Qurani·قرآني
தமிழ்

நிபந்தனைகள் (ஷுரூத்)

26 ஹதீஸ்கள் · #2712–2737

ஹதீஸ் 2712 — Sahih al Bukhari 54:1
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ مَرْوَانَ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، رضى الله عنهما يُخْبِرَانِ عَنْ أَصْحَابِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَمَّا كَاتَبَ سُهَيْلُ بْنُ عَمْرٍو يَوْمَئِذٍ كَانَ فِيمَا اشْتَرَطَ سُهَيْلُ بْنُ عَمْرٍو عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ لاَ يَأْتِيكَ مِنَّا أَحَدٌ وَإِنْ كَانَ عَلَى دِينِكَ إِلاَّ رَدَدْتَهُ إِلَيْنَا، وَخَلَّيْتَ بَيْنَنَا وَبَيْنَهُ‏.‏ فَكَرِهَ الْمُؤْمِنُونَ ذَلِكَ، وَامْتَعَضُوا مِنْهُ، وَأَبَى سُهَيْلٌ إِلاَّ ذَلِكَ، فَكَاتَبَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى ذَلِكَ، فَرَدَّ يَوْمَئِذٍ أَبَا جَنْدَلٍ عَلَى أَبِيهِ سُهَيْلِ بْنِ عَمْرٍو، وَلَمْ يَأْتِهِ أَحَدٌ مِنَ الرِّجَالِ إِلاَّ رَدَّهُ فِي تِلْكَ الْمُدَّةِ، وَإِنْ كَانَ مُسْلِمًا، وَجَاءَ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ، وَكَانَتْ أُمُّ كُلْثُومٍ بِنْتُ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ مِمَّنْ خَرَجَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ وَهْىَ عَاتِقٌ، فَجَاءَ أَهْلُهَا يَسْأَلُونَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنْ يَرْجِعَهَا إِلَيْهِمْ، فَلَمْ يَرْجِعْهَا إِلَيْهِمْ لِمَا أَنْزَلَ اللَّهُ فِيهِنَّ ‏{‏إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏وَلاَ هُمْ يَحِلُّونَ لَهُنَّ‏}‏‏.‏
மர்வான் பின் அல்ஹகம் அவர்களும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது: சுஹைல் பின் அம்ர் அவர்கள்2 அந்த (ஹுதைபியா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில், ‘‘எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால்லிஅவர் உமது மார்க்கத்திலிருப்ப வராயினும் சரி லி அவரைத் திருப்பியனுப்பி விட வேண்டும்; எங்களுக்கும் அவருக்கு மிடையே நீர் ஒரு தடையாக இராமல் எங்களிடம் (முழுமையாக) அவரை ஒப்படைத்துவிட வேண்டும்” என்பதும் ஒன்றாக இருந்தது. இதை முஸ்லிம்கள் வெறுத்தார்கள்; இதைக் கண்டு கோபமடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றி (சமாதான ஒப்பந்தத்தை எழுத) முடியாது என்று சுஹைல் (தீர்மானமாக) மறுத்து விட்டார். நபி (ஸல்) அவர்கள் அதன் படியே ஒப்பந்தத்தை அவரிடம் எழுதி வாங்கினார்கள். ஆகவே, அன்றே அபூஜந்தல் (ரலி) அவர்களை அவருடைய தந்தை சுஹைல் பின் அம்ரிடம் திருப்பி யனுப்பிவிட்டார்கள். அந்த (ஒப்பந்தத்தின்) காலகட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) வந்த ஆண்கள் எவரையும் திருப்பி யனுப்பாமல் நபி (ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி. (அவரையும் மக்காவிற்குத் திருப்பியனுப்பிவிடுவார்கள்.) முஸ்லிம் பெண்கள் சிலர் புலம்பெயர்ந்து (மதீனா) வந்தார்கள். அன்று (இணைவைப்பாளர்களின் தலைவன்) உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் இளம் பெண்ணாக இருந்தார்கள். ஆகவே, அவரது வீட்டார் நபி (ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பி யனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை. அவர்கள் விஷயத்தில் அல்லாஹ், ‘‘இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் புலம்பெயர்ந்து