وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، وَابْنُ، إِدْرِيسَ عَنِ ابْنِ، جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ رَمَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْجَمْرَةَ يَوْمَ النَّحْرِ ضُحًى وَأَمَّا بَعْدُ فَإِذَا زَالَتِ الشَّمْسُ .
உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: "விடைபெறும்" ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். உசாமா (ரலி), பிலால் (ரலி) ஆகிய இருவரையும் நான் கண்டேன். அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களது ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். மற்றவர் வெயில் படாமலிருக்கத் தமது ஆடையை உயர்த்திப் பிடித்து அவர்களை மறைத்துக்கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஜம்ரத்துல் அகபா"வில் கல் எறியும்வரை (இவ்வாறு செய்துகொண்டிருந்தனர்).169 முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஅப்திர் ரஹீம் (ரஹ்) அவர்களது இயற்பெயர் காலித் பின் அபீயஸீத் என்பதாகும். அவர் முஹம்மத் பின் சலமா (ரஹ்) அவர்களின் தாய்மாமன் ஆவார். அவரிடமிருந்து வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்), ஹஜ்ஜாஜ் அல்அஃவர் (ரஹ்) ஆகி யோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். அத்தியாயம் :
ஹதீஸ் 3142 — Sahih Muslim 15:346
وَحَدَّثَنَاهُ عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم . بِمِثْلِهِ .
وَحَدَّثَنَاهُ عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم . بِمِثْلِهِ .
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என்று பிரார்த்தித்ததும் மக்கள், "அல்லாஹ்வின் தூதரே, குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ், மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்), "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்..." என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மறுபடியும்) "அல்லாஹ், மழித்துக்கொள்பவர்களுக்கு அருள்புரிவானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (திரும்பவும்) "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்வர்களுக்கும்..." என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக)" எனப் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ் கிரியைகளுக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையை மழித்தார்கள். அவர்களுடைய தோழர்களில் சிலரும் மழித்துக்கொண்டனர். வேறுசிலர் (சிறிதளவு) முடியைக் குறைத்துக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என்று ஓரிரு முறை பிரார்த்தித்தார்கள். பிறகு "முடியை குறைத்துக்கொண்டவர்களுக்கும் (அருள் புரிவானாக)" என்று பிரார்த்தித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவாயாக!" என்று பிரார்த்தித்தபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக் கொள்பவர்களுக்கும் (சேர்த்துப் பிரார்த்தியுங்கள்)" என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா! மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவாயாக!" என்றார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்..." என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (இறைவா, அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" எனப் பிரார்த்தித்ததும் மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! "குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" என்று (மீண்டும்) பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்), "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். மக்கள் (மறுபடியும்) "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்..." என்றதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குறைத்துக்கொள்பவர்களுக்கும் (மன்னிப்பு அளிப்பாயாக)" என்று பிரார்த்தித்தார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3149 — Sahih Muslim 15:353
وَحَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحٌ، عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَى حَدِيثِ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ.
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், நான்காவது தடவையில் "குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள் என இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :