Qurani·قرآني
தமிழ்

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்

309 ஹதீஸ்கள் · #2782–3090

ஹதீஸ் 2872 — Sahih al Bukhari 56:88
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَاقَةٌ تُسَمَّى الْعَضْبَاءَ لاَ تُسْبَقُ ـ قَالَ حُمَيْدٌ أَوْ لاَ تَكَادُ تُسْبَقُ ـ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ فَسَبَقَهَا، فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، حَتَّى عَرَفَهُ فَقَالَ ‏ "‏ حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لاَ يَرْتَفِعَ شَىْءٌ مِنَ الدُّنْيَا إِلاَّ وَضَعَهُ ‏"‏‏.‏ طَوَّلَهُ مُوسَى عَنْ حَمَّادٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. இந்நிலையில், கிராமவாசி ஒருவர் பயணத்திற்கும் சுமை ஏற்றுவதற்கும் ஏற்ற ஒட்டகம் ஒன்றின்மீது வந்தார். அது நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தி விட்டது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதை அறிந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘உலகில் உயர்ந்துவிடுகின்ற எந்தப் பொருளையும் (ஒருநாள்) கீழே இறக்குவதுதான் அல்லாஹ்வின் நியதி யாகும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் இந்த ஹதீஸ் இன்னும் நீளமாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2873 — Sahih al Bukhari 56:89
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ الْحَارِثِ، قَالَ مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلاَّ بَغْلَتَهُ الْبَيْضَاءَ وَسِلاَحَهُ وَأَرْضًا تَرَكَهَا صَدَقَةً‏.‏
அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (இறந்தபோது) தமது வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், தமது ஆயுதத்தையும், தர்மமாக விட்டுச்சென்ற ஒரு நிலத்தையும் தவிர வேறெதையும் விட்டுச்செல்ல வில்லை.45 அத்தியாயம் :
ஹதீஸ் 2874 — Sahih al Bukhari 56:90
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عُمَارَةَ وَلَّيْتُمْ يَوْمَ حُنَيْنٍ قَالَ لاَ، وَاللَّهِ مَا وَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَكِنْ وَلَّى سَرَعَانُ النَّاسِ، فَلَقِيَهُمْ هَوَازِنُ بِالنَّبْلِ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ، وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ آخِذٌ بِلِجَامِهَا، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ‏"‏
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் புறமுதுகிட்டு ஓடினீர்களே!” என்று கேட்டார். நான், ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டு ஓடவில்லை. ஆனால், மக்களில் அவசரக்காரர்கள்தான் புறமுது கிட்டுச் சென்றார்கள். ஆகவே, ஹவாஸின் குலத்தார் அவர்களை அம்புகளால் தாக்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்கள். அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார் கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் நபிதான்; பொய்யில்லை. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள் என்று பதிலளித் தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2875 — Sahih al Bukhari 56:91
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ إِسْحَاقَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْجِهَادِ‏.‏ فَقَالَ ‏ "‏ جِهَادُكُنَّ الْحَجُّ ‏"‏‏.‏ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مُعَاوِيَةَ بِهَذَا‏.‏
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் அறப் போரில் ஈடுபட அனுமதி கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘(பெண்களாகிய) உங்கள் அறப்போர் ஹஜ் செய்வதுதான்” என்று கூறினார்கள்.46 அத்தியாயம் :
ஹதீஸ் 2876 — Sahih al Bukhari 56:92
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُعَاوِيَةَ، بِهَذَا‏.‏ وَعَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم سَأَلَهُ نِسَاؤُهُ عَنِ الْجِهَادِ فَقَالَ ‏ "‏ نِعْمَ الْجِهَادُ الْحَجُّ ‏"‏‏.‏