உங்களிடம் வந்தால் (அவர்கள் இறைநம்பிக்கையாளர்களா என்பதைச்) சோதித்துப்பாருங்கள். அவர் களது இறைநம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவான். அவர்கள் இறைநம்பிக்கையுடையவர்கள் தான் என்று நீங்கள் கருதினால் அவர் களை இறைமறுப்பாளர்களிடம் திருப்பி யனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (இறைமறுப்பாளர்களான அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த ஆண்களும் அப்பெண் களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர்” (60:10) எனும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும். அத்தியாயம் :
ஹதீஸ் 2713 — Sahih al Bukhari 54:2
قَالَ عُرْوَةُ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَمْتَحِنُهُنَّ بِهَذِهِ الآيَةِ ‏{‏يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ ‏}‏ إِلَى ‏{‏غَفُورٌ رَحِيمٌ‏}‏‏.‏ قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنْهُنَّ قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ قَدْ بَايَعْتُكِ ‏"‏‏.‏ كَلاَمًا يُكَلِّمُهَا بِهِ، وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي الْمُبَايَعَةِ، وَمَا بَايَعَهُنَّ إِلاَّ بِقَوْلِهِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த) அப்பெண்களை இறைவசனத்தின் (60:10லி12) கட்டளைப்படி சோதனை செய்து வந்தார்கள். இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்த னையை அப்பெண்களில் எவர் ஏற்றுக் கொள்கிறாரோ அவரிடம், ‘‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். இப்படி, அப்பெண்ணிடம் பேசத்தான் செய்வார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் கரம் விசுவாசப் பிரமாணம் பெறும்போது எந்தப் பெண்ணின் கையையும் தொட்டதில்லை. பெண்களிடம் அவர்கள் வாய்மொழியாகவே விசுவாசப் பிரமாணம் வாங்கினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2714 — Sahih al Bukhari 54:3
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، قَالَ سَمِعْتُ جَرِيرًا ـ رضى الله عنه ـ يَقُولُ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَاشْتَرَطَ عَلَىَّ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ‏.‏
ஜரீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். அப்போது அவர்கள், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும் (முஸ்லிமான) ஒவ்வொருவருக்கும் நான் நலம் நாட வேண்டுமென்றும் எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2715 — Sahih al Bukhari 54:4
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ‏.‏
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ‘ஸகாத்’ கொடுக்க வேண்டும்; எல்லா முஸ்லிம்களுக்கும் நலம் நாட வேண்டும்” என்ற நிபந்தனைகளை ஏற்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் விசுவாசப் பிரமாணம் செய்தேன். அத்தியாயம் :
ஹதீஸ் 2716 — Sahih al Bukhari 54:5
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ بَاعَ نَخْلاً قَدْ أُبِّرَتْ فَثَمَرَتُهَا لِلْبَائِعِ إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட ஒரு பேரீச்ச மரத்தை விற்கிறாரோ அவருக்கே அதன் கனிகள் உரியவை யாகும்; வாங்கியவர் (கனிகள் தமக்கே சேர வேண்டுமென்று) நிபந்தனையிட்டி ருந்தால் தவிர.3 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2717 — Sahih al Bukhari 54:6
