Qurani·قرآني
தமிழ்

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்

309 ஹதீஸ்கள் · #2782–3090

ஹதீஸ் 2792 — Sahih al Bukhari 56:10
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம், அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2793 — Sahih al Bukhari 56:11
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏لَقَابُ قَوْسٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِمَّا تَطْلُعُ عَلَيْهِ الشَّمْسُ وَتَغْرُبُ ‏"‏‏.‏ وَقَالَ ‏"‏ لَغَدْوَةٌ أَوْ رَوْحَةٌ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِمَّا تَطْلُعُ عَلَيْهِ الشَّمْسُ وَتَغْرُبُ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்பதானது, சூரியன் எதன் மீது உதித்து மறைகின்றதோ அ(ந்த உலகத்)தைவிடச் சிறந்ததாகும். மேலும், அல்லாஹ் வின் பாதையில் ஒரு காலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது, அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது சூரியன் எதன் மீது உதித்து மறைகின்றதோ அ(ந்த உலகத்)தைவிடச் சிறந்ததாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2794 — Sahih al Bukhari 56:12
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الرَّوْحَةُ وَالْغَدْوَةُ فِي سَبِيلِ اللَّهِ أَفْضَلُ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இறைவழியில் காலையிலும் மாலை யிலும் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தைவிடவும் அதிலுள்ள பொருட்களைவிடவும் சிறந்ததாகும். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2795 — Sahih al Bukhari 56:13
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَا مِنْ عَبْدٍ يَمُوتُ لَهُ عِنْدَ اللَّهِ خَيْرٌ، يَسُرُّهُ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا، وَأَنَّ لَهُ الدُّنْيَا وَمَا فِيهَا، إِلاَّ الشَّهِيدَ، لِمَا يَرَى مِنْ فَضْلِ الشَّهَادَةِ، فَإِنَّهُ يَسُرُّهُ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ مَرَّةً أُخْرَى ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்துபோகின்ற எந்த (நல்ல) அடியாரும் இந்த உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் அவருக்குக் கிடைக்கும் என்றிருந்தாலும்கூட உலகிற்குத் திரும்பிவர விரும்பமாட்டார்; இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரைத் தவிர; ஏனெனில், உயிர்த் தியாகத்தின் சிறப்பை (மறுமையில்) அவர் காண்கின்றார். ஆகவே, இந்த உலகிற்கு மீண்டும் வந்து மறுபடியும் ஒருமுறை (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுவதை அவர் விரும்புவார். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2796 — Sahih al Bukhari 56:14
وَسَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏ "‏ لَرَوْحَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ غَدْوَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ مِنَ الْجَنَّةِ أَوْ مَوْضِعُ قِيدٍ ـ يَعْنِي سَوْطَهُ ـ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَتْ إِلَى أَهْلِ الأَرْضِ لأَضَاءَتْ مَا بَيْنَهُمَا وَلَمَلأَتْهُ رِيحًا، وَلَنَصِيفُهَا عَلَى رَأْسِهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவழியில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும்விடச் சிறந்தது. உங்களில் ஒருவருடைய வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான இடம் சொர்க் கத்தில் கிடைப்பதானது, உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன் களில்) ஒரு பெண் உலகத்தாரிடையே தோன்றினால், வானத்திற்கும் பூமிக்கு மிடையே உள்ள அனைத்தையும் அவள் ஒளிறச்செய்துவிடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பிவிடுவாள். அவளது தலையிலுள்ள முக்காடு உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாகும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2797 — Sahih al Bukhari 56:15
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ أَنَّ رِجَالاً مِنَ الْمُؤْمِنِينَ لاَ تَطِيبُ أَنْفُسُهُمْ أَنْ يَتَخَلَّفُوا عَنِّي، وَلاَ أَجِدُ مَا أَحْمِلُهُمْ عَلَيْهِ، مَا تَخَلَّفْتُ عَنْ سَرِيَّةٍ تَغْزُو فِي سَبِيلِ اللَّهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! இறைநம்பிக்கை யாளர்களில் சிலரை ஏற்றிச்செல்ல எனக்கு வாகனமும் கிடைக்கவில்லை; அவர்கள் என்னைவிட்டுப் பின்தங்கிவிடுவது அவர்களின் மனதுக்கு மகிழ்ச்சியும் அளிக் காது என்பது (மட்டும்) இல்லையாயின், இறைவழியில் (போருக்குப்) புறப்படும் எந்தச் சிறு படையுடனும் நான் செல்லாமல் (ஊரில்) இருக்கமாட்டேன்8. என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அல்லாஹ் வின் பாதையில் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.9 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2798 — Sahih al Bukhari 56:16
حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الصَّفَّارُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ خَطَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ أَخَذَ الرَّايَةَ زَيْدٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا خَالِدُ بْنُ الْوَلِيدِ عَنْ غَيْرِ إِمْرَةٍ فَفُتِحَ لَهُ ـ وَقَالَ ـ مَا يَسُرُّنَا أَنَّهُمْ عِنْدَنَا ‏"‏‏.‏ قَالَ أَيُّوبُ أَوْ قَالَ ‏"‏ مَا يَسُرُّهُمْ أَنَّهُمْ عِنْدَنَا ‏"‏‏.‏ وَعَيْنَاهُ تَذْرِفَانِ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார் கள். அப்போது (மூத்தா போர்க் களத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து கொண்டே நேரில் காண்பதுபோல் கூறலானார்கள்:) ‘‘ஸைத் பின் அல்ஹாரிஸா கொடியைப் பிடித்திருந்தார்; இப்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு ஜஅஃபர் அதைப் பற்றினார்; அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அதை அப்துல்லாஹ் பின் ரவாஹா பிடித்தார்; இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு காலித் பின் அல்வலீத் (தளபதியாக) நியமிக்கப்படாமலேயே அதைப் பிடித்தார். அவருக்கு வெற்றியளிக்கப்பட்டுவிட்டது.10 (வீரமரணத்தால் அவர்கள் பெற்ற பெரும்பேற்றினை நாம் அறிந்தபிறகும்) அவர்கள் நம்முடன் இருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்காது. லிஅறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள், அல்லது, ‘அவர்கள் நம்முடன் இருப்பது அவர்களுக்கே மகிழ்ச்சியளிக்காது’ என்றும் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்லி இதைக் கூறியபோது நபி (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அத்தியாயம் :
ஹதீஸ் 2799 — Sahih al Bukhari 56:17
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ خَالَتِهِ أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، قَالَتْ نَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا قَرِيبًا مِنِّي، ثُمَّ اسْتَيْقَظَ يَتَبَسَّمُ‏.‏ فَقُلْتُ مَا أَضْحَكَكَ قَالَ ‏"‏ أُنَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ يَرْكَبُونَ هَذَا الْبَحْرَ الأَخْضَرَ، كَالْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ ‏"‏‏.‏ قَالَتْ فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ‏.‏ فَدَعَا لَهَا، ثُمَّ نَامَ الثَّانِيَةَ، فَفَعَلَ مِثْلَهَا، فَقَالَتْ مِثْلَ قَوْلِهَا، فَأَجَابَهَا مِثْلَهَا‏.‏ فَقَالَتِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ‏.‏ فَقَالَ ‏"‏ أَنْتِ مِنَ الأَوَّلِينَ ‏"‏‏.‏ فَخَرَجَتْ مَعَ زَوْجِهَا عُبَادَةَ بْنِ الصَّامِتِ غَازِيًا أَوَّلَ مَا رَكِبَ الْمُسْلِمُونَ الْبَحْرَ مَعَ مُعَاوِيَةَ، فَلَمَّا انْصَرَفُوا مِنْ غَزْوِهِمْ قَافِلِينَ فَنَزَلُوا الشَّأْمَ، فَقُرِّبَتْ إِلَيْهَا دَابَّةٌ لِتَرْكَبَهَا فَصَرَعَتْهَا فَمَاتَتْ‏.‏
உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்துக்கொண்டே கண்விழித் தார்கள். நான், ‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் இந்தப் பசுங்கடலில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் அரசர்களைப் போன்று (கப்பல்களில் ஏறிப்) பயணம் செய்துகொண்டிருப்பதாக எனக்கு (கனவில்) காட்டப்பட்டது” என்று கூறினார்கள். நான், ‘‘அவர்களில் ஒருத்தியாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். (அவ்வாறே) அவர்கள் எனக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு இரண்டாம் முறையாக உறங்கினார்கள். முன்பு செய்ததைப் போன்றே செய்தார்கள். நானும் முன்பு கேட்டதைப் போன்றே கேட்டேன். முன்பு பதில் சொன்னதைப் போலவே அவர்களும் பதில் சொன்னார் கள். நான், ‘‘அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். அவர்கள், ‘‘முதன் முதலாகச் செல்பவர் களில் நீங்களும் ஒருவர்தான்” என்று கூறினார்கள். (உம்மு ஹராம் (ரலி) அவர்களின் சகோதரி மகன் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்:) அவ்வாறே, (தளபதி) முஆவியா (ரலி) அவர்களுடன் முஸ்லிம்கள் (கிழக்கு