حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، قَالَ سَمِعْتُ الْوَلِيدَ بْنَ الْعَيْزَارِ، ذَكَرَ عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ " الصَّلاَةُ عَلَى مِيقَاتِهَا ". قُلْتُ ثُمَّ أَىٌّ. قَالَ " ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ ". قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ " الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ". فَسَكَتُّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது” என்று கூறினார்கள். ‘‘பிறகு எது (சிறந்தது)?” என்று நான் கேட்டேன் அவர்கள், ‘‘பிறகு தாய் தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘பிறகு எது (சிறந்தது)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இறைவழியில் அறப்போர் புரிவதாகும்” என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்குமேல்) வேறெதுவும் கேட்காமல் மௌனமாகிவிட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.2 அத்தியாயம் :
ஹதீஸ் 2783 — Sahih al Bukhari 56:2
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "لاَ هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்னால் (மக்காவிலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது. ஆனால், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. போருக்குப் புறப்படும்படி நீங்கள் அழைக்கப்பட்டால் உடனே போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.3 அத்தியாயம் :
ஹதீஸ் 2784 — Sahih al Bukhari 56:3
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ تُرَى الْجِهَادَ أَفْضَلَ الْعَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ قَالَ " لَكِنَّ أَفْضَلَ الْجِهَادِ حَجٌّ مَبْرُورٌ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச்செயல் கலவாத ஹஜ்தான்” என்று பதிலளித்தார்கள்.4 அத்தியாயம் :
ஹதீஸ் 2785 — Sahih al Bukhari 56:4
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَفَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، قَالَ أَخْبَرَنِي أَبُو حَصِينٍ، أَنَّ ذَكْوَانَ، حَدَّثَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ يَعْدِلُ الْجِهَادَ. قَالَ " لاَ أَجِدُهُ ـ قَالَ ـ هَلْ تَسْتَطِيعُ إِذَا خَرَجَ الْمُجَاهِدُ أَنْ تَدْخُلَ مَسْجِدَكَ فَتَقُومَ وَلاَ تَفْتُرَ وَتَصُومَ وَلاَ تُفْطِرَ ". قَالَ وَمَنْ يَسْتَطِيعُ ذَلِكَ قَالَ أَبُو هُرَيْرَةَ إِنَّ فَرَسَ الْمُجَاهِدِ لَيَسْتَنُّ فِي طِوَلِهِ فَيُكْتَبُ لَهُ حَسَنَاتٍ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘அறப்போருக்கு ஈடான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி எதையும் நான் காணவில்லை” என்று கூறிவிட்டு, ‘‘அறப்போராளி (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபின், (அவருக்கு இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீர் உமது பள்ளிவாசலுக்குச் சென்று இடைவிடாமல் தொழுதுகொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக்கொண்டும் இருக்க உம்மால் முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘அது யாரால் முடியும்?” என்று பதிலளித்தார்.5 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: அறப்போராளியின் குதிரை, அதைக் கட்டிவைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக் கிடையே (கால்களை உதைத்துக்கொண்டு) சில தடவை குதித்துச் சென்றால் அதுவும் அவருக்கு நன்மையாக எழுதப்படும். அத்தியாயம் :
ஹதீஸ் 2786 — Sahih al Bukhari 56:5
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ، أَىُّ النَّاسِ أَفْضَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مُؤْمِنٌ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ بِنَفْسِهِ وَمَالِهِ ". قَالُوا ثُمَّ مَنْ قَالَ " مُؤْمِنٌ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ يَتَّقِي اللَّهَ، وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ ".