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةََ،ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ بَرِيرَةَ جَاءَتْ عَائِشَةَ تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا، وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ كِتَابَتِهَا شَيْئًا، قَالَتْ لَهَا عَائِشَةُ ارْجِعِي إِلَى أَهْلِكِ، فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ، وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ‏.‏ فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا فَأَبَوْا وَقَالُوا إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ فَلْتَفْعَلْ، وَيَكُونَ لَنَا وَلاَؤُكِ‏.‏ فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا ‏ "‏ ابْتَاعِي فَأَعْتِقِي، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமைப் பெண்ணான) பரீரா, தனது விடுதலைப் பத்திரம் தொடர்பாக (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக) உதவி கேட்டு என்னிடம் வந்தார். அதுவரை தன் விடுதலைப் பத்திரத்தில் எழுதப்பட்டிருந்த தொகையில் எதையும் அவர் செலுத்தியிருக்கவில்லை. எனவே நான் அவரிடம், ‘‘நீ உன் உரிமையாளர் களிடம் திரும்பிச் சென்று, உனது விடுதலைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை உன் சார்பாக நான் செலுத்தி விடுவதாகவும் உன் வாரிசுரிமை எனக்கே உரியதாய் இருக்க வேண்டுமென்றும் அவர்கள் விரும்பினால் நான் அவ்வாறே செய்கிறேன் என்றும் சொல்” எனக் கூறினேன். பரீராவும் இதை அவர்களிடம் சொல்ல அவர்கள் அதை (ஏற்க) மறுத்துவிட்டனர். மேலும், ‘‘ஆயிஷா உன்னை விடுதலை செய்வதன் வாயிலாக (அல்லாஹ்விடம்) நன்மையை நாடியிருந்தால் அவ்வாறே செய்யட்டும். ஆனால், உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்” என்று கூறிவிட்டனர். அதை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்ல அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘நீ (பரீராவை) வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.4 அத்தியாயம் :
ஹதீஸ் 2718 — Sahih al Bukhari 54:7
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، قَالَ سَمِعْتُ عَامِرًا، يَقُولُ حَدَّثَنِي جَابِرٌ ـ رضى الله عنه أَنَّهُ كَانَ يَسِيرُ عَلَى جَمَلٍ لَهُ قَدْ أَعْيَا، فَمَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَضَرَبَهُ، فَدَعَا لَهُ، فَسَارَ بِسَيْرٍ لَيْسَ يَسِيرُ مِثْلَهُ ثُمَّ قَالَ ‏"‏ بِعْنِيهِ بِوَقِيَّةٍ ‏"‏‏.‏ قُلْتُ لاَ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ بِعْنِيهِ بِوَقِيَّةٍ ‏"‏‏.‏ فَبِعْتُهُ فَاسْتَثْنَيْتُ حُمْلاَنَهُ إِلَى أَهْلِي، فَلَمَّا قَدِمْنَا أَتَيْتُهُ بِالْجَمَلِ، وَنَقَدَنِي ثَمَنَهُ، ثُمَّ انْصَرَفْتُ، فَأَرْسَلَ عَلَى إِثْرِي، قَالَ ‏"‏ مَا كُنْتُ لآخُذَ جَمَلَكَ، فَخُذْ جَمَلَكَ ذَلِكَ فَهْوَ مَالُكَ ‏"‏‏.‏ قَالَ شُعْبَةُ عَنْ مُغِيرَةَ عَنْ عَامِرٍ عَنْ جَابِرٍ أَفْقَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ظَهْرَهُ إِلَىَ الْمَدِينَةِ‏.‏ وَقَالَ إِسْحَاقُ عَنْ جَرِيرٍ عَنْ مُغِيرَةَ فَبِعْتُهُ عَلَى أَنَّ لِي فَقَارَ ظَهْرِهِ حَتَّى أَبْلُغَ الْمَدِينَةَ‏.‏ وَقَالَ عَطَاءٌ وَغَيْرُهُ لَكَ ظَهْرُهُ إِلَى الْمَدِينَةِ، وَقَالَ مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ شَرَطَ ظَهْرَهُ إِلَى الْمَدِينَةِ‏.