இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம், ‘‘எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பது விரும்பத் தகாதது என இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நீங்கள் வினவியதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (வினவினேன்). இறைநம்பிக்கையாளர் களின் அன்னையே! எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரான எங்களை சுரைக்காய் குடுவையிலும் தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) ‘‘சுட்ட களிமண் பாத்திரத்தையும் மண்சாடியையும் ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடவில்லையா?” என நான் கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள், ‘‘நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கேட்காத ஒன்றை உங்களுக்கு அறிவிக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5596 — Sahih al Bukhari 74:22
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْجَرِّ الأَخْضَرِ. قُلْتُ أَنَشْرَبُ فِي الأَبْيَضِ قَالَ لاَ.
சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘நபி (ஸல்) அவர்கள் பச்சைநிற சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள்” என்று அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். அப்போது ‘‘வெண்ணிற களிமண் பாத்தி ரத்தில் நாங்கள் அருந்தலாமா?” என்று வினவினேன். அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் ‘‘இல்லை. (அதுவும் கூடாது)” என்று சொன்னார்கள்.20 அத்தியாயம் :
ஹதீஸ் 5597 — Sahih al Bukhari 74:23
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، أَنَّ أَبَا أُسَيْدٍ السَّاعِدِيَّ، دَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم لِعُرْسِهِ، فَكَانَتِ امْرَأَتُهُ خَادِمَهُمْ يَوْمَئِذٍ وَهْىَ الْعَرُوسُ. فَقَالَتْ مَا تَدْرُونَ مَا أَنْقَعْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْقَعْتُ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ فِي تَوْرٍ.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தமது திருமணத்திற்கு அழைத்தார்கள். அன்று மணப்பெண்ணாக இருந்த அபூஉசைதின் துணைவியாரே அவர்களுக்குப் பணிவிடை புரிபவராக இருந்தார். அவர், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக என்ன ஊறவைத்திருந் தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் அவர்களுக்காகப் பேரீச்சம்பழங்களை கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் இரவிலேயே ஊறவைத்தேன். (நபியவர்கள் உணவு உண்டபின் அந்த ஊறலை அவர்களுக்குப் புகட்டினேன்)” என்று சொன்னார்.21 அத்தியாயம் :
ஹதீஸ் 5598 — Sahih al Bukhari 74:24
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الْجُوَيْرِيَةِ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنِ الْبَاذَقِ،. فَقَالَ سَبَقَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم الْبَاذَقَ، فَمَا أَسْكَرَ فَهْوَ حَرَامٌ. قَالَ الشَّرَابُ الْحَلاَلُ الطَّيِّبُ. قَالَ لَيْسَ بَعْدَ الْحَلاَلِ الطَّيِّبِ إِلاَّ الْحَرَامُ الْخَبِيثُ.
அபுல் ஜுவைரியா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களி டம், ‘பாதக்’ எனும் பானம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘(இவர்கள் மதுவுக்கு) ‘பாதக்’ எனும் புதுப் பெயரைச் சூட்டுவதற்கு முன்பே (மது அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும் என) முஹம்மத் (ஸல்) அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். ஆகவே, போதையூட்டும் எதுவாயினும் அது தடை செய்யப்பட்டதுதான்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘(‘பாதக்’ எனும் கெட்டியாகக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாறு) அனுமதிக்கப்பட்ட நல்ல பானமாயிற்றே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அனுமதிக்கப்பட்ட நல்ல பொருளுக்கு அப்பால் தடை செய்யப்பட்ட கெட்ட பொருளைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5599 — Sahih al Bukhari 74:25
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ الْحَلْوَاءَ وَالْعَسَلَ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பி வந்தார்கள்.25 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அபூதல்ஹா, அபூதுஜானா, சுஹைல் பின் பய்ளா (ரலி) ஆகியோருக்கு நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்கள் மற்றும் (கனிந்த) பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றின் கலப்பு ஊறலை ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது மது தடை செய்யப்பட்டது. உடனே நான் அதை எறிந்துவிட்டேன். நான் அவர்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பவனாகவும் அவர்களில் வயதில் சிறியவனாகவும் இருந்தேன். நாங்கள் அந்தக் கலவையை அன்று மதுவாகவே கருதினோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 5601 — Sahih al Bukhari 74:27
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الزَّبِيبِ وَالتَّمْرِ وَالْبُسْرِ وَالرُّطَبِ.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம்பழத்தையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5602 — Sahih al Bukhari 74:28
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُجْمَعَ بَيْنَ التَّمْرِ وَالزَّهْوِ، وَالتَّمْرِ وَالزَّبِيبِ، وَلْيُنْبَذْ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى حِدَةٍ.
