ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஹுமைத் அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் ‘அந்நகீஉ’ (எனும் கால்நடை பராமரிப்பு மையத்தில்) இருந்து ஒரு கோப்பைப் பால் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘இதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 5606 — Sahih al Bukhari 74:32
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، يَذْكُرُ ـ أُرَاهُ ـ عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ أَبُو حُمَيْدٍ ـ رَجُلٌ مِنَ الأَنْصَارِ ـ مِنَ النَّقِيعِ بِإِنَاءٍ مِنْ لَبَنٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَلاَّ خَمَّرْتَهُ، وَلَوْ أَنْ تَعْرُضَ عَلَيْهِ عُودًا ". وَحَدَّثَنِي أَبُو سُفْيَانَ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒருவரான அபூஹுமைத் (ரலி) அவர்கள் ‘அந்நகீஉ’ எனும் இடத்திலிருந்து பால் நிரம்பிய பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?” என்று அவரிடம் கேட்டார் கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 5607 — Sahih al Bukhari 74:33
حَدَّثَنِي مَحْمُودٌ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ مَكَّةَ وَأَبُو بَكْرٍ مَعَهُ قَالَ أَبُو بَكْرٍ مَرَرْنَا بِرَاعٍ وَقَدْ عَطِشَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فَحَلَبْتُ كُثْبَةً مِنْ لَبَنٍ فِي قَدَحٍ، فَشَرِبَ حَتَّى رَضِيتُ، وَأَتَانَا سُرَاقَةُ بْنُ جُعْشُمٍ عَلَى فَرَسٍ فَدَعَا عَلَيْهِ، فَطَلَبَ إِلَيْهِ سُرَاقَةُ أَنْ لاَ يَدْعُوَ عَلَيْهِ، وَأَنْ يَرْجِعَ فَفَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு மக்காவிலிருந்து (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து) வந்தார்கள். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை) அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாகத்துடன் இருந்தபோது நாங்கள் ஓர் ஆட்டிடையனைக் கடந்துசென்றோம். அபபோது நான் (ஆட்டிலிருந்து) ஒரு கிண்ணத்தில் சிறிது பால் கறந்(து நபியவர்களுக்குக் கொடுத்)தேன். நான் திருப்தியடையும்வரை அதை நபி (ஸல்) அவர்கள் பருகினார்கள். (எங்களைப் பிடிக்க) சுராக்கா பின் ஜுஉஷும் ஒரு குதிரையில் எங்களை நோக்கி வந்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது சுராக்கா தமக்கெதிராகப் பிரார்த்திக்க வேண்டாமென்றும், தாம் திரும்பச் சென்றுவிடுவதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுக்கொண்டார். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார் கள்.29 அத்தியாயம் :
ஹதீஸ் 5608 — Sahih al Bukhari 74:34
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " نِعْمَ الصَّدَقَةُ اللِّقْحَةُ الصَّفِيُّ مِنْحَةً، وَالشَّاةُ الصَّفِيُّ مِنْحَةً، تَغْدُو بِإِنَاءٍ، وَتَرُوحُ بِآخَرَ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பாலுக்காக) இரவல் தரப்பட்ட அதிகம் பால்தருகின்ற ஒட்டகமும், (பாலுக்காக) இரவல் தரப்பட்ட அதிகம் பால் தருகின்ற ஆடும்தான் தர்மங்களிலேயே சிறந்த தாகும். (அதிலிருந்து) காலையில் ஒரு கிண்ணத்திலும் மாலையில் ஒரு கிண்ணத்திலும் நீ பால் கறந்துகொள் ளலாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30 அத்தியாயம் :
ஹதீஸ் 5609 — Sahih al Bukhari 74:35
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم شَرِبَ لَبَنًا فَمَضْمَضَ وَقَالَ " إِنَّ لَهُ دَسَمًا ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்புளித்தார்கள். அப்போது, ‘‘இதில் (பால்) கொழுப்பு இருக்கிறது” என்று சொன்னார்கள்.31 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (‘மிஅராஜ்’ எனும் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு நான்கு நதிகள் (ஓடிக்கொண்டு) இருந்தன. இரண்டு நதிகள் வெளியேயும், இரண்டு நதிகள் உள்ளேயும் (ஓடிக்கொண்டு) இருந்தன. வெளியே இருக்கும் இரண்டு நதிகள் நீல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாகும். உள்ளே இருக்கும் இரண்டு நதிகள் சொர்க்கத்தி லுள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரு நதிகளாகும். அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டுவரப்பட்டன. பால் கிண்ணம், தேன்கிண்ணம், மதுக்கிண்ணம் ஆகியவைதான் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து (அதை) அருந்தினேன். அப்போது என்னிடம், ‘‘நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்” என்று சொல்லப்பட்டது. இதை அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.32 இதே ஹதீஸ் மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் (சொர்க்கத்து) நதிகள் குறித்து மேற்கண்டபடி அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால்,) மூன்று கிண்ணங்கள் பற்றி குறிப்பிடவில்லை. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா ஸைத் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் ஏராளமான பேரீச்சமரங்களுடைய (பெரும்) செல்வராக இருந்தார். அவருடைய செல்வங்களில் ‘பைருஹா’ எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். ‘‘நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்” எனும் (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ், ‘நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்’ எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா’ (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும், அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் அதைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நல்லது. அது ‘(மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே!’ அல்லது ‘அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!’ என்று கூறினார்கள். -அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்லமா (இவ்வாறு) சந்தேகத்துடன் அறிவிக்கிறார்.- (தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், ‘‘தர்மம் செய்வது குறித்து) நீங்கள் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘(அவ்வாறே) செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” எனக் கூறிவிட்டுத் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்களும் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களும் ‘நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!’ என்றே அறிவித்துள் ளார்கள்.33 அத்தியாயம் :
ஹதீஸ் 5612 — Sahih al Bukhari 74:38
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم شَرِبَ لَبَنًا، وَأَتَى دَارَهُ فَحَلَبْتُ شَاةً فَشُبْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْبِئْرِ، فَتَنَاوَلَ الْقَدَحَ فَشَرِبَ، وَعَنْ يَسَارِهِ أَبُو بَكْرٍ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ، فَأَعْطَى الأَعْرَابِيَّ فَضْلَهُ، ثُمَّ قَالَ " الأَيْمَنَ فَالأَيْمَنَ ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கிணற்றி ருந்து (நீர் எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்ந்திருந்தனர். (தாம் அருந்திய) பான் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, ‘‘வலப் பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)” என்று சொன்னார்கள்.34 அத்தியாயம் :
ஹதீஸ் 5613 — Sahih al Bukhari 74:39
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَمَعَهُ صَاحِبٌ لَهُ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنْ كَانَ عِنْدَكَ مَاءٌ بَاتَ هَذِهِ اللَّيْلَةَ فِي شَنَّةٍ، وَإِلاَّ كَرَعْنَا ". قَالَ وَالرَّجُلُ يُحَوِّلُ الْمَاءَ فِي حَائِطِهِ ـ قَالَ ـ فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ عِنْدِي مَاءٌ بَائِتٌ فَانْطَلِقْ إِلَى الْعَرِيشِ ـ قَالَ ـ فَانْطَلَقَ بِهِمَا، فَسَكَبَ فِي قَدَحٍ، ثُمَّ حَلَبَ عَلَيْهِ مِنْ دَاجِنٍ لَهُ ـ قَالَ ـ فَشَرِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ شَرِبَ الرَّجُلُ الَّذِي جَاءَ مَعَهُ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் ஒருவர் (அபூபக்ர்) உடன் ஓர் அன்சாரியிடம் சென்றார்கள். நபி ஸல்) அவர்கள் அந்த அன்சாரியிடம், ‘‘உங்களிடம் இன்று இரவு தோல்பையில் (ஊற்றி) வைக்கப்பட்ட தண்ணீர் இருந்தால் (அதை எங்களுக்குப் புகட்டுங்கள்). இல்லையென்றால் நாங்கள் (இந்தத் தொட்டியில்) வாய் வைத்துக் குடித்துக்கொள்வோம்” என்று சொன் னார்கள். அப்போது அந்த அன்சாரி தமது தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் இரவிலேயே (தோல் பையில் ஊற்றி) வைத்த தண்ணீர் உள்ளது. பந்தலுக்கு வாருங்கள்” என்று கூறி இருவரையும் அழைத்துச் சென்றார். அங்கு கிண்ணமொன்றில் தண்ணீர் ஊற்றிப் பிறகு அதன்மீது தமது வளர்ப்பு ஆட்டிலிருந்து (பால்) கறந்து ஊற்றினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதை) அருந்தினார்கள். பிறகு அவர் களுடன் வந்த அந்த நண்பரும் (அபூபக்ர்) அருந்தினார்.35 அத்தியாயம் :
ஹதீஸ் 5614 — Sahih al Bukhari 74:40
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ أَخْبَرَنِي هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ الْحَلْوَاءُ وَالْعَسَلُ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இனிப்புப் பொருட்களையும் தேனையும் விரும்பி வந்தார்கள்.37 அத்தியாயம் :