Qurani·قرآني
தமிழ்

வித்ர் தொழுகை

15 ஹதீஸ்கள் · #990–1004

ஹதீஸ் 990 — Sahih al Bukhari 14:1
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً، تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى ‏"‏‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்கள் ஆகும். ஆனால், உங்களில் ஒருவர் சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி அஞ்சினால், அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அது (முன்னர்) அவர் தொழுதவற்றை ஒற்றையாக ஆக்கிவிடும்” என்று பதிலளித்தார்கள்.2 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 991 — Sahih al Bukhari 14:2
وَعَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يُسَلِّمُ بَيْنَ الرَّكْعَةِ وَالرَّكْعَتَيْنِ فِي الْوِتْرِ، حَتَّى يَأْمُرَ بِبَعْضِ حَاجَتِهِ‏.‏
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், வித்ர் தொழும்போது (மூன்று ரக்அத்களில் கடைசி) ஒரு ரக்அத்திற்கும் (முந்தைய) இரு ரக்அத்களுக்கும் இடையே ‘சலாம்’ கொடுப்பார்கள். (அந்த இடைவெளியில்) தம்முடைய சில தேவைகள் பற்றி (தம் ஊழியருக்கு)க் கட்டளையிடுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 992 — Sahih al Bukhari 14:3
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّهُ، بَاتَ عِنْدَ مَيْمُونَةَ، وَهْىَ خَالَتُهُ، فَاضْطَجَعْتُ فِي عَرْضِ وِسَادَةٍ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ حَتَّى انْتَصَفَ اللَّيْلُ أَوْ قَرِيبًا مِنْهُ، فَاسْتَيْقَظَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ، ثُمَّ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ قَامَ يُصَلِّي فَصَنَعْتُ مِثْلَهُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي يَفْتِلُهَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ، خَرَجَ فَصَلَّى الصُّبْحَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். நான் ஓர் தலையணை யின் அகலவாட்டில் தலைசாய்த்து உறங்கி னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் அத்தலையணையின் நீளவாட்டில் தலைசாய்த்து உறங்கினர். நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்கு நெருக்கமான நேரம்வரை உறங்கினார்கள். அவர்கள் விழித்தெழுந்து (அமர்ந்து) தம் முகத்தி-ருந்த தூக்க(க் கலக்க)த்தை (தமது கரத்தால்) துடைக்கலானார்கள். பிறகு ‘ஆலு இம்ரான்’ அத்தியாயத்தின் (கடைசிப்) பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கட்டித் தொங்கவிடப்பட்டி ருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதி-ருந்து தண்ணீர் சரித்து) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். தமது உளூவைச் செம்மையாகச் செய்துகொண்டபின் அவர்கள் (இரவுத் தொழுகை) தொழுவதற்காக நின்றார்கள். அவர்கள் செய்ததைப் போன்று நானும் (அங்கத்தூய்மை) செய்துவிட்டு அவர்களுக்கு (இட)ப் பக்கத்தில் போய் நின்றேன். உடனே அவர்கள் தமது வலக் கரத்தை என் தலைமீது வைத்து எனது காதை திருகிப்பிடித்(து என்னைத் தமது வலப் பாகத்தில் நிறுத்திவைத்)தார்கள். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ர் தொழுதார்கள். பிறகு தொழுகை அறிவிப்பாளர் (‘பிலால்’ பாங்கு சொல்-விட்டு) தம்மிடம் வரும்வரை ஒருக்களித்துப் படுத்திருந் தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹு டைய சுன்னத்) தொழுதார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று சுப்ஹு தொழுகையை (இமாமாக நின்று) தொழுதார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 993 — Sahih al Bukhari 14:4
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا أَرَدْتَ أَنْ تَنْصَرِفَ فَارْكَعْ رَكْعَةً تُوتِرُ لَكَ مَا صَلَّيْتَ ‏"‏‏.‏ قَالَ الْقَاسِمُ وَرَأَيْنَا أُنَاسًا مُنْذُ أَدْرَكْنَا يُوتِرُونَ بِثَلاَثٍ، وَإِنَّ كُلاًّ لَوَاسِعٌ أَرْجُو أَنْ لاَ يَكُونَ بِشَىْءٍ مِنْهُ بَأْسٌ‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! (இரவுத் தொழுகையை) நீர் முடித்துக்கொள்ள விரும்பினால், ஒரு ரக்அத் தொழுது (முடித்துக்)கொள்வீராக! அது, முன்னர் நீர் தொழுததை உமக்கு ஒற்றையாக ஆக்கிவிடும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நமக்கு விவரம் தெரிந்த நாள் முதல் மக்கள் மூன்று ரக்அத்களை வித்ராகத் தொழுவதையே நாம் காண்கிறோம். (மூன்று ரக்அத், ஒரு ரக்அத் ஆகியவற்றில்) ஒவ்வொன்றுக்குமே அனுமதி உண்டு. இதில் எதைச் செய்தாலும் தவறாகாது என்றே நான் கருதுகிறேன். அத்தியாயம் :
ஹதீஸ் 994 — Sahih al Bukhari 14:5