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய துணைவியர் அறப்போர் குறித்து (அதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘ஹஜ் செய்வது (உங்களுக்கு) சிறந்த அறப்போர் ஆகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2877 — Sahih al Bukhari 56:93
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيِّ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى ابْنَةِ مِلْحَانَ فَاتَّكَأَ عِنْدَهَا، ثُمَّ ضَحِكَ فَقَالَتْ لِمَ تَضْحَكُ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ ‏"‏ نَاسٌ مِنْ أُمَّتِي يَرْكَبُونَ الْبَحْرَ الأَخْضَرَ فِي سَبِيلِ اللَّهِ، مَثَلُهُمْ مَثَلُ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ ‏"‏‏.‏ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ‏.‏ قَالَ ‏"‏ اللَّهُمَّ اجْعَلْهَا مِنْهُمْ ‏"‏‏.‏ ثُمَّ عَادَ فَضَحِكَ، فَقَالَتْ لَهُ مِثْلَ أَوْ مِمَّ ذَلِكَ فَقَالَ لَهَا مِثْلَ ذَلِكَ، فَقَالَتِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ‏.‏ قَالَ ‏"‏ أَنْتِ مِنَ الأَوَّلِينَ، وَلَسْتِ مِنَ الآخِرِينَ ‏"‏‏.‏ قَالَ قَالَ أَنَسٌ فَتَزَوَّجَتْ عُبَادَةَ بْنَ الصَّامِتِ، فَرَكِبَتِ الْبَحْرَ مَعَ بِنْتِ قَرَظَةَ، فَلَمَّا قَفَلَتْ رَكِبَتْ دَابَّتَهَا فَوَقَصَتْ بِهَا، فَسَقَطَتْ عَنْهَا فَمَاتَتْ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய்ந்து அமர்ந்து (உறங்கிக்) கொண்டிருந்துவிட்டு, பிறகு (விழித் தெழுந்து) சிரித்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் (போர் புரிவதற்காகப்) பசுங்கடலில் பயணம் செய்வார்கள். அவர்களின் நிலை, கட்டில்களில் (சாய்ந்து) வீற்றிருக்கும் அரசர்களின் நிலையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள். அதற்கு உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு மீண்டும் அவ்வாறே (சாய்ந்து அமர்ந்தவாறு உறங்கிக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு விழித்தெழுந்து) சிரித்தார்கள். முன்பு கேட்டதைப் போன்றே, ‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் முன்பு (பதிலளித்ததைப்) போன்றே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தி யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்; ஆனால், அடுத்து (திரும்பி) வருவோரில் ஒருவராக இருக்கமாட்டீர்கள்” என்று கூறினார்கள். பிறகு, உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர் களை மணமுடித்துக்கொண்டார்கள். பிறகு கரழா பின் அப்தி அம்ர் என்பவரின் மகளுடன் (அறப்போருக்காகக்) கடல் பயணம் செய்தார்கள். அவர்கள் (போர் முடிந்து) புறப்பட்டபோது தமது ஊர்திப் பிராணியின் மீது ஏற, அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது. அவர்கள் அதிலிருந்து விழுந்து இறந்துவிட்டார்கள்.47 அத்தியாயம் :
ஹதீஸ் 2878 — Sahih al Bukhari #2878

ஹதீஸ் 2879 — Sahih al Bukhari 56:94
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ، كُلٌّ حَدَّثَنِي طَائِفَةً، مِنَ الْحَدِيثِ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ يَخْرُجُ سَهْمُهَا خَرَجَ بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم، فَأَقْرَعَ بَيْنَنَا فِي غَزْوَةٍ غَزَاهَا، فَخَرَجَ فِيهَا سَهْمِي، فَخَرَجْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بَعْدَ مَا أُنْزِلَ الْحِجَابُ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெளியே (பயணம்) செல்ல நாடினால் தம் துணைவிய ரிடையே சீட்டுக் குலுக்கிப்போட்டு, எவரது பெயர் வருகிறதோ அவரை (மட்டும்) அழைத்துக்கொண்டு செல்வார்கள். இவ்வாறே, அவர்கள் (புரிந்த) ஓர் அறப் போருக்குச் சென்றபோது (அவர்களின் துணைவியராகிய) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது பெயர் வரவே, நான் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். இது (பெண்கள் அந்நிய ஆண்களிட மிருந்து தம்மைத் திரையிட்டு மறைத்துக் கொள்ளவேண்டும் என்கிற) யிஹிஜாப்’ சட்டம் அருளப்பட்ட பின்னால் நடந் தது.48 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. நால்வரில் ஒவ்வொருவரும் ஹதீஸில் ஒரு பகுதியைத் தமக்கு அறிவித்ததாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2880 — Sahih al Bukhari 56:95
