِهِ السَّاعَةَ ‏"‏‏.‏ قَالَ ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَخَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم هَذِهِ الصَّلاَةَ فَجَاءَ عُمَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ رَقَدَ النِّسَاءُ وَالْوِلْدَانُ‏.‏ فَخَرَجَ وَهْوَ يَمْسَحُ الْمَاءَ عَنْ شِقِّهِ يَقُولُ ‏"‏ إِنَّهُ لَلْوَقْتُ، لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي ‏"‏‏.‏ وَقَالَ عَمْرٌو حَدَّثَنَا عَطَاءٌ لَيْسَ فِيهِ ابْنُ عَبَّاسٍ أَمَّا عَمْرٌو فَقَالَ رَأْسُهُ يَقْطُرُ‏.‏ وَقَالَ ابْنُ جُرَيْجٍ يَمْسَحُ الْمَاءَ عَنْ شِقِّهِ‏.‏ وَقَالَ عَمْرٌو لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي‏.‏ وَقَالَ ابْنُ جُرَيْجٍ إِنَّهُ لَلْوَقْتُ، لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي‏.‏ وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையை (எப்போதும் தொழும் நேரத்தைவிட)த் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, “தொழுகைக்கு வாருங்கள், அல்லாஹ்வின் தூதரே! பெண்களும் குழந்தைகளும் உறங்கிவிட்டார்கள்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது தலையில் நீர் சொட்டிக்கொண்டிருக்க வெளியே வந்து, “‘என் சமுதாயத்தாருக்கு’ அல்லது ‘மக்களுக்கு’ச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (இஷா) தொழுகையை இந்த (இருள் கப்பிய) நேரத்தில்தான் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு நான் உத்தரவிட்டிருப்பேன்” என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இந்த (இஷா) தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பெண்களும் குழந்தைகளும் தூங்கிவிட்டார்கள்” என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள் தமது விலாவிலிருந்து வழியும் தண்ணீரைத் துடைத்தபடி, “என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிரா விட்டால், (இஷா தொழுகைக்கு) இதுதான் சரியான நேரம் (என்று சொல்லியிருப்பேன்)” என்று சொன்னார்கள்.17 அதாஉ (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களின் அறிவிப்பு ஒன்றும் உள்ளது. அதன் அறிவிப்பாளர்தொடரில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இடம்பெறவில்லை. இந்த ஹதீஸ் சிற்சில வாசக மாற்றங்களுடன் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 7240 — Sahih al Bukhari 94:15
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிரா விட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல் துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 7241 — Sahih al Bukhari 94:16
حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، رضى الله عنه قَالَ وَاصَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم آخِرَ الشَّهْرِ، وَوَاصَلَ أُنَاسٌ، مِنَ النَّاسِ فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ لَوْ مُدَّ بِيَ الشَّهْرُ لَوَاصَلْتُ وِصَالاً يَدَعُ الْمُتَعَمِّقُونَ تَعَمُّقَهُمْ، إِنِّي لَسْتُ مِثْلَكُمْ، إِنِّي أَظَلُّ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ ‏"‏‏.‏ تَابَعَهُ سُلَيْمَانُ بْنُ مُغِيرَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ரமளான்) மாதக் கடைசியில் தொடர்நோன்பு நோற்றார் கள். (இதைக் கண்டு) மக்கள் சிலரும் தொடர்நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “எனக்கு (மட்டும்) இந்த மாதம் (எத்தனை நாட்கள்) நீட்டிக்கப்பட்டாலும் என்னால் தொடர்நோன்பு நோற்க முடியும். அப்போது (என்னைப் பார்த்து தொடர் நோன்பு நோற்று, வணக்க வழிபாடுகளில்) மிதமிஞ்சி ஈடுபடுபவர்கள் தங்களது போக்கைக் கைவிட வேண்டியது வரும். நான், உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கும் நிலையில் நான் உள்ளேன்” என்று சொன்னார்கள்.18 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 7242 — Sahih al Bukhari 94:17