ரோமில் அறப்போர் புரிய) கடலில் பயணம் செய்த முதல் படையினரில் ஓர் அறப்போர் வீரராக, தம் கணவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுடன் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். தமது படையெடுப்பிலிருந்து அவர்கள் திரும்பி வந்தபோது ஷாம் (சிரியா) நாட்டில் இறங்கினார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் ஏறிக்கொள்வதற்காக அவர்களுக்கருகே வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டது. (அவர்கள் அதில் ஏறிக்கொள்ள) அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது; அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.11 அத்தியாயம் :
ஹதீஸ் 2800 — Sahih al Bukhari #2800

ஹதீஸ் 2801 — Sahih al Bukhari 56:18
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَقْوَامًا مِنْ بَنِي سُلَيْمٍ إِلَى بَنِي عَامِرٍ فِي سَبْعِينَ، فَلَمَّا قَدِمُوا، قَالَ لَهُمْ خَالِي أَتَقَدَّمُكُمْ، فَإِنْ أَمَّنُونِي حَتَّى أُبَلِّغَهُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَإِلاَّ كُنْتُمْ مِنِّي قَرِيبًا‏.‏ فَتَقَدَّمَ، فَأَمَّنُوهُ، فَبَيْنَمَا يُحَدِّثُهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ أَوْمَئُوا إِلَى رَجُلٍ مِنْهُمْ، فَطَعَنَهُ فَأَنْفَذَهُ فَقَالَ اللَّهُ أَكْبَرُ، فُزْتُ وَرَبِّ الْكَعْبَةِ‏.‏ ثُمَّ مَالُوا عَلَى بَقِيَّةِ أَصْحَابِهِ فَقَتَلُوهُمْ، إِلاَّ رَجُلاً أَعْرَجَ صَعِدَ الْجَبَلَ‏.‏ قَالَ هَمَّامٌ فَأُرَاهُ آخَرَ مَعَهُ، فَأَخْبَرَ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَدْ لَقُوا رَبَّهُمْ، فَرَضِيَ عَنْهُمْ وَأَرْضَاهُمْ، فَكُنَّا نَقْرَأُ أَنْ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا‏.‏ ثُمَّ نُسِخَ بَعْدُ، فَدَعَا عَلَيْهِمْ أَرْبَعِينَ صَبَاحًا، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لِحْيَانَ وَبَنِي عُصَيَّةَ الَّذِينَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தார் சிலருடன் எழுபது பேர் (கொண்ட வேத அறிஞர்களான அன்சாரி)களை பனூ ஆமிர் குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்கள் (அங்கு) சென்றபோது என் தாய்மாமன் (ஹராம் பின் மில்ஹான், தம்முடன் வந்த தோழர்களிடம்), ‘‘உங்களுக்கு முன்னால் நான் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் குறித்து நான் எடுத்துரைத்திட (அவர்கள் என்னை அனுமதித்து) எனக்குப் பாதுகாப்பளித்தால் சரி; இல்லையென்றால் நீங்கள் என் (பின்னால் என்) அருகிலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு சற்று முன்னால் சென் றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்ப ளித்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்துக்கொண்டி ருந்தபோது, தங்களில் ஒருவரைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய் மாமனை (ஈட்டியால்) குத்தி அவரைக் கொன்றுவிட்டான். (உயிர் பிரியும் வேளையில்) அவர், ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார். பிறகு, அவருடைய எஞ்சிய தோழர்களின் மீதும் பாய்ந்து அவர்களையும் கொன்றுவிட்டார்கள்; மலையின் மீது ஏறிக்கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர. அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் (ரஹ்) அவர்கள், ‘‘கால் ஊனமுற்ற அந்த மனிதருடன் மற்றொருவரும் (தப்பித்துக்கொண்டார்) என்று (அறிவிக்கப்பட்ட தாகவே) நான் கருதுகிறேன்” என்று கூறுகிறார். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு, நீங்கள் அனுப்பிய போதகர்கள் தங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டனர். அவர்களைக் குறித்து அவன் திருப்தியடைந்தான். அவர்களும் (தாம் பெற்ற நற்பலனைக் குறித்து) திருப்தி கொள்ளும்படிச் செய்தான் என்று அறிவித்தார்கள். நாங்கள் (அப்போது அருளப்பட்ட), ‘‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம். எங்களைக் குறித்து அவன் திருப்தியடைந்துவிட்டான். தன் (வெகுமதியி)னைக் குறித்து எங்களைத் திருப்தியடையும்படி அவன் செய்தான் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” என்னும் இறைவசனத்தை ஓதிக்கொண்டிருந்தோம். அது பின்னாளில் (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் (பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்த பனூ உஸய்யா ஆகிய கூட்டத்தாருக்கெதிராக நாற்பது நாட்கள் காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தனை செய்தார்கள்.12 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.