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، كَانَتْ تِلْكَ صَلاَتَهُ ـ تَعْنِي بِاللَّيْلِ ـ فَيَسْجُدُ السَّجْدَةَ مِنْ ذَلِكَ قَدْرَ مَا يَقْرَأُ أَحَدُكُمْ خَمْسِينَ آيَةً قَبْلَ أَنْ يَرْفَعَ رَأْسَهُ، وَيَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ، ثُمَّ يَضْطَجِعُ عَلَى شِقِّهِ الأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلصَّلاَةِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதினொன்று ரக்அத்கள் தொழு பவர்களாக இருந்தார்கள். அதுவே அவர் களது தொழுகையாக -அதாவது இரவுத் தொழுகையாக- இருந்தது. அத்தொழு கையில் ஒரு சஜ்தாவை முடித்ததும் தமது தலையை உயர்த்துவதற்குமுன், உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு நேரம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வார்கள். ஃபஜ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு தொழுகை அறிவிப்பாளர் (ஃபஜ்ர்) தொழுகைக்கு (அழைக்க) தம்மிடம் வரும்வரையில் வலப் பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 995 — Sahih al Bukhari 14:6
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ، قَالَ قُلْتُ لاِبْنِ عُمَرَ أَرَأَيْتَ الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْغَدَاةِ أُطِيلُ فِيهِمَا الْقِرَاءَةَ فَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، وَيُوتِرُ بِرَكْعَةٍ وَيُصَلِّي الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْغَدَاةِ وَكَأَنَّ الأَذَانَ بِأُذُنَيْهِ‏.‏ قَالَ حَمَّادٌ أَىْ سُرْعَةً‏.‏
அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னுள்ள இரண்டு ரக்அத் (சுன்னத் தொழுகை)களில் நான் நீண்ட அத்தியாயங் களை ஓதலாமா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத் தொழுது (முன்னர் தொழுதவற்றை) ஒற்றையாக ஆக்குவார்கள். வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னால் இகாமத் சொல்லும் சப்தம் தமது காதில் விழுவதைப் போன்று (விரைவாக) இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழு வார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாவது (சுப்ஹுடைய சுன்னத்தில் நீண்ட அத்தியாயங்களை ஓதிக்கொண்டிராமல்) விரைவாக (சுருக்க மாக)த் தொழுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 996 — Sahih al Bukhari 14:7
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُلَّ اللَّيْلِ أَوْتَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரவின் எல்லாப் பகுதியிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகை தொழுதிருக்கிறார்கள். (பல சமயம்) அவர்களின் வித்ர் தொழுகை சஹர் நேரத்தில் முடியும். அத்தியாயம் :
ஹதீஸ் 997 — Sahih al Bukhari 14:8
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي، وَأَنَا رَاقِدَةٌ مُعْتَرِضَةً عَلَى فِرَاشِهِ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأَوْتَرْتُ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக்கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பார்கள். அவர்கள் வித்ர் தொழுகை தொழ எண்ணும்போது என்னைத் துயிலெழுப்புவார்கள். உடனே நானும் (எழுந்து) வித்ர் தொழுவேன்.4 அத்தியாயம் :
ஹதீஸ் 998 — Sahih al Bukhari 14:9
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் உங்களது இறுதித் தொழுகை யாக வித்ரை ஆக்கிக்கொள்ளுங்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 999 — Sahih al Bukhari 14:10
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، أَنَّهُ قَالَ كُنْتُ أَسِيرُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِطَرِيقِ مَكَّةَ فَقَالَ سَعِيدٌ فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ نَزَلْتُ فَأَوْتَرْتُ، ثُمَّ لَحِقْتُهُ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَيْنَ كُنْتَ فَقُلْتُ خَشِيتُ الصُّبْحَ، فَنَزَلْتُ فَأَوْتَرْتُ‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أُسْوَةٌ حَسَنَةٌ فَقُلْتُ بَلَى وَاللَّهِ‏.‏ قَالَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيرِ‏.‏
சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மக்கா செல்லும் சாலையில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களு டன் சென்றுகொண்டிருந்தேன். சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) பற்றி அஞ்சிய நான், (எனது ஊர்தியி-ருந்து) இறங்கி வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு அவர் களுடன் (போய்) சேர்ந்துகொண்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “(இவ்வளவு நேரம்) எங்கே சென்றிருந்தீர்?” என்று கேட்டார்கள். நான், “சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) பற்றி அஞ்சினேன். எனவே, (ஊர்தியி-ருந்து) இறங்கி வித்ர் தொழுதேன்” என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக (இருக்கிறது)” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்தும் வித்ர் தொழுதிருக்கிறார்கள்” என்று கூறி னார்கள்.5 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.