حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ، فَاسْتَعَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ، يُقَالُ لَهُ مَنْدُوبٌ فَرَكِبَهُ، وَقَالَ " مَا رَأَيْنَا مِنْ فَزَعٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் (பகைவர்கள் படை யெடுத்து வருவதாகப்) பீதி ஏற்பட்டிருந்தது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான யிமன்தூப்’ எனப்படும் குதிரை ஒன்றை இரவல் வாங்கி அதில் ஏறிச் சென்றார்கள். பிறகு (எல்லைகளைப் பார்த்துவிட்டு வந்து), ‘‘பீதி எதையும் நாம் பார்க்கவில்லை. இந்தக் குதிரையை, தங்கு தடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக நாம் கண்டோம்” என்று கூறினார்கள்.36 அத்தியாயம் :
ஹதீஸ் 2863 — Sahih al Bukhari 56:79
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَعَلَ لِلْفَرَسِ سَهْمَيْنِ وَلِصَاحِبِهِ سَهْمًا. وَقَالَ مَالِكٌ يُسْهَمُ لِلْخَيْلِ وَالْبَرَاذِينِ مِنْهَا لِقَوْلِهِ {وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا} وَلاَ يُسْهَمُ لأَكْثَرَ مِنْ فَرَسٍ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரில் கிடைத்த செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரு பங்குகளையும் (அதல்லாமல்) அதன் உரிமையாளருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள். மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அரபுக் குதிரைகளுக்கும் மற்றக் குதிரைகளுக்கும் போரில் கிடைக்கும் செல்வங்களிலிருந்து பங்கு கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், யிகுதிரைகளையும், கோவேறுக் கழுதைகளையும், கழுதைகளையும் நீங்கள் பயணம் செய்வதற்காக(வும் அலங்காரமாகவும்) அவன் படைத்தான்’ (16:8) என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒரு குதிரையைவிட அதிகமானவற்றுக்குப் பங்கு அளிக்கப்படாது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2864 — Sahih al Bukhari 56:80
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سَهْلُ بْنُ يُوسُفَ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ،. قَالَ رَجُلٌ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ أَفَرَرْتُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ قَالَ لَكِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَفِرَّ، إِنَّ هَوَازِنَ كَانُوا قَوْمًا رُمَاةً، وَإِنَّا لَمَّا لَقِينَاهُمْ حَمَلْنَا عَلَيْهِمْ فَانْهَزَمُوا، فَأَقْبَلَ الْمُسْلِمُونَ عَلَى الْغَنَائِمِ وَاسْتَقْبَلُونَا بِالسِّهَامِ، فَأَمَّا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَفِرَّ، فَلَقَدْ رَأَيْتُهُ وَإِنَّهُ لَعَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ وَإِنَّ أَبَا سُفْيَانَ آخِذٌ بِلِجَامِهَا، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ ".
அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுவிட்டு ஹுனைன் (போர்) அன்று வெருண்டு ஓடிவிட்டீர்களா(மே, உண்மைதானா)?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘(ஆம், உண்மை தான்.) ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெருண்டோடவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சிபெற்ற சமூகத்தாராய் இருந்தார்கள். நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்த போது அவர்கள்மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள். ஆகவே, முஸ்லிம்கள் (போர்க் களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுக்க முனைந்தார்கள். அப்போது எதிரிகள் அம்புகளால் எங்களை எதிர் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பின்வாங்கிச் செல்லவில்லை. (நாங்கள்தான் பின்வாங்கி ஓடிவந்துவிட்டோம்.) நான் நபி (ஸல்) அவர்களைத் தமது வெள்ளைக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருக்கக் கண்டேன். அபூசுப்யான் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான்நபிதான்பொய்யில்லை! நான்அப்துல் முத்தலிபின்மகன் ஆவேன்” என்று (பாடியபடி) கூறிக்கொண்டி ருந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2865 — Sahih al Bukhari 56:81
حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّهُ كَانَ إِذَا أَدْخَلَ رِجْلَهُ فِي الْغَرْزِ وَاسْتَوَتْ بِهِ نَاقَتُهُ قَائِمَةً، أَهَلَّ مِنْ عِنْدِ مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது காலை, ஏறும் வளையத்தில் நுழைத்து, தமது ஒட்டகம் நிலைக்கு வந்துவிடும்போது துல் ஹுலைஃபா பள்ளிவாசலிலிருந்து (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி) யிதல்பியா’ கூறுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2866 — Sahih al Bukhari 56:82