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை யும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்றுசேர்(த்து ஊறவை)ப்பதை யும், பேரீச்சம்பழத்தையும் உலர்ந்த திராட்சையையும் ஒன்றுசேர்(த்து ஊற வை)ப்பதையும் தடை செய்தார்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றை யும் தனித்தனியாக ஊறவைக்கலாம் (என அனுமதியளித்தார்கள்). அத்தியாயம் :
ஹதீஸ் 5603 — Sahih al Bukhari 74:29
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِقَدَحِ لَبَنٍ وَقَدَحِ خَمْرٍ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பைத்துல் மக்திஸிற்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களிடம் பால்கிண்ணமும் மதுக்கிண்ணமும் கொண்டுவரப்பட்டன.27 அத்தியாயம் :
ஹதீஸ் 5604 — Sahih al Bukhari 74:30
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، سَمِعَ سُفْيَانَ، أَخْبَرَنَا سَالِمٌ أَبُو النَّضْرِ، أَنَّهُ سَمِعَ عُمَيْرًا، مَوْلَى أُمِّ الْفَضْلِ يُحَدِّثُ عَنْ أُمِّ الْفَضْلِ، قَالَتْ شَكَّ النَّاسُ فِي صِيَامِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ، فَأَرْسَلْتُ إِلَيْهِ بِإِنَاءٍ فِيهِ لَبَنٌ فَشَرِبَ. فَكَانَ سُفْيَانُ رُبَّمَا قَالَ شَكَّ النَّاسُ فِي صِيَامِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ فَأَرْسَلَتْ إِلَيْهِ أُمُّ الْفَضْلِ. فَإِذَا وُقِفَ عَلَيْهِ قَالَ هُوَ عَنْ أُمِّ الْفَضْلِ.
உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவில் தங்கியிருந்தபோது) ‘அரஃபா’ (துல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளன்று நோன்பு நோற்றுள்ளார்களா (இல்லையா) என மக்கள் சந்தேகப்பட்டார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பால் நிரம்பிய பாத்திரம் ஒன்றைக் கொடுத்தனுப்பினேன். (அதை) அவர்கள் அருந்தினார்கள்.28 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் சில வேளைகளில், ‘‘அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அரஃபா’ நாளன்று நோன்பு நோற்றிருக்கிறார்களா (இல்லையா) என்று மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஆகவே, உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு (ஒரு கிண்ணத்தில் பாலை) அனுப்பி வைத்தார்கள்” என்று (‘‘உம்முல் பள்ல் (ரலி) அவர்களிடமிருந்து இதைத் தாம் கேட்டதாகச் சொல்லாமல்) நேரடியாக அறிவித்ததுண்டு. அவர்களிடம், ‘‘இது (அறிவிப்பாளர் தொடரில் முறிவு ஏற்படாத) மவ்ஸூலா(ன ஹதீஸா)? அல்லது (அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்டுள்ள) முர்சலா(ன ஹதீஸா)?” என்று கேட்கப்பட்டால், ‘‘இதை உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறேன் (ஆகவே, இது ‘மவ்ஸூல்’தான்)” என்று பதிலளிப்பார்கள். அத்தியாயம் :