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ انْهَزَمَ النَّاسُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ وَأُمَّ سُلَيْمٍ وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ أَرَى خَدَمَ سُوقِهِمَا، تَنْقُزَانِ الْقِرَبَ ـ وَقَالَ غَيْرُهُ تَنْقُلاَنِ الْقِرَبَ ـ عَلَى مُتُونِهِمَا، ثُمَّ تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ الْقَوْمِ، ثُمَّ تَرْجِعَانِ فَتَمْلآنِهَا، ثُمَّ تَجِيئَانِ فَتُفْرِغَانِهَا فِي أَفْوَاهِ الْقَوْمِ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டுத் தோல்வி யுற்று (பின்வாங்கிச்) சென்றார்கள். அப்போது நான் ஆயிஷா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களையும் உம்மு சுலைம் (ரலி) அவர்களையும் கண்டேன். அவர்கள் இருவரும் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்துகொண்டு வேகவேகமாக நடந்து(சென்று காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதும் பிறகு (தண்ணீர் காலியானதும்) திரும்பிச் சென்று அவற்றை நிரப்பிக்கொண்டு, மீண்டும் வந்து மக்களின் வாய்களில் தண்ணீர் ஊற்றுவதுமாக இருந்தார்கள். நான் அவர்களின் கால்களில் அணிந் திருந்த தண்டைகளைப் பார்க்கும் அளவுக்கு அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு (மும்முரமாகப்) பணி புரிந்து கொண்டிருந்தார்கள். யிதோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து வேகமாக நடந்து சென்று’ என்ப தற்குப் பதிலாக, யிதோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து எடுத்துச் சென்று’ என்று மற்றோர் அறிவிப்பாளர் கூறியுள் ளார். அத்தியாயம் :
ஹதீஸ் 2881 — Sahih al Bukhari 56:96
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ثَعْلَبَةُ بْنُ أَبِي مَالِكٍ إِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَسَمَ مُرُوطًا بَيْنَ نِسَاءٍ مِنْ نِسَاءِ الْمَدِينَةِ، فَبَقِيَ مِرْطٌ جَيِّدٌ فَقَالَ لَهُ بَعْضُ مَنْ عِنْدَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَعْطِ هَذَا ابْنَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي عِنْدَكَ‏.‏ يُرِيدُونَ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عَلِيٍّ‏.‏ فَقَالَ عُمَرُ أُمُّ سَلِيطٍ أَحَقُّ‏.‏ وَأُمُّ سَلِيطٍ مِنْ نِسَاءِ الأَنْصَارِ، مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ قَالَ عُمَرُ فَإِنَّهَا كَانَتْ تَزْفِرُ لَنَا الْقِرَبَ يَوْمَ أُحُدٍ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ تَزْفِرُ تَخِيطُ‏.‏
ஸஅலபா பின் அபீமாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (பட்டால் அல்லது கம்பளியால் ஆன) கீழங்கிகளை மதீனா நகரப் பெண்களி டையே பங்கிட்டார்கள். அப்போது அதில் தரமானதொரு கீழங்கி எஞ்சியது. அதைக் கண்டு, அவர்களிடமிருந்த சிலர், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதை உங்களிடமிருக்கும் அல்லாஹ்வின் தூதருடைய (மகளின்) மகளுக்குக் கொடுங்கள்” என்று கூறினார்கள் லி அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மகளார் உம்மு குல்ஸூம் அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள்லி அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘உம்மு சலீத் (ரலி) அவர்கள்தான் இதற்கு மிகவும் தகுதியானவர். உம்மு சலீத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்” என்று கூறிவிட்டு, ‘‘அவர் உஹுத் போரின்போது எங்களுக்காக (முஸ்லிம் வீரர்களுக்காகத் தண்ணீர்) தோல் பைகளைச் சுமந்து வருபவராக இருந்தார்” என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: (யிசுமந்துவருபவர்’ என்பவரைக் குறிக்க மூலத்தில்) யிதஸ்ஃபிரு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிதைப்பவராக’ என்பது பொருளாகும். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.