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவழியில் தமது உயிராலும் தமது பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘‘பிறகு யார்?” என்று கேட்டார் கள். ‘‘மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக்கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2787 — Sahih al Bukhari 56:6
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ ـ وَاللَّهُ أَعْلَمُ بِمَنْ يُجَاهِدُ فِي سَبِيلِهِ ـ كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ، وَتَوَكَّلَ اللَّهُ لِلْمُجَاهِدِ فِي سَبِيلِهِ بِأَنْ يَتَوَفَّاهُ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يَرْجِعَهُ سَالِمًا مَعَ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவழியில் போராடுபவரின் நிலை யானது, லிஉண்மையாகப் போராடுபவர் யார் என்பது அல்லாஹ்வுக்கே தெரியும்லி (அல்லாஹ்வைத்) தொழுதும், (அவனுக்காக) நோன்பு நோற்றும்வருபவரின் நிலையைப் போன்றதாகும். அல்லாஹ், தன் பாதையில் போராடுபவரின் உயிர்த் தியாகத்தை ஏற்று, அவரைச் சொர்க்கத்தில் அனுமதிக்கப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான். அல்லது நன்மையுடனோ போர்ச் செல்வத்துடனோ அவரைத் திரும்பவைக்கப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2788 — Sahih al Bukhari 56:7
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، فَتُطْعِمُهُ، وَكَانَتْ أُمُّ حَرَامٍ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَطْعَمَتْهُ وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ. قَالَتْ فَقُلْتُ وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ، يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ، مُلُوكًا عَلَى الأَسِرَّةِ، أَوْ مِثْلُ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ ". شَكَّ إِسْحَاقُ. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَدَعَا لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ وَضَعَ رَأْسَهُ، ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ فَقُلْتُ وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ ". كَمَا قَالَ فِي الأَوَّلِ. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ " أَنْتِ مِنَ الأَوَّلِينَ ". فَرَكِبَتِ الْبَحْرَ فِي زَمَانِ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ الْبَحْرِ، فَهَلَكَتْ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள்.7 அப்போது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுப்பார். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன்பார்க்கத் தொடங்கினார். அப்படியே நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டார்கள். பிறகு சிரித்துக்கொண்டே கண் விழித் தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் எனக்குக் காட்டப்பட்டனர்; அவர்கள் இறைவழியில் அறப்போர் புரியும் வீரர்களாவர். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் மன்னர்களாக லிஅல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போன்றுலி ஏறிச்செல்கின் றார்கள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு தமது தலையை(த் தலையணை யில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக் கிறீர்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டனர்....” என்று முன்பு போலவே கூறினார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருத்தி யாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்) முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் (கிழக்கு ரோம்மீது போர் புரியச் சென்ற) காலத்தில் உம்மு ஹராம் (ரலி) அவர்களும் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பிறகு கடலிலிருந்து புறப்பட்டு (கரைக்கு) வந்தபோது, தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்து போனார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2789 — Sahih al Bukhari #2789

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரைச் சொர்க்கத்தில் அனுமதிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்துகொண்டாலும் சரி” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?” என்று (நபித்தோழர்கள்) கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘சொர்க் கத்தில் நூறு தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ், தமது பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்திவைத்துள்ளான். இரு தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ள தைப் போன்ற இடைவெளி உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், யிஃபிர்தவ்ஸ்’ எனும் (சொர்க்கத்தின்) தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த தரமும் மிக உயர்ந்த தரமும் ஆகும்” என்று கூறினார்கள். (அறிவிப்பாளரான யஹ்யா பின் ஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) ‘‘அதற்குமேலே கருணையாள(னான இறைவ)னின் அரியணை (அர்ஷ்) இருக்கிறது. அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்ற”’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கருதுகிறேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஃபுலைஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அதற்குமேலே ரஹ்மானின் அரியணை இருக்கிறது” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சந்தேகத் தொனியின்றி) அறிவிக்கப்பட் டுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன்; அவர்கள் இருவரும் என்னிடம் வந்து, என்னுடன் ஒரு மரத்தின் மீது ஏறி அழகான, சிறந்த ஒரு வீட்டினுள் புகச்செய்தார்கள். அதைவிட அழகான ஒரு வீட்டை நான் பார்த்ததே யில்லை; (அவர்களில் ஒருவர்,) ‘‘இந்த வீடு இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்களின் வீடாகும்” என்று சொன்னார். அத்தியாயம் :