Qurani·قرآني
தமிழ்

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்

309 ஹதீஸ்கள் · #2782–3090

ஹதீஸ் 2882 — Sahih al Bukhari 56:97
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نَسْقِي، وَنُدَاوِي الْجَرْحَى، وَنَرُدُّ الْقَتْلَى إِلَى الْمَدِينَةِ‏.‏
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அறப்போரில் கலந்து கொண்டு) இருந்தோம். (அறப்போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும் மருந்திட்டும்வந்தோம். கொல்லப்பட்டவர் களை (போர்க்களத்திலிருந்து) மதீனாவிற்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந் தோம். அத்தியாயம் :
ஹதீஸ் 2883 — Sahih al Bukhari 56:98
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ خَالِدِ بْنِ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ كُنَّا نَغْزُو مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَسْقِي الْقَوْمَ وَنَخْدُمُهُمْ، وَنَرُدُّ الْجَرْحَى وَالْقَتْلَى إِلَى الْمَدِينَةِ‏.‏
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அறப்போரில் கலந்துகொள்வோம்; அப்போது (போரில் காயமுற்ற) மக்களுக்கு நீர்புகட்டுவோம்; அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வோம்; கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்களையும் மதீனாவுக்குத் திரும்பக் கொண்டுவருவோம். அத்தியாயம் :
ஹதீஸ் 2884 — Sahih al Bukhari 56:99
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ رُمِيَ أَبُو عَامِرٍ فِي رُكْبَتِهِ، فَانْتَهَيْتُ إِلَيْهِ قَالَ انْزِعْ هَذَا السَّهْمَ‏.‏ فَنَزَعْتُهُ، فَنَزَا مِنْهُ الْمَاءُ، فَدَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ، فَقَالَ ‏ "‏ اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ ‏"‏‏.‏
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தையின் சகோதரர்) அபூஆமிர் (ரலி) அவர்களின் முழங்காலில் (அவ்த்தாஸ் போரில்) அம்பு எய்யப்பட்டது. நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் (என்னிடம்), ‘‘இந்த அம்பைப் பிடுங்கிவிடு” என்று கூறினார்கள். நான் அதைப் பிடுங்கி விட்டேன். அதிலிருந்து நீர் கொட்டியது. பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களுக்கு நடந்ததைத் தெரிவித்தேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! உபைத் அபூ ஆமிருக்கு மன்னிப்பளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.49 அத்தியாயம் :
ஹதீஸ் 2885 — Sahih al Bukhari 56:100
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ رَبِيعَةَ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَهِرَ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ قَالَ ‏"‏ لَيْتَ رَجُلاً مِنْ أَصْحَابِي صَالِحًا يَحْرُسُنِي اللَّيْلَةَ ‏"‏‏.‏ إِذْ سَمِعْنَا صَوْتَ سِلاَحٍ فَقَالَ ‏"‏ مَنْ هَذَا ‏"‏‏.‏ فَقَالَ أَنَا سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ، جِئْتُ لأَحْرُسَكَ‏.‏ وَنَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த புதிதில் இரவில் கண் விழித்திருந்தார் கள். பிறகு ‘‘என் தோழர்களில் எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே” என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ‘‘யார் அது?” என்று கேட்டார்கள். வந்தவர், ‘‘நான்தான் சஅத் பின் அபீவக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்” என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2886 — Sahih al Bukhari 56:101
حَدَّثَنَا يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَالدِّرْهَمِ وَالْقَطِيفَةِ وَالْخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ ‏"‏‏.‏ لَمْ يَرْفَعْهُ إِسْرَائِيلُ عَنْ أَبِي حَصِينٍ‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: பொற்காசு, வெள்ளிக் காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, கோடுபோட்ட சதுர கறுப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் அழிந்தான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான்; (செல்வம்) வழங்கப்படா விட்டால் அதிருப்தியடைவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பிந்திய இரு தொடர்களில், இது நபி (ஸல்) அவர்களின் கூற்றாகப் பதிவாக வில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 2887 — Sahih al Bukhari 56:102
وَزَادَنَا عَمْرٌو قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَعَبْدُ الدِّرْهَمِ وَعَبْدُ الْخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ سَخِطَ، تَعِسَ وَانْتَكَسَ، وَإِذَا شِيكَ فَلاَ انْتَقَشَ، طُوبَى لِعَبْدٍ آخِذٍ بِعِنَانِ فَرَسِهِ فِي سَبِيلِ اللَّهِ، أَشْعَثَ رَأْسُهُ مُغْبَرَّةٍ قَدَمَاهُ، إِنْ كَانَ فِي الْحِرَاسَةِ كَانَ فِي الْحِرَاسَةِ، وَإِنْ كَانَ فِي السَّاقَةِ كَانَ فِي السَّاقَةِ، إِنِ اسْتَأْذَنَ لَمْ يُؤْذَنْ لَهُ، وَإِنْ شَفَعَ لَمْ يُشَفَّعْ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لَمْ يَرْفَعْهُ إِسْرَائِيلُ وَمُحَمَّدُ بْنُ جُحَادَةَ عَنْ أَبِي حَصِينٍ وَقَالَ تَعْسًا‏.‏ كَأَنَّهُ يَقُولُ فَأَتْعَسَهُمُ اللَّهُ‏.