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه اسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى فَرَسٍ عُرْىٍ، مَا عَلَيْهِ سَرْجٌ، فِي عُنُقِهِ سَيْفٌ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சேணம் பூட்டப் படாத, திறந்தமேனி கொண்ட ஒரு குதிரையின் மீது அமர்ந்து, கழுத்தில் வாளொன்று தொங்கிக்கொண்டிருக்க, மதீனாவாசிகளை நோக்கி வந்தார்கள்.38 அத்தியாயம் :
ஹதீஸ் 2867 — Sahih al Bukhari 56:83
حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ أَهْلَ، الْمَدِينَةِ فَزِعُوا مَرَّةً، فَرَكِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ كَانَ يَقْطِفُ ـ أَوْ كَانَ فِيهِ قِطَافٌ ـ فَلَمَّا رَجَعَ قَالَ " وَجَدْنَا فَرَسَكُمْ هَذَا بَحْرًا ". فَكَانَ بَعْدَ ذَلِكَ لاَ يُجَارَى.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகள் ஒருமுறை (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப் பட்டு) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான, மந்தமாக நடக்கும் தன்மையுடைய ஒரு குதிரையின் மீது ஏறிச் சென்றார்கள். திரும்பி வந்தபோது, ‘‘உங்களின் இந்தக் குதிரையை தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக நாம் கண்டோம்” என்று கூறினார்கள். அதற்குப் பிறகு அந்தக் குதிரை வேறெந்த குதிரையாலும் முந்த முடியாத தாக மாறிவிட்டது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மெலியவைக்கப் பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளை யிஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘ஸனிய்யத் துல் வதா’ எனும் மலைக் குன்றுவரை (ஓட்டப் பந்தயத்தில்) ஓடச்செய்தார்கள். மெலியவைக்கப்படாத (பயிற்சியளிக் கப்படாத) குதிரைகளை ‘ஸனிய்யத்துல் வதா’விலிருந்து யிபனூ ஸுரைக்’ பள்ளிவாசல்வரை (பந்தயத்தில்) ஓடச்செய்தார்கள். நானும் பந்தயத்தில் (என் குதிரையுடன்) கலந்துகொண்டேன்.39 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் பின்வரும் தகவலும் காணப்படு கிறது. யிஹஃப்யா’வுக்கும் ஸனிய்யத்துல் வதாவுக்கும் இடையே ஐந்து அல்லது ஆறு மைல்கள் தூரம் இருக்கும். ஸனிய்யத்துல் வதாவுக்கும் பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே ஒரு மைல் தூரம் இருக்கும். அத்தியாயம் :
ஹதீஸ் 2869 — Sahih al Bukhari 56:85
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضَمَّرْ، وَكَانَ أَمَدُهَا مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ. وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ سَابَقَ بِهَا. قَالَ أَبُو عَبْد اللَّهِ أَمَدًا غَايَةً فَطَالَ عَلَيْهِمْ الْأَمَدُ
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார் கள். அவற்றின் பந்தய எல்லை, ‘ஸனிய்யத் துல் வதா’விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல்வரை இருந்தது. நானும் இத்தகைய குதிரைகளுக் கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: (இங்கு யிஎல்லை’ என்பதைக் குறிக்க மூலத்தில்) ‘அமத்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிமுடிவு’ என்பது பொருள். ‘‘அவர்கள்மீது காலம் (‘அமத்’) நீண்டுவிட்டது” (57:16) என்று அல்லாஹ் கூறுகின்றான். அத்தியாயம் :
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப் பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை யிஹஃப்யா’ விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘ஸனிய்யத்துல் வதா’வாக இருந்தது” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் (அறிவிப்பாளர்) மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களிடம், ‘‘அவ்விரண்டுக் குமிடையே எவ்வளவு தொலைவிருந்தது?” என்று கேட்டேன். அவர், ‘‘ஆறு அல்லது ஏழு மைல்கள்” என்று பதிலளித்தார். தொடர்ந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் மெலியவைக்கப் படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக் கிடையேயும் பந்தயம் வைத்தார்கள். அவற்றை ஸனிய்யத்துல் வதாவிலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசலாக இருந்தது” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும், இப்னு உமர் (ரலி) அவர்களும் (தமது குதிரையுடன்) பந்தயத்தில் கலந்துகொண்டார்கள். ‘‘நான் மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களிடம், ‘‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிருந்தது?” என்று கேட்க, யிசுமார் ஒரு மைல்’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்” என அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2871 — Sahih al Bukhari 56:87
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَتْ نَاقَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم يُقَالُ لَهَا الْعَضْبَاءُ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்டு வந்தது.41 அத்தியாயம் :