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، وَقَالَ اللَّيْثُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، أَخْبَرَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْوِصَالِ، قَالُوا فَإِنَّكَ تُوَاصِلُ‏.‏ قَالَ ‏"‏ أَيُّكُمْ مِثْلِي، إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ ‏"‏‏.‏ فَلَمَّا أَبَوْا أَنْ يَنْتَهُوا وَاصَلَ بِهِمْ يَوْمًا ثُمَّ يَوْمًا ثُمَّ رَأَوُا الْهِلاَلَ فَقَالَ ‏"‏ لَوْ تَأَخَّرَ لَزِدْتُكُمْ ‏"‏‏.‏ كَالْمُنَكِّلِ لَهُمْ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பு நோற்க வேண்டாம் என்று தடை விதித்தார்கள். மக்கள், “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் யார் என்னைப் போல் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கின்ற நிலையில் நான் உள்ளேன்” என்று பதிலளித்தார்கள். மக்கள் (தொடர்நோன்பைக்) கைவிட மறுத்தபோது அவர்களுடன் சேர்ந்து ஒருநாளும் அதன்பிறகு ஒரு நாளும் நபியவர்கள் தொடர்நோன்பு நோற்றார்கள். அதற்குள் (அடுத்த) மாதப் பிறையைக் கண்டார்கள். அப்போது “பிறை இன்னும் தள்ளிப்போயிருந்தால், உங்களை இன்னும் (தொடர்நோன்பை) அதிகமாக்க வைத்திருப்பேன்” என்று -அவர்களைக் கண்டிப்பவர்களைப் போன்று- சொன்னார்கள்.19 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 7243 — Sahih al Bukhari 94:18
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْجَدْرِ أَمِنَ الْبَيْتِ هُوَ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏‏.‏ قُلْتُ فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي الْبَيْتِ قَالَ ‏"‏ إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمُ النَّفَقَةُ ‏"‏‏.‏ قُلْتُ فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا قَالَ ‏"‏ فَعَلَ ذَاكِ قَوْمُكِ، لِيُدْخِلُوا مَنْ شَاءُوا، وَيَمْنَعُوا مَنْ شَاءُوا، لَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ، فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ أَنْ أُدْخِلَ الْجَدْرَ فِي الْبَيْتِ، وَأَنْ أُلْصِقَ بَابَهُ فِي الأَرْضِ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம், (புனித கஅபாவை ஒட்டியுள்ள ஹத்தீம் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, “இது கஅபாவில் சேர்ந்ததா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். நான், “அப்படி யானால் கஅபாவுடன் இதை அவர்கள் இணைக்காததற்குக் காரணமென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உன் (குறைஷி) சமூகத்தாருக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது” என்று பதிலளித்தார்கள். நான், “கஅபாவின் வாயிலை உயரமாக வைத்திருப்பதன் காரணம் என்ன?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “தாம் விரும்பியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தாம் விரும்பாதவர்களை (உள்ளே நுழைய விடாமல்) தடுத்துவிடுவதற்காக வும்தான் உன் சமூகத்தார் இவ்வாறு செய்தார்கள். உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் மனத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால், நான் இந்த வளைந்த சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியுடன் சேர்ந்தாற்போன்று ஆக்கியிருப்பேன்” என்று சொன்னார்கள்.20 அத்தியாயம் :
ஹதீஸ் 7244 — Sahih al Bukhari 94:19
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْلاَ الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتِ الأَنْصَارُ وَادِيًا ـ أَوْ شِعْبًا ـ لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ أَوْ شِعْبَ الأَنْصَارِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காகப் பிறந்தகத்தைத் துறந்து செல்வது) மட்டும் நடைபெறாமல் இருந்திருந் தால் நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந் திருப்பேன். மக்கள் ஒரு பள்ளத்தாக்கிலும் அன்சாரிகள் ‘வேறொரு பள்ளத்தாக்கிலும்’ அல்லது ‘மலைக் கணவாயிலும்’ நடந்து சென்றால் நான் அன்சாரிகளின் ‘பள்ளத்தாக்கு’ அல்லது ‘கணவாயில்’ தான் நடந்துசெல்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21 அத்தியாயம் :
ஹதீஸ் 7245 — Sahih al Bukhari 94:20
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَوْلاَ الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ شِعْبًا، لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ وَشِعْبَهَا ‏"‏‏.‏ تَابَعَهُ أَبُو التَّيَّاحِ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الشِّعْبِ‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஹிஜ்ரத் மட்டும் நடந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந் திருப்பேன். மக்கள் ஒரு ‘பள்ளத்தாக்கில்’ அல்லது ‘கணவாயில்’ நடந்துசென்றால் நான் அன்சாரிகளின் பள்ளத்தாக்கிலும் கணவாயிலும்தான் நடந்துசெல்வேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22 இதே ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.