‏ طُوبَى فُعْلَى مِنْ كُلِّ شَىْءٍ طَيِّبٍ، وَهْىَ يَاءٌ حُوِّلَتْ إِلَى الْوَاوِ وَهْىَ مِنْ يَطِيبُ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பொற்காசின் அடிமையும், வெள்ளிக் காசின் அடிமையும், கோடுபோட்ட சதுர கறுப்புத் துணியின் அடிமையும் அழிந் தான். அவனுக்கு (செல்வம்) கொடுக்கப் பட்டால் திருப்தியடைவான்; (செல்வம்) வழங்கப்படாவிட்டால் கோபமடைவான். அவன் இழப்புக்குரியவனாகட்டும்! அவன் அழியட்டும். அவனுக்கு முள் தைத்துவிட்டால் அதை எடுக்க ஆளில்லாமல் தவிக்கட்டும்! இறைவழியில் (போர் புரிந்திட) தமது குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, பரட்டைத் தலையுடன் இரு கால்களும் புழுதியடைந்தவராகச் செல்கின்ற அடியாருக்கு வாழ்த்துகள்! (அவர் எத்தகையவர் என்றால்) அவர் (படையின் முன்னணிக்) காவல் அணியில் நியமிக்கப்பட்டிருப்பாராயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பார்; பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பாராயின் அதிலும் (எந்த முணுமுணுப்புமின்றி திருப்தியுடன்) இருப்பார். அவர் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவருக்கு அனுமதி தரப்படாது; அவர் பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவுக்கு சாமானியராக, எளியவராகக் கருதப்படுவார்.) அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகி றேன்: (‘அழியட்டும்!› என்பதைக் குறிக்க) மூலத்தில் யிதஇஸ’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இதற்கு, ‘அவனை அல்லாஹ் அழிக்கட்டும்!› என்பது பொருளாகும். (யிவாழ்த்து’ என்பதைக் குறிக்க) யிதூபா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது யிதய்யிப்’ (நல்லது, தூயது) என்பதன் யிஃபுஅலா’ வாய்ப்பாட்டில் அமைந்ததாகும். யிதுய்பா’ என்பதே யிதூபா’ என யிவாவு’ உள்ளதாக மருவியுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2888 — Sahih al Bukhari 56:103
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَحِبْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَكَانَ يَخْدُمُنِي‏.‏ وَهْوَ أَكْبَرُ مِنْ أَنَسٍ قَالَ جَرِيرٌ إِنِّي رَأَيْتُ الأَنْصَارَ يَصْنَعُونَ شَيْئًا لاَ أَجِدُ أَحَدًا مِنْهُمْ إِلاَّ أَكْرَمْتُهُ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அவர்கள் என்னைவிட வயதில் பெரியவராக இருந்தும் எனக்குப் பணிவிடை செய்துவந்தார்கள். (யிவேண்டாம்’ என நான் மறுத்தபோது) ‘‘அன்சாரிகள் ஓர் உயர்ந்த காரியத்தைச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்; ஆகவே, அவர்களில் யாரை நான் கண்டாலும் (அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) அவர்களை கண்ணியப்படுத்தாமல் இருப்பதில்லை” என்று ஜரீர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.50 அத்தியாயம் :
ஹதீஸ் 2889 — Sahih al Bukhari 56:104
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ بْنِ حَنْطَبٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى خَيْبَرَ أَخْدُمُهُ، فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَاجِعًا، وَبَدَا لَهُ أُحُدٌ قَالَ ‏"‏ هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ ‏"‏‏.‏ ثُمَّ أَشَارَ بِيَدِهِ إِلَى الْمَدِينَةِ قَالَ اللَّهُمَّ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا كَتَحْرِيمِ إِبْرَاهِيمَ مَكَّةَ ‏"‏ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا وَمُدِّنَا ‏"‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போரின்போது நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டே சென்றேன். நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களுக்கு உஹுத் மலை தென்பட்டதும், ‘‘இது எத்தகைய மலை யென்றால், இது நம்மை நேசிக்கின்றது; நாம் இதை நேசிக்கின்றோம்” என்று கூறினார்கள். பின்னர், மதீனாவை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்து, ‘‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்ததைப் போன்று, நான் (இந்த) இரு (கருங்கல்) மலைகளுக் கிடையேயுள்ள நிலப் பகுதியை (மதீனாவை) புனிதமானதாக அறிவிக்கி றேன். இறைவா! எங்கள் (அளவைகளான) ஸாவுகளிலும், யிமுத்’துகளிலும் எங்களுக்கு வளம் வழங்குவாயாக!” என்று பிரார்த்தித் தார்கள்.51 அத்தியாயம் :
ஹதீஸ் 2890 — Sahih al Bukhari 56:105
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَكْثَرُنَا ظِلاًّ الَّذِي يَسْتَظِلُّ بِكِسَائِهِ، وَأَمَّا الَّذِينَ صَامُوا فَلَمْ يَعْمَلُوا شَيْئًا، وَأَمَّا الَّذِينَ أَفْطَرُوا فَبَعَثُوا الرِّكَابَ وَامْتَهَنُوا وَعَالَجُوا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالأَجْرِ ‏"‏‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு பயணத்தில்) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தமது ஆடையால் தமக்குத்தாமே நிழலிட் டுக்கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது; ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர் கள் எந்த வேலையும் செய்யவில்லை. நோன்பு நோற்காமல் விட்டுவிட்டவர் கள்தான் வாகன (ஒட்டக)ங்களை எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள்; நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறி னார்கள்.52 அத்தியாயம் :
ஹதீஸ் 2891 — Sahih al Bukhari 56:106
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ كُلُّ سُلاَمَى عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ، يُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ يُحَامِلُهُ عَلَيْهَا أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ، وَكُلُّ خَطْوَةٍ يَمْشِيهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَدَلُّ الطَّرِيقِ صَدَقَةٌ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவரை, அவரது வாகனத்தில் ஏற்றி வைத்து உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றிவைப்பதுகூட தர்மமாகும். நல்ல சொல்லும், தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மம்தான். (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.53 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.