‏ وَقَالَ زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ جَابِرٍ وَلَكَ ظَهْرُهُ حَتَّى تَرْجِعَ‏.‏ وَقَالَ أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَفْقَرْنَاكَ ظَهْرَهُ إِلَى الْمَدِينَةِ‏.‏ وَقَالَ الأَعْمَشُ عَنْ سَالِمٍ عَنْ جَابِرٍ تَبَلَّغْ عَلَيْهِ إِلَى أَهْلِكَ‏.‏ وَقَالَ عُبَيْدُ اللَّهِ وَابْنُ إِسْحَاقَ عَنْ وَهْبٍ عَنْ جَابِرٍ اشْتَرَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِوَقِيَّةٍ‏.‏ وَتَابَعَهُ زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ جَابِرٍ‏.‏ وَقَالَ ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ وَغَيْرِهِ عَنْ جَابِرٍ أَخَذْتُهُ بِأَرْبَعَةِ دَنَانِيرَ‏.‏ وَهَذَا يَكُونُ وَقِيَّةً عَلَى حِسَابِ الدِّينَارِ بِعَشَرَةِ دَرَاهِمَ‏.‏ وَلَمْ يُبَيِّنِ الثَّمَنَ مُغِيرَةُ عَنِ الشَّعْبِيِّ عَنْ جَابِرٍ، وَابْنُ الْمُنْكَدِرِ وَأَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ‏.‏ وَقَالَ الأَعْمَشُ عَنْ سَالِمٍ عَنْ جَابِرٍ وَقِيَّةُ ذَهَبٍ‏.‏ وَقَالَ أَبُو إِسْحَاقَ عَنْ سَالِمٍ عَنْ جَابِرٍ بِمِائَتَىْ دِرْهَمٍ‏.‏ وَقَالَ دَاوُدُ بْنُ قَيْسٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ عَنْ جَابِرٍ اشْتَرَاهُ بِطَرِيقِ تَبُوكَ، أَحْسِبُهُ قَالَ بِأَرْبَعِ أَوَاقٍ‏.‏ وَقَالَ أَبُو نَضْرَةَ عَنْ جَابِرٍ اشْتَرَاهُ بِعِشْرِينَ دِينَارًا‏.‏ وَقَوْلُ الشَّعْبِيِّ بِوَقِيَّةٍ أَكْثَرُ‏.‏ الاِشْتِرَاطُ أَكْثَرُ وَأَصَحُّ عِنْدِي‏.‏ قَالَهُ أَبُو عَبْدِ اللَّهِ‏.‏
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு போரிலிருந்து திரும்புகையில்) நான் களைப்படைந்துவிட்ட எனது ஒட்டகம் ஒன்றில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் சென்று அதை அடித்தார்கள். மேலும், அதற்காக துஆ செய்தார்கள். உடனே அது இதற்குமுன் இதுபோல் எப்போதும் ஓடியதில்லை என்னும் அளவுக்கு வேகமாக ஓடத் தொடங்கியது. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை எனக்கு ஒரு யிஊக்கியா’வுக்கு நீங்கள் விற்றுவிடுங்கள்” என்று கேட்டார்கள். அவ்வாறே, என் வீட்டாரிடம் போய்ச் சேரும்வரை அதில் நான் பயணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் இட்டுவிட்டு அதை அவர்களுக்கு நான் விற்றுவிட்டேன். (அவர்களும் என் நிபந்தனையை ஒப்புக் கொண்டார்கள்.) நாங்கள் (மதீனாவுக்கு) வந்து சேர்ந்த போது அந்த ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்களிடம் (ஒப்படைக்க) கொண்டு சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் செல்ல, எனக்குப் பின்னாலேயே நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பி (என்னை மீண்டும் வரவழைத்து), ‘‘உன் ஒட்டகத்தை நான் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. உனது அந்த ஒட்டகத்தை நீயே எடுத்துக் கொள். அது உனது செல்வம்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மொத்தம் பதிமூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவரை அந்த ஒட்டகத்தில் என்னை ஏற்றியனுப்பினார்கள்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘நான் மதீனாவை அடையும்வரை அதன் முதுகில் பயணம் செய்துகொள்வேன் என்ற நிபந்தனையின் பேரில் நபி (ஸல்) அவர்களுக்கு அதை நான் விற்றேன்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். வேறுசில அறிவிப்புகளில் நபி (ஸல்) அவர்களே அந்த அனுமதியை ஜாபிர் (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள் என்று காணப்படுகிறது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகின்றேன்: இவ்வாறு ஜாபிர் (ரலி) அவர்கள் நிபந்தனையிட்டார்கள் என்ற அறிவிப்பே அதிகமாக வந்துள்ளது; அதுதான் என்னிடம் சரியான அறிவிப்பும் ஆகும். சில அறிவிப்புகளில், ஓர் யிஊக்கியா’ வுக்கு நபி (ஸல்) அவர்கள் அதை வாங்கினார்கள் என வந்துள்ளது. நான்கு பொற்காசுகளுக்கு அதை நான் வாங்கிக்கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சில அறிவிப்புகளில் காணப்படுகிறது. இது, ஒரு பொற்காசு பத்து வெள்ளிக்காசுகளுக்கு ஈடாகும் என்ற கணக்குப்படி ஓர் யிஊக்கியா’ ஆகும். சிலர் விலையைக் குறிப்பிடவில்லை. வேறுசில அறிவிப்புகளில், தங்கத்தில் ஓர் யிஊக்கியா’ என்று சொல்லப்பட்டுள்ளது. இருநூறு வெள்ளிக்காசுகள் என்று சிலர் அறிவித்துள்ளனர். தபூக் சாலையில் அந்த ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார் கள்; நான்கு யிஊக்கியா’க்களுக்கு வாங்கிய தாகவே நான் கருதுகிறேன் என்று அறிவிப்பாளர்கள் சிலர் அறிவித்துள்ளனர். யிஇருபது பொற்காசுகளுக்கு’ என்றும், ஓர் யிஊக்கியா’வைவிட அதிகமான தொகைக்கு என்றும் அறிவிக்கப்படுகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 2719 — Sahih al Bukhari 54:8
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَتِ الأَنْصَارُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اقْسِمْ بَيْنَنَا وَبَيْنَ إِخْوَانِنَا النَّخِيلَ‏.‏ قَالَ ‏ "‏ لاَ ‏"‏‏.‏ فَقَالَ تَكْفُونَا الْمَئُونَةَ وَنُشْرِكُكُمْ فِي الثَّمَرَةِ‏.‏ قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(எங்கள்) பேரீச்ச மரங்களை எங்களுக்கும் எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்கு மிடையே பங்கிட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் யிவேண்டாம்’ என்று கூறவே, அன்சாரிகள், ‘‘நீங்கள் எங்களுக்குப் பதிலாக (எங்கள் நிலத்தில்) உழையுங்கள்; நாங்கள் விளைச்சலை உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறோம்” என்று (முஹாஜிர்களிடம்) கூறினார்கள். முஹாஜிர்கள், ‘‘செவியேற் றோம்; கட்டுப்பட்டோம் (உங்கள் நிபந் தனையை ஏற்றுக்கொண்டோம்)” என்று சொன்னார்கள்.5 அத்தியாயம் :
ஹதீஸ் 2720 — Sahih al Bukhari 54:9
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ أَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْبَرَ الْيَهُودَ أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا، وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிகைபர்’ நிலங்களை (அங்கிருந்த) யூதர் களுக்கு, ‘அவற்றில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும்’ என்றும், ‘அவற்றிலிருந்து வரும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது’ என்றும் நிபந்தனையிட்டுக் கொடுத்தார்கள்.6 அத்தியாயம் :
ஹதீஸ் 2721 — Sahih al Bukhari 54:10
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَحَقُّ الشُّرُوطِ أَنْ تُوفُوا بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந் தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும். இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.